1 நாளாகமம் 26 : 1 (RCTA)
வாயிற்காவலரின் பிரிவுகளாவன: கொரேயர் குலத்தைச் சேர்ந்த ஆசாப்பின் மக்களில் கொரேயின் மகன் மெசெலேமியா,
1 நாளாகமம் 26 : 2 (RCTA)
மெசெலேமியாவின் புதல்வருள் மூத்தவன் பெயர் சக்கரியாஸ், இரண்டவாது யாதியேல், மூன்றாவது சபாதியாஸ், நான்காவது யாதனாயேல்,
1 நாளாகமம் 26 : 3 (RCTA)
ஐந்தாவது ஏலாம், ஆறாவது யொகனான், ஏழாவது எலியோவேனாயி,
1 நாளாகமம் 26 : 4 (RCTA)
ஒபெதெதோமின் புதல்வருள் மூத்தவன் பெயர் செமேயியாஸ், இரண்டாவது யோசபாத், மூன்றாவது யொவகா, நான்காவது சாகார், ஐந்தாவது நத்தானியேல்,
1 நாளாகமம் 26 : 5 (RCTA)
ஆறாவது அம்மியேல், ஏழாவது இசாக்கார், எட்டாவது பொல்லாத்தி; இவ்வாறு ஆண்டவர் அவனை ஆசீர்வதித்திருந்தார்.
1 நாளாகமம் 26 : 6 (RCTA)
அவனுடைய மகன் செமேயியிக்குப் பிறந்த புதல்வரோ தங்கள் குடும்பங்களின் தலைவர்களாய் இருந்தனர். ஏனெனில் அவர்கள் மிக்க ஆற்றல் படைத்தவர்கள்.
1 நாளாகமம் 26 : 7 (RCTA)
செமேயியின் புதல்வருள் ஒத்னி, ரபாயேல், ஒபேத், எல்சபாத் ஆகியோரும் இவர்களின் சகோதரர்களும்; இவர்கள் ஆற்றல் மிக்க மனிதராய் இருந்தனர். எலீயுவும் சமாக்கியாசும் மேற்சொல்லப்பட்டவர்களின் சகோதரர்கள்.
1 நாளாகமம் 26 : 8 (RCTA)
இவர்கள் எல்லாரும் ஒபெதெதோமின் மக்கள். இவர்களும் இவர்களின் புதல்வரும் சகோதரரும் அறுபத்திரண்டுபேர்; ஒபெதெதோமின் குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் தங்கள் பணியைத் திறமையோடு ஆற்றி வந்தனர்.
1 நாளாகமம் 26 : 9 (RCTA)
மெசெலேமியாவின் மக்களும் அவர்கள் சகோதரரும் திறமை மிக்கவர்கள்; இவர்கள் பதினெட்டுப் பேர்.
1 நாளாகமம் 26 : 10 (RCTA)
மெராரிக்குப் பிறந்த மக்களில் ஒருவனான ஓசாவின் மக்களின் விவரம் வருமாறு: தலைவனான செம்ரி, (இவன் தலைமகன் அல்லன்; எனினும் ஓசா அவனைத் தலைவனாக நியமித்திருந்தான்)
1 நாளாகமம் 26 : 11 (RCTA)
இரண்டாவது எல்சியாஸ், மூன்றாவது தபேலியாஸ், நான்காவது சக்கரியாஸ். ஓசாவின் புதல்வர்களும் சகோதரர்களும் மொத்தம் பதின்மூன்று பேர்.
1 நாளாகமம் 26 : 12 (RCTA)
இவ்வாறு வாயிற்காவலரின் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. தங்கள் சகோதரர்கள் ஆண்டவரின் ஆலயத்தில் திருப்பணி செய்து வந்தது போலவே, இப்பிரிவுகளின் தலைவர்களும் தங்கள் கடமையை ஆற்றி வந்தனர்.
1 நாளாகமம் 26 : 13 (RCTA)
ஆகையால் தங்கள் குடும்பங்களின்படி தாங்கள் காவல் புரிய வேண்டிய வாயிலை அறிந்து கொள்ளும் பொருட்டு, பெரியோர் சிறியோர் என்ற வேறுபாடின்றிச் சீட்டுப் போட்டனர்.
1 நாளாகமம் 26 : 14 (RCTA)
இவ்வாறு சீட்டுப் போட்ட போது கிழக்கு வாயிலுக்குச் சீட்டு செலேமியாசுக்கு விழுந்தது. வடக்கு வாயிலுக்குச் சீட்டு மிக்க விவேகமும் அறிவும் படைத்த சக்கரியாசுக்கு விழுந்தது.
1 நாளாகமம் 26 : 15 (RCTA)
ஒபெதெதோமுக்குத் தெற்கு வாயிலும் அவன் புதல்வருக்குப் பண்டசாலையும் கிடைத்தன.
1 நாளாகமம் 26 : 16 (RCTA)
செபீமுக்கும் ஓசாவுக்கும் மேற்கு வாயிலுக்கும் மலைக்குப் போகும் வழியில் இருந்த ஷல்லேகத் வாயிலுக்கும் சீட்டு விழுந்தது. அவர்கள் காவலிருக்க வேண்டிய இடங்கள் அடுத்தடுத்து இருந்தன.
1 நாளாகமம் 26 : 17 (RCTA)
கிழக்கே லேவியர் ஆறுபேரும் வடக்கே ஒரு நாளுக்கு நான்கு பேரும், தெற்கே ஒரு நாளுக்கு நான்கு பேரும் பண்டசாலையில் பக்கத்துக்கு இருவராக நால்வரும் நியமிக்கப் பட்டனர்.
1 நாளாகமம் 26 : 18 (RCTA)
மேற்கிலிருந்த காவலர் அறைகளினருகே அறைக்கு இருவரும் வழியிலே நால்வரும் நிறுத்துப்பட்டனர்.
1 நாளாகமம் 26 : 19 (RCTA)
கொரே, மெராரி, என்பவர்களின் புதல்வர்கள் இவ்வாறு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர்.
1 நாளாகமம் 26 : 20 (RCTA)
மற்ற லேவியருள் ஆகியாஸ் கடவுளின் ஆலயக் கருவூலங்களுக்கும், கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட காணிக்கைகளைச் சேர்த்து வைத்திருந்த அறைகளுக்கும் பொறுப்பு ஏற்றிருந்தான்.
1 நாளாகமம் 26 : 21 (RCTA)
லேதானின் புதல்வர்கள்: லேதான் வழிவந்த கெர்சோனியர், கெர்சோனியனான லேதானின் வம்சத்தில் தலைவனான எகியேலியும்,
1 நாளாகமம் 26 : 22 (RCTA)
எகியேலியின் மக்களான சேத்தாமும் அவன் சகோதரரான யோவேலுமே. இவர்கள் ஆண்டவரின் ஆலயக் கருவூலங்களுக்குப் பொறுப்பாய் இருந்தனர்.
1 நாளாகமம் 26 : 23 (RCTA)
அம்ராம், இசார், எப்பிரோன், ஒசியேல் ஆகியோரின் குடும்பத்தவரிலும் சிலர் அவற்றை மேற்பார்த்து வந்தனர்.
1 நாளாகமம் 26 : 24 (RCTA)
மோயீசனுக்குப் பிறந்த கெர்சோமின் மகன் சுபுவேல் கருவூலத் தலைமைக் கண்காணிப்பாளனாய் இருந்தான்.
1 நாளாகமம் 26 : 25 (RCTA)
அவனுடைய சகோதரன் எலியேசரும் அதே அலுவலில் இருந்தான். எலியேசருக்கு ரகாபியா பிறந்தான். ரகாபியாவுக்கு இசயாஸ் பிறந்தான். இவனுக்கு யோராம் பிறந்தான். இவனுக்குச் செக்ரி பிறந்தான். இவனுக்குச் செலேமித் பிறந்தான்.
1 நாளாகமம் 26 : 26 (RCTA)
இந்தச் செலேமித்தும் அவன் சகோதரர்களும் காணிக்கைக் கருவூலத்தைக் கண்காணித்து வந்தனர். இந்தப் பொருட்களைத் தாவீது அரசரும், குடும்பத் தலைவர்களும், ஆயிரவர் தலைவர்களும், நூற்றுவர் தலைவர்களும் போர்க்களத்தினின்றும், கொள்ளைப் பொருட்களினின்றும் எடுத்து,
1 நாளாகமம் 26 : 27 (RCTA)
ஆண்டவரின் ஆலயத்தைப் பழுது பார்க்கவும் அதற்குத் தேவையான தட்டுமுட்டுகளைச் செய்வதற்கும் கோவிலுக்குக் காணிக்கையாக அர்ப்பணித்திருந்தனர்.
1 நாளாகமம் 26 : 28 (RCTA)
இவ்வாறே திருக்காட்சியாளர் சாமுவேலும் சீசின் மகன் சவுலும், நேரின் மகன் அப்நேரும், சார்வியாவின் மகன் யோவாபும் காணிக்கைகளை ஆண்டவருக்கு அர்ப்பணித்திருந்தனர். இக்காணிக்கைப் பொருட்கள் எல்லாம் செலேமித்தின் கவனிப்பிலும் அவன் சகோதரரின் கவனிப்பிலும் இருந்து வந்தன.
1 நாளாகமம் 26 : 29 (RCTA)
இஸ்ராயேலுக்குக் கல்வி புகட்டுவதும் நீதி வழங்குவதுமான வெளிவேலையைப் பார்த்து வந்தவர்கள் இசார் குலத்தினரே. கொனேனியாசும், அவன் புதல்வரும் அவர்களுக்கு மேல் அதிகாரிகளாய் இருந்தனர்.
1 நாளாகமம் 26 : 30 (RCTA)
எரிரோனியரில் அசாபியாசும் அவனுடைய சகோதரருமாகிய ஆயிரத்து எழுநூறு ஆற்றல் மிக்க மனிதர்கள், யோர்தானுக்கு அக்கரையில் மேற்கே வாழ்ந்து வந்த இஸ்ராயேலின் மேல் ஆண்டவரின் எல்லாத் திருப்பணிக்கும் அரசனின் ஊழியத்திற்கும் அடுத்த காரியங்களில் அதிகாரிகளாய் இருந்தனர்.
1 நாளாகமம் 26 : 31 (RCTA)
எபிரோனியரின் தலைமுறைகளுக்கும் வம்சங்களுக்கும் ஏரியாவே தலைவனாய் இருந்தான். தாவீதுடைய ஆட்சியின் நாற்பதாம் ஆண்டில் அவர்களைப்பற்றிய கணக்கு எடுக்கப்பட்டது. அப்போது அவர்களுக்குள் கலாத் நாட்டு யாசேரில் சில ஆற்றல் படைத்த ஆடவர் இருப்பதாகத் தெரிய வந்தது.
1 நாளாகமம் 26 : 32 (RCTA)
வலிமை வாய்நதவர்களும் குடும்பத் தலைவர்களுமான அவனுடைய சகோதரர் இரண்டாயிரத்து எழுநூறு பேர் இருந்தனர். தாவீது அரசர் ஆண்டவரின் திருப்பணிக்கும் அரச அலுவலுக்கும் அடுத்த காரியங்களில் ரூபானியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும் அவர்களைத் தலைவர்களாய் ஏற்படுத்தினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32