1 நாளாகமம் 3 : 1 (RCTA)
தாவீது எபிரோனில் இருந்தபோது அவருக்குப் பல மக்கள் பிறந்தனர். அவருடைய மூத்த மகன் பெயர் அம்னோன். இவர் எஸ்ராயேல் ஊராளான அக்கினோவாமிடம் பிறந்தவர். தானியேல் என்பவர் அவருடைய இரண்டாவது மகன். இவர் கார்மேல் ஊராளாகிய அபிகாயிலிடம் பிறந்தவர்.
1 நாளாகமம் 3 : 2 (RCTA)
கெசூர் அரசரான தொல்மாயியின் மகன் மாக்காளின் மகன் அப்சலோம் மூன்றாவது மகன். அதோனியாசு நான்காவது மகன்.
1 நாளாகமம் 3 : 3 (RCTA)
இவரைப் பெற்றவள் ஆகீது. அபித்தாளிடம் பிறந்த சபாத்தியாசு ஐந்தாவது மகன். ஆறாவது மகன் பெயர் யெத்திராம். அவர் தாவீதின் மனைவி எகிலா மூலம் பிறந்தார்.
1 நாளாகமம் 3 : 4 (RCTA)
இந்த ஆறு புதல்வரும் அவர் எபிரோனில் இருந்த போது பிறந்தனர். அவர் அங்கே ஏழு ஆண்டுகளும் ஆறு மாதமும் ஆட்சி புரிந்தார். யெருசலேமிலோ முப்பத்திமூன்று ஆண்டுகள் அரசோச்சினார்.
1 நாளாகமம் 3 : 5 (RCTA)
அவர் யெருசலேமில் இருந்தபோது, சிம்மா, சோபாப், நாத்தான், சாலமோன் ஆகிய புதல்வர்கள் அவருக்குப் பிறந்தனர். இந்த நால்வரும் அம்மியேலின் மகள் பெத்சாபே மூலம் பிறந்தவர்கள்.
1 நாளாகமம் 3 : 6 (RCTA)
ஏபார், எலிசமா, எலிப்பலேத்,
1 நாளாகமம் 3 : 7 (RCTA)
நோகே, நேபேக், யபியா,
1 நாளாகமம் 3 : 8 (RCTA)
எலிசமா, எலியதா, எலிப்பேலேத் ஆகிய ஒன்பது பேரும்,
1 நாளாகமம் 3 : 9 (RCTA)
அவர்களின் சகோதரி தாமார் என்பவளும் தாவீதின் மக்களாவர். இவர்களைத் தவிர அவருக்கு வைப்பாட்டிகள் மூலம் மக்கள் இருந்தனர்.
1 நாளாகமம் 3 : 10 (RCTA)
சாலமோனின் மகன் பெயர் ரொபோவாம். ரொபோவமின் மகன் அபியா ஆசாவைப் பெற்றார். ஆசா யோசபாத்தைப் பெற்றார். யோசபாத்தின் மகன் பெயர் யோராம்;
1 நாளாகமம் 3 : 11 (RCTA)
யோராமின் மகன் பெயர் ஒக்கோசியாசு. ஒக்கோசியாசின் மகன் பெயர் யோவாசு.
1 நாளாகமம் 3 : 12 (RCTA)
யோவாசின் மகன் பெயர் அமாசியாசு. அமாசியாசு அசாரியாசைப் பெற்றார். அசாரியாசு யோவாத்தானைப் பெற்றார். யோவாத்தானின் மகன் பெயர் ஆக்காசு.
1 நாளாகமம் 3 : 13 (RCTA)
இந்த ஆக்காசு எசேக்கியாசைப் பெற்றார். எசேக்கியாசு மனாசேயைப் பெற்றார்.
1 நாளாகமம் 3 : 14 (RCTA)
மனாசே ஆமோனைப் பெற்றார். ஆமோன் யோசியாசைப் பெற்றார்.
1 நாளாகமம் 3 : 15 (RCTA)
யோசியாசின் மூத்த மகன் பெயர் யோகனான்; இரண்டாவது மகன் பெயர் யோவாக்கீம்; மூன்றாவது மகன் பெயர் செதேசியாசு; நான்காவது மகன் பெயர் செல்லும்.
1 நாளாகமம் 3 : 16 (RCTA)
யோவாக்கீமின் புதல்வர் எக்கோனியாசும், செதேசியாசுமாம். எக்கோனியாசின் புதல்வர்கள்:
1 நாளாகமம் 3 : 17 (RCTA)
அசீர், சலாத்தியேல்,
1 நாளாகமம் 3 : 18 (RCTA)
மெல்கீராம், பதாயியா, சென்னேசேர், எகேமியா, சாமா, நதாபியா ஆகியோராவர்.
1 நாளாகமம் 3 : 19 (RCTA)
பதாயியா என்பவருக்கு செரோபாபேல், செமேயி ஆகியோர் பிறந்தனர். செரோபாபேல் மொசொல்லாமையும், அனனியாசையும், அவர்களின் சகோதரி சலோமித்தையும்,
1 நாளாகமம் 3 : 20 (RCTA)
அசபான், ஒகோல், பராக்கியான், கசாதியாசு, யோசபெசேத் என்ற வேறு ஐவரையும் பெற்றார்.
1 நாளாகமம் 3 : 21 (RCTA)
அனனியாசின் மகனது பெயர் பல்தியாஸ். இவர் எசெயாசுவின் தந்தை. இந்த எசெயாசுவின் மகனது பெயர் ரப்பாயியா; ரப்பாயியாவின் மகனது பெயர் அர்னான்; அர்னானின் மகனது பெயர் ஒப்தியா; ஒப்தியாவின் மகனது பெயர் சேக்கேனியாசு.
1 நாளாகமம் 3 : 22 (RCTA)
சேக்கேனியாசின் மகனது பெயர் செமெயியா; செமெயியாவிற்கு அத்தூஸ், எகால், பாரியா, நாரியா, சாப்பாத் என்ற ஆறு புதல்வர்கள் இருந்தனர்.
1 நாளாகமம் 3 : 23 (RCTA)
நாரியாவிற்கு எலியோவெனாயி, எசேக்கியாசு, எசுரிகம் என்ற மூன்று புதல்வர்கள் இருந்தனர்.
1 நாளாகமம் 3 : 24 (RCTA)
எலியோவெனாயியிக்கு ஒதுயியா, எலியாசூப், பெலெயியா, ஆக்கூப், யொகனான், தலாயியா, அனானி என்ற ஏழு புதல்வர்கள் இருந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24

BG:

Opacity:

Color:


Size:


Font: