1 தீமோத்தேயு 1 : 1 (RCTA)
விசுவாச வாழ்வில் என் உண்மை மகனாகிய தீமோத்தேயுவுக்கு, நம் மீட்பராகிய கடவுளிடமிருந்தும், நம் நம்பிக்கையாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் பெற்ற கட்டளைபோல், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனான சின்னப்பன் யான் எழுதுவது:
1 தீமோத்தேயு 1 : 2 (RCTA)
பரம தந்தையாகிய கடவுளிடமிருந்தும். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உமக்கு அருளும் இரக்கமும் சமாதனமும் உண்டாகுக!
1 தீமோத்தேயு 1 : 3 (RCTA)
மக்கெதேனியாவுக்கு நான் புறப்படும் பொழுது, எபேசுவிலேயே தங்குமாறு உம்மைக் கேட்டுக்கொண்டேன். அங்கே சிலர் தவறான கொள்கைகளைப் போதித்திருக்கிறார்கள்.
1 தீமோத்தேயு 1 : 4 (RCTA)
இவர்கள், முடிவே இல்லாத புராணக் கதைகளிலும், தலைமுறை வரலாறுகளிலும் கவனம் செலுத்துகிறார்கள். இவையோ, விசுவாசத்தை மையமாகக் கொண்ட இறைத்திட்டத்திற்குப் பயன்படாமல் வீண் ஆராயச்சிகளுக்கே இடம் தருகின்றன. இப்படிச் செய்யாதபடி நீர் அவர்களுக்குக் கட்டளையிடும்.
1 தீமோத்தேயு 1 : 5 (RCTA)
தூய உள்ளம், குற்றமற்ற மனச்சாட்சி, நேர்மையான விசுவாசம் இவற்றினின்று பிறக்கும் அன்பைத் தூண்டுவதே அக்கட்டளையின் நோக்கமாயிருக்கட்டும்.
1 தீமோத்தேயு 1 : 6 (RCTA)
இந்நெறியைவிட்டு விலகிச் சிலர் வீண் வாதங்களில் இறங்கிவிட்டனர்.
1 தீமோத்தேயு 1 : 7 (RCTA)
தாங்கள் பேசுவது இன்னதென்று தாங்களே அறியாதிருப்பினும், தாங்கள் அழுத்தமாகக் கூறுவது தங்களுக்கே புரியாதிருப்பினும், அவர்கள் சட்ட வல்லுநராயிருக்க விரும்புகின்றனர்.
1 தீமோத்தேயு 1 : 8 (RCTA)
திருச்சட்டம் நல்லதுதான், அது தெரியும், ஆனால், திருச்சட்டத்தைச் சட்டமாக மட்டுமே கொள்ளவேண்டும்.
1 தீமோத்தேயு 1 : 9 (RCTA)
அதாவது, சட்டம் நீதிமான்களுக்காக இயற்றப்படவில்லை. நெறிகெட்டவர். கட்டுக்கடங்காதவர், கடவுள் பற்றில்லாதவர், பாவிகள், கடவுளைப் புறக்கணித்தவர்கள், தெய்வ சிந்தனையற்றவர்கள், தாய் தகப்பனைக் கொலை செய்வோர், கொலைகாரர்.
1 தீமோத்தேயு 1 : 10 (RCTA)
காமுகர், இயற்கைக்கு மாறான பாவம் செய்வோர். ஆட்களை அடிமைகளாக்கிக் கடத்திச் செல்வோர், பொய்யர், பொய்யாணையிடுவோர், மற்றும் நலமிக்க போதனைக்கு மாறாக நடப்போர், இவர்களுக்காவே சட்டம் இயற்றப்பட்டது.
1 தீமோத்தேயு 1 : 11 (RCTA)
இப்போதனை பேரின்பக் கடவுள் என்னிடம் ஒப்படைத்துள்ள நற்செய்திக்கு, அவரது மாட்சிமைபற்றிய நற்செய்திக்கு ஒத்துள்ளது.
1 தீமோத்தேயு 1 : 12 (RCTA)
என்னை உறுதிப்படுத்திய நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். ஏனெனில், என்னைத் தம் ஊழியத்திற்கு ஏற்றுத் தம் நம்பிக்கைக்குத் தகுதியுள்ளவன் எனக் கருதினார்.
1 தீமோத்தேயு 1 : 13 (RCTA)
நானோ முன்னர் கடவுளை நிந்தித்தேன். திருமறையைத் துன்புறுத்தினேன். கொடுமை புரிந்தேன், இருப்பினும் இறைவனின் இரக்கத்தைப் பெற்றேன். ஏனெனில், விசுவாசத்தைப் பெறாத நிலையில் அறியாமையால் அவ்வாறு நடந்தேன்.
1 தீமோத்தேயு 1 : 14 (RCTA)
கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் பெற்றுக்கொள்ளும் விசுவாசத்தோடும் அன்போடும் நம் ஆண்டவருடைய அருள் இணைந்து அளவின்றிப் பெருகலாயிற்று.
1 தீமோத்தேயு 1 : 15 (RCTA)
' பாவிகளை மீட்கவே இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தார் ' - என்னும் மொழி உண்மையானது, எல்லாரும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. அந்தப் பாவிகளிலெல்லாம் பெரும் பாவி நானே.
1 தீமோத்தேயு 1 : 16 (RCTA)
இருப்பினும் இறைவனின் இரக்கத்தைப்பெற்றேன். எதற்கெனில், இயேசு கிறிஸ்து முதன் முதல் என்னிடம் நீடிய பொறுமையைக் காட்ட விரும்பினார். இவ்வாறு, அவரில் விசுவாசம் கொண்டு, முடிவில்லா வாழ்வு பெறவேண்டியவர்களுக்கு நான் மாதிரியானேன்.
1 தீமோத்தேயு 1 : 17 (RCTA)
உலகெல்லாம் ஆளும் அரசன் அழிவிலான், கண்ணுக்குப் புலப்படான், ஒரே கடவுளுக்கென்றென்றும் மகிமையும் மாட்சியும் உண்டாகுக! ஆமென்.
1 தீமோத்தேயு 1 : 18 (RCTA)
தீமோத்தேயுவே, என் மகனே, உம்மைக் குறித்து முன்னர் சொல்லப்பட்ட இறைவாக்குகளுக்கேற்ப நான் உமக்குக் கொடுக்கும் அறிவுரை இதுவே:
1 தீமோத்தேயு 1 : 19 (RCTA)
அவ்வாக்குகளின் ஆற்றலைத் துணையாகக் கொண்டு விசுவாசத்துடனும், குற்றமற்ற மனச் சாட்சியுடனும் நன்மைக்காகப் போரிடும் மனச்சாட்சியைப் புறக்கணித்ததால் தான் சிலர் விசுவாசத்தை இழந்து அழிந்தனர்.
1 தீமோத்தேயு 1 : 20 (RCTA)
அத்தகையோர்தான் இமெனேயும், அலெக்சாந்தரும். ஆகையால், அவர்கள் தண்டனை பெற்று, இனியும் கடவுளைப் பழிக்காதிருக்கப் பாடம் கற்றுக்கொள்ளும் பொருட்டு அவர்களைச் சாத்தானுக்குக் கையளித்துவிட்டேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20