2 கொரிந்தியர் 5 : 1 (RCTA)
ஏனெனில் மண்மீது நாம் குடியிருக்கும் இக்கூடாரம் தகர்ந்து வீழ்ந்தாலும், கடவுளிடமிருந்து கிடைத்த வீடு ஒன்று நமக்கு விண்ணில் உள்ளது. இது கையால் அமைக்கப்படாதது; முடிவில்லாதது. இதையெல்லாம் நாம் அறிவோமன்றோ?
2 கொரிந்தியர் 5 : 2 (RCTA)
உள்ளபடியே இந்தக் கூடாரத்தில் உள்ள நாம் விண்ணிலிருந்து வரும் நம் உறைவிடத்தை மேலணிந்து கொள்ளவேண்டுமென்ற ஏக்கத்தால் பெருமூச்செறிகிறோம்.
2 கொரிந்தியர் 5 : 3 (RCTA)
உடை இழந்தவர்களாய் இராமல், உடுத்தியவர்களாய் இருந்தால் தான் ' அப்பேறு கிடைக்கும்.
2 கொரிந்தியர் 5 : 4 (RCTA)
இந்தக் கூடாரத்தில் இருக்கும் நாம் இந்நிலையைத் தாங்கமுடியாமல் பெருமூச்செறிகிறோம்; இந்த உடையைக்களைந்தெறிய நமக்கு விருப்பமில்லை; சாவுக்குரியது வாழ்வில் ஆழ்ந்து கலந்துவிடும்படி மேலுடை அணியவே விரும்புகிறோம்.
2 கொரிந்தியர் 5 : 5 (RCTA)
இதற்கென்றே கடவுள் நம்மை உருவாக்கினார்; அதற்கு அச்சாரமாக நமக்கு ஆவியானவரைத் தந்திருக்கின்றார்.
2 கொரிந்தியர் 5 : 6 (RCTA)
ஆதலால்தான் எப்பொழுதும் நம்பிக்கையோடு இருக்கிறோம்; இந்த உடலில் குடியிருக்கும்வரை ஆண்டவரின் வீட்டினின்று தொலைவில் அலைகிறோம் என்பதை அறிந்திருக்கிறோம்
2 கொரிந்தியர் 5 : 7 (RCTA)
ஏனெனில், கண்கூடான காட்சி நமக்கில்லை. நாம் வாழ்வது விசுவாச வாழ்வு--
2 கொரிந்தியர் 5 : 8 (RCTA)
நம்பிக்கையை இழக்காமல், 'இவ்வுடலை விட்டுக் குடிபெயர்ந்து ஆண்டவரது வீட்டில் குடியேறுவதையே விரும்புகிறோம்.
2 கொரிந்தியர் 5 : 9 (RCTA)
ஆகவே உடலில் குடியிருந்தாலும் அதனின்று குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவர்களாய் இருக்கவேண்டும் என்பதே எங்கள் பேராவல்.
2 கொரிந்தியர் 5 : 10 (RCTA)
ஏனெனில், உடலோடு இருந்தபோது அவனவன் செய்த நன்மை தீமைக்குத்தக்க பலனடையும்படி கிறிஸ்துவின் நீதியிருக்கை முன் நாம் அனைவரும் செய்ததெல்லாம் வெளிப்படவேண்டும்.
2 கொரிந்தியர் 5 : 11 (RCTA)
ஆகையால், ஆண்டவரின் மீதுள்ள அச்சத்தை மனத்திலிருத்தி மக்களை வயப்படுத்தப்பார்க்கிறோம். எங்கள் உள்ளம் கடவுளுக்கு வெளிப்படையாய் இருக்கிறது; உங்களுடைய மனச்சாட்சிக்கும் வெளிப்படையாய் இருக்கும் என நம்புகிறேன். மறுபடியும் உங்கள் முன் எங்களைக் குறித்து நாங்களே நற்சான்று கூறவில்லை.
2 கொரிந்தியர் 5 : 12 (RCTA)
ஆனால், எங்களைப்பற்றி நீங்கள் பெருமைப்பட்டுக்கொள்ள உங்களுக்கு வாய்ப்பளிக்கிறோம்; அப்போது, உள்ளத்தில் இருப்பதைப் பாராமல் வெளித்தோற்றத்தை மட்டுமே பார்த்துப் பெருமை பாராட்டுகிறவர்களுக்கு, நீங்கள் விடைசொல்ல இயலும்.
2 கொரிந்தியர் 5 : 13 (RCTA)
நாங்கள் மதிமயங்கியவர்கள்போல் இருக்கிறோமென்றால், கடவுளுக்காகவே அப்படி இருக்கிறோம்; அறிவுத் தெளிவோடு இருக்கிறோமென்றால், உங்களுக்காகவே அப்படி இருக்கிறோம்.
2 கொரிந்தியர் 5 : 14 (RCTA)
அனைவருக்காகவும் ஒருவர் உயிர்துறந்தார் என்று உணர்ந்ததும் கிறிஸ்துவின் அன்பு எங்களை ஆட்கொள்கிறது; அனைவருக்காகவும் ஒருவர் இறந்தாரென்றால், அனைவருமே இறந்துபோயினர் என்பது பொருள்.
2 கொரிந்தியர் 5 : 15 (RCTA)
அப்படி அனைவருக்காகவும் அவர் உயிர்துறந்ததோ, வாழ்கிறவர்கள் இனித் தங்களுக்கென வாழாமல், தங்களுக்காக இறந்து உயிர்த்தவர்க்கென வாழவேண்டும் என்பதற்காகவே.
2 கொரிந்தியர் 5 : 16 (RCTA)
ஆதலால், இனிமேல் நாங்கள் ஊனக்கண் கொண்டு யாரையும் பார்ப்பதில்லை; இதற்கு முன் ஊனக்கண் கொண்டு கிறிஸ்துவைப் பார்த்திருந்தாலும், இனிமேல் அப்படிப் பார்ப்பதில்லை.
2 கொரிந்தியர் 5 : 17 (RCTA)
ஆகவே ஒருவன் கிறிஸ்துவுக்குள் வாழ்ந்தால், புதியதொரு படைப்பு தோன்றுகிறது; பழையன கழிந்துபோயின.
2 கொரிந்தியர் 5 : 18 (RCTA)
இதோ! புதியன தோன்றியுள்ளன. இவை எல்லாம் கடவுள் செயல்தான். அவரே கிறிஸ்துவின் வழியாய் நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கி, ஒப்புரவு செய்யும் திருப்பணியை எங்களுக்குக் கொடுத்தார்.
2 கொரிந்தியர் 5 : 19 (RCTA)
உள்ளபடியே கடவுள் உலகினரின் குற்றங்களுக்குரிய கடனைக் கணிக்காமல் அவர்களைக் கிறிஸ்துவுக்குள் தம்மோடு ஒப்புரவாக்கினார்; அவரே அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார்.
2 கொரிந்தியர் 5 : 20 (RCTA)
ஆகவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய்ச் செயலாற்றுகிறோம்; நாங்கள் பேசுவது கடவுளே அறிவுறுத்துவது போலாகும். ஆகவே கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் மன்றாடுகிறோம்:
2 கொரிந்தியர் 5 : 21 (RCTA)
கடவுளோடு ஒப்புரவாகுங்கள். கடவுளுடைய அருள் தன்மையோடு நாமும் கிறிஸ்துவுக்குள் விளங்கும்படி, பாவமே அறியாத அவரை நமக்காகப் பாவ உருவாக்கினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21