2 சாமுவேல் 5 : 1 (RCTA)
இஸ்ராயேலின் கோத்திரங்கள் எல்லாம் எபிரோனில் இருந்த தாவீதிடம் வந்து, "இதோ நாங்கள் உமது எலும்பும் தசையுமானவர்கள்;
2 சாமுவேல் 5 : 2 (RCTA)
மேலும் நேற்றும் முந்தாநாளும் சவுல் எங்களுக்கு அரசனாய் இருந்தபோது, நீர் இஸ்ராயேலை நடத்திச் செல்பவராக இருந்தீரே; அன்றியும் ஆண்டவர் உம்மை நோக்கி, 'நம் மக்கள் இஸ்ராயேலை நீ பராமரித்து, இஸ்ராயேலுக்குத் தலைவனாய் இருப்பாய்' என்று உம்மிடம் திருவுளம் பற்றினாரே!" என்றனர்.
2 சாமுவேல் 5 : 3 (RCTA)
இஸ்ராயேலின் முதியவர்களும் எபிரோனில் இருந்த அரசரிடம் வந்தார்கள். தாவீது அரசர் எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன் படிக்கை செய்து கொண்ட பின்பு, அவர்கள் தாவீதை இஸ்ராயேலின் அரசராக அபிஷுகம் செய்தார்கள்.
2 சாமுவேல் 5 : 4 (RCTA)
தாவீது அரச பதவி ஏற்றபோது அவருக்கு வயது முப்பது. அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.
2 சாமுவேல் 5 : 5 (RCTA)
அவர் எபிரோனில் யூதாவை ஏழரை ஆண்டும், யெருசலேமில் இஸ்ராயேல் முழுவதையும் யூதாவையும் முப்பத்து மூன்று ஆண்டும் அரசாண்டார்.
2 சாமுவேல் 5 : 6 (RCTA)
அரசரும் அவருடன் இருந்த மனிதர் அனைவரும் எழுந்து நாட்டில் குடியிருந்த எபிசேயர் மேல் போரிடுவதற்கு யெருசலேமுக்குப் போனார்கள். எபிசேயர் தாவீதிடம், "நீர் குருடர்களையும் முடவர்களையும் அப்புறப்படுத்தாவிட்டால் இங்கு உம்மால் நுழைய முடியாது" என்று கூறித் தாவீது நகருள் நுழைவதைத் தடுத்தனர்.
2 சாமுவேல் 5 : 7 (RCTA)
ஆயினும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தார்.
2 சாமுவேல் 5 : 8 (RCTA)
அது தாவீதின் நகராயிற்று. குழாய்க் கால்வாய் வழியாகக் கோட்டையின் மேல் ஏறி எபிசேயரையும் தாவீதை வெறுக்கும் முடவர்களையும் குருடர்களையும் அப்புறப்படுத்துபவனுக்குப் பரிசு கொடுப்பதாகத் தாவீது கூறியிருந்தார். இதன் பொருட்டே, 'குருடனும் முடவனும் ஆலயத்தில் வரக்கூடாது' என்று பழமொழி வழங்கலாயிற்று.
2 சாமுவேல் 5 : 9 (RCTA)
அக்கோட்டையில் தாவீது வாழ்ந்து வந்தார். அதற்குத் தாவீதின் நகர் என்று பெயரிட்டு, மெல்லோ தொடங்கிச் சுற்றிலும் உட்புறத்தில் மதில் எழுப்பினார்.
2 சாமுவேல் 5 : 10 (RCTA)
அவர் நாளுக்கு நாள் சீரும் சிறப்பும் பெற்றார். சேனைகளின் ஆண்டவராகிய கடவுள் அவரோடு இருந்தார்.
2 சாமுவேல் 5 : 11 (RCTA)
அன்றியும் தீரின் அரசனாகிய கீராம் தாவீதிடம் தூதர்களையும் கேதுரு மரங்களையும் தச்சர்களையும் கொத்தர்களையும் அனுப்பி வைத்தான். அவர்கள் தாவீதுக்கு ஒரு மாளிகையைக் கட்டினார்கள்.
2 சாமுவேல் 5 : 12 (RCTA)
அதனால் ஆண்டவர் இஸ்ராயேலின் அரசராகத் தம்மை உறுதிப்படுத்தினார் என்றும், ஆண்டவருடைய மக்களாகிய இஸ்ராயேல் மேல் தம் அரசை அவரே நிறுவினார் என்றும் தாவீது தெளிவாய்க் கண்டு பிடித்தார்.
2 சாமுவேல் 5 : 13 (RCTA)
தாவீது எபிரோனிலிருந்து வந்த பின்பு யெருசலேமில் இன்னும் பல மனைவியரையும் வைப்பாட்டிகளையும் கொண்டார். அவருக்கு வேறு புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
2 சாமுவேல் 5 : 14 (RCTA)
சாமுவா, சோபாப். நாத்தான், சாலமோன்,
2 சாமுவேல் 5 : 15 (RCTA)
ஜேபவார், ஏலிசுவா, நெபேகு, ஜாபியா,
2 சாமுவேல் 5 : 16 (RCTA)
ஏலிசமா, எலியோதா, எலிபலேத் ஆகியோர் யெருசலேமில் அவருக்குப் பிறந்த மக்களாவர்.
2 சாமுவேல் 5 : 17 (RCTA)
தாவீதை இஸ்ராயேலின் அரசராக அபிஷுகம் செய்தார்கள் என்று அறிந்தபோது, பிலிஸ்தியர் எல்லாருமே அவரைத் தேடி வந்தார்கள். அதைக் கேள்வியுற்ற தாவீது கோட்டைக்குள் போய்விட்டார்.
2 சாமுவேல் 5 : 18 (RCTA)
பிலிஸ்தியரோ இராபாயீம் பள்ளத்தாக்கிற்கு வந்து எங்கும் பரவியிருந்தனர்.
2 சாமுவேல் 5 : 19 (RCTA)
அப்போது தாவீது ஆண்டவர் திருமுன் வந்து, "நான் பிலிஸ்தியரோடு போருக்குப் போகலாமா? என் கையில் அவர்களை நீர் ஒப்படைப்பீரா?" என்று கேட்க, ஆண்டவர், "போகலாம், பிலிஸ்தியரை உன் கையில் ஒப்படைப்போம்" என்று மறுமொழி சொன்னார்.
2 சாமுவேல் 5 : 20 (RCTA)
அவ்வாறே தாவீது பாவால்- பாரசீமுக்கு வந்து அங்கே அவர்களை முறியடித்தார். அப்போழுது அவர், "தண்ணீர் சிதறுண்டு போவது போல் ஆண்டவர் என் எதிரிகளை எனக்கு முன்பாகச் சிதறடித்தார்" என்றார். எனவே, பாவால்- பாரசீம் என்று அவ்விடம் அழைக்கப் பெற்றது.
2 சாமுவேல் 5 : 21 (RCTA)
பிலிஸ்தியர் தங்கள் சிற்பங்களை அங்கு விட்டுச் சென்றனர். தாவீதும் அவருடைய சேவகரும் அவற்றை எடுத்துச் சென்றனர்.
2 சாமுவேல் 5 : 22 (RCTA)
மீண்டும் பிலிஸ்தியர் வந்து இராபாயீம் பள்ளத்தாக்கில் பரவியிருந்தார்கள். தாவீது ஆண்டவர் திருமுன் வந்து,
2 சாமுவேல் 5 : 23 (RCTA)
பிலிஸ்தியருடன் நான் போருக்குப் போகலாமா? நீர் அவர்களை என் கையில் ஒப்படைப்பீரா? என்று கேட்டதற்கு ஆண்டவர், "நீ அவர்களை முன்னிருந்து எதிர்க்க வேண்டாம். மாறாக அவர்களுக்குப் பின்னால் சுற்றிப்போய்ப் பீர் மரங்களுக்கு எதிரே வந்த பின் அவர்களைப் பின் தொடர்வாய்.
2 சாமுவேல் 5 : 24 (RCTA)
மேலும் பீர் மரங்களின் உச்சியில் மனிதர் நடந்து வரும் சத்தத்தை நீ கேட்கும் போது போரைத் தொடங்கு. ஏனெனில் அந்நேரத்தில் பிலிஸ்தியரின் பாசறையை முறியடிக்கும்படி ஆண்டவர் உனக்கு முன்பாகப் போயிருப்பார்" என்றார்.
2 சாமுவேல் 5 : 25 (RCTA)
ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டிருந்தபடியே தாவீது செய்து, பிலிஸ்தியரைக் காபா தொடங்கி ஜேசர் எல்லை வரை துரத்தி முறியடித்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25

BG:

Opacity:

Color:


Size:


Font: