1 சாமுவேல் 4 : 1 (RCTA)
அந்நாட்களில் நிகழ்ந்ததாவது: பிலிஸ்தியர் போரிட ஒன்றுதிரண்டனர். இஸ்ராயேலர் பிலிஸ்தியரோடு போருக்குப் புறப்பட்டு, சனுகுப் பாறைக்கு அருகில் பாசறை அமைத்தனர். பிலிஸ்தியரோ அபேக் என்ற இடத்திற்கு வந்து,
1 சாமுவேல் 4 : 2 (RCTA)
இஸ்ராயலேருக்கு எதிராகப் போருக்கு அணிவகுத்து நின்றனர். போர் தொடங்கவே, இஸ்ராயேலர் பிலிஸ்தியருக்குப் புறங்காட்டி ஓடினார். அப்போரில் அங்குமிங்கும், நிலங்களிலும் ஏறக்குறைய நாலாயிரம் பேர் வெட்டுண்டு மாண்டனர்.
1 சாமுவேல் 4 : 3 (RCTA)
மக்கள் பாளையத்திற்குத் திரும்பி வந்தனர். அப்போது இஸ்ராயலேருக்குள் வயதில் முதிர்ந்தோர், "ஆண்டவர் பிலிஸ்தியருக்கு முன் இன்று நம்மை ஏன் தண்டித்தார்? ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டியைச் சீலோவிலிருந்து நம்மிடம் கொண்டு வருவோமாக. நம் எதிரிகளின் கையினின்று நம்மை மீட்க நமது நடுவில் அது வருவதாக" என்றனர்.
1 சாமுவேல் 4 : 4 (RCTA)
மக்கள் சீலோவுக்கு ஆட்களை அனுப்பினர்; அங்கிருந்து கெரூபிம் மேல் அமர்ந்திருக்கும் சேனைகளின் ஆண்டவருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வந்தனர். கடவுளின் உடன்படிக்கைப் பெட்டியோடு ஏலியின் புதல்வர் ஒப்னி, பினேசு இருவரும் இருந்தனர்.
1 சாமுவேல் 4 : 5 (RCTA)
ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டி பாளையத்திற்கு வந்த போது இஸ்ராயேலர் அனைவரும் நிலம் அதிர ஆர்ப்பரித்தனர்.
1 சாமுவேல் 4 : 6 (RCTA)
பிலிஸ்தியர் இப்பெரும் கூச்சலைக் கேட்டு, "எபிரேயர் பாளையத்தில் இப்பெரிய ஆரவாரத்திற்குக் காரணம் என்ன?" என்று சொல்லிக் கொண்டனர். ஆண்டவரின் பேழை பாளையத்தில் வந்திருந்ததாகப் பிறகு அறிந்து கொண்டனர்.
1 சாமுவேல் 4 : 7 (RCTA)
பிலிஸ்தியர் அஞ்சி, "கடவுள் பாளையத்திற்கு வந்துவிட்டார்" என்று சொல்லிக் கொண்டனர். மேலும், அவர்கள் பெருமூச்சு விட்டு,
1 சாமுவேல் 4 : 8 (RCTA)
"நமக்குக் கேடு வந்துற்றது! நேற்றும் முந்தாநாளும் இத்தனை மகிழ்ச்சி இருந்ததில்லையே! இத்தனை வல்லபமுள்ள கடவுள்களின் கைகளினின்று நம்மை மீட்பவன் யார்? பாலைவனத்தில் எகிப்து நாடு முழுவதையும் வதைத்த கடவுள் அவரே1
1 சாமுவேல் 4 : 9 (RCTA)
7294 626 9 4 9 பிலிஸ்தியரே, திடம்கொண்டு ஆண்மையுள்ளவர்களாய் இருங்கள்; எபிரேயர் உங்களுக்கு அடிமைகளாய் இருந்ததுபோல் நீங்கள் அவர்களுக்கு அடிமைகளாய் இராதீர்கள். திடம் கொண்டு போரிடுங்கள் என்றனர்."
1 சாமுவேல் 4 : 10 (RCTA)
பிலிஸ்தியர் போரிட்டனர். இஸ்ராயேலர் தோல்வி அடைந்தனர். அனைவருமே தத்தம் கூடாரங்களுக்கு ஓடிப்போயினர். அப்போது கணக்கற்ற பேர் கொல்லப்பட்டனர்; இஸ்ராயேரில் முப்பதாயிரம் காலாட் படையினர் மடிந்தனர்.
1 சாமுவேல் 4 : 11 (RCTA)
கடவுளின் பேழையும் பிடிப்பட்டது. ஏலியின் புதல்வர்களாகிய ஒப்னியும் பினேசும் மாண்டனர்.
1 சாமுவேல் 4 : 12 (RCTA)
பெஞ்சமின் கோத்திரத்தான் ஒருவன் கிழிந்த சட்டைகளை உடுத்தியவனாயும், தலையில் புழுதி படிந்தவனாயும் அன்றே சீலோவுக்கு ஓடிவந்தான்.
1 சாமுவேல் 4 : 13 (RCTA)
அவன் வரும்போது ஏலி தன் இருக்கையில் அமர்ந்து வழியைப் பார்த்துக் கொண்டிருந்தார். கடவுளின் பேழையைப்பற்றி அவர் உள்ளத்தை அச்சம் ஆட்கொண்டிருந்தது. அம்மனிதன் நகரில் நுழைந்தபின் நடந்த போரைப்பற்றிக் கூறினான்; நகர் முழுவதும் புலம்பி அழுதது.
1 சாமுவேல் 4 : 14 (RCTA)
ஏலி அழுகைக் குரலைக் கேட்டு, "இத்தனை பெரிய கூக்குரல் ஏன்?" என்றார். அப்போது அம்மனிதன் விரைந்து வந்து ஏலிக்குச் செய்தியைக் கூறினான்.
1 சாமுவேல் 4 : 15 (RCTA)
ஏலிக்கு அப்போது தொண்ணுற்றெட்டு வயது. பார்வை மங்கிப் போனதால் அவரால் பார்க்க முடியவில்லை.
1 சாமுவேல் 4 : 16 (RCTA)
போரினின்று வந்தவன் நானே; இன்று படையினின்று ஓடிவந்தவன் நானே என்று அம்மனிதன் ஏலிக்குச் சொன்னான். "மகனே, என்ன நடந்தது?" என்று ஏலி அவனைக் கேட்டார்.
1 சாமுவேல் 4 : 17 (RCTA)
செய்தி தெரிவிக்க வந்தவன் மறு மொழியாக, "பிலிஸ்தியருக்குப் புறமுதுகு காட்டி இஸ்ராயேலர் ஓடிப்போனார்கள்; மக்களில் பலர் மாண்டுபோனார்கள். மிகவும் வருத்தத்தைக் கொடுக்கும் நிகழ்ச்சி என்னவென்றால், உம் இரு புதல்வர்களாகிய ஒப்னியும் பினேசும் இறந்து பட்டனர்; கடவுளின் பேழை பிடிபட்டுவிட்டது" என்றான்.
1 சாமுவேல் 4 : 18 (RCTA)
கடவுளின் பேழை என்ற சொல்லை அவன் சொன்னவுடனே, ஏலி இருக்கையினின்று கதவு அருகே மல்லாக்க விழுந்து தலை உடைய உயிர் நீத்தார். இவர் முதிர்ந்த வயதினர்; இஸ்ராயேலருக்கு நாற்பது ஆண்டுகளாக நீதி வழங்கி வந்தவர்.
1 சாமுவேல் 4 : 19 (RCTA)
அவருடைய மருமகளாகிய பினேசின் மனைவி கருவுற்றிருந்தாள்; பேறுகாலம் நெருங்கியிருந்தது; கடவுளின் பேழை பிடிபட்டதையும், தன் மாமனாரும் கணவனும் இறந்துபட்டதையும் கேள்விப்பட்டவுடனே திடீரென்று அவளுக்கு வேதனைகள் உண்டாகக் குனிந்து ஒரு மகவை ஈன்றெடுத்தாள்.
1 சாமுவேல் 4 : 20 (RCTA)
அவள் சாகும் தறுவாயில் அவள் அருகில் இருந்தவர்கள், "அஞ்சாதே, நீ ஒரு மகனைப் பெற்றாய்" என்றனர். அவள் அதைக் கவனிக்கவுமில்லை; மறுமொழி சொல்லவுமில்லை.
1 சாமுவேல் 4 : 21 (RCTA)
கடவுளின் பேழை பிடிபட்டுத் தன் மாமனாரும் கணவனும் இறந்து போனதால் இஸ்ராயேலரை விட்டுப் புகழ் நீங்கினது என்று சொல்லி, தன் குழந்தைக்கு இகாபோத் என்று பெயரிட்டாள்.
1 சாமுவேல் 4 : 22 (RCTA)
கடவுளின் பேழை பிடிபட்டதால் இஸ்ராயேலரை விட்டுப் புகழ் நீங்கினது" என்று சொன்னாள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

BG:

Opacity:

Color:


Size:


Font: