1 பேதுரு 3 : 1 (RCTA)
மனைவியரே, நீங்கள் அங்ஙனமே உங்கள் கணவர்க்குப் பணிந்திருங்கள்.
1 பேதுரு 3 : 2 (RCTA)
இதனால், அவர்களுள் சிலர் தேவ வார்த்தையை ஏற்காதவர்களாய் இருந்தால், மரியாதையும் கற்பும் உள்ள உங்கள் நடத்தையை அவர்கள் காணும் போது, வார்த்தை எதுவும் தேவைப்படாமல் தம் மனைவியருடைய நன்னடத்தையாலே வசமாக்கப்படுவார்கள்.
1 பேதுரு 3 : 3 (RCTA)
சடை பின்னுவதும், பொன் நகைகள் அணிவதும், உடை மாற்றுவதுமாகிய வெளி அலங்கரிப்பில் உங்கள் அழகு அமையாமல்,
1 பேதுரு 3 : 4 (RCTA)
சாந்தமும் அமைதியுமுள்ள மனப்பான்மையாகிய அழியாத அலங்கரிப்பில் அமையட்டும். அந்த அலங்கரிப்போ மனித உள்ளத்தில் மறைவாயிருப்பதொன்று. அதுவே கடவுள் முன்னிலையில் விலை உயர்ந்தது.
1 பேதுரு 3 : 5 (RCTA)
இவ்வாறுதான் அக்காலத்தில், கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருந்த பரிசுத்த பெண்டிரும், தங்கள் கணவர்க்குப் பணிந்திருப்பதையே தங்கள் அணியாகக் கொண்டிருந்தார்கள்.
1 பேதுரு 3 : 6 (RCTA)
இவ்வாறே சாராள், ஆபிரகாமுக்குப் பணிந்திருந்தாள்; அவரைத் தன் தலைவன் என அழைத்தாள். நன்மை செய்து, எத்தகைய அச்சத்திற்கும் மனக் குழப்பத்திற்கும் இடங்கொடாமலிருந்தால், நீங்கள் சாராளின் புதல்வியராய் இருப்பீர்கள்.
1 பேதுரு 3 : 7 (RCTA)
அவ்வாறே கணவர்களே, நீங்களும் நல்லறிவோடு மணவாழ்க்கை நடத்துங்கள்; பெண்ணினம் வலுக் குறைந்தது என்பதால் மட்டுமன்று, வாழ்வுதரும் இறையருளுக்கு அவர்கள் உங்கள் உடன் உரிமையாளர் என்பதாலும், அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள்; அப்போது தான், உங்கள் செபங்களுக்குத் தடை ஏற்படாது.
1 பேதுரு 3 : 8 (RCTA)
இறுதியாக, நீங்கள் அனைவரும் ஒருமனப் பட்டிருங்கள்; பிறரிடம் பரிவு, சகோதர அன்பு, இரக்கம் காட்டுங்கள்; மனத் தாழ்ச்சியுடையவராய் இருங்கள்.
1 பேதுரு 3 : 9 (RCTA)
தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; பழிக்குப்பழி கூறாதீர்கள். மாறாக, ஆசி கூறுங்கள்; ஏனெனில், இறைவனின் ஆசிக்கு உரிமையாளர் ஆவதற்கே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
1 பேதுரு 3 : 10 (RCTA)
" வாழ்வை விரும்பி இன்பநாளைச் சுவைக்க விழைபவன், தீமையினின்று தன் நாவைக் காத்துக் கொள்க; வஞ்சகப் பேச்சினின்று தன் வாயைக் காத்துக்கொள்க;
1 பேதுரு 3 : 11 (RCTA)
தீமையினின்று விலகி நன்மை செய்க; அமைதியை நாடி அதனைத் தொடர்க;
1 பேதுரு 3 : 12 (RCTA)
ஆண்டவர் நீதிமான்கள் மேல் தம் பார்வையைச் செலுத்துகிறார்; அவர்களது வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறார்; தீமை செய்வோருக்கோ ஆண்டவர் கடுமுகம் காட்டுகிறார்".
1 பேதுரு 3 : 13 (RCTA)
நன்மை செய்வதில் நீங்கள் ஆர்வமுள்ளவர்களாக இருந்தால், உங்களுக்கு யார் தீமை செய்யப் போகிறார்கள்?
1 பேதுரு 3 : 14 (RCTA)
நீதியின் பொருட்டுத் துன்புற்றாலும், நீங்கள் பேறு பெற்றவர்களே. மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள், மனங்கலங்காதீர்கள்.
1 பேதுரு 3 : 15 (RCTA)
ஆண்டவராகிய கிறிஸ்து பரிசுத்தர் என உங்கள் உள்ளத்தில் போற்றுங்கள். நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு விளக்கங் கூறும்படி யாராவது கேட்டால் தக்க விடை பகர எப்போதும் தயாராய் இருங்கள்.
1 பேதுரு 3 : 16 (RCTA)
ஆனால், விளக்கங் கூறும் போது சாந்தத்தோடும் மதியாதையோடும் பேசுங்கள்; உங்கள் மனச்சாட்சியும் குற்றமற்றதாய் இருக்கட்டும். அப்போதுதான், நீங்கள் அவதூறுக்கு ஆளாகும் போது, உங்கள் கிறிஸ்தவ நன்னடைத்தையைப் பழிப்பவர்கள் நாணமடைந்து போவார்கள்.
1 பேதுரு 3 : 17 (RCTA)
ஏனெனில், தீமை செய்து துன்புறுவதை விட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல்.
1 பேதுரு 3 : 18 (RCTA)
கிறிஸ்துவைப் பாருங்கள்; நீதியுள்ள அவர், அநீதருக்காக இறந்தார்; நன்மைக் கடவுளிடம் சேர்க்க, பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார்; ஊன் உடலில் சாவுக்குள்ளானார்;
1 பேதுரு 3 : 19 (RCTA)
ஆனால், தேவ ஆவியில் உயிர் பெற்றார். அந்த ஆவியைக் கொண்டே, அவர் சிறையிலிருந்த ஆன்மாக்களிடம் சென்று, அவர்களுக்குத் தம் செய்தியை அறிவித்தார்.
1 பேதுரு 3 : 20 (RCTA)
இவ்வான்மாக்கள், அன்று நோவா, பேழையைச் செய்துகொண்டிருந்த காலத்தில், கடவுள் பொறுமையோடு காத்திருந்த போது, கீழ்ப்படியாமல் போனவர்கள், அப்பேழையில் நுழைந்து, சிலர் -அதாவது எட்டுப்பேர் - நீரின் வாயிலாய்க் காப்பாற்றப்பட்டனர்.
1 பேதுரு 3 : 21 (RCTA)
இந்த நீரானது ஞானஸநானத்துக்கு முன் அடையானம்; இன்று அது உங்களை மீட்கிறது; இந்த ஞானஸ்நானம் உங்கள் உடலின் அழுக்கை நீக்குவதன்று; நல்ல மனச்சாட்சியுடன் கடவுளுக்குத் தரும் உறுதி வாக்காகும்; இந்த ஞானஸ்நானம் மீட்பளிப்பதோ இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வழியாக.
1 பேதுரு 3 : 22 (RCTA)
அவர் விண்ணகம் சென்ற பின், அதிகாரம் தாங்குவோர், வலிமை மிக்கோர், தூதர் அனைவரையும் தமக்குட்படுத்தி, கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22