2 தீமோத்தேயு 3 : 1 (RCTA)
மேலும் இதைத் தெரிந்துகொள்ளும்: இறுதி நாட்கள் பொல்லாத காலமாயிருக்கும்.
2 தீமோத்தேயு 3 : 2 (RCTA)
அப்போது மக்கள் தன்னலப்பிரியர், பொருளாசை பிடித்தவர், வீம்புக்காரர், செருக்குடையவர், பழித்துப்பேசுபவர், பெற்றோருக்கு அடங்காதவர், நன்றி கொன்றவர், இறைவனைப் புறகணிப்பவர்,
2 தீமோத்தேயு 3 : 3 (RCTA)
பரிவில்லாதவர், தீராப் பகையினர், புரணி பேசுபவர், தன்னடக்கமற்றவர், கொடியவர், நல்லதை வெறுப்பவர்,
2 தீமோத்தேயு 3 : 4 (RCTA)
நம்பிக்கைத் துரோகிகள், மூர்க்கர், இறுமாப்புடையவர் என்று இவ்வாறெல்லாம் இருப்பர். அவர்கள் கடவுளை நாடுவதைவிடச் சிற்றின்பங்களையே மிகுதியாய் நாடுவர்.
2 தீமோத்தேயு 3 : 5 (RCTA)
பக்தியின் வெளித் தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள்; ஆனால் அதன் உள்ளாற்றலைப் பொருட்படுத்த மாட்டார்கள்.இவர்களுடன் சேராதீர்.
2 தீமோத்தேயு 3 : 6 (RCTA)
இத்தகையவர்களுள் சிலர் பிறர் வீடுகளில் புகுந்து மதிகெட்ட பெண்களை வயப்படுத்துகிறார்கள். இப்பெண்களோ பாவங்களால் மூழ்கடிக்கப்பட்டு, பல்வேறு இச்சைகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
2 தீமோத்தேயு 3 : 7 (RCTA)
இவர்கள் ஓயாமல் கற்றுக்கொண்டேயிருந்தாலும் உண்மையைக் கண்டுணர்வதில்லை.
2 தீமோத்தேயு 3 : 8 (RCTA)
யன்னேயும் யம்பிரேயும் மோயீசனை எதிர்த்து நின்றதுபோல் மேற்சொன்னவர்களும் உண்மையை எதிர்த்து நிற்கிறார்கள். சீரழிந்த மதிகொண்டவர்கள் இவர்கள். விசுவாசத்தைப் பொறுத்த மட்டில் பயனற்றவர்கள்.
2 தீமோத்தேயு 3 : 9 (RCTA)
இவர்கள் போக்கு நீண்ட நாள் நீடிக்காது. மோயீசனை எதிர்த்தவர்களின் மதிகேடு வெளியானதுபோல் இவர்களுடைய மதிகேடும் எல்லாருக்கும் வெளியாகும்.
2 தீமோத்தேயு 3 : 10 (RCTA)
நீரோ, என் போதனை, நடத்தை, குறிக்கோள், விசுவாசம், பொறுமை, அன்பு, மனவுறுதி, ஆகிய இவற்றில் என்னைப் பின்பற்றினீர்.
2 தீமோத்தேயு 3 : 11 (RCTA)
அந்தியோக்கியா, இக்கோனியா, லீஸ்திரா ஆகிய இடங்களில் நான் துன்புறுத்தப்பட்டபோது என் பாடுகளிலும் என்னைப் பின்பற்றினீர். எத்தனையோ துன்பங்களுக்கு உள்ளானேன். ஆனால் ஆண்டவர் அவை அனைத்தினின்றும் என்னை விடுவித்தார்.
2 தீமோத்தேயு 3 : 12 (RCTA)
பக்தியோடு கிறிஸ்து இயேசுவில் வாழவிரும்புவோர் அனைவரும் துன்புறுத்தப்படுவார்.
2 தீமோத்தேயு 3 : 13 (RCTA)
தீயவர்களும் எத்தர்களும் மேன்மேலும் கேடுறுவார்கள். ஏமாற்றும் இவர்கள் ஏமாந்து போவார்கள்.
2 தீமோத்தேயு 3 : 14 (RCTA)
நீரோ, கற்றுக்கொண்டவற்றையும், உம் மனத்தில் உறுதியாய் நிறுத்திய உண்மைகளையும் கடைப்பிடியும். உமக்குக் கற்பித்தவர்கள் யாரென்று தெரியுமன்றோ?
2 தீமோத்தேயு 3 : 15 (RCTA)
குழந்தைப் பருவமுதலே உமக்கு மறைநூல் தெரியும் என்பதை நீர் மறவாதீர். மறைநூல் கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தினால் மீட்பிற்கு அழைத்துச் செல்லக்கூடிய ஞானத்தை அளிக்க வல்லது.
2 தீமோத்தேயு 3 : 16 (RCTA)
மறைநூலில் உள்ளதெல்லாம் கடவுளால் ஏவப்பட்டுள்ளது. போதிக்கவும் கண்டிக்கவும் சீர்திருத்தவும், இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வில் மக்களைப் பயிற்றவும், பயன்படும்.
2 தீமோத்தேயு 3 : 17 (RCTA)
இவ்வாறு கடவுளின் அடியான், திறமை நிரம்பப் பெற்று, எல்லா வகையான நற்செயல்களையும் செய்யத் தகுதியுள்ளவனாகின்றான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17