1 இராஜாக்கள் 6 : 1 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறின நானூற்றெண்பதாம் ஆண்டிலும், சாலமோன் இஸ்ராயேலின் அரசரான நான்காம் ஆண்டு சியோ மாதமாகிய இரண்டாவது மாதத்திலும் ஆண்டவருடைய ஆலய வேலை ஆரம்பமானது.
1 இராஜாக்கள் 6 : 2 (RCTA)
சாலமோன் அரசர் கட்டின ஆலயத்தின் நீளம் அறுபது முழம்; அகலம் இருபது முழம்; உயரம் முப்பது முழம்.
1 இராஜாக்கள் 6 : 3 (RCTA)
ஆலய முன்மண்டபம் ஆலயத்தின் அகலத்திற்குச் சரியாய் இருபது முழ நீளமும், பத்து முழ அகலமும் கொண்டிருந்தது.
1 இராஜாக்கள் 6 : 4 (RCTA)
அவர் ஆலயத்திற்கு வளைவான சன்னல்களை அமைத்தார்.
1 இராஜாக்கள் 6 : 5 (RCTA)
கோயிலைச் சுற்றிலும் கோயிலுக்கும் கடவுள் சந்நிதிக்கும் அருகில் அடைப்பு மதிலின் மேல் அறைகளையும், கோயிலைச் சுற்றித் தாழ்வாரங்களையும் கட்டினார்.
1 இராஜாக்கள் 6 : 6 (RCTA)
முதலடுக்கு அறைகள் ஐந்து முழ அகலமும், இரண்டாமடுக்கு அறைகள் ஆறு முழ அகலமும், மூன்றாமடுக்கு அறைகள் ஏழு முழ அகலமுமாய் இருந்தன. அவை கோயிலின் சுவர்களிலே தாங்காத படி அவர் சுற்றிலும் வெளிப்புறமாக உத்திரங்களை அமைத்தார்.
1 இராஜாக்கள் 6 : 7 (RCTA)
செதுக்கிச் சீர்படுத்தப்பெற்ற கற்களால் கோயில் கட்டப்பட்டது. ஆகையால், அது கட்டப்பட்ட போது, சுத்தியல்கள், கோடரிகள் முதலான எந்த இரும்பு ஆயுதங்களின் சத்தமும் அங்கே கேட்கப்படவில்லை.
1 இராஜாக்கள் 6 : 8 (RCTA)
இரண்டாம் மாடிக்கு போகிற வாயில் கோயிலின் வலப்புறம் இருந்தது. சுழற்படிகளால் இரண்டாம் மாடிக்கும், இரண்டாம் மாடியிலிருந்து மூன்றாம் மாடிக்கும் ஏற வசதி அமைக்கப் பெற்றிருந்தது.
1 இராஜாக்கள் 6 : 9 (RCTA)
இவ்விதமாய் அவர் கோயிலைக் கட்டிக் கேதுரு மரப்பலகைகளால் அதை மச்சுப்பாவி முடித்தார்.
1 இராஜாக்கள் 6 : 10 (RCTA)
அவர் ஐந்து முழ உயரமான சுற்றுக்கட்டுகளை ஆலயத்தின் மேல் எங்கும் கட்டுவித்தார். அவை கேதுரு மரங்களால் மூடப்பட்டிருந்தன.
1 இராஜாக்கள் 6 : 11 (RCTA)
அப்போது கடவுள் சாலமோனுடன் உரையாடி அவரை நோக்கி,
1 இராஜாக்கள் 6 : 12 (RCTA)
நீ நம் கட்டளைகளின்படி ஒழுகி, நம் தீர்ப்புக்களை நிறைவேற்றி, நம் கற்பனைகளின்படி அணுப்பிசகாது நடந்து வருவாயாகில், நீ கட்டுகிற இக் கோயிலைக் குறித்து நாம் உன் தந்தை தாவீதுக்குச் சொன்ன நமது வார்த்தையை உன்னில் நிறைவேற்றுவோம்.
1 இராஜாக்கள் 6 : 13 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் நடுவில் வாழ்ந்து நம் மக்களாகிய இஸ்ராயேலரைக் கைவிடாதிருப்போம்" என்றார்.
1 இராஜாக்கள் 6 : 14 (RCTA)
அப்படியே சாலமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தார்.
1 இராஜாக்கள் 6 : 15 (RCTA)
ஆலயச் சுவர்களின் உட்புறத்தைக் கீழ்த்தளம் தொடங்கி மேல் மச்சு வரை கேதுருப் பலகைகளால் மூடினார். மேலும் கோயிலின் கீழ்த்தளத்தைச் சப்பீன் பலகைகளால் பாவினார்.
1 இராஜாக்கள் 6 : 16 (RCTA)
ஆனால் ஆலயத்தின் பின்புறத்தில், கீழ்த்தளம் முதல் மேல் தளம் வரை இருபது முழ உயரத்துக்குக் கேதுரு மரப் பலகைகளால் மூடப்பட்ட ஓர் இடத்தை அமைத்துத் திருத்தலத்தின் உட்புறத்தை அதிபரிசுத்த தலமாக ஏற்படுத்தினார்.
1 இராஜாக்கள் 6 : 17 (RCTA)
அவ்விடத்திற்கு முன்னிருந்த ஆலய நீளம் நாற்பது முழம்.
1 இராஜாக்கள் 6 : 18 (RCTA)
இப்படி ஆலயத்தின் உட்புறமெங்கும் கேதுரு மரப்பலகைகளால் மூடியிருந்ததும் தவிர, பலகைகள் ஒன்றோடு ஒன்று பொருந்தும் இடங்கள் சிற்ப சித்திரக் கலைகளால் அழகு செய்யப் பட்டிருந்தன. இப்படியே பார்வைக்கு ஒரு கல்லாவது காணப்படாமல் கோயில் முழுவதும் கேதுரு மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தது.
1 இராஜாக்கள் 6 : 19 (RCTA)
ஆண்டவருடைய உடன்படிக்கைப் பேழையை வைக்க அவர் ஆலயத்தின் உட்புறத்தில் திருத்தலத்தை அமைத்திருந்தார்.
1 இராஜாக்கள் 6 : 20 (RCTA)
திருத்தலம் மட்டும் இருபது முழ நீளமும், இருபது முழ அகலமும், இருபது முழ உயரமுமாய் இருந்தது; அதைப் பசும் பொன்னால் மூடினார்; பலி பீடத்தையும் கேதுருப் பலகைகளால் மூடினார்.
1 இராஜாக்கள் 6 : 21 (RCTA)
திருத்தலத்திற்கு முன் இருந்த ஆலயத்தையும் பசும் பொன்னால் மூடி, பொன் அணிகள் தொடுக்கப்பட்ட தகடுகளைத் தொங்க விட்டார்.
1 இராஜாக்கள் 6 : 22 (RCTA)
இப்படி ஆலயம் முழுவதும் பொன்னால் மூடப்படாத இடம் ஒன்றும் இல்லை. திருத்தலத்திற்கு முன் இருந்த பலிபீடம் முழுவதையும் பொன்னால் மூடினார்.
1 இராஜாக்கள் 6 : 23 (RCTA)
அவர் திருத்தலத்தில் ஒலிவ மரங்களால் பத்து முழ உயரமான இரு கெருபீம்களைச் செய்து வைத்தார்.
1 இராஜாக்கள் 6 : 24 (RCTA)
கெருபீம்களின் இறக்கைகளுடைய நீளம் ஐந்து முழம்; இறக்கைகளின் முனைகளுக்கு இடையே இருந்த தூரம் பத்து முழம். மற்றக் கெருபீமும் பத்து முழம்.
1 இராஜாக்கள் 6 : 25 (RCTA)
இரு கெருபீம்களும் ஒரே அளவாயும், ஒரே வேலைப்பாடுடையனவாயும் இருந்தன.
1 இராஜாக்கள் 6 : 26 (RCTA)
அதாவது ஒரு கெருபீமும் அதே அளவாய் இருந்தது.
1 இராஜாக்கள் 6 : 27 (RCTA)
அவர் அக்கெருபீம்களை உள் ஆலயத்தின் நடுவே வைத்தார். அவற்றின் இறக்கைகள் விரிந்திருந்ததினால், ஒரு கெருபீமின் இறக்கை ஒரு பக்கத்துச் சுவரிலும், மற்றக் கெருபீமின் இறக்கை மறுபக்கத்துச் சுவரிலும் தொடும்படியாயிருந்தன. ஆலயத்தின் நடுவில் அவற்றின் இறக்கைகள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருந்தன.
1 இராஜாக்கள் 6 : 28 (RCTA)
அவர் அக்கெருபீம்களையும் பொன்னால் மூடினார்.
1 இராஜாக்கள் 6 : 29 (RCTA)
ஆலயத்தின் சுவர்கள் முழுவதும், சுற்றிலும் தொங்கிக்கொண்டிருந்த கெருபீம்களும், ஈச்ச மரங்களும் இன்னும் பிற ஓவியங்களுமான சிற்ப சித்திர வேலைகளால் அழகு செய்யப்பட்டிருந்தன.
1 இராஜாக்கள் 6 : 30 (RCTA)
ஆலயத்துத் தளங்களையும் அவர் உள்ளும் புறமும் பொன்னால் மூடினார்.
1 இராஜாக்கள் 6 : 31 (RCTA)
திருத்தலத்தின் வாயிலுக்கு ஒலிவ மரங்களால் கதவுகளையும், ஐந்து கோணமுள்ள தூண்களையும் செய்துவைத்தார்.
1 இராஜாக்கள் 6 : 32 (RCTA)
ஒலிவ மரத்தாலான அந்த இரட்டைக் கதவுகளைக் கெருபீம்களும், ஈச்ச மரங்களும் இன்னும் பிற ஓவியங்களுமான சிற்ப சித்திர வேலைகளாலும் அழகு செய்து இவை அனைத்தையும் பொன்னால் அலங்கரித்தார்.
1 இராஜாக்கள் 6 : 33 (RCTA)
அவர் ஆலயத்தின் வாயிலுக்கும் ஒலிவ மரத்தினால் நான்கு கோணமுள்ள தூண்களை நிறுத்தினர்.
1 இராஜாக்கள் 6 : 34 (RCTA)
மேலும் அதன் பக்கத்தில் சப்பீன் மரத்தால் இரு கதவுகளைச் செய்து வைத்தார். ஒவ்வொரு கதவும் இரண்டு மடிப்பாய்ச் செய்யப்பட்டிருந்தது; எனவே, கதவுகளைத் திறக்கும் போது இரு மடிப்புப் பலகைகள் ஒன்றோடொன்று சேர்ந்தே திறக்கப்படும்.
1 இராஜாக்கள் 6 : 35 (RCTA)
அவற்றைக் கெருபீம்களும் ஈச்ச மரங்களும் இன்னும் பிற ஓவியங்களுமான சிற்ப சித்திர வேலைப்பாடுகளால் அழகு செய்து, அவற்றின் அளவுப்படி அவற்றைப் பொன்னால் அலங்கரித்தார்.
1 இராஜாக்கள் 6 : 36 (RCTA)
உள்முற்றத்தை மூன்று வரிசை செதுக்கப் பெற்ற கற்களாலும் ஒரு வரிசை கேதுருப் பலகைகளாலும் அமைத்தார்.
1 இராஜாக்கள் 6 : 37 (RCTA)
நான்காம் ஆண்டு சியோ மாதத்தில் ஆண்டவருடைய ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
1 இராஜாக்கள் 6 : 38 (RCTA)
பதினோராம் ஆண்டு பூல் என்ற எட்டாம் மாதத்தில் ஆலயத்தின் எல்லா வேலைகளும் முற்றுப் பெற்றன. அதற்குத் தேவையான எல்லாத் தட்டுமுட்டுச் சாமான்களும் தயாராகின. அவர் அதைக் கட்டி முடிக்க ஏழு ஆண்டுகள் ஆயின.
❮
❯