2 கொரிந்தியர் 13 : 1 (RCTA)
இதோ, மூன்றாம் முறையாக உங்களிடம் வருகிறேன். 'இரண்டு மூன்று சாட்சிகள் சொற்படி காரியம் எல்லாம் தீரும்.'
2 கொரிந்தியர் 13 : 2 (RCTA)
முன்பு பாவம் செய்தவர்களுக்கும், மற்ற அனைவருக்கும் ஏற்கெனவே எச்சரிக்கை செய்ததுபோல் மறுபடியும் எச்சரிக்கை செய்கிறேன்.
2 கொரிந்தியர் 13 : 3 (RCTA)
இரண்டாம் முறை நான் உங்களிடம் வந்திருந்த போது சொன்னதையே, உங்களோடு இல்லாத இந்த நேரத்திலும் சொல்லுகிறேன்; என் வழியாய்ப் பேசுகிறவர் கிறிஸ்துவே என்பதை எண்பிக்கவேண்டும் என்கிறீர்கள் அல்லவா? நான் மறுபடியும் வந்தால், அதை எண்பித்துக் காட்டுவேன்; பரிவு காட்டவே மாட்டேன். கிறிஸ்து உங்கள்பால் வலுக்குன்றியவராகக் காணப்படவில்லை; உங்களிடையே தம் வல்லமையைக் காட்டினார்.
2 கொரிந்தியர் 13 : 4 (RCTA)
வலுவின்மையால் அவர் சிலுவையில் அறையுண்டார்; ஆனால் கடவுளின் வல்லமையால் உயிரோடிருக்கிறார். அவருடைய வலுவின்மையில் பங்குபெறும் நாங்களும், கடவுளின் வல்லமையால் அவரோடு ஒன்றித்து உயிரோடிருப்போம்; அது நாங்கள் உங்களை நடத்தும் முறையில் விளங்கும்.
2 கொரிந்தியர் 13 : 5 (RCTA)
உங்கள் வாழ்க்கை விசுவாசத்தின்மேல் ஊன்றியுள்ளதா எனச் சோதித்துப் பாருங்கள்; உள்ளங்களை ஆய்ந்தறியுங்கள். கிறிஸ்து இயேசு உங்கள் உள்ளத்தில் இருப்பதை அறிகிறீர்கள் அல்லவா? நீங்கள் தகுதியற்றவர்களாய் இராவிட்டால் அறிவீர்கள்.
2 கொரிந்தியர் 13 : 6 (RCTA)
நாங்கள் தகுதியற்றவர்கள் அல்ல என்று நீங்கள் அறிவீர்களென நம்புகிறேன்.
2 கொரிந்தியர் 13 : 7 (RCTA)
நீங்கள் தீமையொன்றும் செய்யாதிருக்கும்படி கடவுளைப் பார்த்து மன்றாடுகிறோம்; எங்கள் தகைமையை எடுத்துக்காட்ட நாங்கள் விரும்பவில்லை; அதை எடுத்துக்காட்ட வாய்ப்பே இல்லாதவாறு நீங்கள் நல்லதைச் செய்ய வேண்டுமென்பது தான் எங்கள் நோக்கம்.
2 கொரிந்தியர் 13 : 8 (RCTA)
உண்மைக்கு முரணாய் எதையும் செய்ய எங்களால் இயலாது; உண்மையில் பொருட்டே உழைக்க முடியும்.
2 கொரிந்தியர் 13 : 9 (RCTA)
நீங்கள் வலிமையுள்ளவர்களாய் இருக்கும்போது நாங்கள் எங்கள் வலிமையைக் காட்டத் தேவையிராது; அது எங்களுக்கு மகிழ்ச்சியே. ஆகவே நீங்கள் ஞான நிறைவு அடைய வேண்டுமென்பதே எங்கள் மன்றாட்டின் கருத்து.
2 கொரிந்தியர் 13 : 10 (RCTA)
ஆகையால்தான் உங்களிடம் வருவதற்கு முன்பே இதையெல்லாம் எழுதுகிறேன். நான் உங்களிடம் வரும்போது என் அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களிடம் மிகக் கடுமையாய் நடந்துகொள்ள நான் விரும்பவில்லை. ஏனெனில், அழிவுக்காக அன்று, ஞான வளர்ச்சிக்காகவே இந்த அதிகாரத்தை ஆண்டவர் எனக்கு அளித்திருக்கிறார்.
2 கொரிந்தியர் 13 : 11 (RCTA)
இறுதியாக, சகோதரர்களே, மகிழ்ச்சியோடு இருங்கள்; ஞான நிறைவடைய முயலுங்கள்; என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; ஒன்றுபட்டு வாழுங்கள்; சமாதானமாய் இருங்கள். அப்போது அன்புக்கும் சமாதானத்துக்கும் ஊற்றாகிய கடவுள் உங்களோடு இருப்பார்.
2 கொரிந்தியர் 13 : 12 (RCTA)
பரிசுத்த முத்தங் கொடுத்து, ஒருவரையொருவர் வாழ்த்துங்கள்;
2 கொரிந்தியர் 13 : 13 (RCTA)
(12b) இறை மக்கள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.
2 கொரிந்தியர் 13 : 14 (RCTA)
(13) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், பரிசுத்த ஆவியின் நட்புறவும் உங்களனைவரோடும் இருப்பதாக!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14