1 நாளாகமம் 7 : 1 (RCTA)
இசாக்காருக்கு தோலா, பூவா, யாசுப், சிமெரோன் என்ற நான்கு புதல்வர்கள் இருந்தனர்.
1 நாளாகமம் 7 : 2 (RCTA)
ஓசி, ரப்பாயியா, எரியேல், ஏமாயி, எப்சேம், சாமுவேல் என்ற தோலாவின் புதல்வர்கள் தங்கள் குடும்பங்களின் தலைவர்களாய் விளங்கினார்கள். தாவீதின் காலத்திலே தோலாவின் குலத்தில் இருபத்திரண்டாயிரத்து அறுநூறு ஆற்றல் மிக்க வீரர் இருந்தனர்.
1 நாளாகமம் 7 : 3 (RCTA)
ஓசியின் மகன் பெயர் இசுராயியா. இவருக்கு மிக்காயேல், ஒபாதியா, யொவேல், ஏசியா என்ற ஐவர் பிறந்தனர். இவர்கள் எல்லாரும் மக்கள் தலைவர்களாய் இருந்தார்கள்.
1 நாளாகமம் 7 : 4 (RCTA)
இவர்களோடு இவர்களின் குடும்பங்களிலும் மக்களிலும் போர் செய்யப் பயிற்சி பெற்றிருந்த வலிமை மிக்க வீரர் முப்பத்து ஆறாயிரம் பேர் இருந்தனர். ஏனெனில் அவர்களுக்குப் பல மனைவியரும் மக்களும் இருந்தனர்.
1 நாளாகமம் 7 : 5 (RCTA)
தவிர, இசாக்காரின் குடும்பம் முழுவதிலும் அவர்களுடைய சகோதரரில் போர் செய்யத் தக்க ஆற்றல் மிக்கவர் எண்பத்தேழாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 7 : 6 (RCTA)
பென்யமீன் புதல்வர் பேலா, பேக்கோர், யாதியேல் என்ற மூவர்.
1 நாளாகமம் 7 : 7 (RCTA)
பேலாவின் புதல்வரான எஸ்போன், ஓசி, ஓசியேல், எரிமோத், உராயி ஆகிய ஐவரும் குடும்பத்தலைவர்களும், போர் செய்யத்தக்க ஆற்றல் மிக்கவருமாவர். அவர்கள் மொத்தம் இருபத்திரண்டாயிரத்து முப்பத்து நான்குபேர்.
1 நாளாகமம் 7 : 8 (RCTA)
பேக்கோரின் புதல்வர் சமீரா, யோவாசு, எலியெசார், எலியோனாயி, அம்ரி, எரிமோத், அபியா, அனத்தோத், அல்மாத் எனப்படுவர். இவர்கள் எல்லாரும் பேக்கோரின் புதல்வர்.
1 நாளாகமம் 7 : 9 (RCTA)
குடும்பத்தலைவர்களும், ஆற்றல் வாய்ந்த போர் வீரர்களுமாய் இருந்த இவர்களின் தொகை இருபதினாயிரத்து இருநூறு.
1 நாளாகமம் 7 : 10 (RCTA)
யாதியேலின் மகன் பெயர் பாலான். பாலானின் புதல்வரோ ஏகூஸ், பென்யமீன், ஆயோத், கனானா, சேதான், தார்சீஸ், அகிசகார் எனப்படுவர்.
1 நாளாகமம் 7 : 11 (RCTA)
யாதியேலின் மக்களான இவர்கள் எல்லாரும் தத்தம் குடும்பங்களின் தலைவர்களும் ஆற்றல் மிக்கவருமாவர். இவர்களுள் போருக்குச் செல்ல வல்லவர்கள் பதினேழாயிரத்து இருநூறு பேர்.
1 நாளாகமம் 7 : 12 (RCTA)
செப்பாமும் அப்பாமும் ஈருவின் புதல்வர். ஆகேரின் மகன் பெயர் ஆசிம்.
1 நாளாகமம் 7 : 13 (RCTA)
நெப்தலியின் புதல்வர்கள் யாசியேல், கூனி, ஏசெர், செல்லும் ஆகியோர். இவர்கள் பாலாவின் வயிற்றில் பிறந்தவர்கள்.
1 நாளாகமம் 7 : 14 (RCTA)
மனாசேயின் மக்கள்: எஸ்ரியேல்; இவரை மனாசேயினுடைய வைப்பாட்டியான அரமேயப் பெண் பெற்றெடுத்தாள், கலாதின் தந்தை மக்கீரையும் அவள் பெற்றாள்.
1 நாளாகமம் 7 : 15 (RCTA)
மக்கீரோ தம் புதல்வர் ஆப்பீமுக்கும் சாப்பானுக்கும் பெண் கொண்டார். அவருக்கு மாக்கா என்ற சகோதரி இருந்தாள். மனாசேயின் இரண்டாவது புதல்வன் பெயர் சல்பாத். சல்பாத்துக்கும் புதல்வியர் பிறந்தனர்.
1 நாளாகமம் 7 : 16 (RCTA)
மக்கீரின் மனைவி மாக்கா ஒரு மகனைப் பெற்று அவனுக்குப் பாரேஸ் என்று பெயரிட்டாள். இவருடைய சகோதரரின் பெயர் சாரேஸ்; இவருடைய புதல்வர் ஊலாம், ரேக்கேன் ஆகியோர்.
1 நாளாகமம் 7 : 17 (RCTA)
ஊலாமுடைய மகன் பாதான். இவர்கள் மனாசேயின் மகனான மக்கீருக்குப் பிறந்த கலாதின் மக்கள்.
1 நாளாகமம் 7 : 18 (RCTA)
அவருடைய சகோதரியான அம்மேலெகேத் ஈஷ்கோதையும் அபியேசேரையும் மொகோலாவையும் பெற்றாள்.
1 நாளாகமம் 7 : 19 (RCTA)
செமிதாவின் புதல்வர் ஆகீன், சேக்கேம், லேகி, அனியாம் என்பவராம்.
1 நாளாகமம் 7 : 20 (RCTA)
எப்பிராயீமின் மகன் பெயர் சுத்தலா; இவருடைய மகன் பெயர் பாரேத்; இவருடைய மகன் பெயர் தகாத்; இவருடைய மகன் பெயர் எலதா; இவருடைய மகன் பெயர் தகாத்; இவருடைய மகன் பெயர் சாபாத்;
1 நாளாகமம் 7 : 21 (RCTA)
இவருடைய மகன் பெயர் சுத்தலா; இவருடைய புதல்வர் ஏசேர், எலாத் என்பவர்கள். ஆனால் இவர்களது உடைமையைக் கைப்பற்ற வேண்டி, கேத் நாட்டைச் சேர்ந்த மனிதர் வந்து அவர்களைக் கொலை செய்தனர்.
1 நாளாகமம் 7 : 22 (RCTA)
எனவே இவர்களின் தந்தை எப்பிராயீம் இவர்களைக் குறித்துப் பலநாள் துக்கத்தில் ஆழ்ந்திருந்தார். அவருடைய சகோதரர் அவரைத் தேற்ற வந்தனர்.
1 நாளாகமம் 7 : 23 (RCTA)
பிறகு அவர் தம் மனைவியுடன் மணவுறவு கொண்டார். அவளும் கருவுற்று ஒரு மகனைப் பெற்றாள். தம் வீட்டுக்குத் துன்பம் நேர்ந்த காலத்தில் அப்பிள்ளை பிறந்தமையால், அவனுக்குப் பேரியா என்ற பெயர் வைத்தார்.
1 நாளாகமம் 7 : 24 (RCTA)
அவருடைய மகள் பெயர் சாரா; இவள் கீழ் பெத்தரோனையும் மேல்பெத்தரோனையும் ஒசெஞ்சாராவையும் கட்டி எழுப்பினாள்.
1 நாளாகமம் 7 : 25 (RCTA)
மேலும் அவருக்கு ராபா, ரெசேப், தாலே என்ற மக்களும் பிறந்தனர். தாலே தாவானைப் பெற்றார்; இவர் லாதனைப் பெற்றார்;
1 நாளாகமம் 7 : 26 (RCTA)
இவர் அமியுதைப் பெற்றார்; இவர் எலிசாமைப் பெற்றார்;
1 நாளாகமம் 7 : 27 (RCTA)
இவரிடமிருந்து நூன் பிறந்தார்; நூனின் மகன் பெயர் யோசுவா.
1 நாளாகமம் 7 : 28 (RCTA)
பேத்தேலும் அதன் சிற்றூர்களும், கிழக்கே நோரானும், மேற்கே காசேரும் அதன் சிற்றூர்களும், சிக்கேமும் அதன் சிற்றூர்களும், ஆசாவும் அதன் சிற்றூர்களுமே அவர்களுடைய உடைமைகளும் குடியிருப்புமாய் இருந்தன.
1 நாளாகமம் 7 : 29 (RCTA)
மேலும், மனாசேயின் புதல்வரை அடுத்து இருந்த பெத்சானும் அதன் சிற்றூர்களும், தானாக்கும் அதன் சிற்றூர்களும், மகெதோவும் அதன் சிற்றூர்களும், தோரும் அதன் சிற்றூர்களும் அவர்களுக்குச் சொந்தமாய் இருந்தன. அந்த இடங்களில் இஸ்ராயேலின் புதல்வன் யோசேப்பின் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
1 நாளாகமம் 7 : 30 (RCTA)
ஆசேரின் மக்கள்: எம்னா, ஏசுவா, எசுவி, பாரியா என்பவர்களும், அவர்களின் சகோதரி சாராள் என்பவளுமாம்.
1 நாளாகமம் 7 : 31 (RCTA)
பாரியாவின் புதல்வரோ: ஏபேர், மெல்கியேல் ஆகியோர். மெல்கியேல் பர்சாயித் என்பவரின் தந்தை.
1 நாளாகமம் 7 : 32 (RCTA)
எபேரோ எப்லாத், சோமேர், ஒத்தாம் என்பவர்களையும், இவர்களின் சகோதரி சுவாளையும் பெற்றார்.
1 நாளாகமம் 7 : 33 (RCTA)
எப்லாத்தின் புதல்வர் பெயர் பொசேக், காமால், ஆசோத் ஆகும்.
1 நாளாகமம் 7 : 34 (RCTA)
சோமேரின் புதல்வரோ ஆகி, ரொவாகா, ஆபா, ஆராம் என்பவர்கள்.
1 நாளாகமம் 7 : 35 (RCTA)
அவருடைய சகோதரரான ஏலேமின் புதல்வர்: சூப்பா, எம்னா, செல்லேஸ், ஆமால் ஆகியோர்.
1 நாளாகமம் 7 : 36 (RCTA)
சூப்பாவின் புதல்வர் பெயர் சுவே, அர்னப்பெர், சுவால், பேரி, யம்ரா,
1 நாளாகமம் 7 : 37 (RCTA)
போசோர், ஏத், சம்மா, சலூசா, ஏத்ரான், பேரா என்பனவாம்.
1 நாளாகமம் 7 : 38 (RCTA)
ஒத்தேருடைய புதல்வர் எப்போனே, வசுவா, ஆரா ஆகியோர்.
1 நாளாகமம் 7 : 39 (RCTA)
ஆரேயெ, ஆனியேல், ரேசியா ஆகியோர் ஒல்லாவுடைய புதல்வர்கள்.
1 நாளாகமம் 7 : 40 (RCTA)
ஆசேரின் குலத்திலே தோன்றிய இவர்கள் அனைவரும் தத்தம் குடும்பங்களுக்குத் தலைவராய் இருந்தனர். மேலும் படைத்தலைவர்களுக்கெல்லாம் தலைவர்களாகவும் விளங்கி வந்தார்கள். அவர்களிலே போர் செய்யத்தக்க வயதுடையவர்களின் எண்ணிக்கை இருபத்து ஆறாயிரம்.
❮
❯