1 தீமோத்தேயு 5 : 1 (RCTA)
முதியோரிடம் கடுமையாயிராதீர். அவர்களைத் தந்தையராகக் கருதி அறிவு புகட்டும். அவ்வாறே, இளைஞரைத் தம்பியராகவும்,
1 தீமோத்தேயு 5 : 2 (RCTA)
வயது முதிர்ந்த மாதரைத் தாய்மாராகவும், இளம் பெண்களைத் தூய உள்ளத்தோடு தங்கையராகவும் கருதி நடத்தும்.
1 தீமோத்தேயு 5 : 3 (RCTA)
கைம்பெண்களுக்கு மரியாதை காட்டும். ஆதரவற்ற கைம்பெண்களையே ஈண்டுக் குறிப்பிடுகிறேன்.
1 தீமோத்தேயு 5 : 4 (RCTA)
எந்தக் கைம்பெண்ணுக்காவது பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ இருந்தால், அவர்கள் முதலில் சொந்தக் குடும்பத்தினரைப் பேணவும், பெற்றோருக்கும், பாட்டி பாட்டானுக்குமுரிய நன்றிக் கடன் ஆற்றவும் கற்றுக்கொள்ளட்டும். இதுவே கடவுளுக்கு ஏற்றது.
1 தீமோத்தேயு 5 : 5 (RCTA)
ஆதரவின்றித் தனியாய் விடப்பட்ட கைம்பெண் தன் முழு நம்பிக்கையையும் கடவுள் மேல் வைத்து, அல்லும் பகலும் செபத்திலும் மன்றாட்டிலும் நிலைத்திருப்பாளாக.
1 தீமோத்தேயு 5 : 6 (RCTA)
சிற்றின்பத்தில் மூழ்கியுள்ளவள் நடைப்பிணமே.
1 தீமோத்தேயு 5 : 7 (RCTA)
கைம்பெண்கள் யாதொரு குறைச் சொல்லுக்கும் ஆளாகாதபடி இவையெல்லாம் எடுத்துச் சொல்லும்.
1 தீமோத்தேயு 5 : 8 (RCTA)
தன் உறவினரை, சிறப்பாகத் தன் சொந்த வீட்டாரைப் பார்த்துக் கொள்ளாதவன் விசுவாசத்தை மறுதலித்தவனே. அவன் அவிசுவாசியைவிடக் கேடு கெட்டவன்.
1 தீமோத்தேயு 5 : 9 (RCTA)
அறுபது வயதுக்குக் குறையாத கைம்பெண்ணையே கைம்பெண்கள் சபையில் சேர்க்கலாம். அவள் ஒருமுறை மட்டுமே திருமணம் ஆனவளாக இருக்கவேண்டும்.
1 தீமோத்தேயு 5 : 10 (RCTA)
பிள்ளைகளை நன்றாய் வளர்த்தல், விருந்தோம்பல், இறைமக்களின் பாதம் கழுவுதல், துன்புற்றோருக்கு உதவியளித்தல் முதலிய எல்லா நற்செயல்களையும் செய்து, தன் நடத்தைக்கு நற்சான்று பெற்றவளாகவும் இருக்கவேண்டும்.
1 தீமோத்தேயு 5 : 11 (RCTA)
இளம் கைம்பெண்களை இச்சபையில் ஏற்றுக்கொள்ளாதீர். ஏனெனில், கிறிஸ்துவிடமிருந்து பிரிக்கக்கூடிய சிற்றின்ப வேட்கை எழும் போது அவர்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள்.
1 தீமோத்தேயு 5 : 12 (RCTA)
தாங்கள் கொடுத்த வாக்கை இவ்வாறு மீறுவதால் குற்றத்தீர்ப்புக்கு உள்ளாவார்கள்.
1 தீமோத்தேயு 5 : 13 (RCTA)
அதோடு வீடுவீடாகச் சென்று, சோம்பேறிகளாயிருக்கக் கற்றுக்கொள்வார்கள். சோம்பேறிகளாயிருக்க மட்டுமன்று, தகாத பேச்சுக்கெல்லாம் இடம் கொடுத்து வம்பளக்கவும், பிறர் காரியங்களில் தலையிடவும் கற்றுக்கொள்வார்கள்.
1 தீமோத்தேயு 5 : 14 (RCTA)
எனவே, இளம் கைம்பெண்கள் மீளவும் திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகளைப் பெற்று, குடும்பத்தை நடத்தவேண்டும். இதுவே என் விருப்பம். அப்பொழுது நம்மைக் குறைகூற எதிரிக்கு எவ்வித வாய்ப்பும் இராது.
1 தீமோத்தேயு 5 : 15 (RCTA)
ஏனெனில், நெறி தவறிச் சாத்தானைப் பின்சென்றவர்கள் சிலர் ஏற்கெனவே உள்ளனர்.
1 தீமோத்தேயு 5 : 16 (RCTA)
கிறிஸ்தவப் பெண் ஒருத்தியின் வீட்டில் கைம்பெண்கள் இருந்தால், அவளே அவர்களைப் பார்த்துக்கொள்ளட்டும். சபையின்மேல் அச்சுமையைச் சுமத்தக் கூடாது. ஏனெனில், ஆதரவற்ற கைம்பெண்களைத்தான் சபை பார்த்துக்கொள்ள வேண்டும்.
1 தீமோத்தேயு 5 : 17 (RCTA)
சபைகளைச் செவ்வனே நடத்தும் மூப்பர்கள், சிறப்பாகப் போதிப்பதிலும், தேவ வார்த்தை அறிவிப்பதிலும் ஈடுபட்டுழைப்பவர்கள் இருமடங்கு மதிப்புக்குரியவர்கள் ஆவர்.
1 தீமோத்தேயு 5 : 18 (RCTA)
ஏனெனில், 'போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டாதே' என்றும், 'வேலையாள் தன் ஊதியத்துக்கு உரியவனே' என்றும் மறைநூல் கூறுகிறது.
1 தீமோத்தேயு 5 : 19 (RCTA)
மூப்பர் ஒருவரை யாராவது குற்றம் சாட்டினால் இரண்டு மூன்று பேர் சாட்சி சொன்னாலன்றி ஏற்றுக்கொள்ளாதீர்.
1 தீமோத்தேயு 5 : 20 (RCTA)
ஆனால் யாராவது பாவ வழியிலேயே இருப்பதாகத் தெரிந்தால், எல்லாருக்கும் அச்சம் உண்டாகும்படி வெளிப்படையாய்க் கடிந்துகொள்ளும்.
1 தீமோத்தேயு 5 : 21 (RCTA)
கடவுள் முன்னிலையிலும், இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வானதூதர் முன்னிலையிலும் உம்மை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். ஒருதலைச் சார்பாய் எதுவும் செய்யாமல், நடுநிலைமையோடு இவற்றைக் கடைப்பிடியும்.
1 தீமோத்தேயு 5 : 22 (RCTA)
யார்மேலும் பதற்றத்தோடு கைகளை விரித்துப் பட்டம் கொடுக்காதீர். கொடுத்தால் அவர்களுடைய பாவங்களில் நீரும் பங்குகொள்வீர். உம்மைக் குற்றமற்றவராகக் காத்துக் கொள்ளும்.
1 தீமோத்தேயு 5 : 23 (RCTA)
தண்ணீர் மட்டுமே குடிப்பதை விட்டுவிடும். அடிக்கடி உமக்கு ஏற்படும் உடல் நலிவின் பொருட்டு, வயிற்றின் நலனுக்காகச் சிறிது திராட்சை இரசம் குடித்துவாரும்.,
1 தீமோத்தேயு 5 : 24 (RCTA)
சிலருடைய குற்றங்கள் வெளிப்படையானவை. தீர்ப்புக்கு அவர்கள் போகுமுன்பே அவர்களுடைய குற்றங்கள் போய் நிற்கும். வேறு சிலருடைய குற்றங்களோ பின்னரே தெரியவரும்.
1 தீமோத்தேயு 5 : 25 (RCTA)
நற்செயல்களும் வெளிப்படையானவையே. வெளிப்படையாக இல்லாவிடினும் என்றுமே மறைந்திரா.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25