1 சாமுவேல் 8 : 1 (RCTA)
பின்னர் நிகழ்ந்ததாவது: சாமுவேல் முதியவரானபோது தம் புதல்வர்களை இஸ்ராயலுக்கு நீதிபதிகளாக நியமித்தார்.
1 சாமுவேல் 8 : 2 (RCTA)
பெர்சபேயில் நீதிபதிகளான அவருடைய மூத்த மகனின் பெயர், ஜோயேல், இரண்டாவது மகனின் பெயர் அபியா.
1 சாமுவேல் 8 : 3 (RCTA)
அவர் சென்ற வழியிலே அவருடைய புதல்வர்கள் செல்லவில்லை; பண ஆசைகொண்டு, கையூட்டுகளைப் பெற்றுக் கொண்டு நியாயத்தைத் திரித்துக் கூறினார்கள்.
1 சாமுவேல் 8 : 4 (RCTA)
அப்போது இஸ்ராயேலின் முதியோர் அனைவரும் ஒன்று கூடி ராமாத்தாவில் இருந்த சாமுவேலிடம் வந்தனர்.
1 சாமுவேல் 8 : 5 (RCTA)
அவரை நோக்கி "இதோ நீர் முதியவரானீர். உம் மக்கள் நீர் நடந்த வழியில் நடக்கிறதில்லை; எமக்கு நீதி வழங்க, மற்ற நாடுகளுக்கெல்லாம் இருப்பது போல் எங்களுக்கும் ஓர் அசரனை ஏற்படுத்தும்" என்று சொன்னார்கள்.
1 சாமுவேல் 8 : 6 (RCTA)
'நீதி வழங்க ஓர் அரசனை எங்களுக்குக் கொடும்' என்ற அவர்களின் முறையீடு சாமுவேலுக்குப் பிடிக்கவில்லை. சாமுவேல் ஆண்டவரை மன்றாடினார்.
1 சாமுவேல் 8 : 7 (RCTA)
ஆண்டவர் சாமுவேலை நோக்கி, "மக்கள் உன்னிடம் சொல்வதை எல்லாம் கேள். உன்னை அவர்கள் புறக்கணித்து விடவில்லை; நாம் அவர்களை ஆளவிடாதபடி நம்மைத்தான் புறக்கணித்து விட்டார்கள்.
1 சாமுவேல் 8 : 8 (RCTA)
அவர்களை நாம் எகிப்து நாட்டினின்று மீட்ட நாள் முதல் இன்று வரை அவர்கள் செய்த செயல்கள் எல்லாம் இப்படித்தான். நம்மை விட்டு அன்னிய தெய்வங்களை வழிபடுவது போல உனக்கும் செய்கிறார்கள்.
1 சாமுவேல் 8 : 9 (RCTA)
இப்போது அவர்கள் சொல்லுக்குச் செவிகொடு: ஆயினும், அவர்களுடன் விவாதித்து அவர்களை ஆளப்போகிற அரசனின் உரிமையை அவர்களுக்கு முன்னறிவி" என்றார்.
1 சாமுவேல் 8 : 10 (RCTA)
எனவே ஆண்டவர் கூறியவற்றை எல்லாம் சாமுவேல் தங்களுக்கு அரசன் வேண்டுமென்று கோரிய மக்களிடம் கூறினார்.
1 சாமுவேல் 8 : 11 (RCTA)
மீண்டும், "உங்களை ஆளப்போகிற அரசனின் உரிமை இதோ. அவன் உங்கள் பிள்ளைகளை எடுத்துத் தன் தேர்களை ஓட்ட வைத்துக் கொள்வான்; தனக்குக் குதிரை வீரர்களாகவும், தன் நான்கு குதிரைத் தேருக்கு முன் ஓடுகிறவர்களாகவும் செய்வான்.
1 சாமுவேல் 8 : 12 (RCTA)
அவன் அவர்களை ஆயிரம்பேருக்கும் நூறுபேருக்கும் தலைவர்களாகவும், தன் நிலங்களை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், ஆயுதங்கள், தேர்கள் செய்கிறவர்களாகவும் ஏற்படுத்துவான்.
1 சாமுவேல் 8 : 13 (RCTA)
உங்கள் புதல்விகளையோ தனக்குப் பரிமளக்காரிகளாகவும் சமையற்காரிகளாகவும் உரொட்டி செய்கிறவர்களாகவும் வைத்துக் கொள்வான்.
1 சாமுவேல் 8 : 14 (RCTA)
மேலும் உங்கள் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையம், ஒலிவ மரங்களில் நல்லவற்றையும் எடுத்துக் கொண்டு தம் ஊழியர்களுக்குக் கொடுப்பான்.
1 சாமுவேல் 8 : 15 (RCTA)
தன் அண்ணகர்களுக்கும் ஊழியர்களுக்கும் கொடுக்கும் பொருட்டு, உங்கள் விளைச்சல்களிலும் திராட்சைத் தோட்டங்களிலும் பத்தில் ஒரு பங்கு கேட்பான்.
1 சாமுவேல் 8 : 16 (RCTA)
உங்கள் வேலைக்காரர் வேலைக்காரிகளையும், நல்ல இளைஞர்களையும் கழுதைகளையும் தன் வேலைக்கு வைத்துக்கொள்வான்.
1 சாமுவேல் 8 : 17 (RCTA)
உங்கள் மந்தைகளிலே பத்தில் ஒரு பங்கு எடுத்துக் கொள்வான்; நீங்கள் அவனுக்கு ஊழியர்களாய் இருப்பீர்கள்.
1 சாமுவேல் 8 : 18 (RCTA)
நீங்களே தேர்ந்து கொண்ட உங்கள் அரசனுக்கு எதிராய் நீங்கள் முறையிடும் நாள் வரும். ஆனால், நீங்களே அரசனை விரும்பினதால் ஆண்டவர் அந்நாளில் உங்களுக்குச் செவிகொடுக்க மாட்டார்" என்றார்.
1 சாமுவேல் 8 : 19 (RCTA)
மக்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனமின்றி, "அப்படியன்று; எங்களுக்கு ஓர் அரசன் இருக்கத்தான் வேண்டும்" என்றனர்.
1 சாமுவேல் 8 : 20 (RCTA)
எல்லா இனத்தையும் போல நாங்களும் இருப்போம்; எங்கள் அரசன் எங்களுக்கு நீதி வழங்குவான்; எங்களுக்கு முன் சென்று எங்கள் பொருட்டுப் போரிடுவான்" என்றனர்.
1 சாமுவேல் 8 : 21 (RCTA)
சாமுவேல் மக்கள் கூறியவற்றை எல்லாம் கேட்டு அவற்றை ஆண்டவருக்குத் தெரியப்படுத்தினார்.
1 சாமுவேல் 8 : 22 (RCTA)
ஆண்டவர் சாமுவேலை நோக்கி, "நீ அவர்கள் சொல்லைக்கேட்டு அவர்களுக்கு ஓர் அரசனை ஏற்படுத்து" என்றார். அப்போது சாமுவேல் மக்களைப் பார்த்து, "அனைவரும் தத்தம் நகருக்குச் செல்லலாம்" என்று கூறினார்.
❮
❯