2 சாமுவேல் 20 : 1 (RCTA)
அப்பொழுது நடந்ததாவது: ஜெமினி மனிதனான பொக்கிரியின் மகன் சேபா என்ற பெயருள்ள ஒருவன் அவ்விடம் இருந்தான். அவன் பெலியாலின் ஊழியன். அவன் எக்காளம் ஊதி, "தாவீதிடம் எங்களுக்குப் பங்குமில்லை; இசாயி மகனிடம் எங்களுக்கு மரபுரிமையும் இல்லை. இஸ்ராயேலரே! நீங்கள் உங்கள் கூடாரங்களுக்குப் போய்விடுங்கள்" என்று கூறினான்.
2 சாமுவேல் 20 : 2 (RCTA)
இதைக் கேட்டு இஸ்ராயேலர் அனைவரும் தாவீதை விட்டுப் பிரிந்து, பொக்கிரியின் மகன் சேபாவைப் பின்தொடர்ந்தார்கள். ஆனால் யோர்தான் முதல் யெருசலேம் வரை வாழ்ந்து வந்த யூதா மனிதர்கள் தங்கள் அரசரைச் சார்ந்திருந்தார்கள்.
2 சாமுவேல் 20 : 3 (RCTA)
அரசர் யெருசலேமிலுள்ள தம் வீட்டுக்கு வந்த போது, முன்பு தம் மாளிகையைக் காப்பதற்காக அவர் வைத்திருந்த பத்து வைப்பாட்டிகளையும் வரவழைத்தார். அவர்களைச் காவலில் வைத்து அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தார். அதன் பிறகு அவர் அவர்களோடு உறவு வைத்துக் கொள்ளவில்லை. தங்கள் இறுதி நாள்வரை அவர்கள் விதவைகளாய் அடைபட்டிருந்தனர்.
2 சாமுவேல் 20 : 4 (RCTA)
பின்பு அரசர் ஆமாசாவை நோக்கி, "நீ யூதா மனிதர்களை மூன்று நாளுக்குள் என்னிடம் வரவழை. நீயும் வந்து இங்கே இரு" என்றார்.
2 சாமுவேல் 20 : 5 (RCTA)
அதன்படியே ஆமாசா யூதா மனிதர்களைக் கூப்பிடச் சென்று, அரசர் தனக்குக் குறித்திருந்த கால வரைக்குள் வராமல் தமாதம் செய்தான்.
2 சாமுவேல் 20 : 6 (RCTA)
அப்போது தாவீது அபிசாயியைப் பார்த்து, "அப்சலோமை விடப் பொக்கிரி மகன் சேபா இனி நமக்கு அதிகத் தொந்தரவு செய்யப் போகிறான். ஆகையால் நீ உன் தலைவனின் சேவகர்களைக் கூட்டிக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்து போ. இல்லாவிட்டால் அவன் அரண் செய்யப்பட்ட நகர்களில் தஞ்சம் அடைந்து நம் கைக்குத் தப்புவான்" என்றார்.
2 சாமுவேல் 20 : 7 (RCTA)
அப்படியே யோவாபின் மனிதரும் கெரேத்தியரும் பெலேத்தியரும் வலியோர் அனைவரும் அபிசாயியோடு சென்று பொக்கிரியின் மகன் சேபாவைப் பின்தொடர யெருசலேமிலிருந்து வெளிப்போந்தனர்.
2 சாமுவேல் 20 : 8 (RCTA)
அவர்கள் காபாவோனிலுள்ள பெரும் பாறை அருகே இருந்த போது, ஆமாசா அவர்களுக்கு எதிர்ப்பட்டு வந்தான். யோவாபோ தன் உடல் அளவுக்குச் சரியான ஓர் அங்கியை அணிந்திருந்தான். அதன் மேல் உறையோடு கூடிய ஒரு வாள் அவன் இடுப்பில் தொங்கியது. அவ்வுறை எவ்வாறு பொருத்தப்பட்டிருந்தது என்றால், வாளை இலகுவாக உருவவும். அதனால் வெட்டவும் முடிந்தது.
2 சாமுவேல் 20 : 9 (RCTA)
அப்படியிருக்கையில் யோவாப் ஆமாசாவைப் பார்த்து, "என் சகோதரனே, நலமாய் இருக்கிறாயா?" என்று கேட்டுத் தன் வலக்கையை நீட்டி முத்தம் செய்யப் போகிறவன் போல் அவனுடைய தாடையைப் பிடித்தான்.
2 சாமுவேல் 20 : 10 (RCTA)
ஆமாசோ யோவாப் வைத்திருந்த வாளைக் கவனிக்கவில்லை, யோவாப் அவனை வயிற்றில் குத்தினான். அதனால் ஆமாசவின் குடல் தரையில் சரிந்தது. அந்த ஒரே குத்தினால் அவன் இறந்தான். யோவாபும் அவன் சகோதரன் அபிசாயியும் பொக்கிரி மகன் சேபாவைப் பின் தொடர்ந்தனர்.
2 சாமுவேல் 20 : 11 (RCTA)
அதற்கிடையில் ஆமாசாவின் சவத்தருகே நின்று கொண்டிருந்த யோவாபுடைய சேவகர்களில் சிலர், "யோவாபுக்குப் பதிலாகத் தாவீதுடைய தோழனாய் இருக்க நாடியவனை இதோ பாருங்கள்" என்றனர்.
2 சாமுவேல் 20 : 12 (RCTA)
இரத்தத்தில் மூழ்கிய ஆமாசவின் உடல் நடுவழியில் கிடந்ததால், மக்கள் எல்லாரும் அங்கே தாமதித்து நிற்கக் கண்டு, ஒருவன் ஆமாசாவை வழியிலிருந்து இழுத்து வயலில் கிடத்தி, மக்கள் இனி அங்குத் தாமதித்து நிற்காதபடி, ஒரு துணியால் அவன் சடலத்தை மூடினான்,
2 சாமுவேல் 20 : 13 (RCTA)
அவன் வழியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டபின், பொக்கிரியின் மகன் சோபாவைப் பின்தொடரும்படி யோவாபின் துணைவர் எல்லாரும் சென்றார்கள்.
2 சாமுவேல் 20 : 14 (RCTA)
சேபாவோ இஸ்ராயேல் கோத்திரங்கள் எல்லாவற்றையும் கடந்து அபேலாவையும் பெத்மாக்கையும் அடைந்தான். தேர்ந்துகொள்ளப்பட்ட வீரர்கள் அனைவரும் அவனிடம் திரண்டு வந்தார்கள்.
2 சாமுவேல் 20 : 15 (RCTA)
தாவீதின் வீரர்கள் அபேலாவுக்கும் பெத்மாவுக்கும் சென்று அவனைத் தாக்கி, சுற்றிலும் கொத்தளங்களைக் கட்டி நகரை முற்றுகையிட்டனர். யோவாபுடன் இருந்த படையினர் எல்லாரும் நகர மதிலை வீழ்த்தும்படி முயன்று கொண்டிருந்தனர்.
2 சாமுவேல் 20 : 16 (RCTA)
அப்போது நகரில் வாழ்ந்து வந்த அறிவாளியான ஒரு பெண் நகர மதிலுக்கு அப்பாலிருந்து உரக்கக் கூவி, "கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடு பேச வேண்டும். அவரை இங்கே வரச் சொல்லுங்கள்" என்றாள்.
2 சாமுவேல் 20 : 17 (RCTA)
அவன் அவள் அண்டை வந்த போது அப்பெண், "யோவாப் என்பவர் நீர்தானா?" என்று வினவினாள். அவன், "நான் தான்" என்று பதில் உரைத்தான். அப்பொழுது அவள், "அடியாள் சொல்லப் போகிறதை நீர் கவனித்துக் கேட்பீரா?" என்று கேட்டாள். அதற்கு அவள், "கேட்கிறேன்" என்றான்.
2 சாமுவேல் 20 : 18 (RCTA)
மீண்டும் அவள், "முற்காலத்தில் ஒரு பழமொழி வழக்கில் இருந்து வந்தது. 'ஆலோசனை கேட்க விரும்புகிறவர் ஆபேலாவில் தான் கேட்க வேண்டும்' என்பதே அது, அவ்வாறு மக்களும் தங்கள் வழக்குகளுக்குத் தீர்வு கண்டு வந்தனர்.
2 சாமுவேல் 20 : 19 (RCTA)
இஸ்ராயேலில் உண்மை உரைப்பவள் நான் அன்றோ? நீரோ இஸ்ராயேலின் தலைநகராகிய இந் நகரை அழித்தொழிக்கத் தேடுகிறீர். ஆண்டவருடைய உரிமையை நீர் என் அழிக்க வேண்டும்?" என்று கேட்டாள். யோவாப் மறுமொழியாக.
2 சாமுவேல் 20 : 20 (RCTA)
அப்படிப்பட்ட எண்ணம் எனக்குத் தூரமாய் இருப்பதாக; நான் உரிமையை அழிக்கவோ ஒழிக்கவோ எண்ணவில்லை.
2 சாமுவேல் 20 : 21 (RCTA)
காரியம் அப்படியன்று; பொக்கிரியின் மகனும் எபிராயீம் மலையில் வாழ்ந்து வந்தவனுமான சேபா தாவீது அரசருக்கு எதிராய் எழும்பினான். அவனை மட்டும் எங்களுக்கு ஒப்படையுங்கள்; நாங்களும் நகரை விட்டு உடனே போய்விடுவோம்" என்றான். அப்பொழுது அப்பெண் யோவாபைப் பார்த்து, "இதோ அவன் தலை நகர மதிலின் மேலிருந்து உம்மிடம் போடப்படும்" என்றாள்.
2 சாமுவேல் 20 : 22 (RCTA)
அதன்படியே அவள் எல்லா மக்களிடத்திலும் போய் அவர்களுடன் மதிநுட்பத்துடன் பேச, அவர்கள் பொக்கிரியின் மகன் சேபாவுடைய தலையைக் கொய்து, அதை யேவாபிடம் வீசி எறிந்தார்கள். யோவாப் எக்காளம் ஊதினான். அவர்கள் கலைந்து தத்தம் கூடாரங்களுக்குப் புறப்பட்டுப் போனார்கள். யோவாபோ அரசரின் இடமாகிய யெருசலேமுக்குத் திரும்பிப்போனான்.
2 சாமுவேல் 20 : 23 (RCTA)
பின்னர் யோவாப் இஸ்ராயேலின் படை முழுவதற்கும், யோயியாதாவின் மகன் பனாயாசு கெரேத்தியருக்கும் பெலேத்தியருக்கும் படைத் தலைவர்கள் ஆயினர்.
2 சாமுவேல் 20 : 24 (RCTA)
அதுறாம் கப்பங்களை வாங்கும் அலுவலிலும், அகிலூதின் மகன் யோசபாத் பதிவு செய்பவர் பதவியிலும் இருந்தனர்.
2 சாமுவேல் 20 : 25 (RCTA)
சீவா எழுத்தனாகவும், சாதோக்கும் அபியாத்தாரும் குருக்களாகவும் இருந்தனர்.
2 சாமுவேல் 20 : 26 (RCTA)
ஜெய்ரீத்தனான ஈறாவோ தாவீதின் குருவாக இருந்தார்.
❮
❯