1 பேதுரு 5 : 1 (RCTA)
கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், வெளிப்படவிருக்கும் மாட்சிமையில் பங்குக்குரியவனுமாகிய நான் உங்கள் மூப்பர்களுள் ஒருவன் என்ற முறையில் அவர்களுக்குக் கூறும் அறிவுரையாவது:
1 பேதுரு 5 : 2 (RCTA)
மூப்பர்களே, உங்கள் பொறுப்பிலுள்ள கடவுளின் மந்தையை மேய்த்து வாருங்கள். கட்டாயத் தினாலன்று, மன உவப்புடன், கடவுளின் விருப்பத்திற்கேற்ப அதைக் கண்காணித்தல் வேண்டும். இழிவான ஊதியத்திற்காகச் செய்யாமல், உள்ளத்தார்வமுடன் பணி செய்யுங்கள்.
1 பேதுரு 5 : 3 (RCTA)
உங்களிடம் ஒப்பமைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல், மந்தைக்கு முன்மாதிரியாய் இருந்து, அதை மேய்ப்பீர்களாக.
1 பேதுரு 5 : 4 (RCTA)
அப்போதுதான் தலைமை ஆயர் தோன்றும் நாளில், மகிமையின் வாடாத வெற்றிவாகை சூட்டப்பெறுவீர்கள்.
1 பேதுரு 5 : 5 (RCTA)
இளைஞர்களே, நீங்கள் மூப்பர்களுக்குப் பணிந்து நடங்கள். ஒருவரோடு ஒருவர் பழகுகையில் மனத்தாழ்ச்சியை ஆடையாக அணிந்துகொள்ளுங்கள். ஏனெனில், " செருக்குற்றவர்களைக் கடவுள் எதிர்க்கிறார். தாழ்ச்சியுற்றவர்களுக்கோ அருளை அளிக்கிறார் ".
1 பேதுரு 5 : 6 (RCTA)
கடவுளது கைவன்னமைக்குப் பணிந்து, உங்களைத் தாழ்த்துங்கள்; குறித்த காலத்தில் அவர் உங்களை உயர்த்துவார்.
1 பேதுரு 5 : 7 (RCTA)
உங்கள் கவலைகள் அனைத்தையும் அவர் மேல் சுமத்தி விடுங்கள்: உங்கள் மீது அவருக்கு அக்கறை உண்டு.
1 பேதுரு 5 : 8 (RCTA)
தெளிந்த மனத்தோடு விழிப்பாயிருங்கள்; ஏனெனில், உங்கள் எதிரியான அலகை, கர்¢ச்சிக்கும் சிங்கம்போல் யாரை விழுங்கலாமெனத் தேடித் திரிகிறது.
1 பேதுரு 5 : 9 (RCTA)
விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாய், அதை எதிர்த்து நில்லுங்கள்; உலகமெங்குமுள்ள உங்கள் சகோதரர்களும் அதே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமன்றோ?
1 பேதுரு 5 : 10 (RCTA)
அருளுக்கெல்லாம் ஊற்றாகிய கடவுள், கிறிஸ்துவுக்குள் தம் முடிவில்லா மகிமைக்கு உங்களை அழைத்தவர், சிறிதுகாலம் நீங்கள் துன்புற்றபின், அனைத்தையும் சீர்ப்படுத்தி, உங்களுக்கு உறுதியும் உரமும் நிலைபேறும் அளிப்பார்.
1 பேதுரு 5 : 11 (RCTA)
அவரது வல்லமை என்றென்றும் உள்ளது. ஆமென்.
1 பேதுரு 5 : 12 (RCTA)
நம்பிக்கைக்குரியவன் என நான் கருதும் உங்கள் சகோதரன் சில்வானுவின் வழியாக உங்களுக்குச் சுருக்கமாக எழுதியனுப்பினேன். உங்களுக்கு அறிவுரை கூறவும், கடவுளுடைய உண்மை அருள் இதுவே எனச் சான்று பகரவும் விரும்பினேன்.
1 பேதுரு 5 : 13 (RCTA)
இந்த அருளில் நிலைத்திருங்கள். உங்களைப்போல் தேர்ந்துகொள்ளப்பட்டு, பாபிலோனில் வாழும் திருச்சபையினர் மகன் மாற்குவும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்.
1 பேதுரு 5 : 14 (RCTA)
அன்பு முத்தம் தந்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். கிறிஸ்துவுக்குள் வாழும் உங்கள் அனைவருக்கும் சமாதானம் உண்டாகுக.
❮
❯