1 யோவான் 4 : 1 (RCTA)
அன்புக்குரியவர்களே, தேவ ஆவியின் ஏவுதல் தமக்கிருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் எல்லாரையுமே நம்பிவிடாதீர்கள். அந்த ஏவுதல் கடவுளிடமிருந்துதான் வருகிறதா என்பதைச் சோதித்தறியுங்கள். ஏனெனில், போலித் தீர்க்கதரிசிகள் பலர் உலகெங்கும் பரவியுள்ளனர்.
1 யோவான் 4 : 2 (RCTA)
கடவுளது ஆவியின் ஏவுதலை நீங்கள் இவ்வாறு அறியக்கூடும்; ஊன் உருவில் வந்த இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளச் செய்யும் ஏவுதல் எல்லாமே கடவுளிடமிருந்து வருகிறது.
1 யோவான் 4 : 3 (RCTA)
இயேசுவை மறுக்கச் செய்யும் எந்த ஏவுதலும் கடவுளிடமிருந்து வருவதன்று; எதிர்க் கிறிஸ்துவை ஏவும் ஆவியே அது. எதிர்க் கிறிஸ்து வருகிறானென்று கேள்விப்பட்டீர்களே, இதோ அவன் இப்போதே உலகில் இருக்கிறான்.
1 யோவான் 4 : 4 (RCTA)
அன்புக் குழந்தைகளே, நீங்களோ கடவுளைச் சார்ந்தவர்கள்; நீங்கள் அந்தப் போலித் தீர்க்கதரிசிகளை வென்றுவிட்டீர்கள்; ஏனெனில், உலகில் இருக்கும் அவனைவிட உங்களுள் இருப்பவர் மேலானவர்.
1 யோவான் 4 : 5 (RCTA)
ஆதனால், அவர்கள் பேசுவதும் உலகைச் சார்ந்ததே. உலகமும் அவர்களுக்குச் செவிசாய்க்கிறது.
1 யோவான் 4 : 6 (RCTA)
நாமோ கடவுளைச் சார்ந்தவர்கள்; கடவுளை அறிபவன் நமக்குச் செவிசாய்க்கிறான். கடவுளைச் சார்ந்திராதவன் நமக்குச் செவிசாய்ப்பதில்லை இதனின்று, உண்மையின் ஆவி எது, ஏமாற்றும் ஆவி எது என்று அறியக்கூடும்.
1 யோவான் 4 : 7 (RCTA)
அன்புக்குரியவர்களே, நாம் ஒருவர்க்கொருவர் அன்பு செய்வோமாக. ஏனெனில், அன்பு கடவுளிடமிருந்து வருகிறது; அன்பு செய்பவன் எவனும் கடவுளிடமிருந்து பிறந்துள்ளான்; அவனே கடவுளை அறிவான்.
1 யோவான் 4 : 8 (RCTA)
அன்பு செய்யாதவனோ கடவுளை அறிவதில்லை. ஏனெனில், அன்பே கடவுள்.
1 யோவான் 4 : 9 (RCTA)
தம் ஒரே பேறான மகனின் வழியாக நாம் வாழ்வு பெறும் பொருட்டு, கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்படுத்தப்பட்டது.
1 யோவான் 4 : 10 (RCTA)
நாம் கடவுளுக்கு அன்பு செய்ததில் அன்று அவரே நமக்கு அன்பு செய்து, நம் பாவங்களுக்குப் பரிகாரமாகத் தம் மகனை அனுப்பியதில் தான் அன்பின் தன்மை விளங்குகிறது.
1 யோவான் 4 : 11 (RCTA)
அன்புக்குரியவர்களே, கடவுள் நமக்கு இவ்வாறு அன்பு செய்தார் எனில், நாம் ஒருவர்க்கொருவர் அன்பு செய்தல் வேண்டும்.
1 யோவான் 4 : 12 (RCTA)
கடவுளை எவனும் ஒருபோதும் கண்டதில்லை. ஆனால், நாம் ஒருவர்க்கொருவர் அன்பு செய்தால், கடவுள் நம்முள் நிலைத்திருக்கிறார். அவரது அன்பு நம்மிடம் நிறைவுற்றிருக்கிறது.
1 யோவான் 4 : 13 (RCTA)
தம் ஆவியில் அவர் நமக்குப் பங்கு தந்தமையால், நாம் அவருள் நிலைத்திருக்கிறோம் எனவும், அவர் நம்முள் நிலைத்திருக்கிறார் எனவும் அறிகிறோம்.
1 யோவான் 4 : 14 (RCTA)
தந்தை தம் மகனை உலகின் மீட்பராக அனுப்பினாரென்று கண்டோம்; அதற்குச் சான்று பகர்கின்றோம்.
1 யோவான் 4 : 15 (RCTA)
இயேசு கடவுளின் மகன் என ஏற்றுக்கொள்பவன் எவனோ அவனுள் கடவுள் நிலைத்திருக்கிறார்; அவனும் கடவுளுக்குள் நிலைத்திருக்கிறான்.
1 யோவான் 4 : 16 (RCTA)
இங்ஙனம், கடவுள் நம்மீதுகொண்ட அன்பை அறியலானோம்; அந்த அன்பை விசுவசித்தோம். அன்பே கடவுள்; அன்பில் நிலைத்திருப்பவன் கடவுளுக்குள் நிலைத்திருக்கிறான். கடவுளும் அவனுள் நிலைத்திருக்கிறார்.
1 யோவான் 4 : 17 (RCTA)
தீர்ப்பு நாளில் நாம் நம்பிக்கையோடிருப்போம் என எதிர்பார்ப்பதில் அன்பின் நிறைவு நம்மிடம் விளங்குகிறது. இவ்வுலகிலேயே நாம் அவரைப்போல் இருப்பதால் அந்த நம்பிக்கை நமக்குண்டு.
1 யோவான் 4 : 18 (RCTA)
அன்பில் அச்சத்துக்கிடமில்லை; நிறை அன்பு அச்சத்தை அகற்றும்; ஏனெனில் அச்சம் கொள்பவன் தண்டனையை எதிர் பார்க்கிறான். அச்சம்கொள்பவனோ அன்பில் நிறைவு பெறவில்லை.
1 யோவான் 4 : 19 (RCTA)
அவரே நமக்கு முதலில் அன்பு செய்ததால், நாமும் அன்பு செய்வோமாக.
1 யோவான் 4 : 20 (RCTA)
'நான் கடவுளுக்கு அன்பு செய்கிறேன்' என்று சொல்லிக்கொண்டு, ஒருவன் தன் சகோதரனை வெறுத்தால், அவன் பொய்யன். ஏனெனில், கண்ணால் கண்ட சகோதரனுக்கு அன்பு செய்யாதவன், தான் கண்டிராத கடவுளுக்கு அன்பு செய்ய இயலாது.
1 யோவான் 4 : 21 (RCTA)
கடவுளுக்கு அன்பு செய்பவன், தன் சகோதரனுக்கும் அன்பு செய்ய வேண்டும். இதுவே அவரிடமிருந்து நாம் பெற்ற கட்டளை.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21