1 கொரிந்தியர் 3 : 1 (RCTA)
சகோதரர்களே, ஆவியைப் பெற்றுக் கொண்டவர்களிடம் பேசுவது போல் உங்களிடம் பேச முடியவில்லை. ஊனியல்பு உள்ளவர்கள் போலவும், கிறிஸ்தவ வாழ்க்கையில் குழந்தைகள் போலவும், உங்களைப் பாவித்துப் பேச வேண்டியதாயிற்று.
1 கொரிந்தியர் 3 : 2 (RCTA)
உங்களுக்கு நான் ஊட்டியது பால் உணவே, கெட்டியான உணவன்று. அதை உண்ண முடியாதிருந்தீர்கள். இப்போதுங் கூட முடியாமல் தான் இருக்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 3 : 3 (RCTA)
ஏனெனில், இன்னும் ஊனியல்பு, உள்ளவர்களாகவே இருக்கிறீர்கள். உங்களிடையே பொறாமையும் சண்டை சச்சரவும் இருக்கையில் நீங்கள் ஊனியல்பு உள்ளவர்கள் தானே மேலும் மனித இயல்பு உள்ளவர்களாகத் தானே வாழ்கிறீர்கள்!
1 கொரிந்தியர் 3 : 4 (RCTA)
உங்களுள் ஒருவன், 'நான் சின்னப்பரைச் சேர்ந்தவன்' எனவும், வேறொருவன், ' நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன் ' எனவும் சொல்லும்போது நீங்கள் காட்டுவது வெறும் மனித இயல்பே அன்றோ?
1 கொரிந்தியர் 3 : 5 (RCTA)
ஆகிலும் அப்பொல்லோ யார்? சின்னப்பன் யார்? உங்களுக்கு விசுவாசம் கொண்டு வந்த வெறும் பணியாளர்களே அல்லரோ!
1 கொரிந்தியர் 3 : 6 (RCTA)
ஆண்டவர் அருளியவாறு அவனவன் பணியாற்றுகிறான். நான் நட்டேன், அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்;
1 கொரிந்தியர் 3 : 7 (RCTA)
ஆனால், விளையச் செய்தவர் கடவுள் தாமே. ஆதலின் நடுகிறவனுக்கு என்ன பெருமை? நீர் பாய்ச்சுபவனுக்கு என்ன பெருமை? விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை எல்லாம்.
1 கொரிந்தியர் 3 : 8 (RCTA)
நடுகிறவனும் நீர் பாய்ச்சுப்பவனும் ஒன்றுதான். ஒவ்வொருவனும் தன் உழைப்புக்கேற்பத் தனக்குரிய கூலியைப் பெறுவான்.
1 கொரிந்தியர் 3 : 9 (RCTA)
ஏனெனில், நாங்கள் கடவுளோடு உழைப்பவர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் பண்ணை, கடவுள் எழுப்பும் கட்டடம்.
1 கொரிந்தியர் 3 : 10 (RCTA)
கடவுள் எனக்களித்த அருளுக்கேற்பக் கை தேர்ந்த கட்டடக் கலைஞனைப் போல் நான் அடித்தளம் இட்டேன். வேறொருவன் அதன் மேல் கட்டுகிறான். ஒவ்வொருவனும் தான் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாய் இருக்கவேண்டும்.
1 கொரிந்தியர் 3 : 11 (RCTA)
ஏனெனில், ஏற்கனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறு அடித்தளத்தை எவனும் இடக்கூடாது.
1 கொரிந்தியர் 3 : 12 (RCTA)
இந்த அடித்தளத்தின் மேல், பொன், வெள்ளி,. விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றாலோ, மரம், புல், வைக்கோல் ஆகியவற்றாலோ ஒருவன் கட்டடம் எழுப்பலாம்.
1 கொரிந்தியர் 3 : 13 (RCTA)
அவனவன் செய்த வேலை இறுதியில் தெரிந்துவிடும். இறுதி நாள் அதைக் காட்டி விடும். ஏனெனில், அது நெருப்பின் நாளாய் வெளிப்படும். அந்த நெருப்பு ஒவ்வொருவனுடைய வேலை எத்தன்மையது என்பதை எண்பித்துவிடும்.
1 கொரிந்தியர் 3 : 14 (RCTA)
கட்டிய கட்டடம் நிலைத்திருந்தால் கட்டியவன் கூலி பெறுவான். கட்டியது எரிந்து போனால், அது அவனுக்கு இழப்பாகும்.
1 கொரிந்தியர் 3 : 15 (RCTA)
அவனோ நெருப்பில் அகப்பட்டுத் தப்பியவன்போல் மீட்படைவான்.
1 கொரிந்தியர் 3 : 16 (RCTA)
நீங்கள் கடவுளின் ஆலயம் என்பதும், கடவுளின் ஆவி உங்களுள் குடிகொண்டிருக்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?
1 கொரிந்தியர் 3 : 17 (RCTA)
கடவுளின் ஆலயத்தை எவனாவது அழித்தால், அவனைக் கடவுள் அழித்து விடுவார். ஏனெனில், கடவுளின் ஆலயம் பரிசுத்தமானது. நீங்களே அவ்வாலயம்.
1 கொரிந்தியர் 3 : 18 (RCTA)
யாரும் ஏமாந்து போகக் கூடாது. உங்களுள் எவனாவது இவ்வுலகப் போக்கின்படி தன்னை ஞானி எனக் கருதினால், ஞானியாகும்படி மடையனாகட்டும்.
1 கொரிந்தியர் 3 : 19 (RCTA)
ஏனெனில், இவ்வுலகத்தின் ஞானம் கடவுள் முன் மடமை தானே. ' ஞானிகளை அவர்களுடைய சூழ்ச்சியிலேயே சிக்க வைக்கிறார்' என்றும்,
1 கொரிந்தியர் 3 : 20 (RCTA)
' ஞானிகளின் எண்ணங்களை அறிவார், அவை வீண் என அவருக்குத் தெரியும் என்றும் எழுதியுள்ளதன்றோ?
1 கொரிந்தியர் 3 : 21 (RCTA)
ஆகையால் வெறும் மனிதர்களைப் பற்றி யாரும் பெருமை பாராட்டலாகாது.
1 கொரிந்தியர் 3 : 22 (RCTA)
சின்னப்பனோ, அப்பொல்லோவோ, கெபாவோ, உலகமோ,
1 கொரிந்தியர் 3 : 23 (RCTA)
வாழ்வோ, சாவோ, நிகழ்காலமோ எதிர்காலமோ எல்லாம் உங்களுக்கு உரியவையே. நீங்களோ கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்கு உரியவர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23

BG:

Opacity:

Color:


Size:


Font: