2 நாளாகமம் 11 : 1 (RCTA)
ரொபோவாம் யெருசலேமுக்கு வந்தவுடனே இஸ்ராயேலரோடு போரிடவும், தனது அரசைத் திரும்பவும் கைப்பற்றிக் கொள்ளவும் கருதி, யூதா குலத்தாரையும் பென்யமீன் குலத்தாரையும் வரச் செய்து, அவர்களில் ஒரு லட்சத்து எண்பதினாயிரம் போர் வீரர்களைத் தேர்ந்து கொண்டான்.
2 நாளாகமம் 11 : 2 (RCTA)
அப்பொழுது கடவுளின் மனிதர் செமொசுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்காவது:
2 நாளாகமம் 11 : 3 (RCTA)
நீ யூதாவின் அரசனும் சாலமோனின் மகனுமான ரொபோவாமையும், யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற எல்லா இஸ்ராயேலரையும் நோக்கி, 'கடவுளின் வார்த்தையைக் கேளுங்கள்:
2 நாளாகமம் 11 : 4 (RCTA)
நீங்கள் உங்கள் சகோதரரை எதிர்த்துப் போரிடச் செல்ல வேண்டாம். நம்மாலே இச்செயல் நடந்துற்றமையால், நீங்கள் வீட்டுக்குத் திரும்புங்கள் என்று சொல்லுகின்றார்' என்பாய்" என்பதாம். அவர்கள் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு எரொபோவாமுக்கு எதிராய்ப் போரிடுவதை நிறுத்திவிட்டுத் தங்கள் வீடு திரும்பினர்.
2 நாளாகமம் 11 : 5 (RCTA)
ரொபோவாம் யெருசலேமில் வாழ்ந்து வந்தான். யூதாவில் அரணுள்ள நகர்களைக் கட்டினான்.
2 நாளாகமம் 11 : 6 (RCTA)
அவன் பெத்லகேம், ஏத்தாம்,தேக்குவே,
2 நாளாகமம் 11 : 7 (RCTA)
பெத்சூர், சொக்கோ, ஒதொல்லாம்,
2 நாளாகமம் 11 : 8 (RCTA)
கேத், மரேசா, ஜுப்,
2 நாளாகமம் 11 : 9 (RCTA)
அதுராம், லாக்கீசு, அஜேக்கா,
2 நாளாகமம் 11 : 10 (RCTA)
சாராவா, ஐயலோன், எபிரோன் ஆகிய நகர்களைக் கட்டினான். இவை யூதாவிலும் பென்யமீனிலுமே உள்ளன.
2 நாளாகமம் 11 : 11 (RCTA)
ரொபோவாம் அந்த நகர்களைச் சுற்றி மதில் எழுப்பிய பின் அவற்றில் ஆளுநர்களை ஏற்படுத்தினான். உணவுப் பொருட்கள், எண்ணெய், திராட்சை இரசம் முதலியவற்றிற்கான பண்டகசாலைகளையும் அமைத்தான்.
2 நாளாகமம் 11 : 12 (RCTA)
ஒவ்வொரு நகரிலும் கேடயம், ஈட்டி கொண்ட ஆயுதக் கிடங்குகளையும் நிறுவி, நகர்களை மிக்க விவேகத்துடன் உறுதிப்படுத்தினான். இவ்வாறாக அவன் யூதாவையும், பென்யமீனையும் ஆண்டு வந்தான்.
2 நாளாகமம் 11 : 13 (RCTA)
இஸ்ராயேல் நாடு எங்கணும் இருந்த குருக்களும் லேவியர்களும் அவனிடம் கூடி வந்தனர்.
2 நாளாகமம் 11 : 14 (RCTA)
ஏனெனில் அவர்கள் ஆலயத்தில் திருப்பணி புரியாதவாறு எரொபோவாமும் அவன் புதல்வரும் அவர்களை விலக்கி வைத்திருந்ததால், அவர்கள் தங்கள் ஊர்களையும் உடைமைகளையும் விட்டுவிட்டு யூதா நாட்டுக்கும் யெருசலேமுக்கும் சென்றிருந்தனர்.
2 நாளாகமம் 11 : 15 (RCTA)
எரொபோவாம் தான் ஏற்படுத்திய மேடைகளுக்கென்றும் பேய்களுக்கென்றும் கன்றுக் குட்டிகளுக்கென்றும் குருக்களை நியமித்திருந்தான்.
2 நாளாகமம் 11 : 16 (RCTA)
இஸ்ராயேல் குலத்தாரில் தங்கள் கடவுளான ஆண்டவரையே முழு மனத்தோடும் பின்பற்ற மனதாயிருந்தவர்கள் தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிசெலுத்த யெருசலேமுக்கு வந்து கொண்டிருந்தனர்.
2 நாளாகமம் 11 : 17 (RCTA)
இவ்வாறு மூன்றாண்டுகளாய் அவர்கள் யூதாவின் நாட்டைப் பலப்படுத்திச் சாலமோனின் மகன் ரொபோவாமின் ஆட்சியை உறுதிப்படுத்தினர். அவர்கள் தாவீதும் சாலமோனும் நடந்த வழியிலே மூன்று ஆண்டுகள் நடந்து வந்தனர்.
2 நாளாகமம் 11 : 18 (RCTA)
தாவீதின் மகன் எரிமோத்துக்கும், இசாயியின் மகனுக்குப் பிறந்த எலியாவின் புதல்வி அபிகாயிலுக்கும் பிறந்த மகலாத்தை ரொபோவாம் மணந்து கொண்டான்.
2 நாளாகமம் 11 : 19 (RCTA)
இவள்மூலம் ஜெகுஸ், சமொரியா, ஜொம் என்ற புதல்வர்கள் அவனுக்குப் பிறந்தனர்.
2 நாளாகமம் 11 : 20 (RCTA)
அவளுக்குப் பிறகு ரொபோவாம் அப்சலோமின் மகள் மாக்காளையும் மணந்தான். இவள் அவனுக்கு அபியா, ஏத்தாயி, ஜிஜா, சலொமித் என்பவர்களைப் பெற்றாள்.
2 நாளாகமம் 11 : 21 (RCTA)
ரொபோவாம் அப்சலோமின் மகளான இந்த மாக்காலைத் தன் எல்லா மனைவியரையும் வைப்பாட்டிகளையும் விட அதிகமாய் நேசித்து வந்தான். அவன் பதினெட்டு மனைவியரையும், அறுபது வைப்பாட்டிகளையும் மணந்து இருபத்தெட்டுப் புதல்வர்களையும் அறுபது புதல்வியரையும் பெற்றெடுத்தான்.
2 நாளாகமம் 11 : 22 (RCTA)
அவன் மாக்காளின் மகன் ஆபியாவை அவனுடைய சகோதரர்களுக்குள் தலைவனாக ஏற்படுத்தினான். ஏனெனில் இவனையே அரசனாக்க அவன் எண்ணம் கொண்டிருந்தான்.
2 நாளாகமம் 11 : 23 (RCTA)
காரணம், இவன் அறிவுக் கூர்மையுடையவனாய், யூதா, பென்யமீன் நாடுகள் எங்கணுமிருந்த அரணுள்ள எல்லா நகர்களிலும் தன் சகோதரரை விடப் பேரும் புகழும் பெற்றிருந்தான்; அவன் தன் சகோதரர்களுக்கு வேண்டிய உணவையும் கொடுத்து அவர்களுக்குப் பல மனைவியரையும் தேடிக் கொடுத்தான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23