1 தெசலோனிக்கேயர் 2 : 1 (RCTA)
சகோதரர்களே, நாங்கள் உங்களிடம் வந்தது பயனற்றுப் போகவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.
1 தெசலோனிக்கேயர் 2 : 2 (RCTA)
நீங்கள் அறிந்திருப்பதுபோல், உங்களிடம் வருவதற்கு முன்னர் பிலிப்பி நகரில் நாங்கள் துன்புற்றோம், அவமானத்துக்கு ஆளானோம். ஆயினும் பெரும் போராட்டத்தினிடையிலும் கடவுளின் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்க நம் கடவுளிடமிருந்து துணிவு பெற்றோம்.
1 தெசலோனிக்கேயர் 2 : 3 (RCTA)
எங்கள் அறிவுரைகள் ஏமாற்றத்தினாலோ, கெட்ட கருத்தினாலோ கபட எண்ணத்தினாலோ தூண்டப்பட்டவை அல்ல.
1 தெசலோனிக்கேயர் 2 : 4 (RCTA)
நாங்கள் தகுதியுள்ளவர்களெனக் கடவுளே எங்களை நம்பி, நற்செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். அதற்கேற்ப நாங்கள் அதை அறிவிக்கிறோம். மனிதருக்கு அல்ல, எங்கள் உள்ளங்களை உய்த்துணரும் கடவுளுக்கே உகந்தவர்களாய் இருக்கப் பார்க்கிறோம்.
1 தெசலோனிக்கேயர் 2 : 5 (RCTA)
நாங்கள் ஒருகாலும் இச்சகமாகப் பேசியதேயில்லை; இது உங்களுக்குத் தெரியும். போதனை என்னும் போர்வையில் நாங்கள் பொருள் பறிக்கப் பார்க்கவில்லை.
1 தெசலோனிக்கேயர் 2 : 6 (RCTA)
கடவுளே இதற்குச் சாட்சி, நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் என்று பெருமை கொண்டிருக்க முடியும். 'ஆனால், மனிதர் தரும் மகிமையை நாங்கள் உங்களிடமோ மற்றவர்களிடமோ தேடவில்லை.
1 தெசலோனிக்கேயர் 2 : 7 (RCTA)
மாறாக, தாய் தன் குழந்தைகளைப் பேணி வளப்பதுபோல் உங்களிடையே அன்பாய் நடந்து கொண்டோம்.
1 தெசலோனிக்கேயர் 2 : 8 (RCTA)
உங்கள் மீது இத்தகைய ஏக்கமுள்ளவர்களாய் உங்களுக்குக் கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்று, எங்களை முழுவதுமே கையளிக்க ஆவலாய் இருந்தோம். உங்கள் மேல் எங்களுக்கு அவ்வளவு அன்பு இருந்தது!
1 தெசலோனிக்கேயர் 2 : 9 (RCTA)
ஆம் சகோதரர்களே, நாங்கள் எவ்வாறு பாடுபட்டு உழைத்தோம் என்பதை நினைவு கூருங்கள். உங்களுள் யாருக்கும் சுமையாய் இராதபடி எங்கள் பிழைப்புக்காக இராப்பகலாய் வேலை செய்து கொண்டே கடவுளின் நற்செய்தியை உங்களுக்கு அறிவித்தோம்.
1 தெசலோனிக்கேயர் 2 : 10 (RCTA)
விசுவாசிகளான உங்கள் முன்பு நாங்கள் எவ்வளவு புனிதராய், நீதியோடு, குற்றமின்றி நடந்தோம் என்பதற்கு நீங்களே சாட்சி, கடவுளும் சாட்சி.
1 தெசலோனிக்கேயர் 2 : 11 (RCTA)
தந்தை தன் பிள்ளைகளை நடத்துவது போல், உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தினோம். 'ஊக்கமூட்டினோம்.
1 தெசலோனிக்கேயர் 2 : 12 (RCTA)
தம் அரசுக்கும் மாட்சிமைக்கும் உங்களை அழைக்கும் கடவுளுக்கு ஏற்க வாழுமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டோம். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்ததே.
1 தெசலோனிக்கேயர் 2 : 13 (RCTA)
நாங்கள் அறிவித்த கடவுளுடைய வார்த்தையை நீங்கள் பெற்றுக்கொண்டபோது அதை மனித வார்த்தையாக ஏற்றுக்கொள்ள வில்லை; கடவுள் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள். இதற்காக இடைவிடாது கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். உள்ளபடியே அது கடவுளுடைய வார்த்தைதான். அதுவே விசுவசிக்கும் உங்களுக்குள் செயலாற்றுகிறது.
1 தெசலோனிக்கேயர் 2 : 14 (RCTA)
சகோதரர்களே, யூதேயாவில் கிறிஸ்து இயேசுவுக்குள் வாழும் இறைமக்களின் சபைகளுக்கு நேர்ந்ததுபோலவே உங்களுக்கும் நேர்ந்தது. யூதர்களால் அவர்கள் துன்பங்களுக்கு ஆளானதுபோல் நீங்களும் உங்கள் சொந்த இனத்தாராலே அதே துன்பங்களுக்கு ஆளானீர்கள்.
1 தெசலோனிக்கேயர் 2 : 15 (RCTA)
அந்த யூதர்களே ஆண்டவராகிய இயேசுவையும் இறைவாக்கினர்களையும் கொலை செய்தார்கள். எங்களையும் துன்புறுத்தினார்கள். அவர்கள் கடவுளுக்கு ஆகாதவர்கள், மனுக்குலத்துக்கும் எதிரிகள்.
1 தெசலோனிக்கேயர் 2 : 16 (RCTA)
ஏனெனில், புறவினத்தார் மீட்ப்பு ¢ பெறும்படி நாங்கள் அவர்களிடம் பேசுவதையும் தடுக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் எப்பொழுதும் தங்கள் பாவங்களின் அளவை நிரப்புகிறார்கள். இறுதியாய் இறைவனின் சினம் இதோ அவர்கள்மேல் வந்துவிட்டது.
1 தெசலோனிக்கேயர் 2 : 17 (RCTA)
சகோதரர்களே, சிறிதுகாலம் உங்களை விட்டுப் பிரிந்து தவித்தோம் - உடலால் மட்டுமே பிரிந்திருந்தோம். உள்ளத்தால் பிரிந்திருக்கவில்லை - உங்கள் முகத்தைப் பார்க்க மிக்க ஆவலாய் ஏங்கி இருந்தோம்.
1 தெசலோனிக்கேயர் 2 : 18 (RCTA)
உங்களிடம் வரவிரும்பினோம். அதுவும் பல தடவைகளில் சின்னப்பன் நான் உங்களிடம் வர எண்ணங்கொண்டேன். ஆனால் சாத்தான் எங்களைத் தடுத்துவிட்டான்.
1 தெசலோனிக்கேயர் 2 : 19 (RCTA)
நம் ஆண்டவராகிய இயேசுவின் வருகையின்போது, நாம் அவர் திருமுன் நிற்கையில் எங்களுக்கு நம்பிக்கையோ, மகிழ்ச்சியோ, பெருமைக்குரிய வெற்றி வகையோ உங்களைத் தவிர வேறு உண்டோ?
1 தெசலோனிக்கேயர் 2 : 20 (RCTA)
நீங்களே எங்கள் மகிமை; நீங்களே எங்கள் மகிழ்ச்சி.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20