1 தெசலோனிக்கேயர் 5 : 1 (RCTA)
சகோதரர்களே காலங்கள் நேரங்களைப் பற்றி உங்களுக்கு எழுதத் தேவையில்லை.
1 தெசலோனிக்கேயர் 5 : 2 (RCTA)
திருடன் நள்ளிரவில் வருவதுபோல் ஆண்டவருடைய நாள் வரும் என்பது உங்களுக்குத் திண்ணமாய்த் தெரியும்.
1 தெசலோனிக்கேயர் 5 : 3 (RCTA)
'எல்லாம் அமைதி, ஆபத்து ஒன்றுமில்லை ' என்று மக்கள் கூறும்போதே, கர்ப்பவதிகளுக்கு வேதனை ஏற்படுவதைப்போல் திடீரென அவர்களுக்கு அழிவு வரும், யாரும் தப்பித்துக்கொள்ள முடியாது.
1 தெசலோனிக்கேயர் 5 : 4 (RCTA)
ஆனால், சகோதரர்களே, நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல. திடீரெனத் தாக்கும் திருடனைப்போல் அந்த நாள் உங்களுக்கு இராது.
1 தெசலோனிக்கேயர் 5 : 5 (RCTA)
நீங்கள் அனைவரும் ஒளியின் மக்கள், பகலின் மக்கள். நாம் இரவுக்கோ இருளுக்கோ உரியவரல்ல.
1 தெசலோனிக்கேயர் 5 : 6 (RCTA)
எனவே, மற்றவர்களைப்போல் நாமும் தூங்காது, விழித்திருக்க வேண்டும்; மட்டு மிதத்தோடு இருத்தல் வேண்டும்.
1 தெசலோனிக்கேயர் 5 : 7 (RCTA)
தூங்குபவர்கள் இரவில்தான் தூங்குபவர்கள்; குடிகாரர் இரவில் தான் குடிப்பார்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 8 (RCTA)
பகலைச் சார்ந்த நாமோ மட்டு மிதத்தோடு இருத்தல் வேண்டும். விசுவாசத்தையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், மீட்பின் நம்பிக்கையைத் தலைச்சீராகவும் அணிந்து கொள்வோமாக.
1 தெசலோனிக்கேயர் 5 : 9 (RCTA)
ஏனெனில், கடவுள் நம்மைத் தம் சினத்திற்கு ஆளாகும்படி ஏற்படுத்தவில்லை; நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தினார்.
1 தெசலோனிக்கேயர் 5 : 10 (RCTA)
நாம் விழித்திருந்தாலும், சாவில் உறங்கினாலும் தம்மோடு ஒன்றித்து வாழும்படி இவரே நமக்காக இறந்தார்.
1 தெசலோனிக்கேயர் 5 : 11 (RCTA)
ஆகையால் நீங்கள் இப்போது செய்து வருவதுபோலவே, ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்ளுங்கள்; ஞான வளர்ச்சி அடைய ஒருவர்க்கொருவர் துணை செய்யுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 12 (RCTA)
சகோதரர்களே, உங்களிடையே உழைத்து ஆண்டவர் பெயரால் உங்களுக்குத் தலைவர்களாக இருந்து, அறிவு புகட்டுவோரை மதித்து நடக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
1 தெசலோனிக்கேயர் 5 : 13 (RCTA)
அவர்கள் ஆற்றும் பணியை முன்னிட்டு, அவர்களுக்கு அன்பும், மிக்க மேரை மரியாதையும் காட்டுங்கள். உங்களிடையே சமாதானம் நிலவட்டும்.
1 தெசலோனிக்கேயர் 5 : 14 (RCTA)
சகோதரர்களே, நாங்கள் உங்களுக்குத் தரும் அறிவுரையாவது: சோம்பேறிகளுக்கு அறிவு புகட்டுங்கள். சோர்வுற்றவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள். மனவலிமையற்றவர்களைத் தாங்குங்கள். எல்லாரோடும் பொறுமையாயிருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 15 (RCTA)
உங்களுள் யாரும் பழிக்குப் பழி வாங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். மாறாக எப்போதும் நன்மையே செய்ய நாடுங்கள்; ஒருவருக்கொருவர் நன்மை செய்யுங்கள்; மற்றெல்லார்க்கும் நன்மை செய்யுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 16 (RCTA)
எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 17 (RCTA)
இடைவிடாது செபியுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 18 (RCTA)
என்ன நேர்ந்தாலும் நன்றிகூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசுவில் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.
1 தெசலோனிக்கேயர் 5 : 19 (RCTA)
தேவ ஆவியை அணைத்துவிட வேண்டாம்.
1 தெசலோனிக்கேயர் 5 : 20 (RCTA)
இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம்.
1 தெசலோனிக்கேயர் 5 : 21 (RCTA)
அவை அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து நல்லதையே ஏற்றுக்கொள்ளுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 22 (RCTA)
தீமையானதெல்லாம் விட்டு விலகுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 23 (RCTA)
சமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் உங்களை முற்றும் பரிசுத்தராக்குவாராக. அவ்வாறே உங்கள் ஆவி, ஆன்மா, உடல் அனைத்தும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையின் போது சீர்குலையாமல் குற்றமின்றி இருக்கும்படி காக்கப்படுவதாக.
1 தெசலோனிக்கேயர் 5 : 24 (RCTA)
உங்களை அழைக்கும் இறைவன் நம்பிக்கைக்குரியவர். சொன்னதைச் செய்து முடிப்பார்.
1 தெசலோனிக்கேயர் 5 : 25 (RCTA)
சகோதரர்களே, எங்களுக்காகவும் செபியுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 26 (RCTA)
பரிசுத்த முத்தம் கொடுத்து, சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக் கூறுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5 : 27 (RCTA)
சகோதரர்கள் அனைவருக்கும் இக்கடிதத்தை வாசித்துக் காட்ட வேண்டுமென்று ஆண்டவர் பெயரால் கேட்டுக்கொள்கிறேன்.
1 தெசலோனிக்கேயர் 5 : 28 (RCTA)
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28