அப்போஸ்தலர்கள் 13 : 1 (RCTA)
அந்தியோகியாவிலிருந்த சபையிலே இறைவாக்கினர்களும் போதகர்களும் இருந்தனர். அவர்கள், பர்னபா, நீகர் என்னும் சிமெயோன், சிரேனே ஊரான் லூகியு சிற்றரசன், ஏரோதுடன் வளர்ந்த மனாயீன், சவுல் என்பவராவர்.
அப்போஸ்தலர்கள் 13 : 2 (RCTA)
ஒரு நாள் அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடுகையில் பரிசுத்த ஆவி, "சவுலையும் பர்னபாவையும் நான் தெரிந்தெடுத்த வேலைக்காக எனக்கென ஒதுக்கிவையுங்கள்" என்று அவர்களுக்குச் சென்னார்.
அப்போஸ்தலர்கள் 13 : 3 (RCTA)
அவர்கள் நோன்பிருந்து செபம் செய்து, அவ்விருவர்மீது கைகளை விரித்து அவர்களை வழி அனுப்பினார்கள்.
அப்போஸ்தலர்கள் 13 : 4 (RCTA)
இப்படிப் பரிசுத்த ஆவியால் அனுப்பப்பட்ட இவர்கள் செலூக்கியாவுக்குச் சென்றனர். அங்கிருந்து சைப்ரஸ் தீவுக்குக் கப்பல் ஏறினர்.
அப்போஸ்தலர்கள் 13 : 5 (RCTA)
சாலமி துறையைச் சேர்ந்து யூதர்களின் செபக்கூடங்களில் கடவுளின் வார்த்தையை அறிவித்து வந்தனர். அருளப்பரைத் தங்களுக்குத் துணையாக அழைத்துச் சென்றனர்.
அப்போஸ்தலர்கள் 13 : 6 (RCTA)
தீவு நெடுகப் பயணம் செய்து பாப்போ ஊர்வரை வந்தனர். அங்கே மந்திரவாதியும் போலித் தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக் கண்டனர். அவன் பெயர் பர்யேசு.
அப்போஸ்தலர்கள் 13 : 7 (RCTA)
அவன் செர்குயுபவுலு என்ற ஆளுநனின் பரிவாரத்தில் ஒருவன். நல்லறிவுபடைத்த அவ்வாளுநன் பர்னபாவையும் சவுலையும் வரவழைத்து, கடவுளின் வார்த்தையைக் கேட்க ஆவலாயிருந்தான்.
அப்போஸ்தலர்கள் 13 : 8 (RCTA)
ஆனால், எலிமா என்னும் அந்த மந்திரவாதி அவர்களை எதிர்த்து, ஆளுநன் விசுவசிப்பதைத் தடுக்க முயற்சி செய்தான். ( எலிமா என்பதற்கு மந்திரவாதி என்பதுதான் பொருள். )
அப்போஸ்தலர்கள் 13 : 9 (RCTA)
அப்போது சின்னப்பர் என்னும் சவுல் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று அவனை உற்று நோக்கி,
அப்போஸ்தலர்கள் 13 : 10 (RCTA)
"சூழ்ச்சியும் வஞ்சகமுமே உருவானவனே! அலகையின் வழிவந்தவனே! நன்மையானதற்கெல்லாம் பகைவனே! ஆண்டவரின் நேர்மையான வழியைப் புரட்டுவதை விட்டுவிடமாட்டாயா
அப்போஸ்தலர்கள் 13 : 11 (RCTA)
இதோ! ஆண்டவரின் கை உன்மேல் ஓங்கியிருக்கிறது. நீ ஒளியைக் காணாது கொஞ்சகாலம் குருடனாயிருப்பாய்" என்றார். என்றதும் அவனுக்குப் பார்வை மங்கிற்று. இருள் அவனைச் சூழ்ந்தது. அவன் அங்குமிங்கும் தடவி, தனக்கு வழிகாட்ட ஓர் ஆள் தேடலானான்.
அப்போஸ்தலர்கள் 13 : 12 (RCTA)
நடந்ததைக் கண்ட ஆளுநன் விசுவசித்தான். ஆண்டவரின் போதனையைக் கேட்டு மலைத்துப்போனான்.
அப்போஸ்தலர்கள் 13 : 13 (RCTA)
சின்னப்பரும் அவருடன் இருந்தவர்களும் பாப்போவிலிருந்து கப்பல் ஏறி பம்பிலியாவிலுள்ள பெர்கே துறையை அடைந்தனர். அருளப்பர் அவர்களை விட்டுப் பிரிந்து யெருசலேமிற்குத் திரும்பினார்.
அப்போஸ்தலர்கள் 13 : 14 (RCTA)
பெர்கேயிலிருந்து பயணத்தைத் தொடர்ந்து பிசிதியா நாட்டு அந்தியோகியா வந்தனர்.
அப்போஸ்தலர்கள் 13 : 15 (RCTA)
ஓய்வுநாளில் செபக்கூடத்திற்குப் போய் அமர்ந்தனர். திருச்சட்டமும் இறைவாக்குகளும் வாசித்து முடிந்தபின், செபக்கூடத் தலைவர்கள் அவர்களைப் பார்த்து, "சகோதரரே, மக்களுக்கு அறிவுரை கூற ஏதாவது இருந்தால் பேசலாம்" என்றனர்.
அப்போஸ்தலர்கள் 13 : 16 (RCTA)
சவுல் எழுந்து சைகை காட்டி உரைத்ததாவது: "இஸ்ராயேலரே, கடவுளுக்கு அஞ்சுபவரே, கேளுங்கள்:
அப்போஸ்தலர்கள் 13 : 17 (RCTA)
இஸ்ராயேலராகிய இம்மக்களின் கடவுள் நம் முன்னோரைத் தெரிந்தெடுத்தார். நம் மக்கள் எகிப்து நாட்டில் குடியேறியபோது அவர்களை மேன்மைப்படுத்தினார். ஓங்கிய தம் கை வன்மையால் அவர்களை அந்நாட்டிலிருந்து வெளியேற்றி,
அப்போஸ்தலர்கள் 13 : 18 (RCTA)
பாலை நிலத்தில் நாற்பது ஆண்டளவாய், அவர்கள் போன போக்கையெல்லாம் சகித்து வந்தார்.
அப்போஸ்தலர்கள் 13 : 19 (RCTA)
பின்னர், கானான் நாட்டில் ஏழு இனத்தினரை ஒழித்து அவர்களுடைய நாடுகளை இவர்களுக்கு உரிமையாக்கினார்.
அப்போஸ்தலர்கள் 13 : 20 (RCTA)
இவையெல்லாம் நடைபெற ஏறக்குறைய நானூற்று ஐம்பது ஆண்டுகளாயின. அதன்பின், இறைவாக்கினரான சாமுவேல் வரை அவர்களுக்கு நடுவர்களை அனுப்பினார்.
அப்போஸ்தலர்கள் 13 : 21 (RCTA)
பின்னர் அவர்கள் ஓர் அரசனை ஏற்படுத்துமாறு வேண்டவே, கீஸ் என்பவனின் மகன் சவுலைக் கடவுள் அரசனாக ஏற்படுத்தினார். அவன் பென்யமீன் குலத்தினன்; நாற்பது ஆண்டுகள் ஆண்டான்.
அப்போஸ்தலர்கள் 13 : 22 (RCTA)
பிறகு கடவுள் அவனை நீக்கிவிட்டு, தாவீதை அவர்களுக்கு அரசனாக ஏற்படுத்தினார். அவரைப்பற்றிக் கடவுள், ' யீசாயின் மகன் தாவீது என் மனத்துக்கு உகந்தவனாய் இருக்கக் கண்டேன். நான் விரும்பியதெல்லாம் அவன் செய்வான் ' என்று நற்சான்று கூறினார்.
அப்போஸ்தலர்கள் 13 : 23 (RCTA)
அவரது மரபிலிருந்தே கடவுள் தாம் வாக்களித்தபடி இயேசுவை இஸ்ராயேலருக்கு மீட்பராக வரச்செய்தார்.
அப்போஸ்தலர்கள் 13 : 24 (RCTA)
இயேசுவின் வருகைக்குமுன், அருளப்பர் இஸ்ராயேல் மக்கள் அனைவருக்கும், மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று அறிவித்து வந்தார்.
அப்போஸ்தலர்கள் 13 : 25 (RCTA)
தம் பணி முடிவுறும் காலத்தில் அருளப்பர், ' நீங்கள் என்னை யாரென நினைக்கிறீர்களோ, அவரல்ல நான். இதோ! ஒருவர் எனக்குப்பின் வருகின்றார். அவருடைய மிதியடிகளை அவிழ்க்க நான் தகுதியற்றவன் ' என்றார்.
அப்போஸ்தலர்கள் 13 : 26 (RCTA)
"சகோதரரே, ஆபிரகாம் வழி வந்தவர்களே, மற்றும் கடவுளுக்கு அஞ்சுபவர்களே, நமக்கன்றோ இந்த மீட்பைப் பற்றிய செய்தி அனுப்பப்பட்டது.
அப்போஸ்தலர்கள் 13 : 27 (RCTA)
யெருசலேம் வாசிகளும், அவர்களுடைய தலைவர்களும் அம்மீட்பரை அறிந்துகொள்ளவில்லை. ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளையும் புரிந்து கொள்ளவில்லை. ஆயினும் அவருக்குத் தீர்ப்பளித்தபோது அவ்வாக்கியங்களை நிறைவேற்றினர்.
அப்போஸ்தலர்கள் 13 : 28 (RCTA)
சாவுக்குரிய குற்றம் எதுவும் காணாதிருந்தும் அவரைத் தொலைக்குமாறு பிலாத்துவைக் கேட்டனர்.
அப்போஸ்தலர்கள் 13 : 29 (RCTA)
அவரைக் குறித்து எழுதப்பட்டவை அனைத்தும் நிறைவேறிய பின்னர் அவரைக் கழுமரத்திலிருந்து இறக்கி, கல்லறையில் வைத்தனர்.
அப்போஸ்தலர்கள் 13 : 30 (RCTA)
கடவுளோ அவரை இறந்தோரிடமிருந்து எழுப்பினார்.
அப்போஸ்தலர்கள் 13 : 31 (RCTA)
அவரும் கலிலேயாவிலிருந்து தம்முடன் யெருசலேம் வந்திருந்தவர்களுக்குப் பல நாட்கள் தோன்றினார். அவர்கள் இப்போது மக்கள்முன் அவருக்குச் சாட்சியாக நிற்கின்றனர்.
அப்போஸ்தலர்கள் 13 : 32 (RCTA)
"நாங்களும் உங்களுக்கு அறிவிக்கும் நற்செய்தியாவது:
அப்போஸ்தலர்கள் 13 : 33 (RCTA)
இயேசுவைக் கடவுள் உயிர்ப்பித்து, நம் முன்னோருக்கு அளித்த வாக்குறுதியை அவர்களுடைய மக்களாகிய நமக்கென நிறைவேற்றினார். அதைப்பற்றியே இரண்டாம் சங்கீதத்தில், ' நீர் எம் புதல்வர், இன்று உம்மை யாம் ஈன்றெடுத்தோம் ' என்று எழுதியுள்ளது.
அப்போஸ்தலர்கள் 13 : 34 (RCTA)
மேலும், அவர் என்றுமே அழிவுக்கு ஆளாகாதபடி, இறந்தோரிடமிருந்து அவரை எழுப்பினார் என்பதைப் பற்றித்தான், ' தாவீதுக்குக் கூறிய தவறாத வாக்குறுதிகளை உங்களுக்கென நிறைவேற்றுவேன் ' என்று உரைத்தபோது கூறினார்.
அப்போஸ்தலர்கள் 13 : 35 (RCTA)
எப்படியெனில் மற்றோரிடத்தில், ' உம்முடைய பரிசுத்தர் அழிவுற விடமாட்டீர் ' என்றுள்ளது.
அப்போஸ்தலர்கள் 13 : 36 (RCTA)
ஆனால், தாவீது தம் தலைமுறையில் கடவுளின் திட்டத்தை நிறைவேற்றியபின் இறந்தார்.
அப்போஸ்தலர்கள் 13 : 37 (RCTA)
தம் முன்னோர்களுடன் புதைக்கப்பட்டு அழிவுற்றார். ஆனால் யாரைக் கடவுள் எழுப்பினாரோ, அவர் அழிவுறவில்லை. "எனவே, சகோதரரே, இவர் வழியாகவே பாவமன்னிப்பு உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
அப்போஸ்தலர்கள் 13 : 38 (RCTA)
இதைத் தெரிந்துகொள்ளுங்கள். மோயீசன் சட்டத்தின் வழியாக உங்கள் குற்றங்கள் எவற்றினின்றும் நீங்கள் விடுபடமுடியவில்லை.
அப்போஸ்தலர்கள் 13 : 39 (RCTA)
ஆனால், விசுவசிக்கிற அனைவரும் இவர்வழியாக அவற்றினின்று விடுபடுவர்.
அப்போஸ்தலர்கள் 13 : 40 (RCTA)
ஆகவே, இகழ்பவரே, பாருங்கள், வியப்புறுங்கள், ஒழிந்துபோங்கள். ஏனெனில்,
அப்போஸ்தலர்கள் 13 : 41 (RCTA)
உங்கள் வாழ்நாளில் நான் ஒன்று செய்வேன். யார் சொன்னாலும் அதை நம்பமாட்டீர்கள் ' என்று இறைவாக்குகளின் நூலில் கூறியுள்ளது உங்களுக்கு நேராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
அப்போஸ்தலர்கள் 13 : 42 (RCTA)
அவர்கள் வெளியே செல்லுகையில் அடுத்த ஓய்வுநாளில் அதைப்பற்றியே பேசும்படி மக்கள் அவர்களைக் கேட்டுக் கொண்டனர்.
அப்போஸ்தலர்கள் 13 : 43 (RCTA)
கூட்டம் கலைந்த பின்னர் யூதர் பலரும், யூதமறையைத் தழுவிய புறவினத்தவர் பலரும் சின்னப்பரையும் பர்னபாவையும் பின் தொடர்ந்தனர். இவ்விருவரும் அவர்களுடன் உரையாடி, கடவுளுடைய அருளில் நிலையாயிருக்கும்படி ஊக்குவித்தனர்.
அப்போஸ்தலர்கள் 13 : 44 (RCTA)
அடுத்த ஓய்வுநாளில் கடவுளின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய நகரத்தார் அனைவரும் வந்து கூடினர்.
அப்போஸ்தலர்கள் 13 : 45 (RCTA)
இக்கூட்டத்தைக் கண்டு, யூதர்கள் பொறாமை நிறைந்தவர்களாய்ச் சின்னப்பரைத் தூற்றி, அவர் சொன்னதை மறுத்துப் பேசினர்.
அப்போஸ்தலர்கள் 13 : 46 (RCTA)
சின்னப்பரும் பர்னபாவும் துணிவோடு, "முதலில் உங்களுக்குத்தான் கடவுளின் வார்த்தையைப் போதிக்கவேண்டியிருந்தது. ஆனால், நீங்கள் அதைப் புறக்கணித்து, முடிவில்லா வாழ்விற்குத் தகுதியற்றவர்கள் என நீங்களே உங்களுக்குத் தீர்ப்பிட்டுக் கொண்டீர்கள். ஆதலால், இதோ, நாங்கள் உங்களைவிட்டு, 'புறவினத்தார்பால் செல்கிறோம்.
அப்போஸ்தலர்கள் 13 : 47 (RCTA)
ஏனெனில், ' உலகின் இறுதி எல்லைவரைக்கும் மீட்பைக் கொண்டு செல்ல புறவினத்தாருக்கு ஒளியாக உன்னை ஏற்படுத்தினேன் ' என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்" என்றனர்.
அப்போஸ்தலர்கள் 13 : 48 (RCTA)
புறவினத்தார் இதைக் கேட்டு மகிழ்ந்து ஆண்டவரின் வார்த்தையை மகிமைப்படுத்தினர். முடிவில்லா வாழ்வுக்குக் குறிக்கப்பட்டவர்கள் அனைவரும் விசுவாசிகள் ஆயினர்.
அப்போஸ்தலர்கள் 13 : 49 (RCTA)
ஆண்டவரின் வார்த்தை அந்நாடெங்கும் பரவிவந்தது.
அப்போஸ்தலர்கள் 13 : 50 (RCTA)
யூதர்களோ யூதமறையைத் தழுவிய பெருங்குடிப் பெண்டிரையும் நகரப் பெரியோர்களையும் தூண்டினர். சின்னப்பருக்கும் பர்னபாவுக்கும் எதிராகக் கலகம் உண்டாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து வெளியேற்றினர்.
அப்போஸ்தலர்கள் 13 : 51 (RCTA)
இவர்கள் தம் காலிலிருந்து தூசியை அவர்களுக்கு எதிராகத் தட்டிவிட்டு இக்கோனியாவுக்குப் போயினர்.
அப்போஸ்தலர்கள் 13 : 52 (RCTA)
சீடர்களோ மகிழ்ச்சியாலும் பரிசுத்த ஆவியாலும் நிரம்பியவராய் வாழ்ந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52

BG:

Opacity:

Color:


Size:


Font: