2 நாளாகமம் 17 : 1 (RCTA)
ஆசாவின் மகன் யோசபாத் அவனுக்குப் பின் அரியணை ஏறி இஸ்ராயேலுக்கு எதிராகத் தன்னைப் பலப்படுத்திக் கொண்டான்.
2 நாளாகமம் 17 : 2 (RCTA)
அவன் யூதாவின் அரணான அனைத்து நகர்களிலும் படையையும், யூதா நாட்டிலும் அவனுடைய தந்தை ஆசா கைப்பற்றியிருந்த எப்பிராயீமின் நகர்களிலும் காவற்படைகளையும் நிறுவினான்.
2 நாளாகமம் 17 : 3 (RCTA)
கடவுள் யோசபாத்தோடு இருந்தார். அவன் பாவால்களின் மேல் நம்பிக்கை வைக்காமல்,
2 நாளாகமம் 17 : 4 (RCTA)
தன் தந்தை தாவீதின் வழியிலே நடந்து, தன் தந்தையின் கடவுளையே நம்பி வந்தான்; இஸ்ராயேலின் பாவ வழியில் நடவாது, அவருடைய கட்டளைகளின்படியே நடந்து வந்தான். ஆண்டவர் அவனது ஆட்சியை நிலைநிறுத்தினார்.
2 நாளாகமம் 17 : 5 (RCTA)
யூதா குலத்தார் அனைவரும் யோசபாத்துக்குப் பரிசுகளைக் கொடுத்து வந்தனர். அதனால் அவனது செல்வமும் புகழும் நாளுக்கு நாள் வளர்ந்தது.
2 நாளாகமம் 17 : 6 (RCTA)
மேலும் அவன் ஆண்டவரின் வழிகளில் உறுதியுடன் நடந்து யூதாவிலிருந்த மேடைகளையும் சிலைத்தோப்புகளையும் அழிக்கத் துணிந்தான்.
2 நாளாகமம் 17 : 7 (RCTA)
அவன் தன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டில் யூதா நகர்களில் போதிக்கும் பொருட்டு மூப்பர்களான பெனாயில், ஒப்தியாஸ், சக்கரியாஸ்,
2 நாளாகமம் 17 : 8 (RCTA)
நத்தானியாஸ், ஜபதியாஸ், அசாயேல், செமிரமோத், யோனத்தான், அதோனியாஸ் ஆகியோரையும், அவர்களோடு குருக்களான எலிசமாவையும் யோராமையும் அனுப்பி வைத்தான்.
2 நாளாகமம் 17 : 9 (RCTA)
இவர்கள் ஆண்டவரின் திருச்சட்ட நூலைக் கையிலேந்தி யூதாவின் எல்லா நகர்களுக்கும் சென்று மக்களுக்குப் போதித்து வந்தார்கள்.
2 நாளாகமம் 17 : 10 (RCTA)
யூதாவைச் சுற்றிலுமிருந்த நாட்டு மக்கள் ஆண்டவருக்கு அஞ்சினர். எனவே அவர்கள் யோசபாத்துக்கு எதிராய்ப் போரிடத் துணியவில்லை.
2 நாளாகமம் 17 : 11 (RCTA)
பிலிஸ்தியரும் யோசபாத்துக்குப் பரிசுகளைக் கொடுத்து வந்தார்கள். அரேபியரும் அவனுக்கு ஏழாயிரத்தெழுநூறு வெள்ளாட்டுக் கடாக்களையும் கொடுத்து வந்தார்கள்.
2 நாளாகமம் 17 : 12 (RCTA)
இவ்வாறு யோசபாத் நாளுக்கு நாள் பேரும் புகழும் அடைந்து வந்தான். அப்பொழுது அவன் யூதாவிலே கோட்டைகளையும் அரணான நகர்களையும் கட்டினான்.
2 நாளாகமம் 17 : 13 (RCTA)
மேலும் யூதாவின் நகர்களிலே வேறுபல வேலைகளையும் செய்வதற்கு அவன் முயன்றான். யெருசலேமில் ஆற்றல் படைத்தவரும் திறமை மிக்கவருமான வீரர் பலர் இருந்தனர்.
2 நாளாகமம் 17 : 14 (RCTA)
தங்கள் குலத்தின்படியும் குடும்பங்களின்படியும் அவர்களின் எண்ணிக்கையாவது: யூதாவில் ஆயிரவர் தலைவர்களும், படைத்தலைவன் அத்னாவும், அவனுக்குக் கீழ் ஆற்றல் மிக்க மூன்று லட்சம் வீரர்களும் இருந்தனர்.
2 நாளாகமம் 17 : 15 (RCTA)
அவனுக்கு அடுத்த நிலையில் யோகனான் இருந்தான். அவனுக்குக் கீழ் இரண்டு லட்சத்து எண்பதினாயிரம் வீரர் இருந்தனர்.
2 நாளாகமம் 17 : 16 (RCTA)
அவனுக்கு அடுத்த நிலையில் ஆண்டவருக்குத் தன்னையே அர்ப்பணித்திருந்த ஜெக்ரியின் மகன் அமாசியாஸ் இருந்தான்; அவனுக்குக் கீழ் இரண்டு லட்சம் வீரர்கள் இருந்தனர்.
2 நாளாகமம் 17 : 17 (RCTA)
அவனுக்கு அடுத்த நிலையில் போரில் வல்லவனான எலியாதா இருந்தான். கேடயம் தாங்கிய வில் வீரர் இரண்டு லட்சம் பேர் அவனுக்குக் கீழ் இருந்தனர்.
2 நாளாகமம் 17 : 18 (RCTA)
அவனுக்கு அடுத்த நிலையில் யோசபாத் இருந்தான். போரிடத் தயாராயிருந்த லட்சத்து எண்பதினாயிரம் பேர் அவனுக்குக் கீழ் இருந்தனர்.
2 நாளாகமம் 17 : 19 (RCTA)
இவர்கள் எல்லாரும் அரசனுக்கு ஏவல் புரிந்து வந்தனர். இவர்களைத் தவிர யூதாவின் அரண் சூழ்ந்த நகர்களிலும் போர்வீரர் பலர் இருந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19

BG:

Opacity:

Color:


Size:


Font: