1 நாளாகமம் 8 : 1 (RCTA)
பென்யமீனின் தலைமகன் பெயர் பாலே. பின் ஆஸ்பேலையும், மூன்றாவதாக ஆகாராவையும், நான்காவதாக நொகாவையும்,
1 நாளாகமம் 8 : 2 (RCTA)
ஐந்தாவதாக ரப்பாவையும் பெற்றார்.
1 நாளாகமம் 8 : 3 (RCTA)
பாலேய்க்குப் பிறந்த புதல்வர்:
1 நாளாகமம் 8 : 4 (RCTA)
ஆதார், கேரா, ஆபியுத், அபிசுயே, நாமான், அகோவே,
1 நாளாகமம் 8 : 5 (RCTA)
கேரா, செப்புபான், உராம் ஆகியோர்.
1 நாளாகமம் 8 : 6 (RCTA)
நாமான், ஆக்கியா, கேரா ஆகியோர் ஆகோதின். புதல்வர்கள்.
1 நாளாகமம் 8 : 7 (RCTA)
குடும்பதலைவர்களாய் விளங்கி வந்த இவர்கள் காபாவிலிருந்து மனகாத்துக்கு நாடு கடத்தப் பட்டனர். இவர்களுள் எகிளாம் என்று அழைக்கப்பட்ட கேரா ஓசாவையும் அகியுதையும் பெற்றார்.
1 நாளாகமம் 8 : 8 (RCTA)
சகாராயீம் தம் மனைவியர் ஊசிம், பாரா என்பவர்களை அனுப்பிவிட்ட பிறகு, மோவாப் நாட்டில் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தன.
1 நாளாகமம் 8 : 9 (RCTA)
அதாவது, தம் மனைவி ஏதேசிடம் பொபாப்,
1 நாளாகமம் 8 : 10 (RCTA)
செயியா, மோசா, மொல்கோம், ஏகூஸ் செக்கியா, ஏகூஸ், செக்கியா, மார்மா என்பவர்களைப் பெற்றார். சகாராயீமின் புதல்வரான இவர்கள் குடும்பத் தலைவர்களாய் இருந்து வந்தார்கள்.
1 நாளாகமம் 8 : 11 (RCTA)
மெகூசிம் அபிதோப்பையும் எல்பாலையும் பெற்றார்.
1 நாளாகமம் 8 : 12 (RCTA)
எல்பாலின் புதல்வரோ: ஏபேர், மிசாம், ஓனோவையும் லோதையும் அவற்றின் சிற்றூர்களையும் தோற்றுவித்த சாமாத்,
1 நாளாகமம் 8 : 13 (RCTA)
காத்தின் குடிகளை முறியடித்து, ஆயியாலோனில் குடியிருந்த மக்களுக்குத் தலைவர்களாய் இருந்து வந்த பாரியா, சாமா, ஆகியோராவர்.
1 நாளாகமம் 8 : 14 (RCTA)
அகியோ, சேசாக், எரிமோத்,
1 நாளாகமம் 8 : 15 (RCTA)
சபதியா, ஆரோத்,
1 நாளாகமம் 8 : 16 (RCTA)
ஏதேர், மிக்காயேல், எஸ்பா, யொவா என்பவர்கள் பாரியாவின் புதல்வர்கள்.
1 நாளாகமம் 8 : 17 (RCTA)
சபாதியா, மொசொல்லாம், எசேசி,
1 நாளாகமம் 8 : 18 (RCTA)
ஏபேர், ஏசாமரி, எசுலியா, யோபாப் ஆகியோர் எல்பாலுக்குப் பிறந்த ஆண் மக்களாவர்.
1 நாளாகமம் 8 : 19 (RCTA)
யாசிம், செக்கிரி, சப்தி, எலியோவெனாய்,
1 நாளாகமம் 8 : 20 (RCTA)
செலேதாய், எலியேல், அதாபியா,
1 நாளாகமம் 8 : 21 (RCTA)
பறாயியா, சமராத் ஆகியோர் செமேயின் ஆண் மக்களாவர்.
1 நாளாகமம் 8 : 22 (RCTA)
எஸ்ப்பாம், ஏபேர், எலியேல்,
1 நாளாகமம் 8 : 23 (RCTA)
அப்தோன், செக்கிரி, ஆனான்,
1 நாளாகமம் 8 : 24 (RCTA)
ஆனானியா, ஏலாம், அனத்தோத்தியா,
1 நாளாகமம் 8 : 25 (RCTA)
எப்தையா, பானுவேல் என்போர் சேசாக்கின் புதல்வர்களாவர்.
1 நாளாகமம் 8 : 26 (RCTA)
சம்சரி, சொகோரியா, ஒத்தோலியா,
1 நாளாகமம் 8 : 27 (RCTA)
எர்சியா, எலியா, செக்கிரி ஆகியோர் எரொகாமின் புதல்வர்கள்.
1 நாளாகமம் 8 : 28 (RCTA)
இவர்கள் யெருசலேமில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் அனைவரும் தத்தம் வம்ச முறைப்படி குலத்தலைவர்களாய் விளங்கி வந்தார்கள்.
1 நாளாகமம் 8 : 29 (RCTA)
காபாவோனில் அபிகபாவோன் வாழ்ந்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் மாக்கா.
1 நாளாகமம் 8 : 30 (RCTA)
அவருடைய மூத்த மகன் பெயர் அப்தோன்; இவருக்குப் பின் சூர்,
1 நாளாகமம் 8 : 31 (RCTA)
சீஸ், பால், நதாப், கேதோர், அகியோ, சாக்கேர், மசெலோத் ஆகியோர் பிறந்தனர்.
1 நாளாகமம் 8 : 32 (RCTA)
மசெலோத் சமாவைப் பெற்றார். இவர்கள் தங்கள் உறவினருடன் யெருசலேமில் அவர்களுக்கு அருகிலேயே வாழ்ந்து வந்தனர்.
1 நாளாகமம் 8 : 33 (RCTA)
நேர் என்பவர் சீசைப் பெற்றார்; சீஸ் சவுலைப் பெற்றார். சவுல் யோனதான், மெல்கிசுவா, அபினதாப், எஸ்பால் என்பவர்களைப் பெற்றார்.
1 நாளாகமம் 8 : 34 (RCTA)
யோனதானின் மகன் பெயர் மெரிபாவால்; மெரிபாவால் மிக்காவைப் பெற்றார்.
1 நாளாகமம் 8 : 35 (RCTA)
மிக்காவின் புதல்வர் பெயர்: பித்தோன், மெலேக், தரா, ஆகாசு என்பனவாம்.
1 நாளாகமம் 8 : 36 (RCTA)
ஆகாசு யோவதாவைப் பெற்றார்; யோவதா அலமாதையும் அசுமோத்தையும் சம்ரியையும் பெற்றார். சம்ரி மோசாவைப் பெற்றார்.
1 நாளாகமம் 8 : 37 (RCTA)
மோசா பானாவைப் பெற்றார்; இவருடைய மகன் பெயர் ராப்பா. இவருக்கு எலசா பிறந்தார். இவர் அசேலைப் பெற்றார்.
1 நாளாகமம் 8 : 38 (RCTA)
அசேலுக்கு ஆறு ஆண் மக்கள் இருந்தனர். இவர்களுக்கு எசுரிகாம், போக்ரூ, இஸ்மாயேல், சாரியா, ஒப்தியா, ஆனான் என்று பெயர்.
1 நாளாகமம் 8 : 39 (RCTA)
அசேலுடைய சகோதரர் எசேக்கின் மூத்த மகன் பெயர் உலாம்; இரண்டாவது மகன் பெயர் ஏகூஸ், மூன்றாவது மகன் பெயர் எலிப்பலெத்.
1 நாளாகமம் 8 : 40 (RCTA)
உலாமின் புதல்வர் ஆற்றல் மிக்கவரும் திறமை மிக்க வில் வீரராயும் விளங்கினர். அவர்களுக்குப் பல புதல்வரும், பேரப்புதல்வரும் இருந்தனர். சிலருக்கு நூற்றைம்பது புதல்வரும், பேரப்புதல்வரும் இருந்தனர். இவர்கள் எல்லாரும் பென்யமீன் வழிவந்தோர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40