2 சாமுவேல் 22 : 1 (RCTA)
ஆண்டவர் தாவீதைச் சவுலின் கைக்கும், அவருடைய எல்லா எதிரிகளின் கைக்கும் தப்புவித்தபின் தாவீது ஆண்டவருக்குப் பண் இசைத்த பாடலாவது:
2 சாமுவேல் 22 : 2 (RCTA)
ஆண்டவரே என் பாறையும் என் வலிமையும் என் மீட்பரும் ஆவார்.
2 சாமுவேல் 22 : 3 (RCTA)
கடவுளே வல்லவர்; அவரையே நான் நம்பியிருக்கிறேன். என் கேடயமும் என் மீட்பின் அணிகலனும் என் புகழும் என் தஞ்சமும் அவரே. என் மீட்பரே பாவத்திலிருந்து என்னை மீட்டருளும்.
2 சாமுவேல் 22 : 4 (RCTA)
ஆண்டவர் புகழ்ச்சிக்கு உரியவர்; அவரை நோக்கிக் கூப்பிடுவேன். அதனால் என் எதிரிகளிடமிருந்து காக்கப் பெறுவேன்.
2 சாமுவேல் 22 : 5 (RCTA)
ஏனெனில் மரண பயங்கரம் என்னைச் சூழ்ந்து கொண்டது. பெலியாலின் வெள்ளங்கள் என்னை அச்சுறுத்தின.
2 சாமுவேல் 22 : 6 (RCTA)
பாதாளத்தின் கயிறுகள் என்னைச் சுற்றி வளைத்தன. மரணக் கண்ணிகள் என் மேலே விழுந்தன.
2 சாமுவேல் 22 : 7 (RCTA)
என் இக்கட்டு வேளையில் ஆண்டவரைக் கூவியழைப்பேன். என் கடவுளை நோக்கி அபயமிடுவேன். அவர் தமது ஆலயத்தினின்று என் கூக்குரலைக் கேட்பார். என் அழுகுரல் அவருடைய செவிகளில் ஏறும்.
2 சாமுவேல் 22 : 8 (RCTA)
பூமி அதிர்ந்து நடுங்கினது. அவர் கோபம் கொண்டபடியால் மலைகளின் அடித்தளங்களே நடுங்கிக் குலுங்கின.
2 சாமுவேல் 22 : 9 (RCTA)
அவருடைய நாசிகளினின்று புகை கிளம்பியது. அவருடைய வாயினின்று தீ புறப்பட்டது. அதனால் கரிகளும் தீப்பற்றிக் கொண்டன.
2 சாமுவேல் 22 : 10 (RCTA)
அவர் வானங்களைத் தாழ்த்தி இறங்கினார். அவருடைய பாதங்களின் கீழ் காரிருள் படர்ந்திருந்தது.
2 சாமுவேல் 22 : 11 (RCTA)
அவர் கெருபீம் மேல் ஏறிப் பறந்தார். காற்றின் இறக்கைளின் மேல் தாவிப் போய் விட்டார்.
2 சாமுவேல் 22 : 12 (RCTA)
இருளால் தம்மைச் சுற்றிலும் மறைத்தார். வான மேகங்களினின்று மழை பொழியச் செய்தார்.
2 சாமுவேல் 22 : 13 (RCTA)
அவர் திருமுன் ஒளியினால் கரிகளும் பற்றி எரிந்தன.
2 சாமுவேல் 22 : 14 (RCTA)
ஆண்டவர் வானினின்று இடிமுழங்கச் செய்வார். உன்னதமானவர் தம் குரல் தொனிக்கச் செய்வார்.
2 சாமுவேல் 22 : 15 (RCTA)
அவர் அம்புகளை எய்து அவர்களைச் சிதறடித்தார். மின்னல்களைப் பயன்படுத்தி அவர்களை அழித்து விட்டார்.
2 சாமுவேல் 22 : 16 (RCTA)
ஆண்டவர் அதட்டிக் கண்டித்ததினாலும், அவர் தமது கோபமூச்சை வீசினதினாலும் கடலின் பாதாளங்களும் தென்பட்டன; பூமியின் அடித்தளங்களும் காணப்பட்டன.
2 சாமுவேல் 22 : 17 (RCTA)
அவர் உயர்த்திலிருந்து பாய்ந்து வந்து என்னைத் தூக்கி வெள்ளப் பெருக்கினின்று மீட்டார்.
2 சாமுவேல் 22 : 18 (RCTA)
அவர் வல்லமைமிக்க என் எதிரிகளிடமிருந்தும், என்னிலும் வலிமை வாய்ந்தவராய் இருந்ததால் என்னைப் பகைத்தவர்களிடமிருந்தும் என்னைக் காப்பாற்றினார்.
2 சாமுவேல் 22 : 19 (RCTA)
என் துயர நாளில் அவர் எனக்கு எதிரே வந்தார். ஆண்டவரே என் ஊன்றுகோல்.
2 சாமுவேல் 22 : 20 (RCTA)
பரந்த இடத்திற்கு என்னைக் கொணர்ந்தார். நான் அவர் மனத்திற்கு உகந்தவனாய் இருந்ததால் அவர் என்னை விடுவித்தார்.
2 சாமுவேல் 22 : 21 (RCTA)
ஆண்டவர் என் நேர்மைக்குத் தகுந்தது போல் எனக்குப் பிரதிபலன் அளிப்பார். என் கைகளின் தூய்மைக்கு ஏற்றது போல் எனக்குக் கைம்மாறு அளிப்பார்.
2 சாமுவேல் 22 : 22 (RCTA)
ஏனெனில் நான் ஆண்டவருடைய வழி நின்று ஒழுகினேனே அன்றி, கடவுளை விட்டு விலகி தீச் செயல் ஒன்றும் புரியவில்லை.
2 சாமுவேல் 22 : 23 (RCTA)
அவருடைய தீர்ப்புகள் எல்லாம் என் கண்முன் இருக்கின்றன. அவருடைய சட்டங்களை மீறி நடந்தேனில்லை.
2 சாமுவேல் 22 : 24 (RCTA)
அவரோடு நான் நிறைவுள்ளவனாய் இருப்பேன். என் தீச் செயல்களினின்றும் என்னைச் காத்துக் கொள்வேன்.
2 சாமுவேல் 22 : 25 (RCTA)
ஆண்டவர் என் நேர்மைக்குத் தகுந்தது போல், தம் கண்முன் என் கைகளின் தூய்மைக்கு ஏற்றவாறு எனக்குக் கைம்மாறு அளிப்பார்.
2 சாமுவேல் 22 : 26 (RCTA)
நீர் தூயோருக்குத் தூயோராயும், வலியோர்க்கு நிறைவுள்ளவராயும் இருப்பீர்.
2 சாமுவேல் 22 : 27 (RCTA)
தேர்ந்து கொள்ளப்பட்டவருள் தேர்ந்து கொள்ளப்பட்டவராய் இருப்பீர்.
2 சாமுவேல் 22 : 28 (RCTA)
நீர் எளியோரை மீட்டீர். செருக்குற்றோரை உம் கண்களில் சிறுமைப்படுத்தினீர்.
2 சாமுவேல் 22 : 29 (RCTA)
ஆண்டவராகிய நீரே என் ஒளி விளக்கு.
2 சாமுவேல் 22 : 30 (RCTA)
நீரே என் இருளை ஒளிரச் செய்கிறீர். ஏனெனில் உம் பெயரால் நான் ஓடத் தயாராய் இருக்கிறேன். என் இறைவன் துணையால் நான் மதிலையும் தாண்டுவேன்.
2 சாமுவேல் 22 : 31 (RCTA)
இறைவனுடைய வழி மாசற்றது. ஆண்டவருடைய வார்த்தை புடமிடப்பட்டது. தம்மேல் நம்பிக்கை கொள்வோர் அனைவர்க்கும் அவர் கேடயமாய் இருக்கின்றார்.
2 சாமுவேல் 22 : 32 (RCTA)
ஆண்டவர் அன்றி வேறு கடவுள் யார்? நம் கடவுளைத் தவிர வல்லபமுள்ளவர் யார்?
2 சாமுவேல் 22 : 33 (RCTA)
அவரன்றோ என்னையும் திடப்படுத்தினார், என் வழியையும் செவ்வைப்படுத்தினார்?
2 சாமுவேல் 22 : 34 (RCTA)
அவரன்றோ என் கால்களை மான்களின் கால்களைப்போல் ஆக்கினார், உயர்ந்த இடங்களில் என்னை நிறுத்தி வைத்தார்?
2 சாமுவேல் 22 : 35 (RCTA)
அவரன்றோ என் கைகளைப் போருக்குப் பழக்குகின்றார், என் புயங்களையும் வெண்கல வில்லைப்போல் ஆக்குகின்றார்?
2 சாமுவேல் 22 : 36 (RCTA)
உம்முடைய மீட்பின் கேடயத்தை எனக்குத் தந்தீர். உமது கருணையே என்னைத் தழைத்தோங்கச் செய்தது.
2 சாமுவேல் 22 : 37 (RCTA)
என் காலடிகளை விரிவுபடுத்துவீர். நான் இடறி விழாதபடி என் கால்களை உறுதிப்படுத்துவீர்.
2 சாமுவேல் 22 : 38 (RCTA)
என் எதிரிகளை நான் பின்தொடர்ந்து அவர்களை நசுக்குவேன். அவர்களை அழித்தொழிக்காமல் நான் திரும்பி வரமாட்டேன்.
2 சாமுவேல் 22 : 39 (RCTA)
எழ முடியாதபடி அவர்களை நொறுக்கி அழித்துப் போடுவேன். அவர்கள் என் காலடியில் விழுவார்கள்.
2 சாமுவேல் 22 : 40 (RCTA)
ஆற்றல் அளித்து நீர் என்னைப் போருக்கு ஆயத்தமாக்கினீர். என்னை எதிர்த்தவர்களை எனக்கு அடிபணியச் செய்தீர்.
2 சாமுவேல் 22 : 41 (RCTA)
என் எதிரிகளை எனக்குப் புறமுதுகு காட்டி ஓடச் செய்தீர். என் பகைவர்களை நான் அழித்து விடுவேன்.
2 சாமுவேல் 22 : 42 (RCTA)
அவர்கள் கூக்குரலிடுவார்கள்; ஆயினும் அவர்களைக் காப்பாற்ற ஒருவரும் இரார். ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்புவார்கள்; அவரோ அவர்களுக்குச் செவி கொடார்.
2 சாமுவேல் 22 : 43 (RCTA)
பூமியின் புழுதியைப் போல் அவர்களைச் சிதறடிப்பேன். தெருக்களின் சேற்றைப்போல் அவர்களை மிதித்து அழிப்பேன்.
2 சாமுவேல் 22 : 44 (RCTA)
என் மக்களின் போராட்டங்களினின்று என்னை விடுவித்துப் புறவினத்தாருக்கு என்னைத் தலைவனாக ஏற்படுத்துவீர். நான் அறியாத மக்களே எனக்கு அடிபணிவார்கள்.
2 சாமுவேல் 22 : 45 (RCTA)
அன்னியர் என்னை எதிர்த்து நிற்பார்கள். ஆனால் அவர்கள் என் குரலைக் காதால் கேட்டவுடன் எனக்குக் கீழ்ப்படிவார்கள்.
2 சாமுவேல் 22 : 46 (RCTA)
அன்னியர் மடிந்து போனார்கள்; தங்கள் இடுக்கண்களில் அவர்கள் நெருக்கப்படுவார்கள்.
2 சாமுவேல் 22 : 47 (RCTA)
ஆண்டவர் உயிருள்ளவர்; என் கடவுள் புகழப்படுவாராக! என் மீட்பராம் வலிமை மிக்க கடவுள் உயர்த்தப் பெறுவாராக!
2 சாமுவேல் 22 : 48 (RCTA)
எனக்காகப் பழிக்குப்பழி வாங்குகிற கடவுள், மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகின்ற கடவுள் நீரே!
2 சாமுவேல் 22 : 49 (RCTA)
என் எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுகிறவரும், என்னை எதிர்க்கிறவர்களின்மேல் என்னை உயர்த்துகிறவரும், தீயோரிடமிருந்து என்னை மீட்கிறவரும் நீரே!
2 சாமுவேல் 22 : 50 (RCTA)
அதன் பொருட்டு, என் ஆண்டவரே, புறவினத்தார் மத்தியில் உம்மைப் புகழ்ந்தேத்தி உமது யெருக்குப் பண் இசைப்பேன்.
2 சாமுவேல் 22 : 51 (RCTA)
அவரே அரசனின் மீட்பை மிகுதிப்படுத்தி, தாம் அபிஷுகம் செய்த தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றும் இரக்கம் காட்டுவாராக!"

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51