2 கொரிந்தியர் 11 : 1 (RCTA)
என் பேதைமையை நீங்கள் ஒரளவு பொறுத்துக்கொள்வீர்களா? ஆம், சற்றுப் பொறுத்துக்கொள்ளுங்கள்.
2 கொரிந்தியர் 11 : 2 (RCTA)
நான் உங்கள் மீதுகொண்டுள்ள அன்பார்வம் கடவுள்கொண்டிருக்கும் அன்பார்வமே. ஏனெனில், கிறிஸ்து என்னும் ஒரே மணவாளற்கு உங்களை மண ஒப்பந்தத்தில் பிணைத்துள்ளேன்; அவர்முன் உங்களைக் கற்புள்ள கன்னியென நிறுத்த வேண்டுமென்பதே என் விருப்பம்.
2 கொரிந்தியர் 11 : 3 (RCTA)
ஆனால், ஏவாள், எவ்வாறு பாம்பின் சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டாளோ அவ்வாறே நீங்களும் உங்கள் எண்ணங்களைச் சீரழியவிட்டு, கிறிஸ்துவிடம் இருக்கவேண்டிய ஒருமனப் பற்றுதலை இழந்து விடுவீர்களோ என அஞ்சுகிறேன்.
2 கொரிந்தியர் 11 : 4 (RCTA)
ஏனெனில், எவனாவது வந்து நாங்கள் அறிவிக்காத வேறொரு இயேசுவை அறிவிக்கும்போது அல்லது நீங்கள் பெற்றிருக்கும் ஆவியானவரைத் தவிர வேறோர் ஆவியைப் பெற்றுக்கொள்ளச் செய்யும்போது அல்லது நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்திக்கு ஒவ்வாத வேறொரு நற்செய்தியைக் கொணரும்போது, அவனை எளிதில் பொறுத்துக் கொள்ளுகிறீர்களே;
2 கொரிந்தியர் 11 : 5 (RCTA)
ஆயினும் இந்தப் ' பேர்போன ' அப்போஸ்தலர்களைவிட நான் எதிலும் தாழ்ந்தவனல்லேன் என்றே எண்ணுகிறேன்.
2 கொரிந்தியர் 11 : 6 (RCTA)
எனக்குப் பேச்சு வன்மை இல்லை, மெய்தான்; ஆயினும் அறிவு இல்லாமற் போகவில்லை. இதை நாங்கள் எப்போதும் எல்லா வகையிலும் உங்களுக்குக் காட்டியிருக்கிறோம்.
2 கொரிந்தியர் 11 : 7 (RCTA)
கைம்மாறு கருதாமல் உங்களுக்குக் கடவுளின் நற்செய்தியை அறிவித்து, உங்களை உயர்த்துவதற்காக நான் என்னையே தாழ்த்திக்கொண்டேனே, இப்படிச் செய்தது குற்றமா?
2 கொரிந்தியர் 11 : 8 (RCTA)
உங்களிடையே பணிபுரிந்தபோது, என் செலவுக்கு வேண்டியதை மற்றச் சபைகளிடமிருந்து பெற்றுக் கொண்டேன். உங்களுக்காக இவ்வாறு அவர்களிடமிருந்து பொருளைக் கவர்ந்தேன் .
2 கொரிந்தியர் 11 : 9 (RCTA)
நான் உங்களோடு இருக்கையில் எனக்குக் குறையிருந்தபோதிலும், நான் யாருக்கும் சுமையாய் இருக்கவில்லை; எனக்கிருந்த குறையை மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர்கள் நீக்கினார்கள்; எதிலும் உங்களுக்குச் சுமையாய் இராமல் பார்த்துக்கொண்டேன். இனியும் பார்த்துக்கொள்வேன்.
2 கொரிந்தியர் 11 : 10 (RCTA)
என்னுள் இருக்கும் கிறிஸ்துவின் உண்மையே சாட்சியாகச் சொல்லுகிறேன்; எனக்குரிய இப்பெருமையை அக்காய நாட்டுப் பகுதிகளிலிருந்து யாரும் எடுக்க முடியாது.
2 கொரிந்தியர் 11 : 11 (RCTA)
நான் இப்படியெல்லாம் செய்வானேன்? உங்கள்மேல் எனக்கு அன்பு இல்லை என்பதாலோ? கடவுளுக்குத் தெரியும் நான் உங்கள்மேல் வைத்துள்ள அன்பு.
2 கொரிந்தியர் 11 : 12 (RCTA)
தாங்கள் பெருமை பாராட்டிக்கொள்ளும் அப்போஸ்தலப் பணியில் எங்களுக்கு நிகராய்த் தென்படச் சிலர் வாய்ப்புத் தேடுகிறார்கள். அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிட்டாதபடி நான் இப்போது செய்வதையே தொடர்ந்து செய்து வருவேன்.
2 கொரிந்தியர் 11 : 13 (RCTA)
இத்தைகையோர் போலி அப்போஸ்தலர்கள், வஞ்சக வேலையாட்கள், கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாக நடிக்கிறவர்கள்.
2 கொரிந்தியர் 11 : 14 (RCTA)
இதில் ஒரு வியப்புமில்லை; சாத்தான் கூட ஒளியின் தூதனாக நடிக்கிறான்.
2 கொரிந்தியர் 11 : 15 (RCTA)
ஆகையால் அவனுடைய பணியாளர் நீதியின் பணியாளராக நடிப்பது பெரிதா? அவர்களுடைய முடிவு அவர்களின் செயல்களுக்கேற்றதாகவே இருக்கும்.
2 கொரிந்தியர் 11 : 16 (RCTA)
மறுபடியும் சொல்லுகிறேன்; எவனும் என்னை அறிவிலி என எண்ணவேண்டாம்; அப்படி எண்ணினால், என்னை அறிவிலியாகவே வைத்துக் கொள்ளுங்கள். நானும் அறிவிலியைப் போலச் சற்றுப் பொருமையடித்துக் கொள்ளுகிறேன்.
2 கொரிந்தியர் 11 : 17 (RCTA)
நான் இப்பொழுது ஆண்டவரின் ஏவுதலின்படி பேசவில்லை; அறிவிலியைப்போல் துணிவோடு பெருமையடித்துக் கொள்ளப்போகிறேன்.
2 கொரிந்தியர் 11 : 18 (RCTA)
உலகச் சிறப்புகளைச் சொல்லிக்காட்டி, பலர் பெருமையடித்துக் கொள்வதால் நானும் அவ்வாறே பெருமையடித்துக் கொள்கிறேன்.
2 கொரிந்தியர் 11 : 19 (RCTA)
அறிவு நிறைந்திருக்கும் நீங்கள் அந்த அறிவிலிகளைத் தாராளமாய்ப் பொறுத்துக் கொள்கிறீர்கள்.
2 கொரிந்தியர் 11 : 20 (RCTA)
உங்களை யாராவது அடிமைபோல் நடத்தினால், அல்லது சுரண்டினால், அல்லது ஏமாற்றிப் பிழைத்தால், அல்லது உங்களிடம் இறுமாப்புக் காட்டினால், அல்லது உங்களைக் கன்னத்திலே அறைந்தால் நீங்கள் பொறுத்துக் கொள்கிறீர்கள்.
2 கொரிந்தியர் 11 : 21 (RCTA)
இப்படியெல்லாம் செய்ய நாங்கள் வலுவற்றவர்களே; இது எனக்கு வெட்கந்தான். எனினும் அவர்கள் எதிலே பெருமை பாராட்டத் துணிகிறார்களோ, அதிலே நானும் துணியக்கூடும் அறிவிலியைப் போலவே இன்னும் பேசுகிறேன்
2 கொரிந்தியர் 11 : 22 (RCTA)
அவர்கள் எபிரேயரோ? நானும் எபிரேயன்தான். அவர்கள் இஸ்ராயேலரோ? நானும் இஸ்ராயேலன் தான். அவர்கள் ஆபிராகாமின் வழிவந்தவர்களோ? நானும் ஆபிரகாமின் வழிவந்தவன் தான்.
2 கொரிந்தியர் 11 : 23 (RCTA)
அவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்களோ? அறிவிழந்தவனாகவே பேசுகிறேன் நான் அவர்களுக்குமேல் கிறிஸ்துவின் பணியாளன். அவர்களைவிட மிகுதியாய் உழைத்தேன். அவர்களைவிட மிகுதியாய்ச் சிறையில் துன்புற்றேன். அவர்களைவிட மிக்க கொடுமையாகச் சாட்டையால் அடிபட்டேன்.
2 கொரிந்தியர் 11 : 24 (RCTA)
பலமுறை மரண வாயிலில் நின்றேன். ஐந்துமுறை யூதரிடமிருந்து ஒன்று குறைய நாற்பது கசையடிகள் வாங்கினேன்.
2 கொரிந்தியர் 11 : 25 (RCTA)
மும் முறை தடியால் அடிபட்டேன். ஒரு முறை என்னைக் கல்லால் எறிந்தார்கள். மும்முறை கப்பற் சிதைவில் சிக்குண்டேன். ஓர் இரவும் பகலும் நடுக்கடலில் அல்லலுற்றேன்.
2 கொரிந்தியர் 11 : 26 (RCTA)
நான் செய்த பயணங்கள் மிகப் பல:அவற்றில் ஆறுகளாலும் கள்ளர்களாலும் இடர்கள், சொந்த இனத்தாரும் வேற்றினத்தாரும் இழைத்த இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள். கடலிலும் இடர்கள், போலிச் சகோதரர்களால் இடர்கள். இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன்.
2 கொரிந்தியர் 11 : 27 (RCTA)
அயராது உழைத்துக் களைத்தேன்; பன்முறை கண் விழித்தேன்; பசி தாகமுற்றேன்; பன்முறை பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; போதிய ஆடையின்றியிருந்தேன்;
2 கொரிந்தியர் 11 : 28 (RCTA)
இவைபோல் வேறு பல இடர்கள் நேர்ந்தன. இவையேயன்றி, எல்லாச் சபைகளையும் பற்றிய கவலை வேறு எனக்கு அன்றாடச் சுமையாய் உள்ளது.
2 கொரிந்தியர் 11 : 29 (RCTA)
யாராவது மன வலிமையற்றிருந்தால், நானும் அவனைப் போல் ஆவதில்லையோ? எவனாவது இடறல் உற்றால், என் உள்ளம் கொதிப்பதில்லையோ?
2 கொரிந்தியர் 11 : 30 (RCTA)
நான் பெருமை பாராட்டுவதாய் இருந்தால் என் வலுவின்மையைக் காட்டுவதனைத்தையும் குறித்தே பெருமை பாராட்டுவேன். நான் சொல்லுவது பொய்யன்று.
2 கொரிந்தியர் 11 : 31 (RCTA)
இதை ஆண்டவராகிய இயேசுவின் தந்தையும் கடவுளுமானவர் அறிவார்; அவர் என்றென்றும் போற்றி!
2 கொரிந்தியர் 11 : 32 (RCTA)
நான் தமஸ்கு நகரத்திலே இருந்தபொழுது, அதேத்தா அரசன் கீழ் இருந்த ஆளுநன் என்னைச் சிறைப்பிடிக்க விரும்பித் தமஸ்கு நகரவாயில்களில் காவல் வைத்தான்.
2 கொரிந்தியர் 11 : 33 (RCTA)
நானோ நகர மதிலிலிருந்த பலகணி வழியாய்க் கூடையில் வைத்து இறக்கப்பட்டு, அவன் கைக்குத் தப்பினேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33