1 தெசலோனிக்கேயர் 1 : 1 (RCTA)
பரம தந்தையாகிய கடவுளுக்குள்ளும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளும் வாழ்கின்ற தெசலோனிக்கேய மக்களின் சபைக்கு, சின்னப்பனும் சில்வானும் தீமோத்தேயுவும் எழுதுவது: உங்களுக்கு அருளும் சமாதானமும் உண்டாகுக!
1 தெசலோனிக்கேயர் 1 : 2 (RCTA)
எங்கள் செபங்களில் உங்களைக் குறிப்பிட்டு உங்கள் அனைவரையும் நினைத்துக் கடவுளுக்கு என்றும் நன்றி கூறுகிறோம்.
1 தெசலோனிக்கேயர் 1 : 3 (RCTA)
நீங்கள் விசுவாசத்தால் ஆற்றிய செயல்களையும், அன்பினால் மேற்கொண்ட உழைப்பையும், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் கொண்ட மன உறுதியையும், நம் கடவுளும் தந்தையுமானவர் திருமுன் இடைவிடாமல் நினைவுகூருகிறோம்.
1 தெசலோனிக்கேயர் 1 : 4 (RCTA)
கடவுளால் அன்பு செய்யப்படும் சகோதரர்களே, அவர் உங்களைத் தேர்ந்துகொண்டுள்ளார் என்பதை நாங்கள் அறிவோம்.
1 தெசலோனிக்கேயர் 1 : 5 (RCTA)
நாங்கள் நற்செய்தியை வெறும் வார்த்தையில் மட்டும் உங்களுக்குக் கொண்டுவரவில்லை; பரிசுத்த ஆவி தரும் ஆற்றலோடும், அசையா உள்ளத்துறுதியோடும் கொண்டு, வந்தோம். உங்கள் நன்மைக்காக நாங்கள் உங்களிடையே எப்படி நடந்துகொண்டோம் என்பது தெரிந்ததே.
1 தெசலோனிக்கேயர் 1 : 6 (RCTA)
மிகுந்த வேதனை உண்டான போதிலும் பரிசுத்த ஆவி அளிக்கும் மகிழ்ச்சியோடு தேவ வார்த்தையை ஏற்று எங்களைப் போலவும் ஆண்டவரைப் போலவும் நடப்பவர்களானீர்கள்.
1 தெசலோனிக்கேயர் 1 : 7 (RCTA)
இங்ஙனம் மக்கெதோனியாவிலும் அக்காயாவிலும் உள்ள விசுவாசிகள் அனைவருக்கும் முன்மாதிரியாய் விளங்கினீர்கள்.
1 தெசலோனிக்கேயர் 1 : 8 (RCTA)
ஆண்டவருடைய வார்த்தை உங்கள் நகரிலிருந்து எழுந்து ஒலித்தது. கடவுள் மேல் உங்களுக்குள்ள விசுவாசம் மக்கெதோனியாவுக்கும் அக்காயாவுக்கும் மட்டுமன்று, எங்குமே எட்டியுள்ளது. உங்கள் விசுவாசத்தைப் பற்றி நாங்கள் எடுத்துச் சொல்லத் தேவையே இல்லை.
1 தெசலோனிக்கேயர் 1 : 9 (RCTA)
நீங்கள் எங்களை எவ்வாறு வரவேற்றீர்கள் என்றும், உண்மையும் உயிருமுள்ள கடவுளுக்கு ஊழியம் செய்வதற்காக, எவ்வாறு தெய்வங்களின் சிலைகளை விட்டுவிட்டுக் கடவுளிடம் திரும்பினீர்கள் என்றும் மக்களே எடுத்துக் கூறுகின்றனர்.
1 தெசலோனிக்கேயர் 1 : 10 (RCTA)
கடவுளிடம் திரும்பிய நீங்கள் வானினின்று வரும் அவர் மகனுக்காகக் காத்திருக்கிறீர்கள். இறந்தோரினின்று இறைவன் உயிர்ப்பித்த இந்த இயேசு வரப்போகும் சினத்தினின்று நம்மை மீட்பவர்.
❮
❯