2 இராஜாக்கள் 15 : 1 (RCTA)
இஸ்ராயேலின் அரசன் எரோபோவாமின் ஆட்சியின் இருபத்தேழாம் ஆண்டில், யூதாவின் அரசன் அமாசியாசின் மகன் அசாரியாசு அரியணை ஏறினான்.
2 இராஜாக்கள் 15 : 2 (RCTA)
அப்பொழுது அவனுக்கு வயது பதினாறு. யெருசலேமில் ஐம்பத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். யெருசலேம் நகரைச் சேர்ந்த அவனுடைய தாயின் பெயர் எக்கேலியா.
2 இராஜாக்கள் 15 : 3 (RCTA)
அவன் தன் தந்தை அமாசியாசு செய்தபடி ஆண்டவர் திருவுளத்தையே நிறைவேற்றி வந்தான்.
2 இராஜாக்கள் 15 : 4 (RCTA)
ஆயினும் (விக்கிரக ஆராதனைக்காக அமைக்கப்பட்டிருந்த) மேடுகளை அவன் அழிக்கவில்லை. மக்கள் இன்னும் அங்கே பலியிட்டும் தூபம் காட்டியும் வந்தனர்.
2 இராஜாக்கள் 15 : 5 (RCTA)
இதனால் ஆண்டவர் அவ்வரசனைத் தண்டித்தார். அவன் தன் இறுதி நாள் வரை தொழுநோய்ப்பட்டு, தனியே ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தான். அரசனின் மகன் யோவாத்தான் அரண்மனையில் அதிகாரியாய் இருந்து நாட்டு மக்களுக்கு நீதி வழங்கினான்.
2 இராஜாக்கள் 15 : 6 (RCTA)
அசாரியாசின் மற்றச் செயல்களும், அவன் செய்த யாவும் யூதாவின் அரசரது நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
2 இராஜாக்கள் 15 : 7 (RCTA)
அசாரியாசு தன் முன்னோரோடு துயில் கொள்ள, அவனைத் தாவீதின் நகரில், அவனுடைய முன்னோருக்கு அருகே அடக்கம் செய்தனர். அவனுடைய மகன் யோவாத்தான் அவனுக்குப்பின் அரியணை ஏறினான்.
2 இராஜாக்கள் 15 : 8 (RCTA)
யூதாவின் அரசன் அசாரியாசின் ஆட்சியின் முப்பத்தெட்டாம் ஆண்டில் எரோபோவாமின் மகன் சக்கரியாசு சமாரியாவில் இஸ்ராயேலை ஆறுமாதம் ஆண்டான்.
2 இராஜாக்கள் 15 : 9 (RCTA)
இவனும் தன் முன்னோர்கள் செய்தது போல் ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்து வந்தான். இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய நாபாத்தின் மகன் எரோபோவாமுடைய பாவ வழிகளை விட்டு அவன் விலகவில்லை.
2 இராஜாக்கள் 15 : 10 (RCTA)
ஜாபேசின் மகன் செல்லும் அவனுக்கு எதிராய்ச் சதி செய்து அவனை வெளிப்படையாய்க் கொன்று விட்டு, ஆட்சியைக் கைப்பற்றினான்.
2 இராஜாக்கள் 15 : 11 (RCTA)
சக்கரியாசின் மற்றச் செயல்கள் இஸ்ராயேல் அரசரின் நடபடி நூலில் வரையப்பட்டுள்ளன.
2 இராஜாக்கள் 15 : 12 (RCTA)
உன் புதல்வர் நான்கு தலைமுறைகளுக்கு இஸ்ராயேலின் அரியணையில் வீற்றிருப்பர்" என்று ஆண்டவர் ஏகுவுக்குக் கூறியிருந்தது இவ்வாறு நிறைவேறியது.
2 இராஜாக்கள் 15 : 13 (RCTA)
யூதாவின் அரசன் அசாரியாசின் ஆட்சியின் முப்பத்தொன்பதாம் ஆண்டில் ஜாபேசின் மகன் செல்லும் அரசன் ஆனான். ஆனால் சமாரியாவில் அவன் ஒரு மாதந்தான் ஆட்சி புரிந்தான்.
2 இராஜாக்கள் 15 : 14 (RCTA)
காதின் மகன் மனோகேம் தேர்சாவிலிருந்து புறப்பட்டுச் சமாரியாவுக்கு வந்து, ஜாபேசின் மகன் செல்லுமைக் கொன்றுவிட்டு அவனுக்குப்பதிலாக அரியணை ஏறினான்.
2 இராஜாக்கள் 15 : 15 (RCTA)
செல்லுமினுடைய மற்ற எல்லாச் செயல்களும் அவன் செய்த சதியும் இஸ்ராயேல் மன்னர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
2 இராஜாக்கள் 15 : 16 (RCTA)
அக்காலத்தில் மனோகேம் தாப்சா நகரை அழித்துவிட்டு, தேர்சா முதல் அதன் எல்லைகள் வரையுள்ள குடிகளையும் கொன்றான். அன்றியும் கருவுற்றிருந்த எல்லாப் பெண்களையும் வயிற்றைக் கிழித்துக் கொன்றான்.
2 இராஜாக்கள் 15 : 17 (RCTA)
யூதாவின் அரசன் அசாரியாசினுடைய ஆட்சியின் முப்பத்தொன்பதாம் ஆண்டில் காதின் மகன் மனோகேம் இஸ்ராயேலின் அரசனாகி சமாரியாவில் பத்து ஆண்டுகள் அரசாண்டான்.
2 இராஜாக்கள் 15 : 18 (RCTA)
ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தான். அன்றியும் தன் வாழ்நாள் முழுதும் இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய நாபாத்தின் மகன் எரோபோவாமின் பாவ வழிகளைவிட்டு அவன் விலகினானில்லை.
2 இராஜாக்கள் 15 : 19 (RCTA)
அசீரியாவின் அரசன் பூல் இஸ்ராயேல் நாட்டின்மீது படையெடுத்து வந்தான். அப்போது மனாகேம் பூலின் உதவியால் தன் ஆட்சி நிலைபெறும் பொருட்டு, ஆயிரம் தாலந்து நிறையுள்ள வெள்ளிக்காசுகள் கொடுத்தான்.
2 இராஜாக்கள் 15 : 20 (RCTA)
மனோகேம் இப்பணத்தை இஸ்ராயேலிலுள்ள வலியோர், செல்வந்தர் முதலியவர்களிடமிருந்து வசூல் செய்திருந்தான். ஆள் ஒன்றுக்கு ஐம்பது சீக்கல் வெள்ளி வீதம் அசீரியா அரசனுக்குக் கொடுக்கும்படி பணித்தான். எனவே அசீரியா அரசன் நாட்டில் சிறிதும் தாமதியாது திரும்பிவிட்டான்.
2 இராஜாக்கள் 15 : 21 (RCTA)
மனாகேமின் மற்றச் செயல்களும், அவன் செய்த யாவும் இஸ்ராயேல் அரசருடைய நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
2 இராஜாக்கள் 15 : 22 (RCTA)
மனாகேம் தன் முன்னோரோடு துயில் கொண்டான். அவனுடைய மகன் பசேயா அவனுக்குப்பின் அரசனானான்.
2 இராஜாக்கள் 15 : 23 (RCTA)
யூதாவின் அரசன் அசாரியாசினுடைய ஆட்சியின் ஐம்பதாம் ஆண்டில் மனாகேமின் மகன் பசேயா இஸ்ராயேலுக்கு அரசனாகி சமாரியாவில் ஈராண்டுகள் ஆட்சி புரிந்தான்.
2 இராஜாக்கள் 15 : 24 (RCTA)
அவன் ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தான். இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய நாபாத்தின் மகன் எரோபோவாமின் பாவ வழிகளைவிட்டு அவன் விலகவில்லை.
2 இராஜாக்கள் 15 : 25 (RCTA)
ரொமேலியாவின் மகனும், படைத்தலைவனுமான பாசே அவனுக்கு எதிராகச் சதி செய்து தன்னோடு இருந்த ஐம்பது காலாத்தியரோடு சமாரியாவிலுள்ள அரண்மனைக் கோபுரத்திற்கு வந்து, அக்கோப், அரியே ஆகியவர்களின் முன் அரசனைக் கொன்றுவிட்டு அவனுக்குப்பின் அரியணை ஏறினான்.
2 இராஜாக்கள் 15 : 26 (RCTA)
பசேயாவின் மற்றச் செயல்களும், அவன் செய்த யாவும் இஸ்ராயேல் அரசரின் நடபடி நூலில் எழுதப் பட்டுள்ளன.
2 இராஜாக்கள் 15 : 27 (RCTA)
யூதாவின் அரசன் அசாரியாசினுடைய ஆட்சியின் ஐம்பத்திரண்டாம் ஆண்டில் ரொமேலியாவின் மகன் பாசே இஸ்ராயேலுக்கு அரசனாகி இருபது ஆண்டுகள் அரசாண்டான்.
2 இராஜாக்கள் 15 : 28 (RCTA)
அவன் ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தான். அன்றியும் அவன் இஸ்ராயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நாபாத்தின் மகன் எரோபோவாமின் பாவ வழிகளை விட்டு விலகவில்லை.
2 இராஜாக்கள் 15 : 29 (RCTA)
இஸ்ராயேல் அரசன் பாசேயுடைய ஆட்சி காலத்தில், அசீரியரின் அரசன் தெகிளாத்-பலசார் இஸ்ராயேல் நாட்டின் மீது படையெடுத்து வந்து அயியோனையும், மவாக்காவிலுள்ள அபேல் என்ற இடத்தையும், ஜானோயே, கேதஸ், அசோர், காலாத், கலிலேயா ஆகிய இடங்களையும், நெப்தலி நாடு முழுவதையும் பிடித்ததுமன்றி, அந்நாட்டுக் குடிகளையும் சிறைப்பிடித்து அசீரியா நாட்டிற்குக் கொண்டு போனான்.
2 இராஜாக்கள் 15 : 30 (RCTA)
ஏலாவின் மகன் ஒசேயோ ரொமேலியாவின் மகன் பாசேயுக்கு எதிராகச் சதி செய்து, பதுங்கியிருந்து கொண்டு அவனைத் தாக்கிக் கொன்று போட்டான். ஒசியாசின் மகன் யோவாத்தாமின் ஆட்சியின் இருபதாம் ஆண்டில் அவனுக்குப்பின் இவன் அரியணை ஏறினான்.
2 இராஜாக்கள் 15 : 31 (RCTA)
பாசேயின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும் இஸ்ராயேல் அரசரின் நடபடி நூலில் வரையப் பட்டுள்ளன.
2 இராஜாக்கள் 15 : 32 (RCTA)
இஸ்ராயேலின் அரசனும் ரொமேலியாவின் மகனுமான பாசேயினுடைய ஆட்சியின் இரண்டாம் ஆண்டில், யூதாவின் அரசன் ஒசியாசின் மகன் யோவாத்தான் தன் ஆட்சியைத் தொடங்கினான்.
2 இராஜாக்கள் 15 : 33 (RCTA)
அரசனான போது அவனுக்கு வயது இருபத்தைந்து. இவன் யெருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். சாதோக்கின் மகளான அவன் தாயின் பெயர் எருசா.
2 இராஜாக்கள் 15 : 34 (RCTA)
அவன் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து கொண்டு, தன் தந்தை ஒசியாசு காட்டிய வழியைப் பின்பற்றினான்.
2 இராஜாக்கள் 15 : 35 (RCTA)
ஆயினும் (விக்கிரக ஆராதனைக்கென அமைக்கப்பட்டிருந்த) மேடுகளை அவன் அழிக்கவில்லை. இன்னும் மக்கள் அம்மேடுகளின் மேல் பலியிட்டும் தூபம் காட்டியும் வந்தனர். ஆலயத்தின் உயர்ந்த வாயிலைக் கட்டியவன் இவனே.
2 இராஜாக்கள் 15 : 36 (RCTA)
யோவாத்தாமின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும் யூதாவின் அரசருடைய நடபடி நூலில் வரையப்பட்டுள்ளன.
2 இராஜாக்கள் 15 : 37 (RCTA)
அந்நாட்களில் ஆண்டவர் சீரியாவின் அரசன் ரசீனையும் ரொமேலியாவின் மகன் பாசேயையும் யூதாவுக்கு எதிராய் அனுப்பத் தொடங்கினார்.
2 இராஜாக்கள் 15 : 38 (RCTA)
யோவாத்தாம் தன் முன்னோரோடு துயில் கொள்ள, தன் தந்தையாகிய தாவீதின் நகரில் தன் முன்னோர்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகன் ஆக்காசு அவனுக்குப் பின் அரசன் ஆனான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38