அப்போஸ்தலர்கள் 11 : 1 (RCTA)
கடவுளின் வார்த்தையைப் புறவினத்தார் கூட ஏற்றுக்கொண்டதை யூதேயாவிலுள்ள சகோதரரும் அப்போஸ்தலரும் கேள்விப்பட்டனர்.
அப்போஸ்தலர்கள் 11 : 2 (RCTA)
இராயப்பர் யெருசலேமுக்குச் சென்றபோது, விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள்,
அப்போஸ்தலர்கள் 11 : 3 (RCTA)
"நீர் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்கள் வீட்டிற்குப் போய் அவர்களோடு சாப்பிட்டீரே!" என்று அவருடன் வாதாடினர்.
அப்போஸ்தலர்கள் 11 : 4 (RCTA)
அதற்கு இராயப்பர் நடந்ததை விவரமாக விளக்கிச் சொன்னதாவது:
அப்போஸ்தலர்கள் 11 : 5 (RCTA)
"நான் யோப்பா நகரில் செபித்துக்கொண்டிருந்தபொழுது பரவசமாகிக் காட்சி கண்டேன். கப்பல் பாயைப்போன்ற ஒரு விரிப்பு நான்கு மூலைகளிலும் கட்டி வானத்தினின்று இறக்கப்பட்டு என்னிடம் வந்தது.
அப்போஸ்தலர்கள் 11 : 6 (RCTA)
அதை நான் உற்று நோக்குகையில் காட்டு விலங்குகள், தரையில் நடப்பன, ஊர்வன, வானில் பறப்பன யாவும் கண்டேன்.
அப்போஸ்தலர்கள் 11 : 7 (RCTA)
அப்பொழுது, 'இராயப்பா, எழுந்து இவற்றைக் கொன்று சாப்பிடு' என ஒரு குரல் கேட்டது.
அப்போஸ்தலர்கள் 11 : 8 (RCTA)
அதற்கு நான், 'வேண்டாம், ஆண்டவரே. தீட்டும் அசுத்தமுமான எதையும் ஒருபோதும் நான் என் வாயில் வைத்ததேயில்லை' என்றேன்.
அப்போஸ்தலர்கள் 11 : 9 (RCTA)
அதற்கு, 'சுத்தமெனக் கடவுள் சொன்னதை, தீட்டு என்று நீ சொல்லாதே' என மீளவும் அக்குரல் பேசிற்று. இப்படி மும்முறை நடந்தது.
அப்போஸ்தலர்கள் 11 : 10 (RCTA)
பின் எல்லாம் வானத்திற்கு எடுக்கப்பட்டன.
அப்போஸ்தலர்கள் 11 : 11 (RCTA)
அதே நேரத்தில் செசரியாவிலிருந்து என்னிடம் அனுப்பப்பட்ட மூவர் நான் தங்கி இருந்த வீட்டுக்கு முன்னே வந்து நின்றனர்.
அப்போஸ்தலர்கள் 11 : 12 (RCTA)
தயக்கமின்றி அவர்களுடன் செல்லும்படி ஆவியானவர் எனக்குச் சொன்னார். எனவே, நானும் இந்த ஆறு சகோதரர்களும் புறப்பட்டு அவருடைய வீட்டை அடைந்தோம்.
அப்போஸ்தலர்கள் 11 : 13 (RCTA)
அவர் தம் வீட்டில் வானதூதர் தோன்றியதாகவும், அந்தத் தூதர் யோப்பாவுக்கு ஆள் அனுப்பி இராயப்பர் என்னும் சீமோனை வரச்சொல்லும்;
அப்போஸ்தலர்கள் 11 : 14 (RCTA)
நீரும் உம் வீட்டார் அனைவரும் மீட்புப் பெறுவதற்கான வார்த்தைகளை அவர் உமக்குக் கூறுவார்" என்று தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்குச் சொன்னார்.
அப்போஸ்தலர்கள் 11 : 15 (RCTA)
"நான் பேசத் தொடங்கியதும், பரிசுத்த ஆவி முன்பு நம்மேல் இறங்கியதுபோலவே அவர்கள் மேலும் இறங்கினார்.
அப்போஸ்தலர்கள் 11 : 16 (RCTA)
அப்போது 'அருளப்பர் நீரால் ஞானஸ்நானம் கொடுத்தார். நீங்களோ பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்' என்று ஆண்டவர் கூறிய வார்த்தையை நினைவு கூர்ந்தேன்.
அப்போஸ்தலர்கள் 11 : 17 (RCTA)
ஆகவே, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மேல் விசுவாசம் கொண்ட நமக்கு அருளிய அதே திருக்கொடையைக் கடவுள் அவர்களுக்கும் அருளினார் என்றால், கடவுளுக்குத் தடைசெய்ய என்னால் எப்படி முடியும்?"
அப்போஸ்தலர்கள் 11 : 18 (RCTA)
இதைக் கேட்டு அமைதி அடைந்தனர். அப்படியானால் வாழ்வுக்கு வழியாகும் மனமாற்றத்தைக் கடவுள் புறவினத்தாருக்குக் கூட அருளினார் என்று கடவுளை மகிமைப்படுத்தினர்.
அப்போஸ்தலர்கள் 11 : 19 (RCTA)
முடியப்பர் பற்றிய கலாபனையால் விசுவாசிகள் பெனிக்கியா, சைப்ரஸ், அந்தியோகியா வரைக்கும் சிதறுண்டு போயினர். அவர்கள் யூதர்களுக்கு மட்டுமே அன்றி வேறு யாருக்கும் தேவ வார்த்தையை அறிவிக்கவில்லை.
அப்போஸ்தலர்கள் 11 : 20 (RCTA)
ஆனால், இப்படிப் போனவர்களுள் சைப்ரஸ்தீவினர், சீரேனே ஊரார் சிலர் அந்தியோகியாவிற்கு வந்து கிரேக்கர்களை அணுகி, அவர்களுக்கும் ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தி அறிவித்தனர்.
அப்போஸ்தலர்கள் 11 : 21 (RCTA)
ஆண்டவரின் கைவன்மை அவர்களுக்குத் துணை நின்றது. ஆதலின், பலர் ஆண்டவர்மேல் விசுவாசம் கொண்டு மனந்திரும்பினர்.
அப்போஸ்தலர்கள் 11 : 22 (RCTA)
இச்செய்தி யெருசலேமிலுள்ள திருச்சபைக்கு எட்டவே, பர்னபாவை அந்தியோகியாவிற்கு அனுப்பினர்.
அப்போஸ்தலர்கள் 11 : 23 (RCTA)
பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவராய், நற்பண்புடன் விளங்கிய இவர்,
அப்போஸ்தலர்கள் 11 : 24 (RCTA)
அங்குப்போய் கடவுளின் அருளைக்கண்டு மனமகிழ்ந்தார். மன உறுதியுடன் ஆண்டவரில் நிலைத்து நிற்க அனைவரையும் ஊக்குவித்தார். திரளான மக்கள் ஆண்டவர் பக்கம் சேர்ந்தனர்.
அப்போஸ்தலர்கள் 11 : 25 (RCTA)
சவுலை நாடி பர்னபா தர்சு நகருக்குச் சென்றார். அங்கு அவரைக் கண்டு அந்தியோகியாவிற்கு அழைத்து வந்தார்.
அப்போஸ்தலர்கள் 11 : 26 (RCTA)
இருவரும் அச்சபையோடு ஓராண்டு முழுவதும் உறவாடினர்; அங்கே பலருக்குப் போதித்தனர். அந்தியோகியாவில் தான் முதன்முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயரைப் பெற்றனர்.
அப்போஸ்தலர்கள் 11 : 27 (RCTA)
அந்நாளில் இறைவாக்கினர் சிலர் யெருசலேமிலிருந்து, அந்தியோகியாவிற்கு வந்தனர்.
அப்போஸ்தலர்கள் 11 : 28 (RCTA)
அவர்களுள் ஒருவர் அகபு என்பவர். அவர் ஆவியினால் ஏவப்பட்டு, உலகெங்கும் பெரும் பஞ்சம் உண்டாகுமென முன்னுரைத்தார். அது கிளாதியுஸ் பேரரசன் காலத்தில் உண்டாயிற்று.
அப்போஸ்தலர்கள் 11 : 29 (RCTA)
ஆகவே, சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களாலான பொருளுதவியை யூதேயாவிலுள்ள சகோதரர்களுக்கு அனுப்பத் தீர்மானித்தனர்.
அப்போஸ்தலர்கள் 11 : 30 (RCTA)
அதன்படியே அவர்கள் அத்தொகையைப் பர்னபா, சவுல் இவர்களின் வழியாக மூப்பர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30

BG:

Opacity:

Color:


Size:


Font: