2 சாமுவேல் 1 : 1 (RCTA)
சவுல் இறந்தபின், தாவீது அமலேக்கியரின் படுகொலையிலிருந்து திரும்பி சிசெலேகில் இரண்டு நாள் தங்கினான்.
2 சாமுவேல் 1 : 2 (RCTA)
மூன்றாம் நாள் சவுலின் பாசறையினின்று கிழிந்த ஆடையோடும், புழுதிபடிந்த தலையோடும் ஒரு மனிதன் வந்தான். அவன் தாவீதிடம் வந்து முகங்குப்புற விழுந்து வணக்கம் புரிந்தான்.
2 சாமுவேல் 1 : 3 (RCTA)
தாவீது, "நீ எங்கிருந்து வருகிறாய்?" என்று அவனை வினவினான். அவன் "இஸ்ராயேல் பாசறையினின்று ஓடிவந்தேன்" என்று அவனுக்குப் பதில் கூறினான்.
2 சாமுவேல் 1 : 4 (RCTA)
மீண்டும் தாவீது அவனை நோக்கி "நடந்தது என்ன? எனக்கு அறிவி" என்றான். அதற்கு அவன், "மக்கள் போரை விட்டு ஓடிப்போனார்கள். அவர்களில் பலர் மடிந்தனர்; அன்றியும் சவுலும் அவர் மகன் யோனத்தாசும் இறந்தார்கள்" என்றான்.
2 சாமுவேல் 1 : 5 (RCTA)
அப்போது தாவீது அந்த இளைஞனை நோக்கி, "சவுலும் அவர் மகன் யோனத்தாசும் இறந்துவிட்டனர் என்று எவ்வாறு அறிவாய்?" என்று கேட்டான்.
2 சாமுவேல் 1 : 6 (RCTA)
அதற்கு, செய்தி கொணர்ந்த இளைஞன், "தற்செயலாய் கெல்போயே மலைக்குப் போனேன்; சவுல் தம் ஈட்டியின்மேல் சாய்ந்துகொண்டிருந்தார். அந்நேரத்தில் தேர்களும் குதிரை வீரர்களும் அவரை தொடர்ந்து நெருங்கினார்கள்.
2 சாமுவேல் 1 : 7 (RCTA)
அவர் திரும்பிப் பார்த்து என்னைக் கண்டு கூப்பிட்டார். அதற்கு நான் 'இதோ இருக்கிறேன்' என்றேன்.
2 சாமுவேல் 1 : 8 (RCTA)
அப்பொழுது, 'நீ யார்?' என்று அவர் கேட்க, நான் 'அமலேக்கியன்' என்று சொன்னேன்.
2 சாமுவேல் 1 : 9 (RCTA)
அப்பொது அவர் என்னை நோக்கி, 'நீ என் மேல் நின்று என்னைக் கொன்று போடு. ஏனெனில் என் உயிர் என்னிடம் இன்னும் இருப்பதால் எனக்கு இடுக்கண் நேர்ந்துள்ளது' என்றார்.
2 சாமுவேல் 1 : 10 (RCTA)
வீழ்ந்தபின் அவர் பிழைக்கமாட்டார் என்று நான் அறிந்திருந்ததால், அவர்மேல் நின்று அவரைக் கொன்றுபோட்டேன். பின்பு அவர் தலைமீது இருந்த மகுடத்தையும், அவர் புயத்திலிருந்த காப்பையும் எடுத்துக்கொண்டு இங்கு என் தலைவராகிய உம்மிடம் கொணர்ந்தேன்" என்றான்.
2 சாமுவேல் 1 : 11 (RCTA)
இதை கேட்டு தாவீதும் அவனோடு இருந்த எல்லா மனிதர்களும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு,
2 சாமுவேல் 1 : 12 (RCTA)
சவுலும் அவர் மகன் யோனத்தாசும், ஆண்டவருடைய மக்களும், இஸ்ராயேல் குடும்பத்தாரும் வாளால் மடிந்து விழுந்தனர் என்று கதறி அழுது, மாலை வரை நோன்பு காத்திருந்தனர்.
2 சாமுவேல் 1 : 13 (RCTA)
பிறகு தாவீது தனக்குச் செய்தி அறிவித்த இளைஞனை நோக்கி, "நீ எங்கிருந்து வருகிறாய்? " என்று கேட்டதற்கு அவன், "நான் புறவினத்தானாகிய அமலேக்கியனுடைய மகன்" என்று மறுமொழி உரைத்தான்.
2 சாமுவேல் 1 : 14 (RCTA)
தாவீதோ, "ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவரைக் கொலை செய்வதற்கு நீ உன் கையை நீட்ட அஞ்சாதது ஏன்?" என்று சொன்னான்.
2 சாமுவேல் 1 : 15 (RCTA)
தன் ஊழியர்களில் ஒருவனைக் கூப்பிட்டு, "நீ பக்கத்தில் வந்து அவன் மேல் பாய்ந்து அவனை குத்து" என, இவன் அவனைக் குத்தினான்; அவனும் இறந்தான்.
2 சாமுவேல் 1 : 16 (RCTA)
தாவீது அவனைப் பார்த்து, "உன் இரத்தப்பழி உன் தலை மேலேயே இருக்கட்டும்; ஏனெனில், 'ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவரை நான் கொன்றேன்' என்று உன் வாயே உனக்கு எதிராய்ச் சாட்சி சொன்னது" என்றான்.
2 சாமுவேல் 1 : 17 (RCTA)
தாவீதோ சவுலின் மீதும் அவன் மகன் யோனத்தாசின் மீதும் பின்வருமாறு புலம்பல் பாடி,
2 சாமுவேல் 1 : 18 (RCTA)
நீதிமான்களின் நூலில் எழுதியுள்ளபடி அதை யூதாவின் புதல்வருக்குக் கற்றுக் கொடுக்கக் கட்டளையிட்டான். அப்பாடலாதது: "இஸ்ராயேலே, உன் உயர்விடங்களில் காயம் அடைந்து இறந்தவர்களை எண்ணிப்பார்.
2 சாமுவேல் 1 : 19 (RCTA)
புகழ்பெற்ற இஸ்ராயேலர் உன் மலைகளின் மேல் கொலையுண்டனர்! இவ்வலியோர் எவ்வாறு விழுந்தனர்?
2 சாமுவேல் 1 : 20 (RCTA)
கெத்திலும் இதை அறிவிக்காதீர்கள்; அஸ்கலோனின் தெருக்களிலும் இதைத் தெரியப்படுத்தாதீர்கள். தெரிவித்தால், பிலிஸ்தியரின் புதல்விகள் அகமகிழ்வர்; விருத்தசேதனம் செய்யப்படாதவர்களின் பெண்கள் களிகூர்வர்!
2 சாமுவேல் 1 : 21 (RCTA)
கெல்போயேயின் குன்றுகளே, பனியோ மழையோ உங்கள்மீது பொழியாதிருப்பதாக! உங்கள் வயல்கள் முதற்பலனைத் தராதிருப்பனவாக! ஏனெனில் அங்கேயன்றோ சவுல் எண்ணெயால் அபிஷுகம் செய்யப்படாதவர் போல் தம் கேடயத்தைத் தரையில் எறிந்துவிட்டார்! வலியோரின் கேடயம் அவமதிக்கப்பட்டதே! சவுலின் கேடயமும் அவமதிக்கப்பட்டதே!
2 சாமுவேல் 1 : 22 (RCTA)
இதற்குமுன் யோனத்தாசின் அம்பு கொலையுண்டவர்களின் உதிரத்தைக் குடிக்காமலும், வலியோரின் கொழுப்பை உண்ணாமலும் ஒருபோதும் பின்னிட்டு வந்ததில்லை! சவுலின் வாளோ வெறுமையாய்த் திரும்பினதில்லை!
2 சாமுவேல் 1 : 23 (RCTA)
உயிரோடிருக்கையில் சவுலும் யோனத்தாசும் அன்பும் அழகும் உள்ளவர்களாய் இருந்தார்கள். சாவிலும் அவர்கள் பிரிந்து போகவில்லை.அவர்கள் கழுகுகளிலும் வேகம் உள்ளவர்களாய், சிங்கங்களிலும் வலிமை உள்ளவர்களாய் இருந்தார்கள்.
2 சாமுவேல் 1 : 24 (RCTA)
இஸ்ராயேலின் புதல்விகளே, சவுலுக்காக அழுங்கள்! ஏனெனில் அவரே ஒண் சிவப்பு மெல்லாடைகளால் உங்களை உடுத்தி உங்கள் உடைகளின் மேல் பொன்னணிகளை அணிவித்தவர்!
2 சாமுவேல் 1 : 25 (RCTA)
போர்க்களத்தில் வல்லவர் வீழ்ந்தது எங்ஙனம்? உயர்விடங்களில் யோனத்தாசு கொலையுண்டது எவ்வாறு?
2 சாமுவேல் 1 : 26 (RCTA)
தம்பி, யோனத்தாசு! உனக்காகத் துயரப்படுகிறேன். நீ பேரழகனும் பெண்களை விடப் பேரன்பனுமாய் இருந்தாய்! ஒரு தாய் தன் ஒரே மகனுக்கு அன்பு செய்வதுபோலன்றோ நான் உனக்கு அன்பு செய்தேன்!
2 சாமுவேல் 1 : 27 (RCTA)
வலியோர் வீழ்ந்தது எங்ஙனம்? போர்க்கருவிகள் அழிந்தது எவ்வாறு?"

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27

BG:

Opacity:

Color:


Size:


Font: