அப்போஸ்தலர்கள் 20 : 1 (RCTA)
கலகம் அடங்கிய பின், சின்னப்பர் சீடர்களை வரச்சொல்லி, அவர்களுக்கு அறிவுரை கூறி, விடை பெற்றுக்கொண்டு மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டார்.
அப்போஸ்தலர்கள் 20 : 2 (RCTA)
அந்நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று, ஆங்காங்குள்ளோர்க்கு அறிவுரைகள் பல கூறினார். பிறகு கிரேக்க நாட்டை அடைந்து,
அப்போஸ்தலர்கள் 20 : 3 (RCTA)
அங்கு மூன்று மாதங்கள் தங்கினார். சீரியாவுக்குக் கப்பலேற இருக்கையில் அவருக்கு எதிராக யூதர்கள் சதி செய்தனர். ஆகவே, அவர் மக்கெதோனியா வழியாகத் திரும்பத் தீர்மானித்தார்.
அப்போஸ்தலர்கள் 20 : 4 (RCTA)
பெரோயா நகரத்துப் பிருவின் மகன் சோபத்தர், தெசலோனிக்கரான அரிஸ்தார்க்கு, செக்குந்து, தெர்பை நகரத்தானாகிய காயு, தீமோத்தேயு, ஆசியா நாட்டைச் சேர்ந்த தீகிக்கு, துரோப்பீமு ஆகியோர் அவருக்கு வழித்துணையாய்ச் சென்றனர்.
அப்போஸ்தலர்கள் 20 : 5 (RCTA)
இவர்கள் முன்னே சென்று துரோவாவில் எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 20 : 6 (RCTA)
நாங்களோ புளியாத அப்பத் திருநாட்களுக்குப்பின் பிலிப்பிலிருந்து கப்பல் ஏறினோம். ஐந்து நாளில் துரோவாவில் அவர்களிடம் போய்ச் சேர்ந்தோம். அங்கு ஏழு நாள் தங்கினோம்.
அப்போஸ்தலர்கள் 20 : 7 (RCTA)
வாரத்தின் முதல் நாளில் அப்பத்தைப் பிட்குதற்காக நாங்கள் கூடியிருந்தோம். மறுநாள் சின்னப்பர் ஊரை விட்டுப் போகவேண்டியிருந்தது. அங்கிருந்தவர்களுடன் உரையாடத் தொடங்கி நள்ளிரவுவரை பேசிக்கொண்டே போனார்.
அப்போஸ்தலர்கள் 20 : 8 (RCTA)
நாங்கள் கூடியிருந்த மாடியறையில் விளக்குகள் பல இருந்தன.
அப்போஸ்தலர்கள் 20 : 9 (RCTA)
ஐத்திகு என்ற இளைஞன் ஒருவன் சன்னலின் ஓரத்தில் உட்கார்ந்திருந்தான். சின்னப்பர் பேசப் பேச ஆழ்ந்த தூக்கம் அவனை ஆட்கொண்டது. தூக்க மயக்கத்தால் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்தான். அவனைத் தூக்கி எடுத்த போது பிணமாகக் கிடந்தான்.
அப்போஸ்தலர்கள் 20 : 10 (RCTA)
சின்னப்பர் இறங்கிவந்து, அவன் மேல் குனிந்து, அவனை அணைத்து, "புலம்பலை நிறுத்துங்கள். உயிர் அவனுக்குள் இருக்கின்றது" என்றார்.
அப்போஸ்தலர்கள் 20 : 11 (RCTA)
மீண்டும் மாடிக்குச் சென்று, அப்பத்தைப் பிட்டு உண்டபின், விடியும்வரை நெடுநேரம் உரையாடிவிட்டுப் புறப்பட்டார்.
அப்போஸ்தலர்கள் 20 : 12 (RCTA)
உயிர்பெற்ற அப்பையனை அழைத்துச் சென்றனர். அதனால் அவர்கள் மிக்க ஆறுதல் அடைந்தனர்.
அப்போஸ்தலர்கள் 20 : 13 (RCTA)
நாங்கள் கப்பல் ஏறி, சின்னப்பருக்கு முன்னதாகவே அஸ்ஸோ ஊருக்குச் சென்றோம். அங்கிருந்து தம்மைக் கப்பலில் ஏற்றிச்செல்ல வேண்டுமென்று அவர் ஏற்பாடு செய்திருந்தார். அவ்வூர்வரைக்கும் தரை வழியாக நடந்து போக விரும்பினார்.
அப்போஸ்தலர்கள் 20 : 14 (RCTA)
அஸ்ஸோ ஊரில் அவர் எங்களோடு சேர்ந்து கொண்டபின் அவரை ஏற்றிக்கொண்டு மித்திலேனே நகருக்குப் போனோம்.
அப்போஸ்தலர்கள் 20 : 15 (RCTA)
அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் கீயு தீவுப் பக்கமாகச் சென்றோம். மூன்றாம் நாள் சாமு தீவை அடைந்து அதற்கடுத்த நாள் மிலேத்துத் துறைமுகத்தை அடைந்தோம்.
அப்போஸ்தலர்கள் 20 : 16 (RCTA)
ஆசியாவில் தாமதம் ஏற்படாதபடி சின்னப்பர் எபேசுக்குப் போகாமலே செல்லத் தீர்மானித்திருந்தார். கூடுமானால் பெந்தெகொஸ்தே பண்டிகையன்று யெருசலேமில் இருக்க வேண்டுமெனத் துரிதமாய்ச் சென்றார்.
அப்போஸ்தலர்கள் 20 : 17 (RCTA)
மிலேத்திலிருந்து எபேசுக்கு ஆள் அனுப்பிச் சபையின் மூப்பர்களை வரவழைத்தார்.
அப்போஸ்தலர்கள் 20 : 18 (RCTA)
அவர்கள் வந்தபின் அவர் அவர்களிடம் பேசிய மொழிகள் இவை: "நான் ஆசியாவிற்கு வந்த நாள்முதல் எப்போதும் உங்களிடம் எவ்வாறு நடந்து கொண்டேன் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.
அப்போஸ்தலர்கள் 20 : 19 (RCTA)
கண்ணீர் சிந்தும் அளவுக்கு, யூதர்களின் சூழ்ச்சியினால் எனக்கு ஏற்பட்ட இன்னல்கள் பலவற்றிடையே ஆண்டவருக்கு மிக்க தாழ்மையுடன் ஊழியம் செய்தேன்.
அப்போஸ்தலர்கள் 20 : 20 (RCTA)
நன்மை தரும் யாவற்றையும் உங்களுக்கு அறிவிக்க நான் பின்வாங்கவில்லை; வீடு வீடாகவும் போய்ப் போதித்தேன்.
அப்போஸ்தலர்கள் 20 : 21 (RCTA)
' மக்கள் கடவுள் பக்கம் மனந்திரும்ப வேண்டும், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் விசுவாசம் கொள்ளவேண்டும் ' என யூதருக்கும் கிரேக்கருக்கும் வற்புறுத்திக் கூறினேன். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்ததே.
அப்போஸ்தலர்கள் 20 : 22 (RCTA)
ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டவனாய், இதோ! நான் இப்போது யெருசலேமுக்குச் செல்லுகிறேன். அங்கு எனக்கு என்னென்ன நேருமோ, நான் அறியேன்.
அப்போஸ்தலர்கள் 20 : 23 (RCTA)
சங்கிலிகளும் வேதனைகளும் எனக்காகக் காத்திருக்கின்றன என்று நான் செல்லும் ஊர்தோறும் பரிசுத்த ஆவி எனக்கு உறுதி கூறுவது மட்டுமே அறிவேன்.
அப்போஸ்தலர்கள் 20 : 24 (RCTA)
ஆனால், நான் என் உயிரை ஒரு பொருட்டாய்க் கணிக்கவில்லை. அதைப் பெரிதென மதிக்கவில்லை. கடவுளுடைய அருளைப்பற்றிய நற்செய்திக்குச் சான்று பகருமாறு ஆண்டவராகிய இயேசு என்னிடம் ஒப்படைத்த பணியை நிறைவேற்றி, என் வாழ்க்கைப் பயணத்தை முடிப்பேனாகில் அதுவே போதும்.
அப்போஸ்தலர்கள் 20 : 25 (RCTA)
"உங்களிடையே பழகி இறையரசைப்பற்றிய செய்தியைப் போதித்து வந்தேன். இனிமேல், அந்தோ! உங்களுள் ஒருவனும் என் முகத்தைப் பார்க்கப் போவதில்லை என்று எனக்குத் தெரியும்.
அப்போஸ்தலர்கள் 20 : 26 (RCTA)
கடவுளின் திட்டம் முழுவதையும் உங்களுக்கு அறிவிக்க நான் பின்வாங்கவில்லை.
அப்போஸ்தலர்கள் 20 : 27 (RCTA)
ஆகவே, நான் இன்று உங்களுக்குக் கூறும் ஒரு வார்த்தை: யாருடைய அழிவுக்கும் நான் குற்றவாளியல்ல.
அப்போஸ்தலர்கள் 20 : 28 (RCTA)
"எனவே, உங்களைப்பற்றி விழிப்பாயிருங்கள்; மந்தை முழுவதைக் குறித்தும் விழிப்பாயிருங்கள். ஏனெனில், கடவுள் தமது இரத்தத்தினால் சொந்தமாக்கிக் கொண்ட தம் திருச்சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களை அம்மந்தைக்கு மேற்பார்வையாளராக ஏற்படுத்தியுள்ளார்.
அப்போஸ்தலர்கள் 20 : 29 (RCTA)
நான் சென்றபின் கொடிய ஓநாய்கள் உங்களுக்குள்ளே நுழையும். அவை மந்தையைத் தாக்காமல் விடா என்பதை அறிவேன்.
அப்போஸ்தலர்கள் 20 : 30 (RCTA)
உங்களிடமிருந்தே சிலர் தோன்றி, சீடர்களையும் தம்மிடம் கவர்ந்து கொள்ளுமளவுக்கு உண்மையைத் திரித்துக்கூறுவர்.
அப்போஸ்தலர்கள் 20 : 31 (RCTA)
எனவே, விழிப்பாயிருங்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக அல்லும் பகலும் அயராமல் நான் உங்கள் ஒவ்வொருவர்க்கும் கண்ணீரோடு அறிவுரை கூறிவந்தேன் என்பதை நினைவில் வையுங்கள்.
அப்போஸ்தலர்கள் 20 : 32 (RCTA)
இப்பொழுது உங்களைக் கடவுளுக்கும், அவருடைய அருள் வார்த்தைக்கும் ஒப்படைக்கிறேன். அவ்வார்த்தை உங்களுக்கு முழு வளர்ச்சியையும், அர்ச்சிக்கப்பட்டவர் அனைவரோடு பங்கையும் அளிக்கவல்லது.
அப்போஸ்தலர்கள் 20 : 33 (RCTA)
"ஒருவருடைய பொன்னையோ வெள்ளியையோ ஆடையையோ நான் விரும்பவில்லை.
அப்போஸ்தலர்கள் 20 : 34 (RCTA)
என்னுடைய தேவைகளுக்காகவும், என்னோடு இருப்பவர்கள் தேவைகளுக்காகவும் இந்தக் கைகளே உழைத்தன என்பது உங்களுக்கே தெரியும்.
அப்போஸ்தலர்கள் 20 : 35 (RCTA)
இவ்வாறு பாடுபட்டு உழைத்து பலவீனரைத் தாங்க வேண்டுமென்று பலவகையில் காட்டினேன். ' பெறுவதினும் தருவதே இன்பம் ' என்று ஆண்டவராகிய இயேசு சொன்னதை நினைவில் வைத்தல் வேண்டும்."
அப்போஸ்தலர்கள் 20 : 36 (RCTA)
இப்படிச் சொன்ன பின், எல்லாரோடும் முழங்கால் படியிட்டுச் செபித்தார்.
அப்போஸ்தலர்கள் 20 : 37 (RCTA)
அப்போது எல்லாரும் சின்னப்பரைக் கட்டி அணைத்து முத்தமிட்டுப் பெரிதும் புலம்பி அழலாயினர்.
அப்போஸ்தலர்கள் 20 : 38 (RCTA)
இனி நீங்கள் என் முகத்தைப் பார்க்கமாட்டீர்கள் என்று அவர் சொன்னதுதான் அவர்களுக்கு மிக்க துயரம் வருவித்தது. அப்படியே கப்பல்வரைச் சென்று அவரை வழியனுப்பினர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38