2 இராஜாக்கள் 11 : 1 (RCTA)
ஒக்கோசியாசின் தாய் அத்தாலி தன் மகன் இறந்துவிட்டதைக் கண்டு அரச குலத்தார் அனைவரையும் கொன்று குவிக்கத் தொடங்கினாள்.
2 இராஜாக்கள் 11 : 2 (RCTA)
யோராம் அரசனின் மகளும் ஒக்கோசியாசின் சகோதரியுமான யோசபா, கொல்லப்பட இருந்த அரச புதல்வரில் ஒருவனான ஒக்கோசியாசின் மகன் யோவாசையும், அவனுடைய தாதியையும் பள்ளியறையினின்று இரகசியமாய்க் கூட்டிச் சென்று அத்தாலியாளுக்குத் தெரியாத இடத்தில் ஒளித்து வைத்து அவனது உயிரைக் காப்பாற்றினாள்.
2 இராஜாக்கள் 11 : 3 (RCTA)
யோவாசு ஆறு ஆண்டுகள் தன் தாதியோடு கோயிலில் தலைமறைவாய் இருந்தான். அப்பொழுதெல்லாம் அத்தாலியே நாட்டை ஆண்டு வந்தாள்.
2 இராஜாக்கள் 11 : 4 (RCTA)
ஏழாம் ஆண்டிலோ, யோயியாதா நூற்றுவர் தலைவர்களையும் வீரர்களையும் வரவழைத்து, ஆண்டவரின் ஆலயத்திற்குள் கூட்டிச் சென்று அவர்களோடு உடன்படிக்கை செய்தார். பின், கோயிலில் அவர்களை ஆணையிடச் செய்து, அரசனின் மகனை அவர்களுக்குக் காட்டி,
2 இராஜாக்கள் 11 : 5 (RCTA)
என் கட்டளைப்படி, நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், உங்களில் மூன்றில் ஒரு பங்கு ஆட்கள் ஓய்வு நாளில் வந்து அரசனின் அரண்மனையைக் காக்க வேண்டும்.
2 இராஜாக்கள் 11 : 6 (RCTA)
மேலும் மூன்றில் ஒரு பங்கினர் சூர் என்ற வாயிலில் இருக்க வேண்டும். எஞ்சிய வீரர்கள் கேடயம் தாங்குவோர் தங்குமிடத்திற்குப் பின்னேயுள்ள வாயிலிலிருந்து கொண்டு மெசாவின் வீட்டைப் பாதுகாக்கவேண்டும்.
2 இராஜாக்கள் 11 : 7 (RCTA)
உங்களில் ஓய்வு நாளிலே அலுவல் புரிவோரில் இரண்டு பங்கு வீரர்கள் அரசனைச் சூழ்ந்து நிற்பதோடு கோயிலையும் காவல் புரியவேண்டும்.
2 இராஜாக்கள் 11 : 8 (RCTA)
நீங்கள் கையில் ஆயுதம் தாங்கி அவரைக் காப்பதோடு, யாராவது கோயிலின் முற்றத்தில் நுழைந்தால் அவர்களை உடனே கொன்று விட வேண்டும். அரசர் வெளியே வந்தாலும், உள்ளே போனாலும் அவர் கூடவே நீங்கள் இருக்க வேண்டும்" எனக் கட்டளையிட்டார்.
2 இராஜாக்கள் 11 : 9 (RCTA)
குரு யோயியாதா கட்டளையிட்டபடி நூற்றுவர் தலைவர் நடந்துகொண்டனர். ஓய்வு நாளில் தத்தம் முறைப்படி வந்து போய்க்கொண்டிருக்கிற தங்கள் வீரர்கள் அனைவரையும் அவரவர் கூட்டிக் கொண்டு குரு யோயியாதாவிடம் வந்தனர்.
2 இராஜாக்கள் 11 : 10 (RCTA)
அவர் ஆண்டவரின் ஆலயத்தில் இருந்த தாவீது அரசரின் ஈட்டி முதலிய ஆயுதங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்.
2 இராஜாக்கள் 11 : 11 (RCTA)
அவர்கள் ஒவ்வொருவரும் ஆயுதம் தாங்கியவராய் கோயிலின் வலப்புறம் தொடங்கிப் பீடத்தின் இடப்புறம் வரை ஆலயத்தில் அரசனைச் சூழ்ந்து நின்றனர்.
2 இராஜாக்கள் 11 : 12 (RCTA)
யோயியாதா இளவரசனை வெளியே கூட்டிவந்து அவனது தலையின் மேல் முடியை வைத்து, கையில் திருச்சட்ட நூலை அளித்தார்; இவ்வாறு அவனை அரசனாக அபிஷுகம் செய்தனர். பிறகு எல்லாரும், "அரசர் வாழ்க!" என்று சொல்லிக் கைதட்டினர்.
2 இராஜாக்கள் 11 : 13 (RCTA)
அப்பொழுது மக்கள் ஓடிவரும் ஓசையை அத்தாலி கேட்டு, ஆண்டவரின் ஆலயத்தில் கூடி நின்ற மக்களிடம் வந்தாள்.
2 இராஜாக்கள் 11 : 14 (RCTA)
அப்போது வழக்கம்போல் அரசன் அரியணையில் வீற்றிருப்பதையும், அவன் அருகில் பாடகர்களும் எக்காளம் ஊதுபவர்களும் நிற்பதையும், எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடி எக்காளம் ஊதுவதையும் கண்ட அவள் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, "சதி, சதி!" என்று கூக்குரலிட்டாள்.
2 இராஜாக்கள் 11 : 15 (RCTA)
யோயியாதா நூற்றுவர் தலைவரான படைத் தலைவர்களை நோக்கி, "இவளைக் கோயில் வளாகத்துக்கு வெளியே கொண்டு போங்கள். எவனாவது இவளைப் பின்பற்றுவானானால், அவன் வாளுக்கிரையாவான்" எனக் கட்டளையிட்டார். ஏற்கெனவே, "ஆண்டவரின் ஆலயத்திற்குள் அவளைக் கொல்லலாகாது" என்று சொல்லியிருந்தார். படைத் தலைவர்கள் அவளைப் பிடித்து,
2 இராஜாக்கள் 11 : 16 (RCTA)
அரண்மனைக்கு அருகே 'குதிரைகளின் வாயில்' என்ற சாலையிலே அவளை இழுத்துக் கொண்டுபோய் அங்கு அவளைக் கொன்றனர்.
2 இராஜாக்கள் 11 : 17 (RCTA)
பின்பு யோயியாதா தாங்கள் ஆண்டவரின் மக்ககளாய் இருப்பதாக, அரசனும் மக்களும் ஆண்டவரோடும், மக்களும் அரசனும் தங்களுக்குள்ளேயும் உடன்படிக்கை செய்யச் செய்தார்.
2 இராஜாக்கள் 11 : 18 (RCTA)
அப்போது நாட்டின் மக்கள் எல்லாம் பாவாலின் கோயிலில் நுழைந்து, பீடங்களை இடித்துச் சிலைகளைச் சுக்கு நூறாய் உடைத்தெறிந்தனர். பாவாலின் பூசாரி மாத்தானையும் பீடத்திற்கு முன்பாகக் கொலைசெய்தனர். பிறகு குரு ஆண்டவரின் ஆலயத்திலும் காவலரை நிறுத்தி வைத்தார்.
2 இராஜாக்கள் 11 : 19 (RCTA)
அன்றியும் அவர் நூற்றுவர் தலைவரையும், மக்கள் அனைவருடன் கெரேத், பெலேத் என்ற படைகளையும் சேர்த்து, அரசனை ஆண்டவரின் ஆலயத்தினின்று அழைத்துக் கொண்டு, 'கேடயம் தாங்குவோரின்' வாயில் வழியாக அரண்மனைக்கு வந்தார். அங்கு அரசன் தன் அரியணையில் அமர்ந்தான்.
2 இராஜாக்கள் 11 : 20 (RCTA)
நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடினர். நகரில் அமைதி நிலவிற்று. அத்தாலி என்பவளோ அரசனின் அரண்மனை அருகே வாளுக்கு இரையானாள்.
2 இராஜாக்கள் 11 : 21 (RCTA)
யோவாசு அரியணை ஏறுகையில் அவனுக்கு வயது ஏழு.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21