1 யோவான் 2 : 1 (RCTA)
என் அன்புக் குழந்தைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டுமென்றே இதை உங்களுக்கு எழுதுகிறேன். ஆனால் ஒருவன் பாவஞ்செய்ய நேர்ந்தாலும், பரம தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே இறைவனுக்கு ஏற்புடையவரான இயேசு கிறிஸ்து.
1 யோவான் 2 : 2 (RCTA)
நம் பாவங்களைப்போக்கும் பரிகாரப் பலி அவரே. நம் பாவங்களை மட்டுமன்று, உலகனைத்தின் பாவங்களையும் போக்கும் பரிகாரப் பலி அவரே.
1 யோவான் 2 : 3 (RCTA)
அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்தால் தான் நாம் அவரை அறிந்துள்ளோம் என உறுதி கொள்ளலாம்.
1 யோவான் 2 : 4 (RCTA)
'நான் அவரை அறிவேன்' என்று சொல்லிக் கொண்டு, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதவன் பொய்யன்; உண்மை என்பது அவனிடம் இல்லை.
1 யோவான் 2 : 5 (RCTA)
ஆனால் அவரது வார்த்தையை ஒருவன் கடைப்பிடித்தால், அவனிடம் கடவுளன்பு உண்மையாகவே நிறைவாகியுள்ளது. நாம் அவருள் இருக்கிறோம் என்பது இதனால் உறுதியாகும்.
1 யோவான் 2 : 6 (RCTA)
'அவருள் நிலைத்திருக்கிறேன்' எனக் கூறுபவன் அவர் நடந்தது போல நடக்கவேண்டும்.
1 யோவான் 2 : 7 (RCTA)
அன்புக்குரியவர்களே, நான் உங்களுக்கு எழுதுவது புதியதொரு கட்டளையன்று; ஆதிமுதல் நீங்கள் பெற்றிருந்த பழைய கட்டளையே. நீங்கள் கேட்டுள்ள வார்த்தையே அப்பழைய கட்டளை.
1 யோவான் 2 : 8 (RCTA)
இருப்பினும் நான் உங்களுக்கு எழுதுவது புதியதொரு கட்டளைதான். இது புதியது என்பது அவர் வாழ்க்கையில் விளங்கியதுபோல் உங்கள் வாழ்க்கையிலும் விளங்குகிறது. ஏனெனில், இருள் அகன்றுபோகிறது. உண்மையொளி இப்போதே ஒளிர்கின்றது.
1 யோவான் 2 : 9 (RCTA)
'நான் ஒளியில் இருக்கிறேன்' என்று சொல்லிக்கொண்டு தன் சகோதரனை வெறுப்பவன் இன்னும் இருளிலேயே இருக்கிறான்.
1 யோவான் 2 : 10 (RCTA)
தன் சகோதரனுக்கு அன்புசெய்பவனே ஒளியில் நிலைத்திருக்கிறான். அவனை இடறிவிழச் செய்வது எதுவுமில்லை.
1 யோவான் 2 : 11 (RCTA)
தன் சகோதரனை வெறுப்பவனோ இருளிலே இருக்கிறான், இருளிலே நடக்கிறான், தான் செல்வதெங்கே என்றறியான்; இருள் அவன் கண்களைக் குருடாக்கிவிட்டது.
1 யோவான் 2 : 12 (RCTA)
அன்புக் குழந்தைகளே, அவர் பெயரின் பொருட்டு உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளன; ஆகையால், நான் உங்களுக்கு இவ்வாறு எழுதுகிறேன்.
1 யோவான் 2 : 13 (RCTA)
தந்தையரே, ஆதிமுதல் இருக்கும் அவரை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; ஆகையால், நான் உங்களுக்கு இவ்வாறு எழுதுகிறேன். இளைஞரே, நீங்கள் தியோனை வென்றுவிட்டீர்கள்; ஆகையால், நான் உங்களுக்கு இவ்வாறு எழுதுகிறேன்.
1 யோவான் 2 : 14 (RCTA)
அன்புப் பிள்ளைகளே, பரம தந்தையை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; ஆகையால், நான் உங்களுக்கு இவ்வாறு எழுதினேன். தந்தையரே, ஆதிமுதல் இருக்கும் அவரை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; ஆகையால் நான் உங்களுக்கு இவ்வாறு எழுதினேன். இளைஞரே, நீங்கள் வலிமை மிகுந்தவர்கள்; கடவுளின் வாக்கு உங்களுள் நிலைத்து நிற்கிறது. தீயோனை நீங்கள் வென்றுவிட்டீர்கள்; ஆகையால், நான் உங்களுக்கு இவ்வாறு எழுதினேன்.
1 யோவான் 2 : 15 (RCTA)
உலகின்மீதும் அதிலுள்ள எதன்மீதும் அன்பு வைக்காதீர்கள். உலகின்மீது ஒருவன் அன்பு வைத்தால், பரம தந்தையின் மீது அவனுக்கு அன்பு இல்லை.
1 யோவான் 2 : 16 (RCTA)
ஊனியல்பு இச்சிப்பதும், கண்கள் காண இச்சிப்பதும், செல்வத்தில் செருக்கு கொள்வதுமாகிய இவ்வுலகிற்குரியவையெல்லாம் பரம தந்தையிடமிருந்து வரவில்லை; உலகிலிருந்தே வருகின்றன.
1 யோவான் 2 : 17 (RCTA)
உலகமோ மறைந்துபோகிறது; அத்துடன், மனிதன் உலகில் இச்சிக்கும் அனைத்தும் மறைந்துபோகிறது. ஆனால் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவன் என்றும் நிலைத்திருப்பான்.
1 யோவான் 2 : 18 (RCTA)
அன்புப் பிள்ளைகளே, இதுவே இறுதிக் காலம்; எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே, இதோ, இப்போதே எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர். இது இறுதிக் காலம் என இதனால் நாம் அறிகிறோம்.
1 யோவான் 2 : 19 (RCTA)
இவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்தனர், உண்மையில் இவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்லர். உண்மையில் நம்மைச் சார்ந்தவர்களாய் இருந்திருப்பின், நம்மோடு நிலைத்திருப்பர். இவர்களுள் யாரும் உண்மையில் நம்மைச் சார்ந்திருக்கவில்லை என்பது தெளிவாகுமாறு நம்மைவிட்டுப் பிரிந்து சென்றார்கள்.
1 யோவான் 2 : 20 (RCTA)
நீங்கள் பரிசுத்தரிடமிருந்து அபிஷுகம் பெற்றிருக்கிறீர்கள்; அதனால் அனைவரும் அறிவு பெற்றிருக்கிறீர்கள்.
1 யோவான் 2 : 21 (RCTA)
நீங்கள் உண்மையை அறியவில்லை. என்பதால் நான் இதை உங்களுக்கு எழுதவில்லை; அதை அறிந்திருக்கிறார்கள் என்பதாலும், பொய் எதுவும் உண்மையிலிருந்து வராது என்பதாலுமே எழுதினேன்.
1 யோவான் 2 : 22 (RCTA)
இயேசு தான் கிறிஸ்து என்பதை எவன் மறுக்கிறானோ அவன் பொய்யன்; அவனே எதிர்க்கிறிஸ்து; பரம தந்தையையும் அவர் மகனையும் அவன் மறுக்கிறான்.
1 யோவான் 2 : 23 (RCTA)
மகனை மறுக்கிறவன் எவனும் தந்தையையும் வேண்டாமென்கிறான்; மகனை ஏற்றுக்கொள்பவன் தந்தையையும் ஏற்றுக்கொள்ளுகிறான்.
1 யோவான் 2 : 24 (RCTA)
தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும்; தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருந்தால், தந்தைக்குள்ளும், அவர் மகனுக்குள்ளும் நீங்கள் நிலைத்திருப்பீர்கள்.
1 யோவான் 2 : 25 (RCTA)
அவர் நமக்கு வாக்களித்தது முடிவில்லா வாழ்வாகும். அதை அவர் தாமே வாக்களித்தார்.
1 யோவான் 2 : 26 (RCTA)
உங்களை ஏமாற்றப் பார்க்கிறவர்களைக் குறித்து இதை எழுதினேன்.
1 யோவான் 2 : 27 (RCTA)
நீங்களோ அவரிடமிருந்து அபிஷுகம் பெற்றிருக்கிறீர்கள்; அந்த அபிஷுகம் உங்களில் நிலைத் திருக்கிறது; ஆகவே ஒருவரும் உங்களுக்குக் கற்பிக்கத் தேவையில்லை; அவரது அபிஷுகமே உங்களுக்கு எல்லாவற்றைக் குறித்தும் கற்பித்து வருகிறது. உண்மையைத்தான் கற்பித்து வருகிறது, பொய்யையன்று. எனவே, அது உங்களுக்குக் கற்பித்தது போல அவருள் நிலைத்திருங்கள்.
1 யோவான் 2 : 28 (RCTA)
ஆகவே, அன்புக் குழந்தைகளே, அவர் வெளிப்படும்போது நாம் நம்பிக்கையோடிருக்கவும், அவரது வருகையின்போது வெட்கி விலகாதிருக்கவும், அவருள் நிலைத்திருங்கள்.
1 யோவான் 2 : 29 (RCTA)
இறைவன் நீதியுள்ளவர் என நீங்கள் அறிவீர்களாகில், நீதியைக் கடைப்பிடிப்பவன் எவனும் அவரிடமிருந்து பிறந்தவன் என ஒப்புக் கொள்ளுங்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29