1 கொரிந்தியர் 2 : 1 (RCTA)
சகோதரர்களே, கடவுளின் மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது சிறந்த சொல் வன்மையையோ, ஞானத்தையோ காட்டிக் கொள்ளவில்லை.
1 கொரிந்தியர் 2 : 2 (RCTA)
ஏனெனில், நான் உங்களிடையே இருந்த போது இயேசு கிறிஸ்துவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையுண்ட அவரைத் தவிர வேறெதையும் அறிய விரும்பவில்லை.
1 கொரிந்தியர் 2 : 3 (RCTA)
உங்களோடு இருந்த போது வலுவற்றவனாய் மிகுந்த அச்ச நடுக்கத்தோடு இருந்தேன்.
1 கொரிந்தியர் 2 : 4 (RCTA)
நான் சொன்னதும் அறிவித்ததும் மனித ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை; ஆவியானவரும், அவரது வல்லமையும் தந்த அத்தாட்சியின் மீது அமைந்தன
1 கொரிந்தியர் 2 : 5 (RCTA)
உங்கள் விசுவாசம் மனிதர்களின் ஞானத்தில் ஊன்றியிராமல் கடவுளின் வல்லமையிலே ஊன்றியிருக்க வேண்டுமென்றே இவ்வாறாயிற்று.
1 கொரிந்தியர் 2 : 6 (RCTA)
எனினும், நிறைவு பெற்றவர்களிடையில் நாங்கள் ஞானத்தையே பேசுகிறோம். ஆனால் அது இவ்வுலகின் ஞானமன்று அழிவுக்குரிய இவ்வுலகத் தலைவர்களின் ஞானமுமன்று.
1 கொரிந்தியர் 2 : 7 (RCTA)
கடவுளின் ஞானத்தையே பேசுகிறோம். அதுவோ மறை பொருளான ஞானம், இது வரையில் அது மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அது நமது மகிமைக்காக உலகம் உண்டாகு முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது.
1 கொரிந்தியர் 2 : 8 (RCTA)
அதை இவ்வுலகின் தலைவர்களுள் யாரும் அறிந்து கொள்ளவில்லை. அறிந்திருந்தால் மாட்சிமை மிக்க ஆண்டவரைச் சிலுவையில் அறைந்திருக்கவே மாட்டார்கள்.
1 கொரிந்தியர் 2 : 9 (RCTA)
நாங்கள் அறிவிப்பதோ மறைநூலில் எழுதியுள்ளவாறு, ' கண்ணுக்குப் புலப்படாதது, காதுக்கு எட்டாதது, மனித உள்ளத்தில் எழாதது. கடவுள் தமக்கு அன்பு செய்கிறவர்களுக்காக ஏற்பாடு செய்தது'.
1 கொரிந்தியர் 2 : 10 (RCTA)
இதைக் கடவுள் தம் ஆவியின் வழியாய் நமக்கு வெளிப்படுத்தினார். ஆவியானவர் எல்லாவற்றையும் ஊடுருவிக் காண்கிறார். கடவுளுடைய உள்ளத்தின் ஆழத்தையும் காண்கிறார்.
1 கொரிந்தியர் 2 : 11 (RCTA)
மனிதனின் உள்ளத்தில் இருப்பதை மனிதனுக்குள் இருக்கும் அவன் ஆவியேயன்றி வேறு எவரும் அறியார். அவ்வாறே கடவுளின் உள்ளத்தில் இருப்பதைக் கடவுளின் ஆவியேயன்றி வேறெவரும் அறியார்.
1 கொரிந்தியர் 2 : 12 (RCTA)
நாம் பெற்றுக் கொண்டது இந்த உலகத்தின் மனப்பான்மையன்று, கடவுளிடமிருந்து வரும் ஆவியே, கடவுள் நமக்கு அருளியவற்றை அந்த ஆவியினால் உணரக் கூடும்.
1 கொரிந்தியர் 2 : 13 (RCTA)
அவற்றை நாங்கள் மனித ஞானம் கற்பிக்கும் சொற்களால் பேசாமல், ஆவியானவர் கற்பிக்கும் சொற்களால் பேசுகிறோம். இங்ஙனம், தேவ ஆவியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு ஆவிக்குரியவற்றை விளக்கியுரைக்கிறோம்.
1 கொரிந்தியர் 2 : 14 (RCTA)
மனித இயல்பால் மட்டும் இயங்குபவன் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. அவை அவனுக்கு மடமையாகத் தோன்றும். அவற்றை அவனால் அறியவும் இயலாது. ஏனெனில், தேவ ஆவியைக் கொண்டு தான் அவற்றை மதித்துணர முடியும்.
1 கொரிந்தியர் 2 : 15 (RCTA)
அந்த ஆவியைப் பெற்றுக் கொண்டவன் எல்லாவற்றையும் மதித்துணர்கிறான்.
1 கொரிந்தியர் 2 : 16 (RCTA)
அவனையோ, ஆவியைப் பெறாத எவனும் மதித்துணர முடியாது. 'ஆண்டவர் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரை தரக்கூடியவர் யார்? ஆனால் நாம் கிறிஸ்துவின் மனத்தைக் கொண்டுள்ளோம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

BG:

Opacity:

Color:


Size:


Font: