1 நாளாகமம் 27 : 1 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் தங்கள், குடும்பத்தலைவர்கள், ஆயிரவர் தலைவர்கள், நூற்றுவர் தலைவர்கள் அவர்களுடைய அலுவலர்கள் உட்பட, அனைவரும் தத்தம் பிரிவுப்படி எல்லா அரச அலுவல்களையும் செய்து வந்தார்கள். மாதத்திற்கு ஒரு பிரிவாக அவர்கள் ஆண்டு முழுவதும் பணியாற்றி வந்தார்கள். ஒவ்வொரு பிரிவிலும் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர். அப்பிரிவுகள் வருமாறு:
1 நாளாகமம் 27 : 2 (RCTA)
முதல் மாதத்தில் முதல் பிரிவுக்குத் தலைவனாய் இருந்தவன் சப்தியேலின் மகன் எஸ்போவா; அவனுக்கு அடியில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 3 (RCTA)
எஸ்போவா பாரேசின் வழிவந்தவன். முதல் மாதத்தில் அவன் எல்லாப் படைத்தலைவர்களுக்கும் தலைமை அதிகாரியாய் இருந்தான்.
1 நாளாகமம் 27 : 4 (RCTA)
அகோனியனான தூதியா இரண்டாம் மாதப் பிரிவுக்குத் தலைவனாய் இருந்தான். இவனுக்குக் கீழ் மசெல்லோத் என்ற பெயருடைய வேறொருவன் மேற்சொல்லப்பட்ட இருபத்து நாலாயிரம் பேர் உள்ள ஒரு பிரிவுக்குத் தலைவனாய் இருந்தான்.
1 நாளாகமம் 27 : 5 (RCTA)
மூன்றாவது மாதத்திற்கான மூன்றாவது பிரிவுக்குத் தலைவராய், யோயியாதாவின் மகன் பனாயியாஸ் என்ற குரு இருந்தார்; இவரது அணியில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 6 (RCTA)
இந்தப் பனாயியாஸ் முப்பதின்மருக்குள் ஆற்றல் மிக்கவராகவும், அந்த முப்பதின்மருக்குத் தலைவராகவும் இருந்தார். அவருடைய பிரிவை அவர் மகன் அமிசாபாத் கண்காணித்து வந்தான்.
1 நாளாகமம் 27 : 7 (RCTA)
நான்காம் மாதத்திற்குரிய நான்காவது பிரிவுக்குத் தலைவன் யோவாபின் சகோதரனாகிய அசாயேல்; அவனுக்கு அடுத்த இடம் வகித்தவன் அவன் மகன் சபதியாஸ்; அவனது அணியில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 8 (RCTA)
ஐந்தாம் மாதத்திற்கான ஐந்தாம் பிரிவின் தலைவன் ஏசேர் ஊரானான சமவோத் என்பவன்; இவனுடைய பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 9 (RCTA)
ஆறாவது மாதத்திற்கான ஆறாம் பிரிவிற்குத் தேக்குவா ஊரானாகிய அக்கேசின் மகன் ஈரா தலைவனாய் இருந்தான்; அவனது பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 10 (RCTA)
ஏழாம் மாதத்திற்கான ஏழாவது பிரிவிற்குத் தலைவன் எப்பிராயீம் குலத்தைச் சேர்ந்த பல்லோனியனான எல்லேஸ் என்பவன்; இவனது அணியில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 11 (RCTA)
எட்டாம் மாதத்திற்கான எட்டாவது பிரிவுக்குச் சாரகி வம்சத்து உசாத்தீத்தனான சொபொக்காயி தலைவனாய் இருந்தான்; இவனது அணியில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 12 (RCTA)
ஒன்பதாம் மாதத்திற்கான ஒன்பதாவது பிரிவுக்கு எமினியின் மக்களில் ஒருவனும் அனத்தோத்தியனுமான அபியேசேர் என்பவன் தலைவனாய் இருந்தான்; இவனது அணியில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 13 (RCTA)
பத்தாம் மாதத்திற்கான பத்தாவது பிரிவின் தலைவன் மாராயி என்பவன்; இவன் சாராயின் வழிவந்தவன்; நெத்தோப்பாத் ஊரில் வாழ்ந்து வந்தவன்; இவனது அணியில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 14 (RCTA)
பதினோராம் மாதத்திற்கான பதினோராவது பிரிவுக்கு எப்பிராயீம் குலத்தவனும் பரத்தோனியனுமான பனாயியாஸ் தலைமை வகித்தான். இவனது அணியில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 15 (RCTA)
பன்னிரண்டாவது மாதத்திற்கான பன்னிரண்டாவது பிரிவுக்குத் தலைவன் கொத்தோனியேலின் வழி வந்தவனும் நெத்தோப்பாத்தைச் சேர்ந்தவனுமான ஒல்தாய் என்பவன்; இவனது அணியில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 16 (RCTA)
இஸ்ராயேலில் குலத் தலைவர்களாய் விளங்கியவர்களின் பெயர்கள் வருமாறு: ரூபானியருக்குத் தலைவன் செக்ரியின் மகன் எலியசர், சிமெயோனியருக்குத் தலைவன் மாக்காவின் மகன் சப்பாசியாஸ்,
1 நாளாகமம் 27 : 17 (RCTA)
லேவியருக்குத் தலைவன் கேமுவேலின் மகன் அசாயியாஸ், ஆரோனியருக்குத் தலைவன் சாதோக்,
1 நாளாகமம் 27 : 18 (RCTA)
யூதாவுக்குத் தலைவன் தாவீதின் சகோதரன் எலீயு, இசாக்காருக்குத் தலைவன் மிக்காயேலின் மகன் அம்ரி,
1 நாளாகமம் 27 : 19 (RCTA)
சபுலோனியருக்குத் தலைவன் அப்தியாசின் மகன் எஸ்மாயியாஸ், நெப்தலியருக்குத் தலைவன் ஒஸ்ரியேலின் மகன் எரிமோத்,
1 நாளாகமம் 27 : 20 (RCTA)
எப்பிராயீம் குலத்தாருக்குத் தலைவன் ஒசாசின் மகன் ஓசே, மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்குத் தலைவன் பதாயியாவின் மகன் யோவேல்,
1 நாளாகமம் 27 : 21 (RCTA)
காலாதிலுள்ள மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்குத் தலைவன் சக்கரியாசின் மகன் யாதோ, பென்யமீன் மக்களுக்குத் தலைவன் அப்னேரின் மகன் யாசியேல்,
1 நாளாகமம் 27 : 22 (RCTA)
தாண் குலத்தைச் சேர்ந்தவர்களுக்கு எரோகாமின் மகன் எஸ்ரியேல் தலைவனாய் இருந்தான். இஸ்ராயேலில் இவர்களே குலத் தலைவர்களாய் விளங்கி வந்தார்கள்.
1 நாளாகமம் 27 : 23 (RCTA)
இஸ்ராயேலை விண்மீன்களைப் போல் பெருகச் செய்வோம்" என்று ஆண்டவர் கூறியிருந்ததால் இருபது வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களைக் கணக்கிடத் தாவீது விரும்பவில்லை.
1 நாளாகமம் 27 : 24 (RCTA)
சார்வியாவின் மகன் யோவாப் மக்கள் தொகையைக் கணக்கிடத் தொடங்கினான்; ஆனால் அதை முடிக்கவில்லை. ஏனெனில் அதைப் பற்றிக் கடவுள் இஸ்ராயலின் மேல் கோபம் கொண்டிருந்தார். எனவே கணக்கிடப்பட்டவர்களின் தொகை தாவீது அரசரின் வரலாற்றில் குறிப்பிடப்படவில்லை.
1 நாளாகமம் 27 : 25 (RCTA)
அரசரது அரண்மனைக் கருவூலங்களை ஆதியேலின் மகன் அஸ்மோத் கண்காணித்து வந்தான். நகர்களிலும் ஊர்களிலும் கோட்டைகளிலுமிருந்த கருவூலங்களை ஓசியாசின் மகன் யோனத்தான் கண்காணித்து வந்தான்.
1 நாளாகமம் 27 : 26 (RCTA)
விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் கேலுப்பின் மகன் எஸ்ரி தலைவனாய் இருந்தான்.
1 நாளாகமம் 27 : 27 (RCTA)
மேலும் திராட்சை பயிரிடுவோருக்கு ரோமாத்தியனான செமெயியாசும், திராட்சை இரசம் விற்பவர்களுக்கு அப்போனியனான சாப்தியாசும்,
1 நாளாகமம் 27 : 28 (RCTA)
சமவெளிகளில் வளர்ந்த ஒலிவ மரங்களையும் அத்திமரச் சோலைகளையும் கேதரனான பலனானும், எண்ணைய் கிடங்குகளை யோவாசும் கண்காணித்து வந்தனர்.
1 நாளாகமம் 27 : 29 (RCTA)
சாரோனில் மேய்ந்து வந்த ஆட்டு மந்தைகளைச் சாரோனான சேத்திராயும், பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளை ஆத்லியின் மகன் சாப்பாத்தும் கண்காணித்து வந்தனர்.
1 நாளாகமம் 27 : 30 (RCTA)
ஒட்டகங்களுக்கு இஸ்மாயேல் குலத்தினனான ஊபிலும் கழுதைகளுக்கு மரோனாத்தியனான யாதியாசும் பொறுப்பாய் இருந்தனர்.
1 நாளாகமம் 27 : 31 (RCTA)
ஆடுகளைக் கண்காணித்து வந்தவன் அகாரியனான யாகீஸ். இவர்கள் எல்லாரும் தாவீது அரசரின் உடைமைகளைக் காண்காணித்து வந்தனர்.
1 நாளாகமம் 27 : 32 (RCTA)
தாவீதின் சிற்றப்பனும் அவருடைய ஆலோசகனுமான கல்வியறிவும் நுண்மதியும் கொண்ட யோனத்தானும் அக்கமோனியின் மகன் யாகியேலும் அரசரின் மக்களைக் கவனித்து வந்தனர்.
1 நாளாகமம் 27 : 33 (RCTA)
அக்கித்தோப்பேல், அரசரின் ஆலோசகனாய் இருந்தான். அராக்கியனான கூசாயி அரசரின் நண்பனாய் இருந்தான்.
1 நாளாகமம் 27 : 34 (RCTA)
அக்கித்தோப்பேலுக்குப் பின் பனாயியாசின் மகன் யோயியாதாவும், அபியத்தாரும் அவன் வகித்த பதவியை ஏற்றனர். யோவாபு அரசரின் படைக்குத் தலைவனாய் இருந்தான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34

BG:

Opacity:

Color:


Size:


Font: