1 நாளாகமம் 9 : 1 (RCTA)
இவ்வாறு இஸ்ராயேலர் எல்லாரும் கணக்கிடப் பட்டனர். இத்தொகை இஸ்ராயேல், யூதா அரசர்களின் வரலாறுகளில் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் (தங்கள் கடவுளுக்குப்) பிரமாணிக்கமாய் இருக்கவில்லை. எனவே சிறைப்படுத்தப்பட்டுப் பபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
1 நாளாகமம் 9 : 2 (RCTA)
அங்கிருந்து திரும்பி வந்து தங்களுக்குச் சொந்தமான இடங்களிலும் நகர்களிலும் முதன் முதல் வந்து வாழத் தொடங்கியவர்கள்: இஸ்ராயேலரும் குருக்களும், லேவியரும் ஆலய ஊழியருமேயாவர்.
1 நாளாகமம் 9 : 3 (RCTA)
யூதா, பென்யமீன், எப்பிராயீம், மனாசே ஆகிய குலங்களின் மக்களில் சிலர் யெருசலேமில் குடியிருந்தனர். அவர்களின் பெயர்கள் வருமாறு:
1 நாளாகமம் 9 : 4 (RCTA)
யூதாவின் மகன் பாரேசின் சந்ததியில் பிறந்த ஒத்தே- இவர் அமீயூதின் மகன்; இவர் அம்ரியின் மகன்; இவர் ஒம்ராயிமின் மகன்; இவர் பொன்னியின் மகன்.
1 நாளாகமம் 9 : 5 (RCTA)
சிலோவியரில் மூத்தவர் அசாயியாவும், அவர் மக்களும்;
1 நாளாகமம் 9 : 6 (RCTA)
சாராவின் புதல்வர்களில் எகுயேலும், அவருடைய சகோதரர்களான அறுநூற்றுத் தொண்ணுறு பேருமாம்.
1 நாளாகமம் 9 : 7 (RCTA)
பென்யமீன் புதல்வரிலோ, அசனாவுக்குப் பிறந்த ஓதுயியாவின் மகன் மொசொல்லாமுக்குப் பிறந்த சலோவும், யெரோகாமின் மகன் யொபானியாவும், மொக்கோரியின் மகன் யொபானியாவும்,
1 நாளாகமம் 9 : 8 (RCTA)
மொக்கோரியுன் மகன் ஓசிக்குப் பிறந்த ஏலாவும், எபானியாசின் மகன் ரகுயேலின் புதல்வன் சப்பாத்தியாசுக்குப் பிறந்த மொசொல்லாமும்,
1 நாளாகமம் 9 : 9 (RCTA)
தத்தம் குடும்ப வரிசைப்படி அவர்களுடைய உறவினராயிருந்த தொள்ளாயிரத்து ஐம்பத்தாறு பேருமாம். இவர்கள் அனைவரும் தங்கள் வம்ச வரிசைப்படி குடும்பத் தலைவராய் இருந்தனர்.
1 நாளாகமம் 9 : 10 (RCTA)
குருக்களில் யெதாயிரா, யொயியாரிப், யாகீன்,
1 நாளாகமம் 9 : 11 (RCTA)
அக்கித்தோப்பின் மகன் மராயியோத்தின் புதல்வன் சாத்தோக்குக்குப் பிறந்த மொசொல்லாமின் மகன் எல்கியாசின் புதல்வனும் ஆண்டவரது ஆலயத்தின் பெரிய குருவுமான அசாரியாசுமாம்.
1 நாளாகமம் 9 : 12 (RCTA)
மெல்கியாசின் புதல்வன், பாசூரின் மகன் எரோகாமுக்குப் பிறந்த அதாயியாசு, எம்மோரின் மகன் மொசொல்லாமித்தின் புதல்வன் மொசொல்லாமுக்குப் பிறந்த எஸ்ராவின் மகன் அதியேலுடைய புதல்வன் மாசாயி;
1 நாளாகமம் 9 : 13 (RCTA)
மேலும் தங்கள் குடும்பங்களில் தலைவர்களாயிருந்த அவர்களுடைய உறவினர் ஆயிரத்து எழுநூற்று அறுபது பேர். இவர்கள் ஆண்டவரின் ஆலயத்தில் பணிவிடை புரிதலில் திறமை மிக்கவர்களாவர்.
1 நாளாகமம் 9 : 14 (RCTA)
லேவியர்களில் மெராரியின் புதல்வரில் அசேபியாவின் மகன் எஸ்ரிகாமின் புதல்வன் அசூபுக்குப் பிறந்த செமையா,
1 நாளாகமம் 9 : 15 (RCTA)
தம்சனான பக்பக்கார், காலால், அசாப்பின் புதல்வன் செக்கிரியின் மகன் மிக்காவுக்குப் பிறந்த மத்தானியா,
1 நாளாகமம் 9 : 16 (RCTA)
யூதித்தனுக்குப் பிறந்த காலாலின் மகன் செமெயியாசுக்குப் பிறந்த ஒப்தியா, நெத்தோப்பாத்தியருடைய ஊர்களில் குடியிருந்த எல்கனாவின் மகன் ஆசாவுக்குப் பிறந்த பரக்கியா.
1 நாளாகமம் 9 : 17 (RCTA)
வாயிற்காவலர் பெயர்கள் வருமாறு: செல்லும், ஆக்கூப், தெல்மோன், அகிமாம் ஆகியோரும் அவர்களின் உறவினருமாம். செல்லுமே இவர்களுக்குத் தலைவராய் இருந்தார்.
1 நாளாகமம் 9 : 18 (RCTA)
லேவியருடைய கூடாரங்களில் வாழ்ந்து கொண்டு, கிழக்கே உள்ள அரச வாயிலை இந்நாள் வரை இவர்களே காவல் புரிந்து வருகின்றனர்.
1 நாளாகமம் 9 : 19 (RCTA)
கோரேயின் புதல்வன் அபியசாப்பின் மகன் கோரேக்குப் பிறந்த செல்லும் என்பவரும், அவருடைய சகோதரர்களும், அவருடைய தந்தை வீட்டாரும் உறவினருமான கோரியர்களும் கூடார வாயிலைக் காவல் புரிந்து வந்தனர். மேலும் அவர்களுடைய குடும்பத்தார் ஆண்டவரது பாளைய வாயிலைக் காத்து வந்தனர்.
1 நாளாகமம் 9 : 20 (RCTA)
எலியெசாருடைய மகன் பினேசு முன்பு அவர்களுக்குத் தலைவராய் இருந்தார். ஆண்டவரும் அவரோடு இருந்தார்.
1 நாளாகமம் 9 : 21 (RCTA)
மொசொல்லாமியாவின் மகன் சக்கரியாஸ் உடன்படிக்கைக் கூடார வாயிலைக் காவல் புரிந்து வந்தார்.
1 நாளாகமம் 9 : 22 (RCTA)
கதவுகள் தோறும் காவல் புரியத் தேர்ந்துகொள்ளப்பட்ட இவர்களின் எண்ணிக்கை இருநூற்றுப் பன்னிரண்டு. அவர்கள் தங்கள் சொந்த ஊர்களிலே தலைமுறை அட்டவணையில் பதிவு செய்யப்பட்டிருந்தவர்கள். தாவீதும் திருக்காட்சியாளர் சாமுவேலும் அவர்களை நம்பி அந்தந்த வேலைகளில் அமர்த்தினர்.
1 நாளாகமம் 9 : 23 (RCTA)
இவ்வாறு அவர்களும் அவர்களின் புதல்வர்களும் ஆண்டவரது வீடான கூடாரத்தின் வாயில்களைக் காவல் புரிய நியமிக்கப்பட்டனர்.
1 நாளாகமம் 9 : 24 (RCTA)
வாயிற் காவலர்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளிலும் காவல் புரிந்தனர்.
1 நாளாகமம் 9 : 25 (RCTA)
அவர்களுடைய உறவினர்கள் தங்கள் ஊர்களிலிருந்து வந்து சிலசமயம் ஒருவாரத்திற்கு அவர்களோடு இருப்பர்.
1 நாளாகமம் 9 : 26 (RCTA)
ஏனெனில் தலைமைக் காவலரான அந்த நால்வரும் அங்கேயே நிரந்தரமாகத் தங்கியிருந்தார்கள். லேவியரான இவர்கள் ஆண்டவரது ஆலயத்தின் கருவூல அறைகளையும் பண்டசாலைகளையும் கண்காணித்து வந்தனர்.
1 நாளாகமம் 9 : 27 (RCTA)
அவர்கள் தாங்கள் காவல் புரியும் காலத்தில் ஆண்டவரின் ஆலயத்தைச் சுற்றிலும் இரவோடு இரவாய்க் காவல் புரிந்து காலையில் குறித்த நேரத்தில் கதவுகளைத் திறந்து விடுவார்கள்.
1 நாளாகமம் 9 : 28 (RCTA)
அவர்களுள் சிலர் திருவழிபாட்டிற்குத் தேவையான தட்டுமுட்டுகளைப் பாதுகாத்து வந்தனர். அவற்றை உள்ளே கொண்டு வருமுன்னும் வெளியே கொண்டு போகுமுன்னும் எண்ணிப் பார்ப்பது அவர்கள் கடமை.
1 நாளாகமம் 9 : 29 (RCTA)
அவர்களில் சிலர் திருவிடத்தின் ஏனைய தட்டு முட்டுகளையும் மிருதுவான மாவு, திராட்சை இரசம், எண்ணெய், தூபம், நறுமணப் பொருட்களையும் மேற்பார்த்து வந்தனர்.
1 நாளாகமம் 9 : 30 (RCTA)
குருக்களின் புதல்வர்களோ நறுமணப் பொருட்களைக் கொண்டு நறுமண எண்ணெய் தயாரிப்பார்கள்.
1 நாளாகமம் 9 : 31 (RCTA)
கோரியனான செல்லும் என்பவரின் தலைமகன் மத்தாத்தியாசு என்ற லேவியன் பொரிச்சட்டியில் பொரிக்கப்பட்டவற்றைக் கவனித்து வந்தார்.
1 நாளாகமம் 9 : 32 (RCTA)
அவர்களுடைய சகோதரரான காத்தின் புதல்வரில் சிலருக்குக் காணிக்கை அப்பங்களைக் கண்காணிக்கும் பணி கொடுக்கப் பட்டிருந்தது. அவர்கள் ஓய்வுநாள் தோறும் புது அப்பங்களைத் தயாரித்துக் கொண்டு வருவர்.
1 நாளாகமம் 9 : 33 (RCTA)
இவர்களிலே குடும்பத்தலைவர்களாய் இருந்து வந்த லேவியரான பாடகர் இரவும் பகலும் இடைவிடாது பணிபுரிய வேண்டியிருந்ததால் மற்ற வேலைகளினின்று விடுபட்டு ஆலய அறைகளிலேயே தங்கியிருந்தார்கள்.
1 நாளாகமம் 9 : 34 (RCTA)
லேவியர்களில் குடும்பத்தலைவர்களாய் இருந்தவர் தத்தம் தலைமுறைகளில் தலைவர்களாயும் இருந்தனர். இவர்கள் யெருசலேமில் குடியிருந்தார்கள்.
1 நாளாகமம் 9 : 35 (RCTA)
காபாவோனில் வாழ்ந்து வந்தவர்கள்: மாக்கா என்பவளின் கணவரான ஏகியேல்;
1 நாளாகமம் 9 : 36 (RCTA)
அவருடைய தலைமகன் அப்தோன்; பின் பிறந்தவர்கள் சூர், சீஸ், பால்,
1 நாளாகமம் 9 : 37 (RCTA)
நேர், நாதாப், கெதோர், அகியோசக்கரியாஸ், மசெல்லோத் ஆகியோர்.
1 நாளாகமம் 9 : 38 (RCTA)
மசெல்லோத் சமானைப் பெற்றார். இவர்கள் தங்கள் உறவினருக்கு அருகே யெருசலேமில் தங்கள் குடும்பத்தினரோடு குடியிருந்தனர்.
1 நாளாகமம் 9 : 39 (RCTA)
நேர் சீசைப் பெற்றார்; சீஸ் சவுலைப் பெற்றார்; சவுல் யோனத்தான், மெல்கிசுவா, அபினதாப், ஏசுபால் என்பவர்களைப் பெற்றார்.
1 நாளாகமம் 9 : 40 (RCTA)
யோனத்தானின் மகன் பெயர் மெரிபாவால். மெரிபாவால் மிக்காவைப் பெற்றார்.
1 நாளாகமம் 9 : 41 (RCTA)
மிக்காவின் புதல்வரோ பித்தோன், மெலேக், தராகா, ஆகாஸ் ஆகியோர்.
1 நாளாகமம் 9 : 42 (RCTA)
ஆகாஸ் யாராவைப் பெற்றார். யாரா அலமாத், அஸ்மோத், சம்ரி என்போரைப் பெற்றார். சம்ரி மோசாவைப் பெற்றார்.
1 நாளாகமம் 9 : 43 (RCTA)
மோசா பானாவைப் பெற்றார். இவரின் மகன் ரப்பாயியா ஏலாசாவைப் பெற்றார்.
1 நாளாகமம் 9 : 44 (RCTA)
ஏலாசா ஆசேலைப் பெற்றார். ஆசேலுக்கு எஸ்ரிகாம், பொக்ரு, இஸ்மாயேல், சாரியா, ஒப்தியா, ஆனான் ஆகிய மக்கள் அறுவர் இருந்தனர்.
❮
❯