2 கொரிந்தியர் 9 : 1 (RCTA)
இறைமக்களுக்கெனச் செய்யும் இந்த அறப்பணியைக் குறிந்து நான் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை.
2 கொரிந்தியர் 9 : 2 (RCTA)
ஏனெனில், உங்களுடைய உற்சாகம் எனக்குத் தெரியும். தண்டலுக்குரிய ஏற்பாடெல்லாம் கடந்த ஆண்டிலேயே அக்காயா நாட்டில் செய்தாயிற்று என்று மக்கெதோனியரிடம் உங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசி வருகிறேன்; உங்களுடைய ஆர்வம் பலரைத் தூண்டிவிட்டிருக்கிறது.
2 கொரிந்தியர் 9 : 3 (RCTA)
உங்களைக் குறித்து நாங்கள் இதில் பெருமைப்படுவது வீணாகக் கூடாது என்பதற்காகவே இச்சகோதரர்களை உங்களிடம் அனுப்பியுள்ளேன். நான் ஏற்கெனவே மக்கெதோனியருக்குச் சொன்னதுபோல, நீங்கள் தக்க ஏற்பாட்டோடு இருக்க வேண்டும் அன்றோ?
2 கொரிந்தியர் 9 : 4 (RCTA)
இல்லையேல், மக்கெதோனியர் என்னோடு வரும்போது, நீங்கள் எந்த ஏற்பாடுமின்றி இருப்பதைக் கண்டால், நாங்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்காக நாங்கள் தலைகுனிய வேண்டியிருக்கும்; நீங்களும் தலைகுனிய வேண்டியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.
2 கொரிந்தியர் 9 : 5 (RCTA)
ஆகையால்தான், அச்சகோதரர்கள் எனக்கு முன்பே உங்களிடம் வந்து, நீங்கள் வாக்களித்திருந்த நன்கொடையைச் சேர்க்கும்படி கேட்டுக் கொள்ளவேண்டும் என, எனக்குத் தோன்றிற்று. இவ்வாறு ஏற்பாடாய் இருந்தால், நீங்கள் கொடுப்பது, வேண்டாவெறுப்போடு தந்ததாய் இராமல், அன்பின் கொடையாகவே விளங்கும்.
2 கொரிந்தியர் 9 : 6 (RCTA)
இதை எண்ணிப் பாருங்கள்: சிறுக விதைப்பவன் சிறுக அறுப்பான்; பெருக விதைப்பவன் பெருக அறுப்பான்.
2 கொரிந்தியர் 9 : 7 (RCTA)
ஒவ்வொருவனும் தனக்குள் முடிவு செய்தவாறு கொடுக்கட்டும்; முகவாட்டத்தோடோ, கட்டாயத்தினாலோ கொடாதீர்கள்; ஏனெனில் முகமலர்ச்சியுடன் கொடுப்பவன் மேல்தான் கடவுள் அன்புகூர்கிறார்.
2 கொரிந்தியர் 9 : 8 (RCTA)
கடவுள் உங்களை எல்லா நன்மைகளாலும் நிரப்பவல்லவர்; எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் போதுமான அளவில் உங்களிடம் இருக்கச் செய்வார்; அதோடு எந்தசெயலையும் செய்வதற்குத் தேவையான பொருள் உங்களிடம் மிகுதியாகவே இருக்கச் செய்வார்.
2 கொரிந்தியர் 9 : 9 (RCTA)
அதைக்குறித்தே, ' வாரி வழங்கினான், ஏழைகளுக்கு ஈந்தான், அவனது ஈகை என்றென்றும் மறக்கப்படாது! ' என்று எழுதியுள்ளது.
2 கொரிந்தியர் 9 : 10 (RCTA)
விதைக்கிறவனுக்கு விதையும், உண்பதற்கு உணவும் கொடுத்து உதவுகின்றவர் விதைப்பதற்கு வேண்டியதை உங்களுக்கும் கொடுத்து அதைப் பெருகச் செய்து, உங்களுடைய ஈகையால் ஏராளமான பலன் விளையச் செய்வார்.
2 கொரிந்தியர் 9 : 11 (RCTA)
நீங்களும் எல்லா வகையிலும் செல்வர்களாகி, உங்கள் வள்ளன்மையில் எக்குறைவுமின்றி விளங்குவீர்கள்; எங்கள் பணியின் வாயிலாக அவ்வள்ளன்மை மக்களின் நன்றியறிதலைக் கடவுள்பால் எழும்பச் செய்யும்.
2 கொரிந்தியர் 9 : 12 (RCTA)
அதாவது நீங்கள் செய்யும் இந்தத் கொண்டு இறைமக்களின் குறைகளை நீக்குவதோடு, பலர் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியாகவும் மலரும்.
2 கொரிந்தியர் 9 : 13 (RCTA)
இந்தத் திருப்பணியின் வாயிலாய் உங்கள் நற்பண்பு எண்பிக்கப்படும்; நீங்கள் ஏற்றுக்கொண்ட கிறிஸ்துவின் நற்செய்திக்குக் காட்டும் கீழ்ப்படிதல் புலப்படும்; அவர்களுக்கும் மற்றெல்லாருக்குமே உங்கள் நற்கொடையால் நீங்கள் காட்டிய வள்ளன்மையும் வெளிப்படும். அந்தக் கீழ்ப்படிதலையும் வள்ளன்மையையும் பார்த்து, அவர்கள் கடவுளை மகிமைப் படுத்துவார்கள்.
2 கொரிந்தியர் 9 : 14 (RCTA)
மேலும், கடவுள் உங்கள் மேல் பொழிந்த அருளை அவர்கள் உணர்ந்து, உங்களிடம் பரிவு கொண்டு, உங்களுக்காக வேண்டுவார்கள்.
2 கொரிந்தியர் 9 : 15 (RCTA)
கடவுள் வழங்கிய சொல்லொண்ணாக் கொடைக்காக அவருக்கு நன்றி.
❮
❯