2 நாளாகமம் 3 : 1 (RCTA)
பின்பு சாலமோன் யெருசலேமில் தம் தந்தை தாவீதுக்கு ஆண்டவரால் காட்சியில் காண்பிக்கப்பட்ட மோரியா மலையில் எபுசையனான ஒர்னானின் களத்தில் ஆண்டவருக்கு ஆலயம் கட்டத் தொடங்கினார். தாவீதே அந்த இடத்தை ஆயத்தம் செய்திருந்தார்.
2 நாளாகமம் 3 : 2 (RCTA)
தம் ஆட்சியின் நான்காம் ஆண்டு, இரண்டாம் மாதம், இரண்டாம் நாள், சாலமோன் வேலையைத் தொடங்கி வைத்தார்.
2 நாளாகமம் 3 : 3 (RCTA)
கடவுளின் ஆலயத்திற்குச் சாலமோன் போட்ட அடித்தளம் அக்கால அளவையின்படி அறுபது முழ நீளமாயும், இருபது முழ அகலமாயும் இருந்தது.
2 நாளாகமம் 3 : 4 (RCTA)
முகப்பில் இருந்த மண்டபத்தின் நீளம் ஆலயத்தின் அகலத்தைப் போல் இருபது முழமும், அதன் உயரம் நூற்றிருபது முழமுமாய் இருந்தன. சாலமோன் அதன் உட்புறத்தைப் பசும்பொன் தகட்டால் வேய்ந்தார்.
2 நாளாகமம் 3 : 5 (RCTA)
ஆலயத்தின் நடுப்பகுதியைத் தேவதாரு மரப்பலகைகளால் மூடி, இவற்றையும் பசும்பொன் தகட்டால் வேய்ந்தார். அதன்மேல் பேரீந்து மடலைப் போன்றும், ஒன்றுடனொன்றும் பிணைக்கப்பட்ட சங்கலிகளைப் போன்றும் ஒருவித வேலைப்பாடுகளைச் செய்தார்.
2 நாளாகமம் 3 : 6 (RCTA)
தளத்தை மிகவும் விலையுர்ந்த பளிங்குக் கற்களால் பாவி அழகுபடுத்தினார். பார்வாயீமினின்று கொண்டு வரப் பெற்ற பொன்னே பயன்படுத்தப் பட்டது.
2 நாளாகமம் 3 : 7 (RCTA)
கோவிலின் உத்திரங்களையும் நிலைகளையும் சுவர்களையும் கதவுகளையும் அப்பொன் தகடுகளால் வேய்ந்தார். சுவர்களில் கெருபீம்களின் உருவங்களைச் செதுக்கி வைத்தார்.
2 நாளாகமம் 3 : 8 (RCTA)
பிறகு கோயிலின் உள் தூயகத்தைக் கட்டினார். அதன் நீளம் ஆலயத்தின் அகலத்தைப் போல் இருபது முழம்; அதன் அகலமும் இருபது முழமே. அதைச் சுமார் அறுநூறு தாலந்து பெறுமான பொன் தகடுகளால் வேய்ந்தார்.
2 நாளாகமம் 3 : 9 (RCTA)
ஆணிகளெல்லாம் பொன்னாலேயே செய்யப்பட்டிருந்தன. அவற்றில் ஒவ்வொரு ஆணியும் ஐம்பது சீக்கல் பொன் நிறையுள்ளதாய் இருந்தது. மேல் அறைகளையும் சாலமோன் பொன்னால் வேய்ந்தார்.
2 நாளாகமம் 3 : 10 (RCTA)
உள்தூயகத்தில் இரு கெருபீம்களின் உருவங்களையும் செய்து வைத்து அவற்றைப் பொன்தகட்டாலே வேய்ந்தார்.
2 நாளாகமம் 3 : 11 (RCTA)
அவற்றின் இறக்கைகளின் மொத்தநீளம் இருபது முழம்: அதாவது ஓர் இறக்கையின் நீளம் ஐந்து முழம்; அது ஆலயத்தின் சுவரைத் தொட்டுக் கொண்டிருந்தது. அதன் மறு இறக்கையின் நீளமும் ஐந்து முழமே. அது மற்றக் கெருபீமின் இறக்கையைத் தொட்டுக் கொண்டிருந்தது.
2 நாளாகமம் 3 : 12 (RCTA)
அவ்வாறே இரண்டாவது கெருபீமின் அளவும்: அதாவது ஓர் இறக்கையின் நீளம் ஐந்து முழம். அவ்விறக்கை ஆலயத்தின் சுவரைத் தொட்டுக் கொண்டிருந்தது. அதன் மறு இறக்கையும் ஐந்து முழமே. அது முதல் கெருபீமின் இறக்கையைத் தொட்டுக் கொண்டிருந்தது.
2 நாளாகமம் 3 : 13 (RCTA)
இவ்வாறு அகன்று விரிந்திருந்த அந்தக் கெருபீம்களின் இறக்கைகளின் நீளம் மொத்தம் இருபது முழம். அவை தம் கால்களை ஊன்றி நின்று கொண்டிருந்தன. அவை ஆலயத்தின் நடுப்பகுதியை நோக்கிய வண்ணமாய் இருந்தன.
2 நாளாகமம் 3 : 14 (RCTA)
சாலமோன் இளநீல நூலாலும் ஊதா நூலாலும் சிவப்பு நூலாலும் மெல்லிய சணல் நூலாலும் ஒரு திரையை நெய்யச் செய்தார். அதில் கெருபீம்களின் உருவங்கள் பொறிக்கப் பெற்றிருந்தன.
2 நாளாகமம் 3 : 15 (RCTA)
ஆலயக் கதவுகளுக்கு முன் முப்பத்தைந்து முழ உயரமான இரண்டு தூண்களை நாட்டினார். அவற்றின் போதிகைகளின் உயரம் ஐந்து முழம்.
2 நாளாகமம் 3 : 16 (RCTA)
உள் தூயகத்தில் போடப்பட்டுள்ள சங்கிலிகளைப் போன்ற வேலைப்பாடுகளைச் செய்து தூண்களின் போதிகைகளின் மேல் அவற்றைப் பற்ற வைத்தார். மேலும் நூறு மாதுளம் பழங்களைச் செய்து அவற்றைச் சிறிய சங்கிலிகளில் தொங்க விட்டார்.
2 நாளாகமம் 3 : 17 (RCTA)
அந்தத் தூண்களை ஆலய வாயிலின் முன் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலுமாக நாட்டி வைத்தார். வலப்பக்கத்துத் தூணுக்கு யாக்கீன் என்றும், இடப்பக்கத்துத் தூணுக்குப் போவாஸ் என்றும் பெயரிட்டார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17