2 தெசலோனிக்கேயர் 3 : 1 (RCTA)
இறுதியாக, சகோதரர்களே, எங்களுக்காகச் செபியுங்கள்,. ஆண்டவருடைய வார்த்தை உங்களிடையே பரவியதுபோல,
2 தெசலோனிக்கேயர் 3 : 2 (RCTA)
எங்கும் விரைந்து பரவி மகிமை பெறவும், முறை கெட்டவர் தீயவர் கைக்கு நாங்கள் தப்பவும் வேண்டிக்கொள்ளுங்கள்: விசுவாசம் என்பது எல்லாரிடமும் இல்லயைன்றோ? ஆண்டவரோ நம்பிக்கைக்குரியவர்.
2 தெசலோனிக்கேயர் 3 : 3 (RCTA)
அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீயோனிடமிருந்து காப்பாற்றுவார்.
2 தெசலோனிக்கேயர் 3 : 4 (RCTA)
நாங்கள் கட்டளையிட்டதை எல்லாம் நீங்கள் செய்து வருவீர்கள், இனியும் செய்து வருவீர்கள் என்று ஆண்டவரின் அருளால் உங்கள்மேல் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
2 தெசலோனிக்கேயர் 3 : 5 (RCTA)
கடவுளின் அன்பைப்பெறவும், கிறிஸ்துவின் பொறுமையை அடையவும் ஆண்டவர் உங்கள் உள்ளங்களுக்கு வழிகாட்டுவாராக.
2 தெசலோனிக்கேயர் 3 : 6 (RCTA)
சகோதரர்களே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகிறதாவது: எங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட படிப்பினைக்கு ஏற்ப நடக்காமல் சோம்பித்திரியும் எந்தச் சகோதரனிடமிருந்து விலகி நில்லுங்கள்.
2 தெசலோனிக்கேயர் 3 : 7 (RCTA)
எங்களைப் போல் நடப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமே. உங்களோடிருந்தபோது நாங்கள் சோம்பித்திரியவில்லை.
2 தெசலோனிக்கேயர் 3 : 8 (RCTA)
யாரிடமும் நாங்கள் இலவசமாக உணவு கொள்ளவில்லை. மாறாக, உங்களுள் யாருக்கும் சுமையாய் இராதபடி பிழைப்புக்காக இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம்.
2 தெசலோனிக்கேயர் 3 : 9 (RCTA)
உங்களிடமிருந்து பிழைப்புக்குத் தேவையானதைப் பெற எங்களுக்கு உரிமையில்லை என்பதனால் இவ்வாறு உழைக்கவில்லை. நாங்கள் செய்வதுபோலவே நீங்களும் செய்ய வேண்டுமென்று உங்களுக்கு முன்மாதிரியாய் இருக்கவே அப்படிச் செய்தோம்.
2 தெசலோனிக்கேயர் 3 : 10 (RCTA)
நாங்கள் உங்களோடிருந்தபொழுது, 'உழைக்க மனமில்லாத எவனும் உண்ணலாகாது' என்ற கட்டளை கொடுத்தோம்.
2 தெசலோனிக்கேயர் 3 : 11 (RCTA)
உங்களுள் சிலர் எவ்வேலையும் செய்யாமல், இங்கும் அங்கும் சோம்பித் திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம்.
2 தெசலோனிக்கேயர் 3 : 12 (RCTA)
இத்தகையோர் தங்கள் உணவுக்காக அமைதியோடு உழைக்க வேண்டுமேன்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம்.
2 தெசலோனிக்கேயர் 3 : 13 (RCTA)
சகோதரர்களே, நன்மை செய்வதில் மனந்தளர வேண்டாம்.
2 தெசலோனிக்கேயர் 3 : 14 (RCTA)
இக்கடிதத்தில் நாங்கள் சொல்வதற்கு யாராவது கீழ்ப்படியாவிட்டால், அவனுக்கு வெட்க முண்டாகும்படி, சபையில் அவன் பெயரைக் குறிப்பிட்டு அவனோடு உறவு வைத்துக்கொள்ளாதீர்கள்.
2 தெசலோனிக்கேயர் 3 : 15 (RCTA)
எனினும், அவனைப் பகைவனாகக் கொள்ளாமல், சகோதரனாகவே கருதி, அவனுக்கு அறிவு புகட்டுங்கள்.
2 தெசலோனிக்கேயர் 3 : 16 (RCTA)
சமாதானத்தின் ஊற்றாகிய ஆண்டவர் எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்குச் சமாதானம் அருள்வாராக.
2 தெசலோனிக்கேயர் 3 : 17 (RCTA)
ஆண்டவர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக. இவ்வாழ்த்து சின்னப்பனான நான் என் கைப்பட எழுதியது. என் கடிதம் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம்.
2 தெசலோனிக்கேயர் 3 : 18 (RCTA)
நான் எழுதுவது இப்படித்தான், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
❮
❯