1 நாளாகமம் 6 : 1 (RCTA)
லேவியின் புதல்வர்கள் கெர்சோன், காத், மெராரி ஆகியோர்.
1 நாளாகமம் 6 : 2 (RCTA)
காத்தின் புதல்வர் பெயர்கள் அம்ராம், இசா, எபுரோன், ஒசியேல் ஆகும்.
1 நாளாகமம் 6 : 3 (RCTA)
அம்ராமின் புதல்வர்கள் ஆரோன், மோயீசன், மரியாம் என்பவர்கள். ஆரோனின் புதல்வர்கள் நாதாப், ஆபியு, எலியெசார், ஈத்தமார் என்பவர்கள்.
1 நாளாகமம் 6 : 4 (RCTA)
எலியெசார் பினேசைப் பெற்றார்; பினேசு அபிசுவேயைப் பெற்றார்.
1 நாளாகமம் 6 : 5 (RCTA)
அபிசுவே பொக்சியைப் பெற்றார். பொக்சி ஓசியைப் பெற்றார்.
1 நாளாகமம் 6 : 6 (RCTA)
ஓசி சரையாசைப் பெற்றார்; சரையாசு மெரையோத்தைப் பெற்றார்.
1 நாளாகமம் 6 : 7 (RCTA)
மெரையோத் அமாரியாசைப் பெற்றார்; அமாரியாசு அக்கித்தோபைப் பெற்றார்.
1 நாளாகமம் 6 : 8 (RCTA)
அக்கித்தோப் சாதோக்கைப் பெற்றார்; சாதோக் அக்கிமாசைப் பெற்றார்.
1 நாளாகமம் 6 : 9 (RCTA)
அக்கிமாசு அசாரியாசைப் பெற்றார். அசாரியாசு யோகனானைப் பெற்றார்.
1 நாளாகமம் 6 : 10 (RCTA)
யோகனான் அசாரியாசைப் பெற்றார்; சாலமோன் யெருசலேமில் கட்டியிருந்த ஆலயத்தில் குருத்துவப்பணி புரிந்தவர் இவரே.
1 நாளாகமம் 6 : 11 (RCTA)
அசாரியாசு அமாரியாசைப் பெற்றார்; அமாரியாசு அக்கித்தோபைப் பெற்றார்.
1 நாளாகமம் 6 : 12 (RCTA)
அக்கித்தோப் சாதோக்கைப் பெற்றார்; சாதோக் செல்லுமைப் பெற்றார்.
1 நாளாகமம் 6 : 13 (RCTA)
செல்லும் எல்கியாசைப் பெற்றார்; எல்கியாசு அசாரியாசைப் பெற்றார்.
1 நாளாகமம் 6 : 14 (RCTA)
அசாரியாசு சரையாசைப் பெற்றார்; சரையாசு யொசெதேக்கைப் பெற்றார்.
1 நாளாகமம் 6 : 15 (RCTA)
ஆண்டவர் நபுக்கொதனசாரின் மூலம் யூதா மக்களையும் யெருசலேம் நகரத்தாரையும் நாடு கடத்திக் கொண்டு போன போது யொசெதேக்கும் சிறைப்படுத்தப்பட்டார்.
1 நாளாகமம் 6 : 16 (RCTA)
லேவியின் புதல்வர் கெர்சோன், காத், மெராரி என்பவர்களே.
1 நாளாகமம் 6 : 17 (RCTA)
கெர்சோனின் புதல்வர்களின் பெயர்கள் லொப்னி, செமேயி என்பவை.
1 நாளாகமம் 6 : 18 (RCTA)
காத்தின் புதல்வர்கள் அம்ராம், இசார், எபுரோன், ஒசியேல் என்பவர்கள்.
1 நாளாகமம் 6 : 19 (RCTA)
மெராரியின் புதல்வர்கள் மொகோலியும் மூசியுமாம். அவரவர் குடும்பத்தின்படி லேவியரின் தலைமுறை அட்டவணையாவது:
1 நாளாகமம் 6 : 20 (RCTA)
கெர்சோன், இவருடைய மகன் லொப்னி; லொப்னியின் மகன் யாகாத்; இவருடைய மகன் பெயர் சம்மா;
1 நாளாகமம் 6 : 21 (RCTA)
சம்மாவின் மகன் பெயர் யோவா; இவருடைய மகன் பெயர் அத்தோ; அத்தோவின் மகன் பெயர் ஜாரா; இவருடைய மகன் பெயர் எத்ராய்.
1 நாளாகமம் 6 : 22 (RCTA)
காத்தின் புதல்வர்களாவர்: காத்தின் மகன் அமினதாப்; இவருடைய மகன் பெயர் கோரே; இவருடைய மகன் பெயர் அசீர்;
1 நாளாகமம் 6 : 23 (RCTA)
அசீரின் மகன் பெயர் எல்கானா; எல்கானாவின் மகன் பெயர் அபிசாப்; அபிசாப்பின் மகன் பெயர் அசீர்.
1 நாளாகமம் 6 : 24 (RCTA)
இவருடைய மகன் பெயர் ஒசியாசு; ஒசியாசின் மகன் பெயர் சவுல்.
1 நாளாகமம் 6 : 25 (RCTA)
எல்கானாவின் புதல்வர் பெயர் வருமாறு: அமசாயி, அக்கிமோத், எல்கானா.
1 நாளாகமம் 6 : 26 (RCTA)
எல்கானாவின் புதல்வர்களாவர்: எல்கானாவின் மகன் பெயர் சொபாயி; இவருடைய மகன் பெயர் நாகாத்.
1 நாளாகமம் 6 : 27 (RCTA)
நாகாத்தின் மகன் பெயர் எலியாப்; இவருடைய மகன் பெயர் எரோகாம்; இவருடைய மகன் பெயர் எல்கானா.
1 நாளாகமம் 6 : 28 (RCTA)
சாமுவேலின் புதல்வர்களுள் மூத்தவர் பெயர் வசேனி; மற்றவர் பெயர் அபியா.
1 நாளாகமம் 6 : 29 (RCTA)
மெராரியின் புதல்வர்கள்: மொகோலி; இவருக்குப் பிறந்த மகன் பெயர் லொப்னி; இவருடைய மகன் பெயர் செமேயி; இவருடைய மகன் பெயர் ஓசா;
1 நாளாகமம் 6 : 30 (RCTA)
இவருடைய மகன் பெயர் சம்மா; இவருடைய மகன் பெயர் அக்சியா; இவருடைய மகன் பெயர் அசாயா.
1 நாளாகமம் 6 : 31 (RCTA)
திருப்பேழை ஆண்டவரின் ஆலயத்தில் நிறுவப்பட்ட போது ஆலயப்பாடல்களுக்குப் பொறுப்பாளராய் இவர்களையே தாவீது ஏற்படுத்தினார்.
1 நாளாகமம் 6 : 32 (RCTA)
சாலமோன் யெருசலேமில் ஆண்டவரின் ஆலயத்தைக் கட்டி முடிக்கும் வரை இவர்கள் சாட்சியக் கூடார வாயிலில் பாடிப் பணிபுரிந்து வந்தனர். அப்பணியைத் தத்தம் பிரிவுப்படி செய்து வந்தனர்.
1 நாளாகமம் 6 : 33 (RCTA)
தங்கள் மக்களோடு வேலை செய்தவர்கள்: காத்தின் மக்களில் எமான் என்ற இசைஞர் இருந்தார். இவர் யொவேலின் மகன்; இவர் சாமுவேலின் மகன்;
1 நாளாகமம் 6 : 34 (RCTA)
இவர் எல்கானாவின் மகன்; இவர் எரொகாமின் மகன்; இவர் எலியேலின் மகன்; இவர் தோகுவின் மகன்;
1 நாளாகமம் 6 : 35 (RCTA)
இவர் சூப்பின் மகன்; இவர் எல்கானாவின் மகன்; இவர் மகாத்தியின் மகன்; இவர் அமாசாவின் மகன்;
1 நாளாகமம் 6 : 36 (RCTA)
இவர் எல்கானாவின் மகன்; இவர் யொவேலின் மகன்; இவர் அசாரியாசின் மகன்; இவர் சொப்போனியாசின் மகன்;
1 நாளாகமம் 6 : 37 (RCTA)
இவர் தாகாத்தின் மகன்; இவர் அசீரின் மகன்; இவர் அபியசாப்பின் மகன்; இவர் கோரேயின் மகன்;
1 நாளாகமம் 6 : 38 (RCTA)
இவர் இசாரின் மகன்; இவர் காத்தின் மகன்; இவர் லேவியின் மகன்; இவர் இஸ்ராயேலின் மகன்;
1 நாளாகமம் 6 : 39 (RCTA)
அவருடைய சகோதரரான ஆசாப், அவரது வலப்பக்கத்தில் நிற்பார். ஆசாப் பாரக்கியாசின் மகன்; இவர் சம்மாவின் மகன்;
1 நாளாகமம் 6 : 40 (RCTA)
இவர் மிக்காயேலின் மகன்; இவர் பசையாசின் மகன்; இவர் மெல்கியாசின் மகன்;
1 நாளாகமம் 6 : 41 (RCTA)
இவர் அத்தனாயின் மகன்; இவர் சாராவின் மகன்; இவர் அதாயியாவின் மகன்;
1 நாளாகமம் 6 : 42 (RCTA)
இவர் எத்தானின் மகன்; இவர் சம்மாவின் மகன்; இவர் செமேயியின் மகன்;
1 நாளாகமம் 6 : 43 (RCTA)
இவர் ஏத்தின் மகன்; இவர் கெர்சோனின் மகன்; இவர் லேவியின் மகன்.
1 நாளாகமம் 6 : 44 (RCTA)
மெராரியின் புதல்வர்களான இவர்களுடைய சகோதரர்கள் இடப்பக்கத்தில் நிற்பார்கள். மெராரியின் புதல்வர்கள் வருமாறு: எத்தான், இவர் கூசியின் மகன்; இவர் ஆப்தியின் மகன்;
1 நாளாகமம் 6 : 45 (RCTA)
இவர் மலேக்கின் மகன்; இவர் அசபியாசின் மகன்; இவர் அமாசியாசின் மகன்;
1 நாளாகமம் 6 : 46 (RCTA)
இவர் எல்கியாசின் மகன்; இவர் அமாசாயின் மகன்; இவர் போனியின் மகன்; இவர் சொமேரின் மகன்;
1 நாளாகமம் 6 : 47 (RCTA)
இவர் மொகோலியின் மகன்; இவர் மூசியின் மகன்; இவர் மெராரியின் மகன்; இவர் லேவியின் மகன்;
1 நாளாகமம் 6 : 48 (RCTA)
அவர்களின் சகோதரரான லேவியர் ஆண்டவரின் ஆலயத்தில் இருந்த கூடாரத்தின் பணிகளைக் கவனிக்க நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
1 நாளாகமம் 6 : 49 (RCTA)
ஆண்டவரின் அடியாரான மோயீசன் கற்பித்திருந்த எல்லா வழிமுறைகளின்படியும், ஆரோனும் அவருடைய புதல்வர்களும் தகனப் பலி பீடத்தின் மேல் பலியிட்டு, தூபப்பீடத்தின் மேல் தூபம் காட்டி, உள் தூயகத்திலே எல்லாப் பணி விடைகளையும் செய்து, இஸ்ராயேல் மக்களுக்காக மன்றாடி வந்தார்கள்.
1 நாளாகமம் 6 : 50 (RCTA)
ஆரோன் குலத்தில் தோன்றியவர்கள்: அவருடைய மகன் எலியெசார்; இவருடைய மகன் பினேசு; இவருடைய மகன் அபிசுவே;
1 நாளாகமம் 6 : 51 (RCTA)
இவருடைய மகன் பொக்கி; இவருடைய மகன் ஓசி; இவருடைய மகன் சராகியா;
1 நாளாகமம் 6 : 52 (RCTA)
இவருடைய மகன் மெராயியொத்; இவருடைய மகன் அமாரியாசு; இவருடைய மகன் அக்கித்தோப்;
1 நாளாகமம் 6 : 53 (RCTA)
இவருடைய மகன் சாதோக்; இவருடைய மகன் அக்கிமாசு.
1 நாளாகமம் 6 : 54 (RCTA)
அவர்கள் பாளையமிறங்கின இடங்களின் படியே அவரவர் எல்லைகளுக்குள் வாழ்ந்து வந்தனர்.
1 நாளாகமம் 6 : 55 (RCTA)
சீட்டு விழுந்தபடி யூதா நாட்டு எபிரோனும் அதைச் சுற்றியிருந்த பேட்டைகளும் காத்திய வம்சத்தைச் சேர்ந்த ஆரோனின் மக்களுக்குக் கொடுக்கப்பட்டன.
1 நாளாகமம் 6 : 56 (RCTA)
ஆனால் அந்நகரத்து வயல்களும் அதைச் சேர்ந்த சிற்றூர்களும் எப்போனேயின் மகன் காலேபுக்கே கொடுக்கப்பட்டன.
1 நாளாகமம் 6 : 57 (RCTA)
ஆரோனின் புதல்வருக்கோ அடைக்கல நகர்களாகிய எபிரோனும், லொப்னாவும், அதன் பேட்டைகளும்,
1 நாளாகமம் 6 : 58 (RCTA)
ஏத்தேரும் எஸ்தேமோவும், இவற்றின் பேட்டைகளும், எலோனும் தபீரும், அவற்றையடுத்த பேட்டைகளும்,
1 நாளாகமம் 6 : 59 (RCTA)
அசானும், பெத்ரெமேசும், அவற்றின் பேட்டைகளும் கொடுக்கப்பட்டன.
1 நாளாகமம் 6 : 60 (RCTA)
இவை தவிர, பென்யமீன் குலத்திற்குச் சொந்தமான காபேயையும் அதன் பேட்டைகளையும், அல்மாத்தாவையும் அதன் பேட்டைகளையும், அனத்தோத்தையும் அதன் பேட்டைகளையும் அவர்கள் பெற்றனர். ஆக பதின்மூன்று நகர்கள் அவர்களது குடும்ப வரிசைப்படி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.
1 நாளாகமம் 6 : 61 (RCTA)
மற்றக் காத்தியருக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தைச் சேர்ந்த பத்து நகர்களைச் சொந்தமாய்க் கொடுத்தனர்.
1 நாளாகமம் 6 : 62 (RCTA)
கெர்சோனின் புதல்வருக்கோ, அவர்களுடைய குடும்பங்களின் கணக்கிற்கேற்ப இசாக்கார் கோத்திரத்திலும் ஆசேர் கோத்திருத்திலும் நெப்தலி கோத்திரத்திலும் பாசானிலே மனாசே கோத்திரத்திலும் பதின்மூன்று நகர்கள் கொடுக்கப்பட்டன.
1 நாளாகமம் 6 : 63 (RCTA)
மெராரி புதல்வருக்கோ, அவாகளுடைய குடும்பங்களின் கணக்குக்கேற்ப ரூபன் கோத்திரத்தினின்றும் காத் கோத்திரத்தினின்றும் சபுலோன் கோத்திரத்தினின்றும் பன்னிரு நகர்களைச் சீட்டுப்போட்டுக் கொடுத்தனர்.
1 நாளாகமம் 6 : 64 (RCTA)
இவ்வாறு இஸ்ராயேலர் மேற்சொல்லிய நகர்களையும், அவற்றின் பேட்டைகளையும் லேவியருக்குக் கொடுத்தனர்.
1 நாளாகமம் 6 : 65 (RCTA)
அவர்கள் சீட்டுப்போட்டு யூதா கோத்திரத்திலும் சிமையோன் கோத்திரத்திலும் பென்யமீன் கோத்திரத்திலுமிருந்து முன் கூறப்பட்ட நகர்களைக் கொடுத்தனர்; அவற்றிற்குத் தத்தம் பெயரையே இட்டான்.
1 நாளாகமம் 6 : 66 (RCTA)
காத்தின் சந்ததியாருள் சிலர் எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்த நகர்களில் வாழ்ந்து வந்தனர்.
1 நாளாகமம் 6 : 67 (RCTA)
ஆகையால் அடைக்கல நகர்களாகிய எப்பிராயீம் மலைநாட்டுச் சிக்கேமையும் அதன் பேட்டைகளையும், காசேரையும் அதன் பேட்டைகளையும்,
1 நாளாகமம் 6 : 68 (RCTA)
எக்மானையும் அதன் பேட்டைகளையும், பெத்தொரோனையும்,
1 நாளாகமம் 6 : 69 (RCTA)
எலோனையும் அதன் பேட்டைகளையும், கெத்ரேமோனையும் அவர்களுக்குக் கொடுத்தனர்.
1 நாளாகமம் 6 : 70 (RCTA)
காத்தின் வம்சத்திலே இன்னும் எஞ்சியிருந்த குடும்பங்களுக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தைச் சார்ந்த ஆனேரும் அதன் பேட்டைகளும், பாலாமும் அதன் பேட்டைகளும் கொடுக்கப்பட்டன.
1 நாளாகமம் 6 : 71 (RCTA)
கெர்சோமின் மக்களுக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தைச் சார்ந்த கவுலோனையும் அதன் பேட்டைகளையும், அஸ்தரோத்தையும் அதன் பேட்டைகளையும்,
1 நாளாகமம் 6 : 72 (RCTA)
இசாக்கார் கோத்திரத்திற்குச் சொந்தமாய் இருந்த கேதேசையும் அதன் பேட்டைகளையும், தபரேத்தையும் அதன் பேட்டைகளையும்,
1 நாளாகமம் 6 : 73 (RCTA)
இராமோத்தையும் அதன் பேட்டைகளையும், ஆநேமையும் அதன் பேட்டைகளையும்,
1 நாளாகமம் 6 : 74 (RCTA)
ஆசேர் கோத்திரத்திலேயுள்ள மாசாலையும் அதன் பேட்டைகளையும்,
1 நாளாகமம் 6 : 75 (RCTA)
ஆப்தோனையும், குக்காக்கையும் ரோகோபையும் இவற்றையடுத்த பேட்டைகளையும்,
1 நாளாகமம் 6 : 76 (RCTA)
நெப்தலி கோத்திரத்திற்குச் சொந்தனான, கலிலேய நாட்டைச் சேர்ந்த கேதேசையும் அதன் பேட்டைகளையும், ஆமோனையும் கரியாத்தியாரீமையும் இவற்றையடுத்த பேட்டைகளையும் கொடுத்தார்கள்.
1 நாளாகமம் 6 : 77 (RCTA)
எஞ்சியிருந்த மெராரியின் மக்களுக்கு சாபுலோன் கோத்திரத்திற்குச் சொந்தமான ரெம்மோன்னோவும் அதன் பேட்டைகளும், தாபோரும் அதன் பேட்டைகளும்,
1 நாளாகமம் 6 : 78 (RCTA)
எரிக்கோவிற்கு அருகே யோர்தானுக்கு அக்கரையில் கிழக்கேயிருந்த ரூபனின் கோத்திரத்துப் பாலைவனத்திலுள்ள போசோரும் அதன் பேட்டைகளும்,
1 நாளாகமம் 6 : 79 (RCTA)
யாஸ்ஸாவும் அதன் பேட்டைகளும், காதேமோத்தும் அதன் பேட்டைகளும், மேப்பாத்தும் அதன் பேட்டைகளும்,
1 நாளாகமம் 6 : 80 (RCTA)
காத்தின் கோத்திரத்திலிருந்த கலாது நாட்டு இராமோத்தும் அதன் பேட்டைகளும், மனாயீமும் அதன் பேட்டைகளும்,
1 நாளாகமம் 6 : 81 (RCTA)
எசெபோனும் ஏசேரும் அவற்றின் பேட்டைகளும் கிடைத்தன.
❮
❯