1 சாமுவேல் 30 : 1 (RCTA)
தாவீதும் அவனுடைய மனிதர்களும் மூன்றாம் நாள் சிசெலேக்கை அடைந்த பொழுது, அமலேக்கியர் நாட்டின் தென்பகுதிக்கு வந்து சிசெலேக்கைப் பிடித்து அதைத் தீக்கிரையாக்கினர்.
1 சாமுவேல் 30 : 2 (RCTA)
அதிலிருந்த பெண்கள், சிறியோர், பெரியோர் அனைவரையும் சிறைப்படுத்தி ஒருவரையும் கொன்று போடாமல் எல்லாரையும் கூட்டிக் கொண்டு தங்கள் வழியே போய்விட்டார்கள்.
1 சாமுவேல் 30 : 3 (RCTA)
தாவீதும் அவனுடைய மனிதர்களும் அந்த ஊருக்கு வந்தபோது அது நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டிருப்பதையும், தங்கள் மனைவியரும், புதல்வர் புதல்வியரும் சிறைப்பட்டிருப்பதையும் கண்டனர்.
1 சாமுவேல் 30 : 4 (RCTA)
எனவே தாவீதும் அவனுடனிருந்த மக்களும் அழக் கண்ணீர் அற்றுப் போகும் வரை ஓலமிட்டு அழுதனர்.
1 சாமுவேல் 30 : 5 (RCTA)
ஜெஸ்ராயேலைச் சேர்ந்த அக்கினோவாளும் கார்மேலைச் சேர்ந்த நாபாலின் மனைவி அபிகாயிலுமான தாவீதினுடைய இரு மனைவியரும் சிறைப் பிடிக்கப்பட்டிருந்தனர்.
1 சாமுவேல் 30 : 6 (RCTA)
எனவே தாவீது மிகவும் வருந்தினான். எல்லா மக்களும் தங்கள் புதல்வர் புதல்வியர் பொருட்டு மிகவும் துயருற்றதால், அவனைக் கல்லால் எறிய வேண்டும் என்று இருந்தனர். ஆனால் தாவீது தன் கடவுளாகிய ஆண்டவரிடத்தில் நம்பிக்கை வைத்துத் திடம் கொண்டிருந்தான்.
1 சாமுவேல் 30 : 7 (RCTA)
அவன் அக்கிமெலேக்கின் மகனும் குருவுமான அபியாத்தாரை நோக்கி, "எபோதை என்னிடம் கொண்டு வாரும்" என்றான். அபியாத்தார் எபோதைத் தாவீதிடம் கொண்டு வந்தார்.
1 சாமுவேல் 30 : 8 (RCTA)
தாவீது ஆண்டவரை நோக்கி, "அந்தக் கள்ளர்களைப் பின் தொடர வேண்டுமா? நான் அவர்களைப் பிடிப்பேனா?" என்று கேட்டான். அதற்கு அவர், "பின் தொடர்ந்து போ; ஐயமின்றி நீ அவர்களைப் பிடித்துக் கொள்ளைப் பொருட்களை திருப்பிக் கொள்வாய்" என்றார்.
1 சாமுவேல் 30 : 9 (RCTA)
தாவீதும் அவனுடன் இருந்த அறுநூறு மனிதர்களும் புறப்பட்டுப் பேசோர் ஓடைக்கு வந்து சேர்ந்தனர்; சிலர் களைப்படைந்து அங்கேயே தங்கி விட்டனர்.
1 சாமுவேல் 30 : 10 (RCTA)
தாவீதோ நானூறு பேர்களோடு அவர்களைத் தொடர்ந்து போனான். ஏனெனில் பின்தங்கின இருநூறு பேரும் களைப்புற்று இருந்ததால், பேசோர் ஆற்றை அவர்களால் கடக்க முடியவில்லை.
1 சாமுவேல் 30 : 11 (RCTA)
அவர்கள் எகிப்தியன் ஒருவனை வழியில் கண்டு அவனைத் தாவீதிடம் கூட்டி வந்தனர். அவனுக்குச் சாப்பிட அப்பத்தையும் குடிக்க நீரையும்,
1 சாமுவேல் 30 : 12 (RCTA)
மிஞ்சின அத்திப் பழங்களையும் வற்றலான இரண்டு திராட்சைப் பழக் குலைகளையும் கொடுத்தனர். அவற்றை அவன் சாப்பிட்ட பின் புத்துயிர் பெற்றான். ஏனெனில் இரவு பகல் மூன்று நாளாய் அவன் சாப்பிடாமலும் குடியாமலும் இருந்தான்.
1 சாமுவேல் 30 : 13 (RCTA)
பிறகு தாவீது அவனை நோக்கி, "நீ யாரைச் சேர்ந்தவன்? எங்கிருந்து வருகிறாய்? எங்குப் போகிறாய்?" என்று கேட்டான். அதற்கு அவன், "நான் எகிப்திய இளைஞன். ஓர் அமலேக்கிய மனிதனுடைய வேலைக்காரன். முந்தா நாள் நான் நோய்வாய்ப்பட்டபோது என் தலைவன் என்னைக் கைவிட்டுவிட்டான்.
1 சாமுவேல் 30 : 14 (RCTA)
நாங்கள்தான் கேரேத்துக்குத் தென் நாட்டின் மேலும், யூதாவின் மேலும், காலேபுக்குத் தென் புறத்தின் மேலும் படையெடுத்துச் சிசெலேக்கைத் தீக்கிரையாக்கினோம்" என்றான்.
1 சாமுவேல் 30 : 15 (RCTA)
தாவீது அவனைப் பார்த்து, "அந்த கூட்டத்தினரிடம் என்னைக் கூட்டிக் கொண்டு போக உன்னால் கூடுமா ?" என்று கேட்டான். அதற்கு அவன், "நீர் என்னைக் கொல்லுவதில்லை என்றும், என் தலைவன் கையில் ஒப்படைப்பதில்லை என்றும் கடவுள் பெயரால் ஆணையிடும்: அப்பொழுது நான் உம்மை அக்கூட்டத்தினரிடம் கூட்டிக் கொண்டு போவேன்" என்றான். தாவீதும் அப்படியே ஆணையிட்டான்.
1 சாமுவேல் 30 : 16 (RCTA)
அவன் தாவீதை அங்குக் கூட்டிச் சென்றபோது, அம்மக்கள் வெளியில் எங்கும் அமர்ந்து உண்டு குடித்து, பிலிஸ்தியர் நாட்டிலும் யூதா நாட்டிலுமிருந்து எடுத்து வந்திருந்த கொள்ளைப் பொருட்களுக்காக ஒரு திருவிழாவைப் போல் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
1 சாமுவேல் 30 : 17 (RCTA)
தாவீது அன்று மாலை தொடங்கி மறுநாள் மாலை வரை அவர்களை முறியடித்தான். ஓட்டகங்கள் மேல் ஏறி ஓடிப் போன நானூறு இளைஞர்களைத் தவிர அவர்களில் வேறு ஒருவனும் தப்பவில்லை.
1 சாமுவேல் 30 : 18 (RCTA)
தாவீது அமலேக்கியர் எடுத்துச் சென்றிருந்தவற்றை எல்லாம் மீட்டான். தன் இரு மனைவியரையும் விடுவித்தான்.
1 சாமுவேல் 30 : 19 (RCTA)
அவர்கள் கொள்ளையிட்டு வந்த எல்லாவற்றிலும் சிறியதும் பெரியதும், புதல்வரும் புதல்வியரும், பறிபொருள் முழுவதும், இன்னும் அவர்கள் கொள்ளையிட்டிருந்த அனைத்தும் ஒன்றும் குறையாமல் மீட்கப்பட்டன. அவை எல்லாவற்றையும் தாவீது திருப்பிக் கொண்டு வந்தான்.
1 சாமுவேல் 30 : 20 (RCTA)
அவன் ஆடுமாடு முதலிய கால்நடைகளை எல்லாம் பிடித்து தனக்கு முன் அவற்றை ஓட்டிச் சென்றான். 'இது தாவீதின் கொள்ளைப் பொருள்' என்று மக்கள் சொல்லிக் கொண்டனர்.
1 சாமுவேல் 30 : 21 (RCTA)
களைத்துச் சோர்ந்து போனதினால் தாவீதைப் பின் தொடர முடியாது அவன் கட்டளையிட்ட படி பேசோர் ஓடை அருகே தங்கியிருந்த இருநூறு மனிதர்களிடம் தாவீது வந்தபோது, இவர்கள் அவனையும் அவனுடன் இருந்த மக்களையும் எதிர்கொண்டு வந்தார்கள். தாவீது அவர்களை அணுகி அவர்களோடு சமாதான வாழ்த்துக் கூறினான்.
1 சாமுவேல் 30 : 22 (RCTA)
ஆனால் தாவீதைப் பின் தொடர்ந்து வந்த மனிதர்களில், ஒழுக்கமற்றவர்களும் கயவர்களுமாய் இருந்தவர்கள், "அவர்கள் எங்களுடன் வராததால் நாங்கள் திருப்பிக் கொண்டு வந்த கொள்ளைப் பொருட்களில் ஒன்று கொடுக்கமாட்டோம். அவர்களில் ஒவ்வொருவனும் தம்தம் மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு போவது போதும்" என்றனர்.
1 சாமுவேல் 30 : 23 (RCTA)
அதற்கு தாவீது, "என் சகோதரரே, ஆண்டவர் நம்மைக் காப்பாற்றி, நம்மீது பாய்ந்து தாக்கிய அந்தத் திருடர்களை நமது கையில் ஒப்படைத்தாரே. ஆண்டவர் நமக்குக் கொடுத்துள்ளவற்றைப்பற்றி இப்படிச் செய்ய வேண்டாம்.
1 சாமுவேல் 30 : 24 (RCTA)
இது காரியத்தில் உங்கள் சொல்லைக் கேட்க யாரும் சம்மதிக்க மாட்டார்கள். போருக்குப் போனவர்களுக்கும், தட்டுமுட்டு முதலிய பொருட்களைக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் வேறுபாடு இன்றி எல்லாருக்கும் சமமான பங்கு கிடைக்கும்" என்றான்.
1 சாமுவேல் 30 : 25 (RCTA)
ஏனெனில், பண்டு தொட்டு அப்படியே நடந்து வந்தது. அது இந்நாள் வரை இஸ்ராயேலருக்குள் ஒரு சட்டமும் கட்டளையுமாக ஏற்பட்டு நிலைபெற்றுள்ள மாமூல்.
1 சாமுவேல் 30 : 26 (RCTA)
தாவீது சிசெலேக்குக்கு வந்தபோது தான் கொள்ளையடித்திருந்த பொருட்களில் சிலவற்றை எடுத்துத் தன் உறவினர்களாகிய யூதாவின் மூப்பர்களுக்கு அனுப்பி, "ஆண்டவருடைய எதிரிகளிடமிருந்து கொள்ளையடித்த பொருட்களில் ஒரு பகுதியை உங்களுக்கு என் அன்பளிப்பாக அனுப்பி வைக்கிறேன்" என்று சொல்லச் சொன்னான்.
1 சாமுவேல் 30 : 27 (RCTA)
மேலும், பேத்தலில் இருந்தவர்களுக்கும், தெற்கே ராமாத்தாவில் இருந்தவர்களுக்கும், ஜேத்தேரில் இருந்தவர்களுக்கும்,
1 சாமுவேல் 30 : 28 (RCTA)
அரோயேரில் இருந்தவர்களுக்கும், செப்பாமோத்தில் இருந்தவர்களுக்கும், எஸ்தாமோவில் இருந்தவர்களுக்கும்,
1 சாமுவேல் 30 : 29 (RCTA)
இராக்காலில் இருந்தவர்களுக்கும், ஜெராமேயேல் நகர்களில் இருந்தவர்களுக்கும், சேனி நகர்களில் இருந்தவர்களுக்கும்,
1 சாமுவேல் 30 : 30 (RCTA)
அராமாவில் இருந்தவர்களுக்கும், ஆசான் ஏரியண்டை இருந்தவர்களுக்கும், அத்தாக்கில் இருந்தவர்களுக்கும்,
1 சாமுவேல் 30 : 31 (RCTA)
எபிரோனில் இருந்தவர்களுக்கும், தாவீதும் அவனுடைய மனிதர்களும் வாழ்ந்து வந்த இடங்களில் இருந்த மற்றவர்களுக்கும் (அவன் அவ்விதமே பரிசுகளை அனுப்பி வைத்தான்).

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31

BG:

Opacity:

Color:


Size:


Font: