1 கொரிந்தியர் 14 : 1 (RCTA)
அன்பை நாடுங்கள்; அதன் பின் ஆவிக்குரிய வரங்களை ஆவலோடு தேடலாம்; சிறப்பாக இறைவாக்கு வரத்தை விரும்புங்கள்.
1 கொரிந்தியர் 14 : 2 (RCTA)
எனெனில், பரவசப் பேச்சுப் பேசுகிறவன் மனிதர்களிடம் பேசுவதில்லை; கடவுளிடமே பேசுகிறான்; அவன் பேசுவதை யாருமே புரிந்து கொள்வதில்லை; ஆவியின் ஏவுதலால் மறைபொருள்களையே பேசுகிறான்.
1 கொரிந்தியர் 14 : 3 (RCTA)
இறைவாக்கு உரைப்பவனோ மனிதர்களிடம் பேசுகிறான்; அவன் உரைப்பது ஞான வளர்ச்சி தருகிறது; ஊக்கம் ஊட்டுகிறது; ஆறுதல் அளிக்கிறது.
1 கொரிந்தியர் 14 : 4 (RCTA)
பரவசப் பேச்சுப் பேசுபவன் தான் மட்டும் ஞான வளர்ச்சி பெறுகிறான்; ஆனால், இறைவாக்கு உரைப்போன் திருச்சபை ஞான வளர்ச்சிப் பெறச் செய்கிறான்.
1 கொரிந்தியர் 14 : 5 (RCTA)
நீங்கள் எல்லாரும் பரவசப் பேச்சுத் தாராளமாய்ப் பேசலாம்; ஆனால், அதைவிட நீங்கள் இறைவாக்கு உரைக்க வேண்டும் என்பதே என் விருப்பம். பரவசப் பேச்சுப் பேசுகிறவன் திருச்சபை ஞான வளர்ச்சியடையும் படி விளக்கமும் கூறினாலொழிய அவனைவிட இறைவாக்குரைப்பவனே மேலானவன்.
1 கொரிந்தியர் 14 : 6 (RCTA)
சகோதரர்களே, நான் உங்களிடம் வந்து,. உங்களுக்குத் திருவெளிப்பாடு, ஞான அறிவு, இறைவாக்கு, போதனை இவற்றில் ஒன்றையேனும் எடுத்துச் சொல்லாமல் பரவசப்பேச்சு மட்டும் பேசினால், உங்களுக்குப் பயன் என்ன?
1 கொரிந்தியர் 14 : 7 (RCTA)
குழல் அல்லது யாழ் போன்ற உயிரற்ற இசைக்கருவிகளை எடுத்துக் கொள்வோம் அவை வேறுபட்ட ஓசையை எழுப்பாவிடில், குழலோசையையும் யாழிசையும் அறிவதெப்படி?
1 கொரிந்தியர் 14 : 8 (RCTA)
அவ்வாறே, எக்காளம் தெளிவாக முழங்காவிடில், போர் முனைக்கு எவன் ஆயத்தப்படுத்திக் கொள்வான்?
1 கொரிந்தியர் 14 : 9 (RCTA)
அவ்வாறே நீங்களும் பரவசப் பேச்சுப் பேசும்போது தெளிவாகப் பேசாவிட்டால், நீங்கள் சொல்வது விளங்குவதெப்படி? உங்கள் பேச்சு காற்றோடு போய் விடும்.
1 கொரிந்தியர் 14 : 10 (RCTA)
உலகத்தில் எத்தனையோ மொழிகள் இருக்கலாம்; அவற்றுள் பொருள் தராதது ஒன்றேனுமில்லை.
1 கொரிந்தியர் 14 : 11 (RCTA)
பேச்சொலியின் பொருள் எனக்கு விளங்காது இருந்தால், பேசுகிறவனுக்கு நான் அந்நியனாயிருப்பான்.
1 கொரிந்தியர் 14 : 12 (RCTA)
ஆதலால் ஆவிக்குரிய வரங்களை ஆர்வமாய்த் தேடும் நீங்கள் திருச்சபைக்கு ஞான வளர்ச்சி தரும் வரங்களில் மேன்மையடைய முயலுங்கள்.
1 கொரிந்தியர் 14 : 13 (RCTA)
எனவே, பரவசப் பேச்சுப் பேசுபவன் விளக்கம் கூறும் திறனைப்பெறச் செபிக்க வேண்டும்.
1 கொரிந்தியர் 14 : 14 (RCTA)
ஏனெனில், நான் பரவசப் பேச்சில் செபம் செய்தால், என் ஆவி எனக்குள் செபம் செய்யும், என் மனமோ பயன் பெறாது.
1 கொரிந்தியர் 14 : 15 (RCTA)
அப்படியானால் செய்யவேண்டியதென்ன? ஆவியாலும் செபிக்கவேண்டும், மனத்தாலும் செபிக்க வேண்டும். ஆவியாலும் புகழ்பாட வேண்டும், மனத்தாலும் புகழ் பாடவேண்டும்.
1 கொரிந்தியர் 14 : 16 (RCTA)
இல்லையேல், நீ ஆவியால் இறைபுகழ் கூறும்போது, சபையில் அமர்ந்திருக்கும் பொதுமக்கள் உனது நன்றிச் செபத்திற்கு எவ்வாறு ' ஆமென் ' எனச் சொல்லுவார்கள்? நீ பேசுவது அவர்களுக்குப் புரியவில்லையே!
1 கொரிந்தியர் 14 : 17 (RCTA)
நீ நன்றாகத் தான் நன்றி கூறுகிறாய்; ஆனாலும் மற்றவனுக்கு அதனால் ஞான வளர்ச்சி இல்லையே!
1 கொரிந்தியர் 14 : 18 (RCTA)
கடவுள் அருளால் உங்கள் அனைவரையும்விட மேலாக நான் பரவசப் பேச்சுப் பேசுகிறேன்.
1 கொரிந்தியர் 14 : 19 (RCTA)
ஆனாலும் நான் சபையிலே பேசினால் பரவசப் பேச்சில் பத்தாயிரம் சொற்கள் பேசுவதைவிட , மற்றவர்களுக்குக் கற்பிக்க அறிவுத் தெளிவோடு நாலைந்து சொல் மட்டுமே பேசுவதை விரும்புவேன்
1 கொரிந்தியர் 14 : 20 (RCTA)
சகோதரர்களே, அறிவுத் திறனில் குழந்தைகளாய் இராதீர்கள்; தீமையிலே குழந்தைகளாயும், அறிவுத் திறனில் முதிர்ந்தவர்களாயும் இருங்கள்.
1 கொரிந்தியர் 14 : 21 (RCTA)
' வேற்று மொழியினர் வாயிலாகவும் வேற்றினத்தார் வாய்ச்சொல்லாலும் இந்த மக்களிடம் பேசுவேன். அப்பொழுதும் அவர்கள் எனக்குச் செவி கொடுக்க மாட்டார்கள் என்கிறார் ஆண்டவர் ' என்று திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.
1 கொரிந்தியர் 14 : 22 (RCTA)
ஆகவே பரவசப் பேச்சு விசுவாசிகளுக்கன்று, அவிசுவாசிகளுக்கே அடையாளமாய் உள்ளது. இறைவாக்கோ அவிசுவாசிகளுக்கன்று, விசுவாசிகளுக்கே அடையாளமாய் உள்ளது.
1 கொரிந்தியர் 14 : 23 (RCTA)
அப்படியிருக்க, முழுச்சபையும் ஒன்றாகக் கூடும்பொழுது, எல்லாரும் பரவசப் பேச்சுப் பேசினால், அங்கே வரும் பொதுமக்களோ அவிசுவாசிகளோ உங்களைப் பைத்தியக்காரர் என்று சொல்ல மாட்டார்களா?
1 கொரிந்தியர் 14 : 24 (RCTA)
ஆனால் எல்லாரும் இறைவாக்கு உரைக்கும்போது, அவிசுவாசியோ, பொதுமக்களுள் ஒருவனோ அங்கே வந்தால், அனைவரும் கூறுவது, அவனுடைய மனச்சாட்சியின் நிலையை எடுத்துக்காட்டி, அவனைத் தீர்ப்புக்கு உட்படுத்துகிறது.
1 கொரிந்தியர் 14 : 25 (RCTA)
அவனது உள்ளத்தில் மறைந்திருப்பது வெளிப்படும். அப்பொழுது அவன் குப்புற விழுந்து, கடவுளைத் தொழுது, ' உண்மையாகவே கடவுள் உங்களிடையில் உள்ளார் ' என அறிக்கையிடுவான்.
1 கொரிந்தியர் 14 : 26 (RCTA)
அப்படியானால், சகோதரர்களே, என்ன முடிவு செய்வது? நீங்கள் கூடிவரும்பொழுது. உங்களுள் ஒருவன் புகழ் பாடுவதாகவோ, போதனை செய்வதாகவோ, திருவெளிப்பாடு உரைப்பதாகவோ, பரவசப் பேச்சுப் பேசுவதாகவோ, விளக்கம் கூறுவதாகவோ இருந்தால், எல்லாம் ஞானவளர்ச்சி தர நடை பெறட்டும்.
1 கொரிந்தியர் 14 : 27 (RCTA)
பரவசப் பேச்சுப் பேசுவதாயிருந்தால், இருவர் பேசலாம்; மிஞ்சினால் மூவர் பேசலாம். ஆயினும் ஒருவர் பின் ஒருவராகப் பேசவேண்டும்; ஒருவன் விளக்கம் கூறட்டும்.
1 கொரிந்தியர் 14 : 28 (RCTA)
விளக்கம் கூறுபவன் இல்லாவிட்டால், அவர்கள் சபையில் பேசாதிருக்கட்டும்; தனக்குள் கடவுளோடு உரையாடட்டும்.
1 கொரிந்தியர் 14 : 29 (RCTA)
இறை வாக்கினரோ இருவர் அல்லது மூவர் பேசலாம்; மற்றவர்கள் அவர்கள் பேசுவதைத் தேர்ந்து தெளியட்டும்.
1 கொரிந்தியர் 14 : 30 (RCTA)
சபையில் அமைந்திருக்கும் ஒருவனுக்குத் திருவெளிப்பாடு அருளப்பட்டால் முன்னர் பேசிக்கொண்டிருந்தவன் நிறுத்திக்கொள்ளட்டும்.
1 கொரிந்தியர் 14 : 31 (RCTA)
நீங்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இறைவாக்குரைக்கலாம்; அப்போதுதான் எல்லாரும் கற்றுக் கொள்ளவும், ஊக்கம் பெறவும் இயலும்.
1 கொரிந்தியர் 14 : 32 (RCTA)
இறைவாக்கினர் தாங்கள் பெற்ற ஏவுதலை அடக்கிக் கொள்ள முடியும்.
1 கொரிந்தியர் 14 : 33 (RCTA)
ஏனெனில் கடவுள் குழப்பத்தின் கடவுளல்லர், அமைதியின் கடவுளே. இறை மக்களின் எல்லாச் சபைகளிலும் நடப்பதுபோல், சபையில் பெண்கள் பேசாதிருக்க வேண்டும்..
1 கொரிந்தியர் 14 : 34 (RCTA)
பேச அவர்களுக்கு அனுமதி இல்லை; அவர்கள் அடங்கியிருக்க வேண்டும். திருச்சட்டமும் அவ்வாறே கூறுகிறது.
1 கொரிந்தியர் 14 : 35 (RCTA)
அவர்கள் ஏதாவது தெரிந்துகொள்ள விரும்பினால் வீட்டிலே தங்கள் கணவரைக் கேட்டுக்கொள்ளட்டும். ஏனெனில் சபையில் பேசுவது பெண்களுக்கு அழகன்று.
1 கொரிந்தியர் 14 : 36 (RCTA)
கடவுளின் வாக்கு உங்களிடமிருந்தா வெளிப்பட்டது?
1 கொரிந்தியர் 14 : 37 (RCTA)
உங்களிடம் மட்டுமா வந்தது? ஒருவன் தான் இறைவாக்கினன் என்றோ, ஆவியின் ஏவுதல் பெற்றவன் என்றோ எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுவது ஆண்டவருடைய கட்டளை என அவன் ஒத்துக்கொள்வானாக.
1 கொரிந்தியர் 14 : 38 (RCTA)
இதை எவனாவது ஏற்காவிடில், நீங்களும் அவனை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
1 கொரிந்தியர் 14 : 39 (RCTA)
ஆகையால் சகோதரர்களே, இறைவாக்குரைப்பதையே ஆர்வமாய்த் தேடுங்கள்; பரவசப் பேச்சுப் பேசுவதையும் தடுக்காதீர்கள்.
1 கொரிந்தியர் 14 : 40 (RCTA)
ஆனால் எல்லாம் பாங்கான முறையில் ஒழுங்காக நடைபெறவேண்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40

BG:

Opacity:

Color:


Size:


Font: