2 இராஜாக்கள் 13 : 1 (RCTA)
யூதா அரசன் ஒக்கோசியாசின் மகன் யோவாசு அரியணை ஏறிய இருபத்து மூன்றாம் ஆண்டில், ஏகுவின் மகன் யோவக்காசு சமாரியாவில் இஸ்ராயேலைப் பதினேழு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.
2 இராஜாக்கள் 13 : 2 (RCTA)
அவன் ஆண்டவர் திருமுன் தீயவற்றைச் செய்து வந்தான். இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய நாபாத்தின் மகன் எரோபோவாமின் பாவ வழி நின்று, அவற்றை விட்டு விலகாது நடந்து வந்தான்.
2 இராஜாக்கள் 13 : 3 (RCTA)
ஆகையால் ஆண்டவர் இஸ்ராயேலின் மேல் கோபம் கொண்டு அவர்களைச் சீரிய அரசன் அசாயேலின் கையிலும், அசாயேலின் மகன் பெனாதாத்தின் கையிலும் ஒப்படைத்தார்.
2 இராஜாக்கள் 13 : 4 (RCTA)
ஆனால் யோவக்காசு ஆண்டவரை இரந்து மன்றாடவே, ஆண்டவரும் அவனுக்குச் செவிசாய்த்தார். சீரியாவின் அரசன் இஸ்ராயேலருக்கு இழைத்த துன்பத்தால் அவர்கள் மிகவும் அவதிப்படுவதைக் கண்டு, ஆண்டவர் மனம் இரங்கினார்.
2 இராஜாக்கள் 13 : 5 (RCTA)
இஸ்ராயேலுக்கு ஒரு மீட்பரைக் கொடுக்க, இஸ்ராயேலர் சீரியருடைய கைகளினின்று விடுபட்டனர். இஸ்ராயேல் மக்கள் முன் போல் தங்கள் கூடாரங்களில் குடியிருந்தனர்.
2 இராஜாக்கள் 13 : 6 (RCTA)
ஆயினும் இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய எரோபோவாமின் வீட்டாருடைய பாவங்களை விட்டு விலகாது, அவன் காட்டிய வழியிலேயே நடந்து வந்தனர். சமாரியாவில் (விக்கிரக ஆராதனைக்கென அமைக்கப்பட்டிருந்த) தோப்பும் அழிக்கப்படவில்லை.
2 இராஜாக்கள் 13 : 7 (RCTA)
யோவக்காசுக்கு அவன் குடிகளில் ஐம்பது குதிரை வீரரும் பத்துத் தேர்களும் பதினாயிரம் காலாட் படையினருமே மீதியாயிருந்தனர். ஏனெனில் சீரியா நாட்டு அரசன் அவர்களை அழித்துப் போரடிக்கும் களத்தின் தூசி போல் ஆக்கியிருந்தான்.
2 இராஜாக்கள் 13 : 8 (RCTA)
யோவக்காசின் மற்றச் செயல்களும் அவன் செய்தவை யாவும், அவனது பேராற்றலும் இஸ்ராயேல் அரசரது நடபடி நூலில் வரையப்பட்டுள்ளன.
2 இராஜாக்கள் 13 : 9 (RCTA)
யோவாக்காசு தன் முன்னோரோடு துயில் கொண்டான். சமாரியாவில் அவனைப் புதைத்தனர். அவனுடைய மகன் யோவாசு அவனுக்குப் பின் அரசாண்டான்.
2 இராஜாக்கள் 13 : 10 (RCTA)
யூதாவின் அரசன் யோவாசு அரசனான முப்பத்தேழாம் ஆண்டில், யோவக்காசின் மகன் யோவாசு சமாரியாவில் இஸ்ராயேலுக்கு அரசனாகிப் பதினாறு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.
2 இராஜாக்கள் 13 : 11 (RCTA)
அவன் ஆண்டவர் திருமுன் தீமையானதைச் செய்தான். இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய எரோபோவாமின் பாவ வழியினின்று விலகாது அதிலேயே நடந்து வந்தான்.
2 இராஜாக்கள் 13 : 12 (RCTA)
யோவாசின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும், அவனது வீரமும், யூதா அரசன் அமாசியாசோடு அவன் போரிட்ட விதமும் இஸ்ராயேல் அரசரது நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
2 இராஜாக்கள் 13 : 13 (RCTA)
யோவாசு தன் முன்னோரோடு துயில் கொண்டபின், அவனுடைய மகன் எரோபோவாம் அவனது அரியணையில் ஏறினான். யோவாசு சமாரியாவில் இஸ்ராயேலின் அரசர்களோடு அடக்கம் செய்யப்பட்டான்.
2 இராஜாக்கள் 13 : 14 (RCTA)
நிற்க, எலிசேயுவுக்கு இறுதி நோய் வந்துற்றது. அப்போது, இஸ்ராயேல் அரசன் யோவாசு அவரிடம் சென்று, "என் தந்தாய், என் தந்தாய்! இஸ்ராயேலின் தேரே! அதன் சாரதியே!" என்று அவருக்கு முன்பாக நின்று கதறி அழுதான்.
2 இராஜாக்கள் 13 : 15 (RCTA)
எலிசேயு அவனைப் பார்த்து, "எனக்கு ஒரு வில்லையும் அம்புகளையும் கொண்டு வாரும்" என்றார். இஸ்ராயேல் அரசன் ஒரு வில்லையும் அம்புகளையும் கொண்டு வந்தான்.
2 இராஜாக்கள் 13 : 16 (RCTA)
எலிசேயு அப்போது அரசனை நோக்கி, "உமது கையை இந்த வில்லின் மேல் வையும்" என்றார். அவன் தன் கையை வில்லின் மேல் வைக்க எலிசேயு தம் கைகளை அரசனின் கைகளின் மேல் வைத்து,
2 இராஜாக்கள் 13 : 17 (RCTA)
அவனைப் பார்த்து, "கீழ்த்திசையை நோக்கியிருக்கிற சன்னலைத் திறவும்" என்றான். அவன் அதைத் திறந்தவுடன் எலிசேயு, "ஓர் அம்பை எய்யும்" என்றான். அவனும் அவ்வாறே எய்தான். எலிசேயு, "அது ஆண்டவருடைய மீட்பின் அம்பு. சீரியரிடமிருந்து விடுதலைபெறும் மீட்பின் அம்பு. நீர் ஆபேக்கில் சீரியரை முறியடிப்பீர்" என்றார்.
2 இராஜாக்கள் 13 : 18 (RCTA)
மறுபடியும், "அம்புகளைக் கையில் எடும்" என்றார். அவற்றை அவன் எடுக்கவே, மறுபடியும் எலிசேயு "தரையில் அம்பை எய்யும்" என்றார். அவன் மூன்று முறை எய்து விட்டு நின்றான்.
2 இராஜாக்கள் 13 : 19 (RCTA)
ஆண்டவரின் மனிதர் அவன் மேல் கோபம் கொண்டவராய், "நீர் ஐந்து, ஆறு முறை எய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் சீரியரை முற்றும் கொன்றழித்திருப்பீர். இப்போதோ அவர்களை மூன்று முறை மட்டுமே முறியடிப்பீர்" என்றார்.
2 இராஜாக்கள் 13 : 20 (RCTA)
இதன் பின் எலிசேயு இறந்தார். அவரை அடக்கம் செய்தனர். அதே ஆண்டில் மோவாப் நாட்டிலிருந்து கொள்ளைக் கூட்டத்தினர் நாட்டில் நுழைந்தனர்.
2 இராஜாக்கள் 13 : 21 (RCTA)
அப்போது ஒரு மனிதனைப் புதைக்கச் சென்று கொண்டிருந்த சில இஸ்ராயேலர் அக்கொள்ளைக் கூட்டத்தினரைக் கண்டு, பிணத்தை எலிசேயுவின் கல்லறையிலே போட்டனர். அப்பிணம் எலிசேயுவின் எலும்புகளின் மேல் பட்டவுடனே அம்மனிதன் உயிர்த்து எழுந்தான்.
2 இராஜாக்கள் 13 : 22 (RCTA)
யோவக்காசின் காலத்தில் சீரியாவின் அரசன் அசாயேல் இஸ்ராயேலைத் துன்புறுத்தி வந்தான்.
2 இராஜாக்கள் 13 : 23 (RCTA)
ஆண்டவர் அவர்கள் மேல் மனம் இரங்கி ஆபிரகாம், ஈசாக், யாக்கோப் என்பாரோடு தான் செய்திருந்த உடன்படிக்கையின் பொருட்டு அவர்களை நினைவு கூர்ந்தார். ஆதலால் அவர் இன்று வரை அவர்களை அழிக்கவும் இல்லை, அவர்களை முற்றும் தள்ளிவிடவும் இல்லை.
2 இராஜாக்கள் 13 : 24 (RCTA)
மேலும், சீரியாவின் அரசன் அசாயேல் இறந்துபட, அவனுடைய மகன் பெனாதாத் அவனுக்குப்பின் அரியணை ஏறினான்.
2 இராஜாக்கள் 13 : 25 (RCTA)
யோவக்காசின் மகன் யோவாசு அசாயேலோடு போரிட்டு, தன் தந்தை யோவக்காசின் கையினின்று அவன் பிடித்திருந்த நகர்களை எல்லாம் அவனுடைய மகன் பெனாதாதின் கையினின்று திரும்பக் கைப்பற்றி, அவனை மூன்று முறையும் முறியடித்தான். ஆதலால் பெனாதாத் இஸ்ரயேலின் நகர்களை அவனுக்குத் திருப்பிக் கொடுக்க நேர்ந்தது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25