1 தீமோத்தேயு 2 : 1 (RCTA)
முதன்முதல் வேண்டுதல்,செபம் மன்றாட்டு, நன்றியறிதலை அனைவருக்காகவும் நீங்கள் செலுத்தக் கேட்டுக்கொள்கிறேன்.
1 தீமோத்தேயு 2 : 2 (RCTA)
நாம் பக்தியும் ஒழுக்கமும் உடையவர்களாய்க் கலகமில்லா அமைதி வாழ்வு நடத்துமாறு அரசர்களுக்காகவும் அதிகாரிகளுக்காவும் மன்றாடுவோம்.
1 தீமோத்தேயு 2 : 3 (RCTA)
நம் மீட்பாராகிய கடவுளின் கண்ணுக்கு இதுவே சிறந்தது, இதுவே ஏற்றது.
1 தீமோத்தேயு 2 : 4 (RCTA)
எல்லா மனிதரும் மீட்புப்பெறவும், உண்மையின் அறிவை அடைந்து கொள்ளவும் வேண்டும் என்பதே அவரது விருப்பம்.
1 தீமோத்தேயு 2 : 5 (RCTA)
ஏனெனில், கடவுள் ஒருவரே. கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் ஒருவரே. இவர் மனிதனான இயேசு கிறிஸ்துவே.
1 தீமோத்தேயு 2 : 6 (RCTA)
இவர் அனைவரின் மீட்புக்கு ஈடாகத் தம்மையே கையளித்தார். இவ்வாறு குறித்த காலம் வந்தபொழுது அந்த மீட்புத் திட்டத்திற்குச் சாட்சியம் தந்தார்.
1 தீமோத்தேயு 2 : 7 (RCTA)
இதற்காகவே, நான் தூதுரைப்போனாகவும், அப்போஸ்தலனாகவும், விசுவாசத்தையும் உண்மையையும் புறவினத்தாருக்குக் கற்பிக்கும் போதகனாகவும் ஏற்படுத்தப் பெற்றேன். நான் சொல்வது உண்மையே, பொய்யன்று.
1 தீமோத்தேயு 2 : 8 (RCTA)
எனவே, ஆடவர் சினமும் சச்சரவும் தவிர்த்து, எவ்விடத்திலும் தூய கைகளை உயர்த்திச் செபிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
1 தீமோத்தேயு 2 : 9 (RCTA)
பெண்டிரும் அடக்க ஒடுக்கத்தோடும் நாணத்தோடும் ஏற்புடைய ஆடைகளை உடுத்திக்கொள்ளவேண்டும். பின்னல் சடையும், பொன்னும் முத்தும்,ஆடம்பரமான உடைகளும் அல்ல அவர்களுக்கு அணிகலன்.
1 தீமோத்தேயு 2 : 10 (RCTA)
கடவுள் பற்று உள்ளவர்களெனச் சொல்லிக் கொள்ளும் பெண்களுக்கேற்ப அவர்கள் செய்யும் நந்செயல்களே அவர்களுக்கு அணிகலன்.
1 தீமோத்தேயு 2 : 11 (RCTA)
பெண்கள் பேசாமல் தாழ்மையோடு அறிவுரையேற்க வேண்டும்.
1 தீமோத்தேயு 2 : 12 (RCTA)
பெண்கள் கற்பிக்கவோ, ஆண்கள்மேல் அதிகாரம் செலுத்தவோ, நான் விடமாட்டேன், அவர்கள் பேசலாகாது.
1 தீமோத்தேயு 2 : 13 (RCTA)
ஏனெனில், முதலில் உண்டாக்கப் பட்டது ஆதாம், பிறகுதான் ஏவாள்.
1 தீமோத்தேயு 2 : 14 (RCTA)
ஏமாந்தது ஆதாம் அன்று, பெண்தான் ஏமாந்துபோய்ப் பாவத்தில் வீழ்ந்தாள்.
1 தீமோத்தேயு 2 : 15 (RCTA)
இருப்பினும், அடக்க ஒடுக்கத்தோடு விசுவாசம், அன்பு, பரிசுத்தத்தில் நிலைத்திருப்பின் தாய்மைப் பேற்றினால் மீட்புப் பெறுவாள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15