1 பேதுரு 2 : 1 (RCTA)
ஆகவே, தீயமனம், வஞ்சகம் அனைத்தையும் அகற்றுங்கள். இளி, கள்ளமும் பொறாமையும் வேண்டாம்.
1 பேதுரு 2 : 2 (RCTA)
புறணிப் பேச்செல்லாம் விலக்குங்கள். புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் போல் கலப்பற்ற ஞானப் பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாய் இருங்கள். இதை அருந்துவதால் நீங்கள் வளர்ச்சி பெற்று மீட்படைவீர்கள்.
1 பேதுரு 2 : 3 (RCTA)
ஆண்டவர் இனியவர் எனச் சுவைத்தீர்களன்றோ!
1 பேதுரு 2 : 4 (RCTA)
அவரையணுகி வாருங்கள். மனிதரால் விலக்கப்பட்டு, கடவுள் முன்னிலையில் விலை மதிப்பற்றதாய்த் தேர்ந்து கொள்ளப்பட்ட உயிருள்ள கல் அவரே.
1 பேதுரு 2 : 5 (RCTA)
நீங்களும் உயிருள்ள கற்களென, ஞான இல்லமாக அமைக்கப்படுவீர்களாக. அதில் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவனுக்குகந்த ஞானப்பலி நிறைவேற்றும் குருத்துவத் திருக்கூட்டமாக அமைவீர்கள். ஏனெனில்,
1 பேதுரு 2 : 6 (RCTA)
' இதோ, நான் கல்லொன்றைத் தேர்ந்தெடுத்து, விலைமதிப்பற்ற மூலைக்கல்லாக அதைச் சீயோனில் நாட்டுகிறேன், அதன் மேல் விசுவாசம் வைப்பவன் ஏமாற்றம் அடையான் ' என்று மறை நூலில் காணக் கிடக்கிறது.
1 பேதுரு 2 : 7 (RCTA)
விசுவாசமுள்ள உங்களுக்குத்தான் அக்கல் மதிப்புள்ளது. விசுவாசமில்லாதவர்களுக்கோ, " கட்டுவோர் விலக்கிய கல்லே மூலைக்கல்லாய் அமைந்தது.
1 பேதுரு 2 : 8 (RCTA)
தடுக்கி விழச் செய்யும் கல் அது, இடறலான பாறை அது " என்னும் வாக்குகள் பொருந்தும். தேவ வார்த்தைக்குக் கீழ்ப்படியாததால் தான் அவர்கள் தடுக்கி விழுகின்றனர்; அதற்கென்றே அவர்கள் குறிக்கப்பட்டிருந்தனர்.
1 பேதுரு 2 : 9 (RCTA)
நீங்களோ தேர்ந்தெடுக்கப்பட்ட இனம், அரசு குருத்துவத் திருக்கூட்டம், பரிசுத்த குலம், இறைவனுக்குச் சொந்தமான மக்கள்; உங்களை இருளினின்று தம் வியத்தகு ஒளிக்கு அழைத்த இறைவனின் புகழ்ச்சிகளை அறிவிப்பது உங்கள் பணி.
1 பேதுரு 2 : 10 (RCTA)
ஒரு காலத்தில் நீங்கள் மக்கள் இனமாகவே இல்லை; இன்றோ நீங்கள் கடவுளுடைய மக்கள் இனம். ஒரு காலத்தில் நீங்கள் இரக்கம் பெறாதவர்கள்; இன்றோ இரக்கம் பெற்றவர்கள்.
1 பேதுரு 2 : 11 (RCTA)
அன்பிற்குரியவர்களே, நீங்கள் அந்நியரும், வெளி நாட்டினருமாய் இருப்பதால், ஆன்மாவிற்கு எதிராகப் போர் புரியும் ஊனியல்புக்குரிய இச்சைகளினின்று விலகுமாறு உங்களை வேண்டுகிறேன்.
1 பேதுரு 2 : 12 (RCTA)
புற மனத்தினர் உங்களைத் தீயவரென்று இப்போது தூற்றினாலும், உங்கள் நற்செய்கைகளைப் பார்த்து, கடவுள் வரும் நாளில், அவர்கள் அவரை மகிமைப் படுத்துமாறு, அவர்களிடையே நீங்கள் நன்னடத்தையில் சிறந்து விளங்குங்கள்.
1 பேதுரு 2 : 13 (RCTA)
மனித அதிகாரம் எதற்கும் ஆண்டவரின் பொருட்டு அடங்கியிருங்கள். மேலான அதிகாரம் படைத்தவர் என்பதால் அரசர்க்கு அடங்கியிருங்கள்.
1 பேதுரு 2 : 14 (RCTA)
தீமை செய்வோரைத் தண்டிக்கவும், நன்மை செய்வோரைப் பாராட்டவும், அரசால் அனுப்பப் பட்டவர்கள் என்பதால், ஆளுநர்களுக்கும் அடங்கியிருங்கள்.
1 பேதுரு 2 : 15 (RCTA)
இப்படி நீங்கள் நன்மை செய்து விட வேண்டுமென்பதே கடவுளின் திருவுளம்.
1 பேதுரு 2 : 16 (RCTA)
உரிமை அடைந்தவர்களென வாழுங்கள்; ஆனால், இந்த உரிமையை, தீவினை செய்வதற்குப் போர்வையாகக் கொள்ளாதீர்கள். கடவுளுக்கு அடிமைகளென்றே வாழுங்கள்.
1 பேதுரு 2 : 17 (RCTA)
மனிதர் அனைவர்க்கும் மதிப்புக் கொடுங்கள்; சகோதரர்கள் மீது அனபுக்கூருங்கள்; கடவுளுக்கு அஞ்சி நடங்கள்; அரசருக்கு மதிப்புக் கொடுக்கத் தவறாதீர்கள்.
1 பேதுரு 2 : 18 (RCTA)
வேலையாட்களே, உங்கள் தலைவர்களுக்கு முழு மரியாதையோடு கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும் சாந்த முள்ளவர்களுக்கும் மட்டுமன்று, கடுமையானவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்.
1 பேதுரு 2 : 19 (RCTA)
ஒருவன் அநியாயமாய்த் துன்புறுத்தும் போது, இறைவனை மனத்தில் நினைத்துக் கொண்டு பொறுமையோடு ஏற்றுக் கொள்வானானால், அது அவருக்குகந்ததாகும்.
1 பேதுரு 2 : 20 (RCTA)
குற்றம் செய்தபின், அதற்காக அடிபட்டால், அதைப் பொறுமையோடு ஏற்றுக் கொள்வதில், என்ன பெருமை? மாறாக, நன்மை செய்தும், அதற்காகத் துன்புற்றால், அதைப் பொறுமையாக ஏற்றுக் கொள்வதே கடவுளுக்கு உகந்தது.
1 பேதுரு 2 : 21 (RCTA)
இவ்வாறு வாழவே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். எனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்ற போது, தம்முடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றுமாறு முன்மாதிரி தந்து சென்றார்.
1 பேதுரு 2 : 22 (RCTA)
அவர் பாவம் எதுவும் செய்ததில்லை, அவரது வாயினின்று வஞ்சகம் வெளிப்பட்டதில்லை".
1 பேதுரு 2 : 23 (RCTA)
அவர்கள் பழித்துரைத்த போது, அவர் எதிர்த்துப் பழிக்கவில்லை. துன்புற்ற போது அச்சுறுத்தவில்லை. நீதியோடு தீர்ப்பிடும் இறைவனிடம் தம் காரியத்தை ஒப்படைத்தார்.
1 பேதுரு 2 : 24 (RCTA)
நாம் பாவங்களை அப்புறப்படுத்தி இறைவனுக்கு ஏற்புடையவர்களாய் வாழ, கழுமரத்தின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். அவருடைய காயங்களால் நீங்கள் குணமானீர்கள்.
1 பேதுரு 2 : 25 (RCTA)
நீங்கள் ஆடுகளைப் போல் வழி தவறி அலைந்தீர்கள். ஆனால் இப்போது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும் காவலருமானவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25