அப்போஸ்தலர்கள் 18 : 1 (RCTA)
அதன்பின் சின்னப்பர் ஏத்தென்ஸ் நகரைவிட்டுக் கொரிந்துவுக்கு வந்தார்.
அப்போஸ்தலர்கள் 18 : 2 (RCTA)
அங்கு பொந்த்து நாட்டைச் சேர்ந்த ஆக்கிலா என்ற யூதன் ஒருவனையும், அவனுடைய மனைவி பிரிஸ்கிலாவையும் கண்டார். கிலவுதியு பேரரசன் யூதர் எல்லாரையும் உரோமையினின்று வெளியேறக் கட்டளையிட்டதால், அவர்கள் அண்மையில்தான் இத்தாலியாவிலிருந்து வந்திருந்தார்கள். சின்னப்பர் அவர்கள் வீட்டுக்குச் சென்றார்.
அப்போஸ்தலர்கள் 18 : 3 (RCTA)
அவர்கள் கூடாரம் செய்பவர்கள். சின்னப்பரும் அதே தொழிலைச் செய்பவராதலால் அவர்களுடன் தங்கி வேலை செய்து வந்தார்.
அப்போஸ்தலர்கள் 18 : 4 (RCTA)
ஓய்வு நாள்தோறும் செபக்கூடத்தில் விவாதித்து யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் விசுவாசமூட்ட முயன்றார்.
அப்போஸ்தலர்கள் 18 : 5 (RCTA)
மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயுவும் வந்த பின்னர், சின்னப்பர், தேவ வார்த்தையைப் போதிப்பதில் கண்ணும் கருத்துமாயிருந்தார். ' இயேசுதான் மெசியா ' என்று யூதர்களிடம் வலியுறுத்திக் கூறுவார்.
அப்போஸ்தலர்கள் 18 : 6 (RCTA)
ஆனால் அவர்கள் அதை எதிர்த்துப் பழித்தபோது, அவர் தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, ' உங்கள் குற்றத்தின் விளைவு உங்கள் தலைமேல் விழட்டும். அது என் குற்றமில்லை.
அப்போஸ்தலர்கள் 18 : 7 (RCTA)
இனி, நான் புற இனத்தாரிடம் போகிறேன்" என்றார். அவ்விடத்தை விட்டுவிட்டு, யூத மறையைத் தழுவிய தித்தியுயுஸ்து என்பவரின் வீட்டுக்குப் போனார். அவ்வீடு செபக்கூடத்தை அடுத்திருந்தது.
அப்போஸ்தலர்கள் 18 : 8 (RCTA)
அந்தச் செபக்கூடத்தலைவன் கிறிஸ்பு, தன் குடும்பத்தார் அனைவருடன் ஆண்டவரில் விசுவாசம் கொண்டான். சின்னப்பர் கூறியதைக் கேட்ட கொரிந்தியர் பலரும் விசுவசித்து ஞானஸ்நானம் பெற்றனர்.
அப்போஸ்தலர்கள் 18 : 9 (RCTA)
ஓரிரவு ஆண்டவர் சின்னப்பருக்குக் காட்சியில் தோன்றி, "அஞ்சாதே, போதித்துக் கொண்டேயிரு, நிறுத்திவிடாதே, நான் உன்னோடிருக்கிறேன்.
அப்போஸ்தலர்கள் 18 : 10 (RCTA)
உனக்குத் தீங்கிழைக்க எவனும் எதிர்த்தெழமாட்டான். இந்நகரில் எனக்குரிய மக்கள் பலர் உள்ளனர்" என்றார்.
அப்போஸ்தலர்கள் 18 : 11 (RCTA)
எனவே, சின்னப்பர் தேவவார்த்தையை மக்களுக்குப் போதித்துக்கொண்டு ஓராண்டு ஆறுமாதம் அங்கே தங்கியிருந்தார். நீதி மன்றத்தில் சின்னப்பர்
அப்போஸ்தலர்கள் 18 : 12 (RCTA)
ஆனால் கல்லியோன் என்பவன் அகாயாப் பகுதியில் ஆளுநனாக இருக்கையில், யூதர்கள் சின்னப்பருக்கு எதிராக ஒருமிக்க எழுந்து,
அப்போஸ்தலர்கள் 18 : 13 (RCTA)
"சட்டத்துக்கு முரணான முறையில் கடவுளை வழிபடுமாறு மக்களை இவன் தூண்டிவிடுகிறான்" என்று அவரை நீதிமன்றத்திற்கு இழுத்துவந்தனர்.
அப்போஸ்தலர்கள் 18 : 14 (RCTA)
சின்னப்பர் பேச வாயெடுக்குமுன், கல்லியோன் யூதர்களைப் பார்த்து, "யூதர்களே, இதில் ஏதாவது அநீதியோ, அக்கிரமமோ இருந்திருக்குமானால், நான் முறைப்படி விசாரித்திருப்பேன்.
அப்போஸ்தலர்கள் 18 : 15 (RCTA)
ஆனால், இதெல்லாம் வெறும் சொற்களையும் பெயர்களையும் உங்கள் சட்டத்தையும் பற்றிய பூசல்தான். ஆதலின் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். இதில் நடுவனாயிருக்க எனக்கு விருப்பமில்லை" என்று சொல்லி,
அப்போஸ்தலர்கள் 18 : 16 (RCTA)
அவர்களை நீதிமன்றத்திலிருந்து துரத்திவிட்டான்.
அப்போஸ்தலர்கள் 18 : 17 (RCTA)
அவர்கள் அனைவரும் செபக்கூடத் தலைவனான சொஸ்தேனேயைப் பிடித்து மன்றத்திற்கு எதிரே அடித்தனர். ஆனால், கல்லியோன் இதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தவில்லை.
அப்போஸ்தலர்கள் 18 : 18 (RCTA)
சின்னப்பர் இன்னும் பல நாட்கள் கொரிந்து நகரில் தங்கினார். பின்பு, சகோதரர்களிடம் விடைபெற்றுக்கொண்டு சீரிய நாட்டுக்குக் கப்பல் ஏறினார். பிரிஸ்கிலாவும் ஆக்கிலாவும் அவருடன் சென்றனர். தாம் செய்திருந்த பொருத்தனையின்படி, கெங்கிரைத் துறையில் அவர் முடிவெட்டிக்கொண்டார்.
அப்போஸ்தலர்கள் 18 : 19 (RCTA)
எபேசு நகரை அடைந்ததும் அவர்களை அங்குவிட்டுப் பிரிந்து, செபக்கூடத்திற்குப் போய் யூதர்களுடன் விவாதித்தார்.
அப்போஸ்தலர்கள் 18 : 20 (RCTA)
இன்னும் சிறிதுகாலம் தங்களுடன் தங்கவேண்டுமென்று அவர்கள் அவரை வேண்டினர். ஆனால் அதற்கு அவர் இணங்காமல் "கடவுளுக்கு விருப்பமானால் மீண்டும் உங்களிடம் வருவேன்" என்று சொல்லி, விடைபெற்று, எபேசு நகரிலிருந்து புறப்பட்டார்.
அப்போஸ்தலர்கள் 18 : 21 (RCTA)
அவர் செசரியாவில் இறங்கி யெருசலேமுக்குச் சென்றார்.
அப்போஸ்தலர்கள் 18 : 22 (RCTA)
அங்குள்ள சபையினரைப் பார்த்துவிட்டு அந்தியோகியா திரும்பினார்.
அப்போஸ்தலர்கள் 18 : 23 (RCTA)
அந்நகரில் சிறிது காலம் தங்கிய பின் அங்கிருந்து புறப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாகக் கலாத்தியா, பிரிசியா ஆகிய நாடுகளெங்கும் சுற்றி, சீடர்கள் அனைவரையும் உறுதிப்படுத்தினார்.
அப்போஸ்தலர்கள் 18 : 24 (RCTA)
அலெக்சாந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ என்ற யூதர் ஒருவர் எபேசுக்கு வந்திருந்தார். அவர் சொல்வன்மை மிக்கவர். மறைநூல் வல்லுநர்.
அப்போஸ்தலர்கள் 18 : 25 (RCTA)
ஆண்டவரது அருள்நெறியைக் கற்றறிந்த ஆர்வமிக்க உள்ளத்துடன் இயேசுவைப் பற்றிய செய்திகளைப் பிழையறப் போதித்து வந்தார். ஆனால், அருளப்பரின் ஞானஸ்நானம் மட்டுமே அவருக்குத் தெரிந்திருந்தது.
அப்போஸ்தலர்கள் 18 : 26 (RCTA)
அவர் செபக்கூடத்தில் துணிவுடன் பேசத் தொடங்கினார். அவர் பேசியதைக் கேட்ட பிரிஸ்கிலாவும் ஆக்கிலாவும் அவரைத் தங்களுடன் அழைத்துக்கொண்டு போய், கடவுளின் அருள்நெறியை அவருக்குத் திட்டவட்டமாய் விளக்கினர்.
அப்போஸ்தலர்கள் 18 : 27 (RCTA)
அவர் அகாயாவிற்குப் போகவிரும்பவே, சகோதரர் அவரை ஊக்குவித்து, வரவேற்கும்படி சீடர்களுக்கு எழுதினர். அவர் அங்குச் சேர்ந்தபொழுது விசுவாசத்தின் அருளைப் பெற்றவர்களுக்குப் பெரிதும் உதவியாய் இருந்தார்.
அப்போஸ்தலர்கள் 18 : 28 (RCTA)
இயேசுவை மெசியா என்று மறைநூலின் வாயிலாக எண்பித்து யூதர்களோடு எல்லாருக்குமுன் வன்மையாய் வாதாடி அவர்களுடைய தவற்றை, எடுத்துக்காட்டினார்.
❮
❯