1 சாமுவேல் 2 : 1 (RCTA)
ஆண்டவரிடத்தில் என் இதயம் அக்களிக்கின்றது. என் ஆண்டவரால் என் ஆற்றல் உயர்வடைந்துள்ளது. என் பகைவர்க்கு எதிராக என் வாய் திறக்கப்பட்டது; ஏனெனில் உமது மீட்பினால் நான் அகமகிழ்ந்தேன்.
1 சாமுவேல் 2 : 2 (RCTA)
ஆண்டவரைப்போல தூயவர் இல்லை; உம்மையன்றி வேறு ஒருவரும் இல்லை; நம் கடவுளுக்கு இணையான வல்லமை உள்ளவரும் இல்லை;
1 சாமுவேல் 2 : 3 (RCTA)
மாட்சிமைப்படுத்திக் கொண்டு மேன்மையானவற்றைப்பற்றி நீங்கள் அதிகம் பேச வேண்டாம். பழையன உங்கள் செவியினின்று அகலட்டும். ஏனெனில் ஆண்டவர் அனைத்தையும் அறிந்த இறைவன். எண்ணங்கள் எல்லாம் அவருக்குத் தெரிந்திருக்கின்றன.
1 சாமுவேல் 2 : 4 (RCTA)
வலியோரின் வில் முறிந்து போனது; வலிமையற்றோர் வலிமையுற்றனர்.
1 சாமுவேல் 2 : 5 (RCTA)
முன்பு நிறைவு கொண்டிருந்தவர்கள் உணவிற்காகக் கூலிக்கு அமர்ந்தனர்; பசித்திருந்தவர்களோ பசி தீர்ந்தனர். மலடி பல மக்களைப் பெற்றாள்; பல பிள்ளைகளைப் பெற்றவளோ பலவீனமுற்றாள்.
1 சாமுவேல் 2 : 6 (RCTA)
ஆண்டவர் உயிரைப் பறிக்கிறார்; உயிரைக் கொடுக்கிறார். பாதாளங்களுக்குக் கொண்டு போகிறார்; அதினின்று மீண்டும் கொண்டு வருகிறார்.
1 சாமுவேல் 2 : 7 (RCTA)
ஆண்டவர் எளியவனாக்குகிறார்; செல்வராக்குகிறார். தாழ்த்துகிறார்; திரும்பவும் உயர்த்துகிறார்.
1 சாமுவேல் 2 : 8 (RCTA)
பெருமக்களுடன் அமர்ந்து புகழ் அரியனை ஏற ஏழையைத் தூசியினின்றும், எளியோனைக் குப்பையினின்றும் உயர்த்துகிறார். பூமியின் அடித்தளங்கள் ஆண்டவருக்குச் சொந்தம், அவற்றின் மேல் உலகை நிறுவினார்.
1 சாமுவேல் 2 : 9 (RCTA)
அவர் தம் புனிதர்களின் பாதங்களைக் காப்பார். தீயவர் இருளில் மௌனமாய் இருப்பர்; ஏனெனில், மனிதன் தன் வலிமையைக் கொண்டு தன்னைத் திடப்படுத்திக் கொள்ளமாட்டான்.
1 சாமுவேல் 2 : 10 (RCTA)
ஆண்டவரின் எதிரிகள் அவருக்கு அஞ்சி நடுங்குவர். அவர் விண்ணிலிருந்து அவர்கள் மேல் இடி இடிக்கச் செய்வார். ஆண்டவர் பூமியின் எல்லைகளைத் தீர்வையிடுவார்; அதன் ஆட்சியைத் தம் அரசனுக்குக் கொடுப்பார். தம் கிறிஸ்துவின் வல்லமையை உயர்த்துவார்."
1 சாமுவேல் 2 : 11 (RCTA)
பின்பு, ஏல்கானா ராமாத்தாவில் உள்ள தன் வீட்டிற்குத் திரும்பிப் போனான். பிள்ளையோ ஆண்டவர் திருமுன் ஏலி என்ற குருவின் முன்னிலையில் ஊழியம் செய்து வந்தான்.
1 சாமுவேல் 2 : 12 (RCTA)
ஆனால் ஏலியின் புதல்வர்கள் ஆண்டவரைப் பொருட்படுத்தாது பெலியாலின் புதல்வர்களாய் இருந்தனர்.
1 சாமுவேல் 2 : 13 (RCTA)
மக்கள்பால் நமக்கு உள்ள கடமைகளைக் குருக்கள் நிறைவேற்றவில்லை. ஆனால் பலியிடும் வேளையில் இறைச்சி வேகும் போது குருவின் ஊழியன் எவனாவது மூன்று பல்லுடைய கொக்கியைக் கைளோடு கொணர்ந்து,
1 சாமுவேல் 2 : 14 (RCTA)
கொப்பறையிலாவது அண்டாவிலாவது பானையிலாவது சட்டியிலாவது விடுவான். கொக்கியில் வருவதை எல்லாம் குரு தமக்கு எடுத்துக்கொள்வார். சீலோவிற்கு வருகிற எல்லா இஸ்ராயேலரிடத்தும் அவர்கள் இவ்வாறே செய்வார்கள்.
1 சாமுவேல் 2 : 15 (RCTA)
பலியின் கொழுப்பை எரிப்பதற்கு முன் குருவின் ஊழியன் வந்து பலியிடுபவனை நோக்கி, "குருவுக்குச் சமைக்க எனக்கு இறைச்சி கொடு, வெந்த இறைச்சியை உன்னிடத்தில் வாங்கமாட்டேன். வேகாததையே வாங்குவேன்" என்பான்.
1 சாமுவேல் 2 : 16 (RCTA)
பலியிடுபவன் அவனுக்கு மறுமொழியாக, "வழக்கப்படி இன்று கொழுப்பு முதலில் எரிந்து போகட்டும்; பிறகு நீ விரும்பும் அளவுக்கு எடுத்துக்கொள்" என்பான். ஊழியன் அவனுக்குப் பதில் மொழியாக, "அப்படியன்று, இப்போதே கொடுத்து விடு; இல்லாவிட்டால் நான் வலுக்கட்டாயமாய் எடுப்பேன்" என்பான்.
1 சாமுவேல் 2 : 17 (RCTA)
இவ்வாறு ஏலியின் புதல்வர்கள் ஆண்டவரின் பலியினின்று மக்களின் மனத்தைக் திருப்பினர். எனவே அவர்களுடைய குற்றம் ஆண்டவருக்கு முன் மிகப் பெரியதாயிருந்தது.
1 சாமுவேல் 2 : 18 (RCTA)
சிறுவன் சாமுவேல் மெல்லிய சணல் நூலால் செய்யப்பட்ட எபோதை உடுத்திக்கொண்டு ஆண்டவர் திரு முன் பணிவிடை செய்வான்.
1 சாமுவேல் 2 : 19 (RCTA)
அவன் தாய் அவனுக்கு ஒரு சிறு அங்கி தைத்து, வழக்கமான பலியைச் செலுத்தும்படி தன் கணவனுடன் தான் போகையில், குறித்த நாட்களில் அதைக் கொண்டு வந்து கொடுப்பாள்.
1 சாமுவேல் 2 : 20 (RCTA)
மேலும் ஏலி, ஏல்கானாவையும் அவன் மனைவியையும் ஆசீர்வதித்து, அவனை நோக்கி, "நீ ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்த இப்பிள்ளைக்காக ஆண்டவர் இப்பெண் மூலம் உனக்கு ஒரு வாரிசைக் கொடுப்பாராக!" என்றார். அவர்களும் தமது இல்லம் ஏகினர்.
1 சாமுவேல் 2 : 21 (RCTA)
ஆகையால் ஆண்டவர் அன்னாவைச் சந்தித்தார். அவள் கருவுற்று மூன்று புதல்வரையும் இரண்டு புதல்விகளையும் பெற்றாள். சிறுவன் சாமுவேல் ஆண்டவர் திருமுன் புகழ்பெற்றான்.
1 சாமுவேல் 2 : 22 (RCTA)
ஆனால் ஏலி முதிர் வயதினரான போது, தம் புதல்வர்கள் இஸ்ராயேலர் அனைவருக்கும் செய்து வந்த அனைத்தையும், கூடார வாயிலைக் காத்துவந்த பெண்களுடன் தகாத உறவு வைத்திருந்ததையும் கேள்விப்பட்டு, அவர்களை நோக்கி,
1 சாமுவேல் 2 : 23 (RCTA)
"எல்லா மக்களிடமிருந்தும் நான் கேள்விப்படும் இப்படிப்பட்ட இழி செயலை ஏன் செய்கிறீர்கள்?"
1 சாமுவேல் 2 : 24 (RCTA)
என் புதல்வரே, அப்படிச் செய்யவேண்டாம்; ஆண்டவரின் மக்கள் அவர் கட்டளையை மீறி நடக்கும்படி நீங்கள் செய்வதாக நான் கேள்விப்படுவது நல்லதன்று.
1 சாமுவேல் 2 : 25 (RCTA)
ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குத் தீமை செய்தால் கடவுள் அவனை மன்னிக்க முடியும்; ஆனால் மனிதன் ஆண்டவருக்கு எதிராகவே தீமை செய்தால் அவனுக்காக மன்றாடுவது யார்? என்றார். அவர்களோ தம் தந்தையின் சொல்லைக் கேட்கவில்லை. அதற்காக ஆண்டவர் அவர்களைக் கொல்லத் திருவுளம் கொண்டார்.
1 சாமுவேல் 2 : 26 (RCTA)
சிறுவன் சாமுவேலோ வளர்ந்து முன்னேறி ஆண்டவருக்கும் மனிதருக்கும் பிரியமானவனாய் இருந்து வந்தான்.
1 சாமுவேல் 2 : 27 (RCTA)
அப்போது கடவுளின் மனிதர் ஒருவர் ஏலியிடம் வந்து அவரை நோக்கி, "ஆண்டவர் சொல்லுவதாவது: 'எகிப்து நாட்டில் பரவோன் வீட்டில் இருந்த போது நாம் உன் தந்தை வீட்டாருக்கு நம்மை வெளிப்படுத்தவில்லையா?
1 சாமுவேல் 2 : 28 (RCTA)
அவர்கள் நமது பலிபீடத்தில் ஏறவும், நமக்குத் தூபம் காட்டவும், நம் முன்னிலையில் எபோதை அணியவும், இஸ்ராயேலின் எல்லாக் கோத்திரங்களுக்குள்ளும் அவர்களைக் குருவாக நாம் தேர்ந்து கொண்டோம். உன் தந்தை வீட்டாருக்கு இஸ்ராயேல் மக்களின் எல்லாப் பலிகளிலும் பங்கு கொடுத்தோம்.
1 சாமுவேல் 2 : 29 (RCTA)
ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கும்படி நாம் கட்டளையிட்டிருந்த எம் பலியையும் காணிக்கைகளையும் நீங்கள் காலால் உதைத்துத் தள்ளியது ஏன்? நம் மக்களாகிய இஸ்ராயேலின் எல்லாப் பலிகளிலும் முந்தினவற்றை நீங்கள் உண்ணும்படி, நம்மை விட உன் பிள்ளைகளை அதிகமாய் மதித்தாயோ?'
1 சாமுவேல் 2 : 30 (RCTA)
ஆகையால் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது: 'உன் வீடும் உன் தந்தை வீடும் என்றென்றும் நமது திருமுன் ஊழியம் செய்யும்படி உறுதியாகக் கூறியிருந்தோம்; இப்போதோ அவ்வாக்கு நம்மை விட்டு அகலக்கடவது. ஆனால் நம்மை மாட்சிப் படுத்துபவனை நாமும் மாட்சிப் படுத்துவோம். நம்மை பழிப்பவர் பழிக்கு ஆளாவர்.
1 சாமுவேல் 2 : 31 (RCTA)
இதோ, நாட்கள் வரும்; உன் வீட்டில் வயது முதிர்ந்தோர் இல்லாதபடி உன் புயத்தையும் உன் தந்தை வீட்டின் புயத்தையும் வெட்டுவோம்;
1 சாமுவேல் 2 : 32 (RCTA)
இஸ்ராயேலர் மேன்மையுற்றிருக்கையில் ஆலயத்தில் உன் பகைவரை நீ பார்ப்பாய்; என்றென்றும் உன் வீட்டில் முதியவர் இரார்.
1 சாமுவேல் 2 : 33 (RCTA)
ஆயினும் உன் கோத்திரத்தில் எல்லாரையும் நம் பீடத்தின்று நீக்கமாட்டோம். ஆனால் உன் கண்களைக் குருடாயும் உன் ஆன்மாவைச் சோர்வுள்ளதாயும் ஆக்குவோம். உன் வீட்டின் பெரும்பாலோர் ஆளாகும் போதே இறந்துபடுவர்;
1 சாமுவேல் 2 : 34 (RCTA)
ஒப்னி, பினேசு என்ற உன் இரு புதல்வர்களுக்கும் நடக்க விருப்பதே அதற்கு அடையாளமாகும்: இருவரும் ஒரே நாளில் சாவார்கள்.
1 சாமுவேல் 2 : 35 (RCTA)
பிறகு நம்மனதுக்கேற்றபடி நடக்கும் பிரமாணிக்கம் உள்ள குரு ஒருவனை நம் விருப்பப்படி ஏற்படுத்துவோம். அவனுக்கு நிலைத்து நிற்கும் வீடு ஒன்றைக் கட்டி எழுப்புவோம். அவன் நம் கிறிஸ்துவுக்கு முன் எந்நாளும் நடப்பான்.
1 சாமுவேல் 2 : 36 (RCTA)
அப்போது நடக்கவிருப்பதாவது: உன் வீட்டில் எஞ்சியிருப்பவன் எவனும் வந்து தனக்காக வேண்டிக்கொள்ளும்படி சொல்வான்; ஒரு வெள்ளிக்காசும் ஒரு ரொட்டியும் ஒப்புக்கொடுப்பான்; அப்போது அவன், "நான் ஒருவாய் ரொட்டி சாப்பிடும்படி நீங்கள் தயவு செய்து குருவுக்குரிய ஒரு பாகத்தை எனக்குக் கொடுங்கள்" என்று கெஞ்சி மன்றாடுவான்'" என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

BG:

Opacity:

Color:


Size:


Font: