1 தீமோத்தேயு 4 : 1 (RCTA)
ஆவியானவர் தெளிவாய்க் கூறுகிறபடி, இறுதிக் காலத்தில் சிலர் தீய ஆவிகளின் வஞ்சனைகளுக்கும், பேய்களின் போதனைகளுக்கும் செவிமடுத்து விசுவாசத்தை மறுத்து விடுவர்.
1 தீமோத்தேயு 4 : 2 (RCTA)
பேய்க்குரியவன் என மனச்சாட்சியில் சூடிடப்பட்ட பொய்யர்களின் போலிப் பேச்சுகளால் கவரப்படுவர்.
1 தீமோத்தேயு 4 : 3 (RCTA)
அந்தப் பொய்யர்கள் திருமணத்தை விலக்குகின்றனர். சிலர் உணவுகளைத் தவிர்க்க வேண்டுமென்கின்றனர். உண்மையை நன்கறிந்த விசுவாசிகள் நன்றிக் கூறித் தூய்க்கவன்றோ இதெல்லாம் கடவுள் படைத்தார் ?
1 தீமோத்தேயு 4 : 4 (RCTA)
கடவுள் படைத்தது அனைத்தும் நல்லதுதான். நன்றி கூறி உட்கொண்டால், எந்த உணவையும் விலக்கவேண்டியதில்லை.
1 தீமோத்தேயு 4 : 5 (RCTA)
கடவுளுடைய வார்த்தையும் நம் செபமும் அதைப் புனிதமாக்கும்.
1 தீமோத்தேயு 4 : 6 (RCTA)
இக்கருத்துக்களையெல்லாம் சகோதரர்களுக்கு எடுத்துக்காட்டினால் நீர் இயேசு கிறிஸ்துவின் நல்ல ஊழியராய் இருப்பீர். விசுவாசக் கோட்பாடுகளிலும், நற்போதனையிலும் பயிற்சி பெற்றவராயும் விளங்குவீர்.
1 தீமோத்தேயு 4 : 7 (RCTA)
ஆனால், இலௌகீகக் கட்டுக் கதைகளைப் பாட்டிக் கதைகளெனத் தள்ளிவிடும். பக்திப் பயிற்சியில் நிலைத்திரும்.
1 தீமோத்தேயு 4 : 8 (RCTA)
உடற்பயிற்சி ஓரளவு தான் பயன் தரும். பக்தியோ அளவில்லாப் பயன் தரும். ஏனெனில், இம்மையிலும் மறுமையிலும் வாழ்வு பெறுவோம். என்னும் உறுதிப்பாடு பக்தியில் அடங்கியுள்ளது.
1 தீமோத்தேயு 4 : 9 (RCTA)
இது உண்மையான வார்த்தை. எல்லாரும் ஏற்றுக் கொள்ளத்தக்கது.
1 தீமோத்தேயு 4 : 10 (RCTA)
நாம் வருந்தியுழைப்பது உயிருள்ள கடவுளை நம்புவதால் தான். அவரே மனிதர் எல்லாருக்கும், சிறப்பாக விசுவாசிகளுக்கும் மீட்பர்.
1 தீமோத்தேயு 4 : 11 (RCTA)
நீர் விடுக்கும் ஆணைகளும், தரும் போதனைகளும் இதற்கேற்ப அமையட்டும்.
1 தீமோத்தேயு 4 : 12 (RCTA)
நீர் இளைஞராயிருப்பதால் உம்மை யாரும் அவமதியாதிருக்கட்டும். சொல், நடத்தை, அன்பு, விசுவாசம், தூய்மை முதலியவற்றில் நீர் விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக விளங்கும்.
1 தீமோத்தேயு 4 : 13 (RCTA)
விசுவாசிகளுக்கு வாசித்துக்காட்டுவதிலும், அறிவுரை கூறுவதிலும் போதிப்பதிலும் நான் வரும்வரை கருத்தாய் இரும்.
1 தீமோத்தேயு 4 : 14 (RCTA)
மூப்பர் ஒன்றுகூடி உம்மீது கைகளை விரித்தபோது, இறைவாக்கினால் ஞானவரம் உமக்களிக்கப்பட்டது. உம்மில் இருக்கும் அவ்வரத்தைப் பற்றி அசட்டையாய் இராதீர்.
1 தீமோத்தேயு 4 : 15 (RCTA)
உமது முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியும்படி இவற்றைச் செய்வதில் கவலையாயிரும். இவற்றிற்கே உம்மை முழுவதும் ஒப்படைத்துவிடும்.
1 தீமோத்தேயு 4 : 16 (RCTA)
உம் வாழ்க்கை முறைப்பற்றியும் போதனைபற்றியும் விழிப்பாயிரும். இவற்றில் நிலையாயிரும். இவ்வாறு நடந்தால் நீர் மீட்படைவீர். உமக்குச் செவிசாய்ப்பவர்களையும் மீட்படையச் செய்வீர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16