1 கொரிந்தியர் 4 : 1 (RCTA)
ஆகவே எங்களைக் கிறிஸ்துவின் பணியாளர், கடவுளுடைய மறைபொருள்களின் கண்காணிப்பாளர் என்றே எவரும் கருதவேண்டும்.
1 கொரிந்தியர் 4 : 2 (RCTA)
இனி, கண்காணிப்பாளர் நம்பிக்கைக்குரியவராய் இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கலாம் அன்றோ?
1 கொரிந்தியர் 4 : 3 (RCTA)
என்னைப் பொருத்த மட்டில் எனக்கு நீங்களோ, மனிதரின் நீதிமன்றமோ தீர்ப்புக் கூறுவதுபற்றி நான் கவலைப்படவில்லை. நானும் எனக்குத் தீர்ப்பிட்டுக் கொள்ளமாட்டேன்.
1 கொரிந்தியர் 4 : 4 (RCTA)
என் மனச்சாட்சி என்னை எதிலும் குற்றம் சாட்டவில்லை. ஆயினும் இதனால் நான் குற்றமற்றவன் என்று சொல்ல முடியாது. எனக்குத் தீர்ப்புக் கூறுகிறவர் ஆண்டவர் தாம்.
1 கொரிந்தியர் 4 : 5 (RCTA)
ஆகையால் குறித்த காலம் வருமுன் தீர்ப்பிடாதீர்கள். ஆண்டவர் வரும்வரை காத்திருங்கள். இருளில் மறைந்திருப்பதை அவர் வெட்ட வெளிச்சமாக்குவார். உள்ளங்களின் உட்கருத்துகளை வெளியாக்குவார். அப்பொழுதான் ஒவ்வொருவனும் கடவுளிடமிருந்து புகழ்பெறுவான்.
1 கொரிந்தியர் 4 : 6 (RCTA)
சகோதரர்களே, உங்கள் பொருட்டு என்னையும் அப்பொல்லோவையும் உவமைப்படுத்திப் பேசினேன். "எழுதியுள்ளதற்கு மேல் போகாதே" என்பதன் பொருளை எங்களைப் பார்த்து நீங்கள் கற்றுக்கொள்ள இவையெல்லாம் எடுத்துரைத்தேன். உங்களுள் யாரும் ஒருவனைச் சார்ந்து கொண்டு வேறொருவனுக்கு எதிராக நின்று இறுமாப்பு அடையவேண்டாம்.
1 கொரிந்தியர் 4 : 7 (RCTA)
ஏனெனில், நீ உயர்ந்தவன் என்று சொன்னது யார்? பெற்றுக்கொள்ளாதது உன்னிடத்தில் என்ன உண்டு? நீ பெற்றுக் கொள்ளாதவனைப் போல் ஏன் பெருமை பாராட்டிக் கொள்கிறாய்?
1 கொரிந்தியர் 4 : 8 (RCTA)
உங்களுக்கு வேண்டியதெல்லாம் இதற்குள் கிடைத்துவிட்டதோ! இதற்குள் நீங்கள் செல்வர்களாகி விட்டீர்களோ! எங்களை விட்டு நீங்கள் மட்டும் அரசாளத் தொடங்கிவிட்டீர்களோ! அப்படி நீங்கள் அரசாளத் தொடங்கிவிட்டால் நல்லதுதான்! நாங்களும் உங்களோடு சேர்ந்து அரசாள்வோமே!
1 கொரிந்தியர் 4 : 9 (RCTA)
உள்ளபடியே அப்போஸ்தலர்களாகிய எங்களைக் கடவுள் அனைவரிலும் கடையராக்கினார் என நினைக்கிறேன். எல்லாரும் காணக் கொலைகளத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டவர்கள் போல் ஆனோம். ஏனெனில் மனிதருக்கும் வானதூதருக்கும் உலகம் அனைத்திற்கும் நாங்கள் வேடிக்கையானோம்.
1 கொரிந்தியர் 4 : 10 (RCTA)
கிறிஸ்துவுக்காக நாங்கள் மடையர்கள், நீங்களோ கிறிஸ்தவ விவேகம் கொண்டவர்கள். நாங்கள் வலுவற்றவர்கள், நீங்களோ வலுமிக்கவர்கள் நீங்கள் மாண்புள்ளவர்கள்,. 'நாங்களோ மதிப்பற்றவர்கள்.
1 கொரிந்தியர் 4 : 11 (RCTA)
இந்நாள் வரை நாங்கள் பசியாயிருக்கிறோம், தாகமாயிருக்கிறோம், ஆடையின்றி இருக்கிறோம், அடிபடுகிறோம். தங்க இடமின்றி இருக்கிறோம். எங்கள் கையால் பாடுபட்டு உழைக்கிறோம்.
1 கொரிந்தியர் 4 : 12 (RCTA)
பிறர் எங்களைப் பழித்துரைக்கும்போது நாங்கள் ஆசி கூறுகிறோம்; எங்களைத் துன்புறுத்தும் போது நாங்கள் பொறுத்துக்கொள்கிறோம்.
1 கொரிந்தியர் 4 : 13 (RCTA)
எங்களைத் தூற்றும்போது நாங்கள் உறவாடுகிறோம். நாங்கள் இவ்வுலகத்தின் குப்பைபோல் ஆனோம். இன்றுவரை அனைவரினும் கழிவடையானோம்.
1 கொரிந்தியர் 4 : 14 (RCTA)
நான் இவற்றை எழுதுவது உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படியன்று, என் அன்புக்குழந்தைகளென உங்களுக்கு அறிவு புகட்டவே.
1 கொரிந்தியர் 4 : 15 (RCTA)
ஏனெனில், கிறிஸ்துவுக்குள் உங்களுக்கு ஆசிரியர் பல்லாயிரம்பேர் இருக்கலாம் ஆனால் தந்தையர் பலர் இல்லை. நற்செய்தியின் வழியாய் நான் தான் உங்களைக் கிறிஸ்து இயேசுவுக்குள் ஈன்றெடுத்தேன்.
1 கொரிந்தியர் 4 : 16 (RCTA)
ஆகவே என்னைப்போல் நடக்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
1 கொரிந்தியர் 4 : 17 (RCTA)
இதற்காகவே, தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பினேன். அவர் ஆண்டவருக்குள் நம்பிக்கைக்குரிய என் அன்புக் குழந்தை. கிறிஸ்துவுக்குள் வாழ்வதைப் பற்றிய என் வழி வகைகளை அவர் உங்களுக்கு நினைவுறுத்துவார். அவற்றையே நான் எங்கும் ஒவ்வொரு சபையிலும் போதித்து வருகிறேன்.
1 கொரிந்தியர் 4 : 18 (RCTA)
நான் உங்களிடம் வரமாட்டேனென்று எண்ணிச் சிலர் இறுமாந்து இருக்கின்றனர்.
1 கொரிந்தியர் 4 : 19 (RCTA)
ஆண்டவர் அருள் கூர்ந்தால் விரைவில் உங்களிடம் வருவேன். வந்து, இறுமாப்புக்கொண்டவர்கள் எவ்வளவு பேசுகிறார்கள் என்பதையன்று அவர்களிடம் எவ்வளவு வல்லமையுண்டு என்பதைப் பார்க்கப் போகிறேன்.
1 கொரிந்தியர் 4 : 20 (RCTA)
கடவுளின் அரசு பேச்சில் அன்று, வல்லமையில்தான் இருக்கிறது.
1 கொரிந்தியர் 4 : 21 (RCTA)
நான் பிரம்போடு வரவேண்டுமா? அன்போடும் சாந்த உள்ளத்தோடும் வரவேண்டுமா? என்ன வேண்டும்?
❮
❯