2 கொரிந்தியர் 8 : 1 (RCTA)
சகோதரர்களே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குக் கடவுள் தந்த அருளைப்பற்றி உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
2 கொரிந்தியர் 8 : 2 (RCTA)
அவர்கள் வேதனையால் மிகவும் சோதிக்கப்பட்டபோது, கொடிய வறுமையில் ஆழ்ந்திருந்தும், அவர்களுற்ற பெருமகிழ்ச்சி வள்ளன்மையாய்ப் பொங்கி வழிந்தது.
2 கொரிந்தியர் 8 : 3 (RCTA)
தங்களால் இயன்ற அளவுக்குக் கொடுத்தார்கள்; இயன்ற அளவுக்குமேலும் கொடுத்தார்கள்; அதற்கு நானே சாட்சி.
2 கொரிந்தியர் 8 : 4 (RCTA)
இறைமக்களுக்குச் செய்யப்படும் அறப்பணியில் பங்கு கொள்ளும் பேறு தங்களுக்கு அளிக்க வேண்டுமென்று தாங்களே முன்வந்து எங்களை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டனர்.
2 கொரிந்தியர் 8 : 5 (RCTA)
நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக, அவர்கள் கடவுளின் திருவுளத்தால் தங்களையே ஒப்புக்கொடுத்தார்கள். இப்படி அவர்கள் எங்கள் பணிக்குத் தங்களைக் கையளித்தது, முதன்மையாக ஆண்டவருக்கே கையளித்ததாயிற்று.
2 கொரிந்தியர் 8 : 6 (RCTA)
ஆகையால் தீத்து தொடங்கிய அத்தகைய அன்புத் தொண்டினை உங்களிடையே செய்து முடிக்கும்படி அவரைக் கேட்டுக்கொண்டோம்.
2 கொரிந்தியர் 8 : 7 (RCTA)
மேலும், விசுவாசம், சொல்வன்மை, அறிவு, தளாராத ஊக்கம், எங்களிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட அன்பு, இவற்றிலெல்லாம் நிறைவளம் உங்களுக்கு வாய்த்துள்ளது. அதே வளம் இந்த அன்புத் தொண்டிலும் உங்களிடம் விளங்கட்டும்.
2 கொரிந்தியர் 8 : 8 (RCTA)
இதை நான் கட்டளையாகச் சொல்லவில்லை; பிறருடைய ஊக்கத்தை எடுத்துக்காட்டி, உங்கள் அன்பு உண்மையானதா எனச் சோதிக்கவே விரும்புகிறேன்.
2 கொரிந்தியர் 8 : 9 (RCTA)
ஏனெனில், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருள் வன்மையை நீங்கள் அறிந்தேயிருக்கிறீர்கள். அவர் செல்வ மிக்கவராய் இருந்தும், அவருடைய ஏழ்மையால், நீங்கள் செல்வராகும்படி, உங்களுக்காக ஏழையானார்.
2 கொரிந்தியர் 8 : 10 (RCTA)
அத்திட்டத்தைப்பற்றிய என் கருத்து இதுவே: இதனால் உங்களுக்கே நம்மை உண்டாகும். கடந்த ஆண்டிலிருந்து நன்கொடை திரட்டத் தொடங்கியவர்கள் நீங்களே; அதுமட்டுமன்று, அப்படிச் செய்ய முதலில் திட்டமிட்டவர்களும் நீங்களே.
2 கொரிந்தியர் 8 : 11 (RCTA)
அப்படியானால் தொடங்கியதை இப்பொழுது செய்து முடியுங்கள்; திட்டமிடுவதற்கு இருந்த ஆர்வத்தோடேயே, உங்களுடைய நிலைக்கு ஏற்றவாறு கொடுத்து, அத்திட்டத்தை நிறைவேற்றுங்கள்.
2 கொரிந்தியர் 8 : 12 (RCTA)
கொடுப்பதற்கு உள்ளத்தில் ஆர்வம் இருந்தால், தன்னிடம் உள்ளதற்கு ஏற்றபடி எவ்வளவு கொடுத்தாலும் அது இறைவனுக்கு ஏற்புடையதாகும். தன்னிடம் இருப்பதற்கு மேலாக யாரும் கொடுக்கவேண்டியதில்லை .
2 கொரிந்தியர் 8 : 13 (RCTA)
மற்றவர்களின் வேதனையைத் தணிக்க, நீங்கள் வேதனைக்குள்ளாக வேண்டியதில்லை; சமநிலைப்படுத்துவது பற்றியே இங்கே பேச்சு.
2 கொரிந்தியர் 8 : 14 (RCTA)
அதாவது இப்பொழுது உங்களிடம் மிகுதியாயிருக்கிறது; அவர்களுடைய குறைவை நீக்குங்கள்; அவர்களிடம் மிகுதியாயிருக்கும்போது, அவர்கள் உங்கள் குறைவை நீக்கக்கூடும். இவ்வாறு சமநிலை எற்படும்.
2 கொரிந்தியர் 8 : 15 (RCTA)
' மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு மிச்சமுமில்லை, குறைவாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவுமில்லை, என எழுதியுள்ளதன்றோ?
2 கொரிந்தியர் 8 : 16 (RCTA)
உங்கள்மேல் எனக்குள்ள அதே அக்கறையைத் தீத்துவின் உள்ளத்திலும் உண்டாக்கிய கடவுளுக்கு நன்றி.
2 கொரிந்தியர் 8 : 17 (RCTA)
எங்கள் வேண்டுகோளுக்குத் தீத்து இணங்கியதோடு, தாமும் மிகுந்த அக்கறைகாட்டி, உங்க?ருக்குப் புறப்படத் தாமே முன்வந்தார்.
2 கொரிந்தியர் 8 : 18 (RCTA)
அவரோடு கூட நாங்கள் அனுப்பியுள்ள சகோதரர் நற்செய்தித் தொண்டினால் எல்லாச் சபைகளிலும் பேர் பெற்றிருப்பவர்.
2 கொரிந்தியர் 8 : 19 (RCTA)
அதுமட்டுமன்று, ஆண்டவருக்கு மகிமையுண்டாகவும், எங்கள் ஆர்வம் விளங்கவும், நாங்கள் பணியாற்றும் இந்த அன்புத் தொண்டில் எங்களுக்கு வழித் துணையாகச் சபைகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறார்.
2 கொரிந்தியர் 8 : 20 (RCTA)
எங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள இவ்வளவு தாராள நன்கொடையை நாங்கள் கையாளும் முறைபற்றி யாரும் எங்களைக் குறைகூறாதபடி பார்த்துக் கொள்ளுகிறோம்.
2 கொரிந்தியர் 8 : 21 (RCTA)
ஆண்டவர் முன்னிலையில் மட்டுமன்று, மக்கள் முன்னிலையிலும் கூட நன்மதிப்பை இழக்காதபடி பார்த்துக்கொள்கிறோம்.
2 கொரிந்தியர் 8 : 22 (RCTA)
அவர்களோடுகூட, எங்களைச் சேர்ந்த வேறொரு சகோதரரையும் அனுப்பியுள்ளோம். இவர் ஊக்கமுள்ளவர் எனப்பல சூழ்நிலைகளில் பலமுறை கண்டறிந்தோம்; அவர் உங்கள்மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதால் இப்பொழுது இன்னும் மிகுதியான ஊக்கம் காட்டுகிறார்.
2 கொரிந்தியர் 8 : 23 (RCTA)
தீத்துவைப் பற்றிக் கேள்வி எழுந்தால், அவர் என் தோழர், நான் உங்களுக்காகச் செய்யும் தொண்டில் என் உடனுழைப்பாளி என்று அறிந்துகொள்ளுங்கள். நாங்கள் அனுப்பிய சகோதரர்களோ, சபைகளின் அப்போஸ்தலர்கள்; அவர்கள் கிறிஸ்துவுக்கு மகிமையாய் இருக்கிறார்கள்.
2 கொரிந்தியர் 8 : 24 (RCTA)
ஆகையால், உங்களுடைய அன்பை எடுத்துக்காட்டி, நாங்கள் அவர்களிடத்தில் உங்களைக் குறித்துப் பெருமைப்படுவது முறையே எனச் சபைகளின் முன்னிலையில் எண்பியுங்கள்.
❮
❯