2 சாமுவேல் 9 : 1 (RCTA)
தாவீது, "சவுலின் வீட்டாரில் இன்னும் எவனாவது விடுபட்டிருக்கிறானா? இருந்தால் யோனத்தாசின் பொருட்டு நான் அவனுக்கு இரக்கம் காட்டுவேன்" என்றார்.
2 சாமுவேல் 9 : 2 (RCTA)
சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபா என்ற ஒருவன் இருந்தான். அரசர் அவனைத் தம்மிடம் வரச் சொல்லி அவனை நோக்கி, "சீபா நீ தானா?" என்று கேட்டார். அதற்கு அவன், "அடியேன் தான்" என்றான்.
2 சாமுவேல் 9 : 3 (RCTA)
அப்போது அரசர், "கடவுளின் பொருட்டு நான் சவுலின் குடும்பத்தாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறேன். அவருடைய வீட்டாரில் யாரேனும் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா?" என்று வினவினார். சீபா அரசரை நோக்கி, "ஆம், யோனத்தாசுக்குப் பிறந்து இரு கால்களும் முடமான ஒருவன் இருக்கிறான்" என்றான்.
2 சாமுவேல் 9 : 4 (RCTA)
அதற்குத் தாவீது, "அவன் எங்கே?" என, சீபா அரசரைப் பார்த்து, "அவன் அம்மியேலின் மகனாகிய மக்கீருடைய வீட்டிலிருக்கிறான்" என்றான்.
2 சாமுவேல் 9 : 5 (RCTA)
அப்போது தாவீது அரசர் ஆட்களை அனுப்பி லோதாபாரிலிருக்கிற அம்மியேலின் மகனாகிய மக்கீருடைய வீட்டிலிருந்து அவனைக் கொண்டுவரச் செய்தார்.
2 சாமுவேல் 9 : 6 (RCTA)
சவுலின் மகனான யோனத்தாசின் மகன் மிபிபோசேத் தாவீதிடம் வந்த போது முகங்குப்புற விழுந்து அவரை வணங்கினான். அப்பொழுது தாவீது, "மிபிபோசேத்" என்று கூப்பிட, அவன், "அடியேன் இருக்கிறேன்" என்றான்.
2 சாமுவேல் 9 : 7 (RCTA)
தாவீது அவனை நோக்கி, "அஞ்சாதே, உன் தந்தை யோனத்தாசை முன்னிட்டு நான் உனக்குக் கட்டாயம் இரக்கம் காட்டுவேன். உன் பாட்டனாகிய சவுலின் நிலங்களை எல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன். மேலும், நீ என் பந்தியில் நாளும் உணவு அருந்துவாய்" என்றார்.
2 சாமுவேல் 9 : 8 (RCTA)
அவன் அரசரை வணங்கி, "என் போன்ற செத்த நாயின் மேல் நீர் பரிவு காட்டுவதற்கு உம் அடியான் யார்?" என்றான்.
2 சாமுவேல் 9 : 9 (RCTA)
அரசரோ சவுலின் ஊழியனான சீபாவைக் கூப்பிட்டு, "சவுலுக்குச் சொந்தமான யாவற்றையும், அவன் வீட்டையும் உன் தலைவரின் மகனுக்குக் கொடுத்துள்ளேன்.
2 சாமுவேல் 9 : 10 (RCTA)
ஆகையால் நீயும் உன் புதல்வர்களும் உன் ஊழியர்களும் நிலத்தைப் பயிரிடுங்கள்; அதனால் உன் தலைவரின் மகன் உண்ண உணவு கிடைக்கும். உன் தலைவரின் மகன் மிபிபோசேத் நாளும் என் பந்தியில் உணவு அருந்துவான்" என்றார். சீபாவுக்கோ பதினைந்து மக்களும் இருபது வேலைக்காரர்களும் இருந்ததார்கள்.
2 சாமுவேல் 9 : 11 (RCTA)
சீபா அரசரை நோக்கி, "என் தலைவராகிய அரசே, நீர் அடியேனுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அடியேன் செய்வேன்" என்றான். அரச புதல்வரில் ஒருவரைப்போல் மிபிபோசேத் தாவீதின் பந்தியில் உணவு அருந்தி வந்தான்.
2 சாமுவேல் 9 : 12 (RCTA)
மிபிபோசேத்துக்கு மிக்கா என்ற ஒரு சிறிய மகன் இருந்தான். சீபாவின் குடும்பத்தார் அனைவரும் மிபிபோசேத்துக்கு வேலை செய்து வந்தார்கள்.
2 சாமுவேல் 9 : 13 (RCTA)
மிபிபோசேத்தோ யெருசலேமில் வாழ்ந்து வந்தான். ஏனெனில் அவன் அரசரின் பந்தியில் சாப்பிடுவது வழக்கம். அவனுக்கு இரு கால்களும் முடமாயிருந்தன.
❮
❯